பிக்பாஸ் 3 : நாள் 93 (24.09.19)


பிக்பாஸ் 3நாள் 93 (24.09.19)


முன் குறிப்பு : இந்த கருமத்தை எழுத அட்மினும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அஸிஸ்டெண்ட் அட்மின் எழுதிய பதிவு இது.
“ஆல் டே ஜாலிடே”ன்னு குஷியா தொடங்குச்சு. இன்னைக்கும் ஷெரின் இவனுங்க கூட ஆடாம கக்கூஸ்ல தன்னந்தனியா தகதிமிதோம் ஆடிட்டு இருந்தாங்க.
இன்னைக்கு செஃப் தர்ஷன். அவன் சமையல் செய்யுறதுக்கான பொருட்கள் வர தர்ஷன் “இன்னைக்கு எல்லாரும் விரதம்னு சொல்லிடு”ன்னு சொன்னது டைமிங். ஆனா இன்னைக்கு கொஞ்சம் உருப்படியா எதோ செஞ்சானுங்க. முடிஞ்சதும் தர்ஷும், ஷெரினும் சமையக்கட்டுல இருக்க, தர்ஷன் சிங்கள மொழியில அந்தப் பொண்ண கலாய்க்க அது “டேய் தமிழ் மொழியில எதாச்சும் சொன்னாலே எனக்கு புரியாது ஆனா இது என்ன மொழின்னே புரியலடா”ன்னு சொல்ல அங்க இருந்து லாஸ் “உன்னய சிங்கள மொழியில அசிங்க அசிங்கமா திட்டுறான்”னு சொல்லி மாட்டி விட்டுச்சு. இப்பிடியே இவனுங்க கடலைகள் தொடர்ந்துச்சு.
அடுத்து ஒரு டாஸ்க். ரூம் முழுக்க பலூனா இருக்கும். அத கையால உடைக்காம உக்காந்து உடைச்சு அதுக்குள்ள இருக்குற பேர் கொண்ட சீட்ட கலெக்ட் பண்ணனும். யாரு பேரு கொண்ட சீட்டு அதிகமா சேகரிக்கப்படுதோ அவங்க வின்னு. தர்ஷன் வின்னு.
முகின் இந்த பிக்பாஸ் பேர்வல் டேக்கு ஒரு தமிழ்ப்பாட்டு தயார் பண்ணி பாடிட்டு இருந்தான்.
இருந்திருந்தாப்ல எல்லாரும் கேஸ் விடுறதப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டானுங்க. அதுவும் எல்லாரும் ஷெரின டார்கெட் பண்ணானுங்க. அது எந்த எந்த நேரத்துல எப்பிடியெல்லாம் முகத்த மாத்தும், எந்த இடத்துல இருக்கும்போது எப்பிடியெல்லாம் கேஸ் விடும், என்ன டெசிபல்னெல்லாம் காமெடியா பேசிட்டு இருந்தானுங்க. தர்ஷன் “ஒவ்வொரு தடவையும் ஷெரின் கைய காமிச்சு “டாக் டு திஸ்”னு சொல்லிட்டு நம்மள திசை திருப்பிட்டு அந்தப் பக்கமா கேஸ் விட்ருது ஆனா நம்ம சல்பேட்டா மட்டுந்தான் ஷெரின் கிட்ட ஐ நோன்னு கரெக்டா பிடிக்கும்”னு சொன்னான். ரொம்ப நாள் கழிச்சு இந்த வீட்ல நல்லா வார்த்தை கேட்டுச்சு.....! அந்த வார்த்தை கேஸ் இல்ல சல்பேட்டா !
எல்லாரும் வெளிய உக்காந்திருந்தப்ப ஒரு சைரன் சவுண்டு கேக்க உள்ள மகத்தும், யாஷிகாவும் வந்தாங்க. அவங்களப் பாத்து முழிச்ச லாஸ் கிட்ட கவின் “ இந்த சீசனுக்கு எப்பிடி நம்மளோ அதே மாதிரி போன சீசனுக்கு அவங்க”ன்னு அறிமுகப்படுத்துனான்.
சாண்டிக்கு ஏற்கனவே அறிமுகம்ன்றதால நல்லா ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டானுங்க. “சிம்பு உங்க எல்லாரையும் கேட்டதா சொன்னாரு”ன்னு சொன்னன். ஆனா வெளிய “சிம்பு எங்கடா?”ன்னு எல்லா ப்ரொட்யூசரும் கேட்டுட்டு இருக்கானுங்க. எப்பவும் போன சீசன் ஆளுங்க உள்ள வரப்போ என்னவெல்லாம் சொல்லச் சொல்லி அனுப்புவாங்களோ அதத்தான் இவனுங்களும் சொன்னாங்க. இந்த பஸ்ஸுல ஒரு அட்டைய குடுத்து படிக்க சொல்லுவானுங்கள்ல அதே மாதிரி......
 “அய்யா நான் இந்த பிக்பாஸ் வீட்டின் 2 வது சீசன் கண்டெஸ்டெண்ட். வாழ வழியின்றி பக்கத்து வீட்டு பிகருக்கும் கூட தெரியாத ஆணாக, வீணாக வாழ்ந்த என்னை ஊரறிய, உலகறிய இவ்வளவு ஏன் செவ்வாயில் கூட தெரியுமளவிற்கு செய்தது இந்த பிக்பாஸ் ஷோதான். உள்ளே படுக்க கட்டில் மட்டுமில்லாமல் கட்டிப்பிடிக்க இந்தப்பக்கம் யாஷிகா அந்தப்பக்கம் ஐஸ்வர்யா என்று தந்து ஊக்கப்படுத்தி வளர்த்தார்கள். வெளியே சென்று பல படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு அடுத்து வரும் ஒப்பந்தங்களுக்கு கையெழுத்துப் போட பேனாவில் ரீபில் தீர்ந்து விட்டதால் போடாமல் இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் இந்த ஷோ. நீங்களும் ஒழுங்காக விளையாடி வெளியே வந்து என்னைப் போலவே வாழ்வில் உயருங்கள். ஒரே ஷோ...ஓகோவென்ற வாழ்க்கை”ன்னு எல்லார்கிட்டையும் பச்சையா புளுகுனான்.
