பிக்பாஸ் 3 : நாள் 80 தொடர்ச்சி & 81 (12.09.19)


பிக்பாஸ் 3நாள் 80 தொடர்ச்சி & 81 (12.09.19)


“வந்ததுக்கு மகிழ்ச்சி. அப்பிடியே வந்த வழியா வெளிய வந்துருங்க. வழியில ஒரு கட்டை நீட்டிட்டு இருக்கும் இடிச்சுக்காம வாங்க”ன்னு லாஸ் ஃபேமிலிக்கிட்ட பிக்பாஸ் கட்டளையிட்டார்.
லாஸ் அப்பா எங்குட்டு திரும்பி “போயிட்டு வரே”ன்னு சொன்னாலும் அங்குட்டு கவின் நின்னுட்டு இருந்தாப்ல. திரும்பி திரும்பி கவின் கிட்டதான் “போயிட்டு வரேன், போயிட்டு வரேன்”னு சொல்ற மாதிரி ஆகிடுச்சு. ஒரு கட்டத்துல அவன கட்டிப்பிடிச்சு “போதுண்டா வெளிய வந்து பாத்துக்கலாம்”னு சொன்னதுந்தான் கவின் அவரு கண்ணுல இருந்து மறஞ்சாப்ல. லாஸ் தங்கச்சி வேற வந்து கைகுடுத்தாங்க.
ஒரு வழியா லாஸ் குடும்பம் வெளிய போச்சு. லாஸ் “டேய் பிக்பாஸ் உன்னால ஒண்ணு மிச்சம்டா....10 வருஷமா பாக்காத எங்கப்பன பாத்துட்டேண்டா”ன்னு மைண்ட்ல சொல்லிட்டு இருக்கும்போதே “நாந்தான் இருக்கேன்ல”ன்னு சேரன் சார் அந்தப்பக்கமா கிராஸ் ஆனது.....இட்ஸ் எ பெர்ஃபெக்ட் கிராஃப்ட்!
சாண்டி, சேரன், தர்ஷ் பேசிட்டு இருந்தாங்க...! “எவனும் எதுவும் சொல்லாதீங்க. அவங்களா பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்”னு சேரன் சார் சொன்னத பசங்க கேட்டுக்கிட்டாங்க.
“அப்பாடி இப்ப மொத்தமா போகலாம்”னு மைக்கயெல்லாம் கடாசிட்டு கக்கூஸுக்குள்ள ஓடுனாப்ல கவின். எத்தனை மணி நேர போராட்டமோ....? வெளிய வந்து பெட்ரூமுக்குள்ள வந்ததும் சாண்டி கிட்ட “அண்ணே நீ ஒண்ணும் கோவிச்சுக்காத”ன்னு கேசுவலா சாரி கேட்டது அதுக்கு சாண்டி “வருத்தமாத்தான் இருந்துச்சு ஆனா விடு உன் நிலமை அப்பிடி”ன்னு செம்ம கேசுவலா அந்த மன்னிப்ப ஏத்துக்கிட்டதுன்னு ஒரு கிரேட் தோஸ்த்து ஈக்வேஷன். வேற என்ன வேணும்.
சாண்டி “இந்தாடா டேய்...அவங்கப்பன் வந்த வேகத்துக்கு நீ இன்னேரம் குழம்புல வெந்துட்டு இருந்துருக்கனும். தப்பிச்சுட்ட. நாளையில இருந்து உனக்கு இது பிக்பாஸ் வீடு இல்ல பண்டாரச் செட்டி மடம். குளிச்சோமா கந்த சஷ்டி கவசம் சொன்னோமா, கஞ்சியக் குடிச்சோமா, அண்ணன் கூட சேர்ந்து பாட்டு எழுதுனோமான்னு ஒழுங்கு மரியாதையா இருக்கனும் புரியுதா?”ன்னு கவின் கிட்ட பேசிட்டு இருந்தாப்ல.
