பிக்பாஸ் 3 : நாள் 94 & 95 தொடர்ச்சி (26.09.19)
பிக்பாஸ் 3நாள் 94 & 95 தொடர்ச்சி (26.09.19)
“தல நான் ரெடி”ன்னு
ஹேண்ட்ஸ் அப்போட நின்னாப்ல கவின். “என்னடா கக்கூஸ் போக ரெடின்ற மாதிரி சொல்ற? அங்கயும்
நான் இல்லாம போக மாட்டியே? என்னாச்சு உனக்கு ? என்னத்த சாப்ட்டு தொலஞ்ச?”ந்னு லாஸ்
சாரமாரியா சரவெடி கேள்விகள கொட்ட, இந்தப் பக்கம் சாண்டியும் டென்ஷனாகி “என்ன காமெடி
பண்றியா? இப்ப எதுக்குடா சம்பந்தமில்லாம வெளிய போறேன்ற?”ன்னு கதறிட்டு இருந்தாப்ல.
கவினோ ரொம்பப்
பொறுமையா “ஏண்டா கேட்டதும் கையத் தூக்க நான் என்ன கேணையனா? இந்த ஆப்ஷன் வரும்னு தெரியும்.
இந்த ஆப்ஷன யூஸ் பண்ணனும்னு ரொம்ப முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருந்தேன். அதான் கேட்டதும்
ஓகே சொல்லிட்டேன்”னு சொன்னான்.
ஷெரின், தர்ஷன்
& முகின் பெருசா எதுவும் சோகப்படல. தர்ஷன் & முகின பொறுத்தவரை ஒரு ஆள் போட்டியில
இருந்து அவுட் அவ்வளவுதான். ஷெரினுக்கு இவங்க கதைய இனிமே பாக்க வேண்டியது இல்லேன்னு
ஒரு ரிலீஃப் ஆனா மேடம் தர்ஷன் கூட விளையாண்டுட்டு அத மெச்சூர்டு ஹேண்டில்னு சொல்லிக்குவாங்க.
ஆனா சாண்டியும்
லாஸும் ரொம்பவே கலங்குனாங்க. அப்பறம் பிக்பாஸ் இன்னொருதரம் “நெஜமாத்தான் சொல்றியா?”ன்னு
கேக்க, “சொல்வதெல்லாம் உண்மை”ன்னு உரக்க சொன்னான் கவின். “இன்னும் ஒரு 10 நாள் இருந்துட்டுப்
போலாமே?”ன்னு வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட சொல்ற மாதிரி சொன்னாப்ல சாண்டி. “அததான்
நானும் சொல்றேன் இன்னும் 10 நாள்தான இருக்கு. முடிச்சிட்டு வெளிய வாங்க பாத்துக்கலாம்”னு
சொன்னான் கவின். இங்குட்டு ஒரு தேவர் மகன் சீன் ஓடிட்டு இருந்துச்சு....
லாஸ் : என்ன
கவின் பிக்பாஸ் கேட்டதும் போகனும்னு சொல்றியளே?
கவின் : ஆமா
லாஸு...! காதலுக்கு மரியாதையும், நட்புக்கு மரியாதையும், தியாகத்துக்கு மரியாதையும்
இல்லாத இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல இருக்கப் பிடிக்கல லாஸு
லாஸ் : இந்த
காட்டுமிராண்டி பய கூட்டத்துல உங்க சம்சாரமும் ஒரு ஆளுதான்றத மறந்துறாதீங்கப்பு...!
7 வேளை சோறு, தினமும் காசு, உள்ள ஜாலி ! பிக்பாஸ் ஷோவுக்கு வறீங்களா?ன்னு கேட்டதும்
மலேஷியா, ஸ்ரீ லங்கால இருந்து ஓடி வந்தது நம்ம பயகதான்....
கவின் : அப்பிடிப்
பாத்தா நானும் தான்...! ஆனா இனிமே இது சரி வராது! நைட்டுப் பகல்னு பாக்காம கையக் கோர்த்துக்கிட்டு
லான்ல லாந்திக்கிட்டு திரியக் கூட இங்க முடியல. எல்லாருக்கும் பொண்ணோட அப்பாவல பிரச்சனை
வரும் எனக்கு அப்பா மாதிரி கூடவும் பிரச்சனை. அடிபட்டா என்னாச்சுன்னு போயி அக்கறையா
கேட்டா ட்ராமான்றானுங்க. கக்கூஸ்ல வச்சு பேசுனா நாத்தமெடுத்த காதல்ன்றானுங்க ! விட்டுக்குடுக்க்குறேன்னு
சொன்னா வித்தை காட்டாதன்றானுங்க...என்னய விடும்மா நான் போறேன்...