அப்பறம் மகத் நடிச்ச“இவன் உத்தமன்” படத்தோட டீசர போட்டு காமிச்சானுங்க. இப்பிடித்தான் மொத சீசன் கண்டெஸ்டண்ட் ஆரவ்னு ஒருத்தன் வந்து ரெண்டாவது சீசன்ல ராஜ பீமான்னு அவன் நடிச்ச படத்தோட டீசர ரிலீஸ் பண்ணான். இப்ப மூணாவது சீசன் முடியப் போகுது அவன் படம் மட்டும் இன்னும் ரிலீஸாகல.
அப்பறம் எல்லாருக்கும் கிஃப்ட்டு குடுத்தாங்க. கவினுக்கு ஆர்ட்டின்கள், முகினுக்கு மைக்கு, சாண்டிக்கு செஃப் தொப்பி அவருதான் இன்னும் 3 நாளைக்கு சமைக்கனுமாம். லாஸுக்கு அவங்க உண்மையான அப்பாவோட போட்டோ, ஷெரினுக்கு பேப்பரும், பேடும் அவங்களுக்கு பிடிச்சவங்களுக்கு லெட்டர் எழுதனுமாம். தர்ஷன் பலூன் போட்டியில ஜெயிச்சதுக்கு இந்த வாரம் முழுக்க அவர் மன்னரா இருப்பார் மத்தவங்கள்லாம் சேவகம் செய்யனும். ஷெரின எழுதுன லெட்டர “எங்கிட்ட குடு”ன்னு பிக்பாஸ் கேட்டதுக்கு ஷெரின் அத குடுக்கமாட்டேன்னு சொல்லி லெட்டர கிழிச்சுப்போட்டுட்டாங்க.
சரி எல்லாம் நல்லபடியா விளையாடுங்கன்னு சொல்லிட்டு மகத்தும், யாஷிகாவும் வெளிய போயிட்டாங்க. அப்பறம் தர்ஷன் மன்னராயிருந்து எல்லாரையும் வேலை வாங்க ஆரம்பிச்சாப்ல. தர்ஷன் சில சமயம் ஃபன்னியா பண்றேன்னு ஓவர் பேர்பார்மென்ஸ் பண்ணி கோவம் வர மாதிரி காமெடி பண்ணிடுவான் இப்பிடி பண்ணி ஷெரின கடுப்பேத்துனான். இருந்திருந்தாப்ல கவினும், லாஸும் பேசிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டான். அப்பறம் போயி அந்த லெட்டர் குப்பைல கடக்கான்னு தேடிட்டு இருந்தான்.
இந்தப்பக்கம் பெட்ரூம்ல லாஸ் & கவின்......
கவின் : ஆமா ஏன் நம்ம ரெண்டு பேரையும் பேசக்கூடாதுன்னு சொல்றான்?
லாஸ் : பார்ரா....ஊரே சொல்லுச்சு அப்பயெல்லாம் கேக்காம இப்ப அவன் சொல்றான்னு தூக்கிட்டு வந்து நிக்குற......மூஞ்சிய
கவின் : நாமதான் திருந்திட்டோமே?
லாஸ் : அப்பிடியா? இது எனக்கே தெரியாதேடா
கவின் : அதான் இனிமேலாச்சும் கேம் விளையாடலாம்னு சொல்லி ஒழுங்கா கேம் விளையாடுறோமே?
லாஸ் : நீ விளையாடலாம்னு சொன்னதுல இருந்து டாஸ்க்கே இல்லையேடா அப்பறம் நீ என்னத்த ஒழுங்கா வெளையாண்ட?
கவின் : பிளாஸ்டர் சுத்தி உருளுற டாஸ்க்குல கூட பிளாஸ்டர் சுத்த நான் உன்னய கூப்புடலயே ஷெரின் தான் சுத்துனா
லாஸ் : அதான் அதுல தோத்துட்டு நான் சுத்தி விடாததாலதான் தோத்தேன்னு வந்து கண்ணுல தன்ணி விட்டியே
கவின் : அது காதல் வேற டிப்பர்ட்மெண்ட்...
லாஸ் : சரிடா சனியனே இனிமேலாச்சும் கேம மட்டும் விளையாடுவோம்....! நாம பேசுனாலும் சரி பேசாட்டியும் சரி...இவனுங்களுக்கு ஊறுகாய் நம்மதான். அதனால அதக் கண்டுக்காத சரியா..
கவின் : நல்லா புரியுது...! இனிமே கேம் கேம் கேம் மட்டுந்தான் ! சரி இன்னும் 1 மணி நேரம் கழிச்சு இதே மாதிரி அந்த ஸ்மோக்கிங் ரூம்ல யாருக்கும் தெரியாம மீட் பண்ணுவோமா?
லாஸ் : இருடி கையோட அந்த கத்திரிக்கோல எடுத்துட்டு வரேன்//
பின்ன ஷெரின் மறுபடியும் ரகசியமா ஒரு லெட்டர் எழுதி அத மறைச்சு வச்சாங்க. இவனுங்க மன்னர் தர்ஷன ஓட்டி விளையாடிட்டு இருந்தானுங்க. சர்வாதிகாரி டாஸ்க் மாதிரி இதுல எதாச்சும் பிரச்சனை வருதான்னு பாப்போம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)