குடும்பம் வந்துட்டு போன 10 நிமிஷத்துல பூட்டியிருந்த பெட்டிய திறந்தாப்ல அறிவுக்கண்ண படார்னு தொறந்துட்டு திரிஞ்சது லாஸ் (நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா டெம்ப்ளேட்). லாஸ் செம்ம கேசுவலா சோத்தப் போட்டு, சேரன் சார் கூட “இந்த புளிக்குழம்புல பூண்டு போடுறதப் பத்தி பொற்காலம் படத்துல நீங்க எதுவும் சொல்லி இருக்கீங்களா?”ன்னு பேசிட்டு இருந்தது.
வனி லாஸ படுக்கப்போட்டு பேன் பாத்துக்கிட்டே “பாத்தேல்ல உங்கப்பன? வந்த ஜோருக்கு எனக்கு ரெண்டு விழும்னு பாத்தேன். இதத்தான் நான் அன்னைக்கே சொன்னேன். எல்லாரும் சூனா பானா வனிதாவகிட முடியுமா? எங்க எங்கப்பன உள்ள வரசொல்லு பாப்போம்? ஆனா அந்த கெத்து உங்கிட்ட இல்ல சோ சொல்லிட்டு போன மாதிரி சொச்ச நாள கேமுக்கு செலவு பண்ணு. கவினப் பத்தி கவலைப்படாத ஷோ முடிஞ்ச அடுத்த நாளு உன் வீட்டு வாசல்ல பூ விக்க வந்துருவான்”னு அழகா அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்க.
லாஸ் & கவின்...
லாஸ் : என்ன கவின் உங்க மாமனார் ரொம்பக் கோவக்காரர் போல?
கவின் : மொதல எனக்கு எத்தன மாமனார்னு சொல்லு ? உன்னய லவ் பண்ணதுல இருந்து வனிதா உட்பட எல்லாருமே எனக்கு மாமனார் மாதிரிதான் பேசுறானுங்க....
லாஸ் : உங்க மாமனார் மரிய நேசனப் பத்திதான் சொல்றேன்....
கவின் : அடிப்பாவி உங்க அப்பா பேரு ஜெகன்னு சொன்ன?
லாஸ் : அது அவரு செல்லப் பேரு....
கவின் : ஜெகன்னா செல்லப்பேரு வப்பானுங்க? என்னா லாஜிக்டி இது?
லாஸ் : சரி இனிமே கேம கேமா விளையாடுவோம்...
கவின் : நாம நாமளா இருப்போம்ன்றத விட்டுட்ட....
லாஸ் : செம்ம ஷார்ப்புடா நீ....! நம்மள கழுவி ஊத்துனா பரவாயில்ல வீட்டாளுக பேச்சு வங்குறது சரியில்ல பாரு....அதான் இந்த முடிவுக்கு வந்துட்டேன்...
கவின் : அது என்னமோ சரிதான்....! சரி போ ! அடைகாக்கும் சேவல் சேரப்பா உனக்கு ஊட்டுறதுக்கு பப்பு புவ்வாவோட அந்தப்பக்கமா சுத்திட்டு இருந்தாரு.....அவருகிட்ட 5 வாயி வங்கிட்டு....அப்பிடியே மடியில படுத்துத் தூங்கு !
லாஸ் : நான் என்ன நெனைக்கிறேன்னா, வீட்டாளுங்க நெனைக்கிற மாதிரி நீயும் நானும் நெனைக்கனும்னு நெனைக்கிறேன்...என்ன சொல்ற?
கவின் : அசிங்கமா எதாச்சும் சொல்லிருவேன்....போயிடு!
லாஸ் : அப்பறம் எங்க வீட்ல யாரும் உன்னய ஹர்ட் பண்ணியிருந்தா சாரி...
கவின் : இது வேறயா? நானே அடி வாங்காதவரைக்கும் நல்லதுன்னு இருக்கேன்......! அதெல்லாம் ஒண்ணுமில்ல...விடு!