லாஸ் : போ வெளிய
போ யாரு போக வேணாம்னு சொன்னா? எல்லாரும் இன்னும் 10 நாள்ல போக வேண்டியவங்கதான். நீ
காதல், நட்பு, தியாகத்துக்கு அர்த்தம் தெரிஞ்சவந்தான? சொல்லிக்குடு, சொல்லிக்குடுத்து
எல்லாத்தையும் கூட்டிட்டுப் போ...ஆனா இவனுங்க ஷோ முடிச்சிட்டுதான் வருவானுங்க...ஆமா!
கவின் : லாஸு
நான் போறேன்....
லாஸ் : போயிட்டு பைனலுக்கு வரேன்னு சொல்லு....வீட்ல உள்ளவங்களுக்கு
அந்த நம்பிக்கைதான் முக்கியம். ஒரு 10 நாள் இருக்க மாட்டியளா? உங்கள பக்கத்துலயே வச்சு
பாத்துக்கனும்னு உங்க சம்சாரத்துக்கு ஆசையிருக்காதா? நான் முடிச்சிட்டு வெளிய வந்து
பாக்கும்போது எங்கப்பனும், எங்கப்பன மாதிரியும் உங்கள தூக்கி உள்ள வச்சிருந்தா என்ன
பண்றது?
கவின் : லாஸு
அப்பிடியெல்லாம் ஆகாது லாஸு. நான் வெளிய போயிட்டு என் கடனயெல்லாம் அடச்சுட்டு, இண்டர்வியூ
எல்லாம் குடுத்துட்டு பைனல் அப்போ உன்ன வந்து கூட்டிட்டு போவேன் லாஸு...என்னய நம்பு
லாஸ் : வேற
வழி ! ஆனா நீ உள்ள வரும்போது இதே மாதிரி யாருகிட்ட சொல்லிட்டு வந்தியோ யாருக்கு தெரியும்....?
யப்பா பிக்பாஸு அய்யா 5 லட்சத்த எடுத்துக்கிட்டு வெளிய போறாராம்....! கதவத் தொறந்து
வை....//
உண்மையாவே லாஸ்
கதறிடுச்சு. கவினும் அவங்கப்பா போட்டொவையெல்லாம் எடுத்து கைல குடுத்து “இதப் பாத்துக்கிட்டே
10 நாள் ஒழுங்கா விளையாடிட்டு வா”ன்னு சொல்லிப்பாத்தான் அது அடங்கல. கடைசியா எல்லார்கிட்டையும்
“எனக்குன்னு ஒரு நேர்மை இருக்கு அதுக்கு நியாயம் செய்யனும். இல்லேன்னா என் மனசாட்சி
தூங்க விடாது. பைனல் போற தகுதி எனக்கு இல்லவே இல்ல. அதனால அந்த மேடைய தொடுற மனசு எனக்கில்ல.
இது நான் பண்ற கடைசி தப்பா கூட இருக்கட்டும். அதனால உண்மையா நல்லா விளையாண்ட நீங்க
எல்லாரும் விளையாண்டு முடிச்சிட்டு வெளிய வாங்க. அங்க பாக்கலாம்”னு சொல்லிட்டு வெளிய
போயாச்சு கவின்.
பெட்ல படுத்து
அழுது..... தானும் ஒரு ஹீரோயின் தான்னு நிரூபிச்சுட்டு இருந்தாங்க லாஸ். எல்லாரும்
வந்து ஆறுதல் சொன்னாங்க. முகின் முட்டாத்தனமா “நீ பாட்டுக்கு தப்பா எதும் முடிவெடுத்துறாத”ன்னு
சொன்னத கவனிச்ச தர்ஷன் அவனுக்கு கண்ணக் காட்டுனது சிறப்பு. முகின் அடுத்த விக்கெட்டுக்கும்
அடி போடுறான் போல.
கவின் இல்லாத
அந்த வீடு மெல்ல இருள ஆரம்பிச்சது. விளக்கணைச்சுட்டாங்க அதான்.
நாள் 95
10 என்றதுக்குள்ள
பாட்டு. இன்னும் 10 நாள்தான் இருக்காமாம். ஷெரினும், முகினும் பொம்மேரியன் நாய்க்குட்டி
மாதிரி கைய வச்சு ஆடிட்டு இருந்தாங்க. சாண்டி ஒரு மாதிரி சமாளிச்சு இயல்பு நிலைக்கு
வந்து பிரியாணி செஞ்சுட்டு இருந்தாப்ல. ஆனா லாஸ் அதோட லாஸப்பத்தி ஃபீல் பண்ணிட்டு இருந்தது.
ஷெரின் வந்து “விடு லாஸு, வெளிய போயி பாத்துக்கலாம். எனக்கெல்லாம் எவ்வளவு பஞ்சாயத்து
தெரியுமா? நம்ம கவலைய மறக்க சிறந்த வழி மத்தவங்க கவலைய கேக்குறதுதான். அதனால வா என்
கவலைய சொல்றேன்”னு ஆறுதல் குடுத்தாங்க ஷெரின்.
அப்பறம் கார்
கம்பெனி இண்டெகரேஷன். முகினும், தர்ஷனும் கார் விக்கனும். தர்ஷன் நல்லா பண்ணதா சொன்னாங்க.
லாஸ் கக்கூஸ்
பெஞ்சுல “இந்தப் புனிதப் பயணம் இன்னுமொரு சரித்திரம்”னு செதுக்கி வச்சுட்டு கேமராகிட்ட
போயி “யப்பா டேய் ! ராமராஜன் நடிச்சது வில்லுப்பாட்டுக்காரன்...என்னய விட்டுட்டுப்
போயிட்டாண்டா என் வீட்டுக்காரன். நானும் போறேன் கதவத் தொற”ன்னு சொன்னதும் “நீ கன்ஃபெஷன்
ரூமுக்கு வா”ன்னு சொல்லிட்டாப்ல பிக்பாஸ். உள்ள போனா காலுல விழாத குறையா லாஸ சமாதானப்படுத்தி
அனுப்பி வச்சாப்ல.
இனி என்னதான்
இருக்கப்போகுது? என்ற மில்லியன் டாலர் கேள்வியுடன் நடந்தார் அந்த ஏழை எம்ப்ளாயி......
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மீ : ஓகேமா
ஐ ஆம் டன் ! அவ்வளவுதான் இனிமே எழுத ஒண்ணுமில்ல கரண்டியளவு கண்டென்ட் குடுத்துட்டு
இருந்த கவினும் இல்ல...நானும் இதோட நிப்பாட்டிக்குறேன்...
மனைவி : இரு...சொல்றதக்
கேளு...அவசரப்படாத ! இன்னும் 10 நாள்தான முடிச்சிரு
மீ : இல்லப்பா...!
எனக்குன்னு ஒரு நேர்மை இருக்கு. இல்லாத கண்டெண்ட எங்க இருந்து தேடி எழுதுறது ? என்
மனசாட்சி என்னய கொன்னுடும்
மனைவி : நடிக்காத
நீ பலநாள் அப்பிடித்தான் எழுதுன அதே மாதிரி என்னத்தையாச்சும் எழுதி ஓட்டிரு...
மீ : உனக்குப்
புரியுதா ? நான் ஒரு ஜோன்ல இருந்து எழுத ஆரம்பிச்சேன் இப்ப அது வேற எங்கயோ போயி நிக்குது.
இத எப்பிடி சரி பண்ண முடியும்னு தெரியல. நான் ஒரு மாதிரி யோசிச்சு வச்சிருக்கேன். சோ
என்னய விடு ! இந்தா ஆண்டவர் போட்டோ இதப் பாத்துக்கிட்டே மீதி இருக்குற 10 எபிஸோடையும்
பாத்து முடி...நாம வேற ஷோல கமிட் ஆகிக்கலாம்....
மனைவி : டேய்
ப்ளீஸ்டா...! இத எழுதுறதுக்கு நீ எடுத்துக்குற அந்த 3 மணி நேரந்தான் உன் இம்சையில்லாம
நிம்மதியா இருக்கேன். இன்னும் ஒரு 10 நாள் அந்த சந்தோஷாத்தக் குடுக்கக் கூடாதா? ப்ளீஸ்
எழுது...!
மீ : சரி.....நீ
இவ்வளவு அன்பா கேக்குறதால எழுதுறேன்....//
Comments
Post a Comment