லாஸ் : ரொம்ப முக்கியமான விஷயம்...! தயவு செஞ்சு மூஞ்சிய அப்பிடி வச்சுக்காத....
கவின் : நல்லது....! நீ நாளையில இருந்து சேரப்பா மூஞ்சியிலயே முழி...! //
இவங்க பேசிட்டு இருக்கும்போது “சரி ஓகே டன்”னு லாஸ் சொன்னத “எல்லாம் முடிஞ்சிருச்சு”ன்னு சப் டைட்டில் போட்ட அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யாருன்னு பாக்கனும் போல இருக்கு.
81ம் நாள்
ஜித்து ஜில்லாடி பாட்டு.....பிக்பாஸனுக்கு பிக்பாஸனே போட்டுக்கிட்டு பெருமை பீத்திக்கிட்டாப்ல போல....!
கவினத் தவிர எல்லாரும் லான்ல இருந்தானுங்க. வனி & சேரனத் தவிர எல்லாரும் ஆடுனானுங்க. சாண்டி லாலாவுக்காக சிலபல பொருட்கள தயார் பண்ணிட்டிருந்தாப்ல. ஃப்ரீ மூட்ல இருந்த பிக்பாஸ் “சாண்டி மைக்க மாட்டுறது முக்கியமில்ல அத சரியா மாட்டுறதுதான் முக்கியம்”னு பஞ்ச் பேசி விளையாண்டாப்ல. அநேகமா எப்பவும் போல நம்ம விஜய் டிவி, ராமர பிக்பாஸா ஆக்கிட்டானுங்க போல.
ஃப்ரீஸ்....
தர்ஷன் அம்மா & தங்கச்சி கமிங்....! அவங்கம்மா பிறந்தநாள் செலிபிரேட்டிங்....! எல்லாரும் ஜெயிச்சுட்டு வாங்கன்னு அவங்க டெல்லிங்.....! விட்டுக்குடுக்காம விளையாடுன்னு தர்ஷன் தங்கச்சி தர்ஷன் கிட்ட எல்ஸ்ப்ளேயினிங்.....! அப்பறம் கேக் வெட்டி தின்னுட்டு கோயிங்.
ரெண்டு நாள் பஞ்சாயத்துல தூங்காமா திரிஞ்ச எல்லாரும் அங்கங்க கட்டைய சாத்த, சேர்த்து சாத்துன லாஸ பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்ட்டு சாத்துனாரு.
ஃப்ரீஸ்.....
“வாயாடி பெத்த புள்ள”ன்னு சொல்லும்போதே தெரிஞ்சது. வனிதா பொண்ணுங்கன்னு. குட்டிப்பொண்ணுங்க க்யூட்டா இருந்துச்சுங்க. ஆனாலும் ஏதோ டீச்சர்கிட்ட பேசுற மாதிரி குழந்தைங்க வனிதாகிட்ட பேசுனதா ஒரு ஃபீலிங்...(நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்). “வீட்லதான் இல்ல இங்கயாச்சும் ஒரு வாய் சோறூட்டக்கூடாதா?”ன்னு சின்னப் பொண்ணு கேட்டதும் நெகிழ்ச்சியாகிடுச்சு. எந்த அளவுன்னா? என் மனைவி தட்டுல சோத்தப் போட்டு டிவி கிட்ட போயி நீட்டுற அளவு!
அப்பறம் குழந்தைகளோட நம்ம பார்பேரியன்ஸ் விளையாடி குஷியா இருந்தானுங்க. பெரிய பொண்ணு “அம்மா உனக்கொரு அட்வைஸ் விட்டுக்குடுக்காம, கட்டுப்படாம விளையாண்டுட்டு வா”ன்னு சொன்னாங்க.
பின்ன ரவுடி பேபி பாட்டு போட்டாரு பிக்பாஸ் (வனிக்கா கேட்டுச்சா? ரவுடி பேபி ! அதாவது ரவுடியோட பேபியாம் ! அதாவது நீ ரவுடியாம் இதுக உன்னோட பேபியாம்) குழந்தைங்கள வெளிய அனுப்பிட்டாரு பிக்பாஸு.
ஃப்ரீஸ்....
“ஞாபகம் வருதே” பாட்டோட ஹம்மிங் ஆரம்பிக்கும்போதே அண்ணன் அழ ஆரம்பிச்சுட்டார். கதவத் தொறந்ததும் அவங்கம்மாவ பாத்ததும் அண்ணன் சேரன் அவ்ளோ எனெர்ஜியா ஓடி வந்து அணைச்சுக்கிட்டார். நெகிழ்ச்சி! தங்கை மற்றும் மகள் வந்திருந்தாங்க. “என்னயும் கட்டிப்பிடிச்சுக்கோங்க நாந்தான் சேரப்பாவோட 80 நாள் மகள்”னு அவங்க கண்ணுல படுற மாதிரி நின்னுச்சு லாஸ்.
சேரப்பா & அவர் பொண்ணு....
சேரன் : நல்லா இருக்கியாம்மா?
சே.பொ :  நீ நல்லா இருக்கியா? உன்னயத்தான் பாடாப் படுத்திட்டு இருக்கானுங்க...
சேரன் : அதெல்லாம் பழகிட்டேன்...
சே.பொ : ஆமா அதென்ன லாஸ் உன் பொண்ணு? ஏதோ ரெண்டாவது நாளு சும்மா பேச்சுக்கு சொன்னியேன்னு பாத்தா 400 பவுன் நகை போட்டு டாக்டர் மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுருவ போல?
சேரன் : ம்ம்க்கும்....! அதெல்லாம் இல்லமா.....
சே.பொ : என்ன நொல்ல? பொண்ணுன்னா நானும் அக்காவுந்தான் உனக்கு. புரியுதா? அது என்னடான்னா உன்னயவே கேலி பண்ணிட்டு திரியுது...இனிமே அது பக்கமா போன டென்சனாகிடுவேன்...! அதுக்கு பேசாம நீ இங்கயே இருந்துரு....! வெற்றிக் கொடி கட்டு படத்தப்ப எப்பிடி இருந்தியோ அப்பிடி இரு...!
சேரன் : அப்ப முடி நெறையா இருந்துச்சு இப்பதான் இல்லையே. அப்பறம் எப்பிடி அந்த மாதிரி இருக்க முடியும்?
சே.பொ : முடிச்சுட்டு வீட்டப்பக்கம் வா நீ...அங்க வச்சுக்குறேன் !
சேரன் : டென்ஷனாகாத....! வனிதாகிட்ட பேசுறியா? //
அப்பறம் லாஸ்கிட்ட அவரு பொண்ணு “நீ விட்டுக்குடுத்தாலும் குடுக்காட்டியும் எங்க அப்பா உன்னய மக மாதிரிதான் பாப்பாரு. உயிரக் குடுத்து கவின் கிட்ட இருந்து உன்னய காப்பாரு”ன்னு குத்திக் காமிச்சு உறுதி குடுத்தாங்க.
அப்பறம் அவங்களையும் வெளிய அனுப்பியாச்சு.
காது குத்து விழாவுக்கு வந்துட்டுப் போற மாதிரி இன்னும் எத்தனை குடும்பம் வரும்னு தெரியல.....! கடுப்பேத்துறானுங்க. கண்டெண்ட் குடுத்த கவின் காதலையும் பிரிச்சுட்டானுங்க. கையத் தட்டி தட்டியே வனிதா வாய கட்டி வச்சுட்டானுங்க. போற நாட்கள்ல பொழுது போகாது போல. ஒடிசா சேனல்ல ஒரு ரியாலிட்டி ஷோ நடக்குதாம் பேசாம பொட்டி படுக்கைய தூக்கிட்டு அங்குட்டு போனா எதாச்சும் தேறும்னு திங்க்கிங்....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)