பிக்பாஸ் 3 : நாள் 97 (28.09.19)


பிக்பாஸ் 3நாள் 97 (28.09.19)


அட்டகாசமான ஆடை வடிவமைப்போட ஆண்டவர் வந்தாரு. பிரிவின் துயரம் அது தரும் வருத்தம்னு அப்பிடியே அட்டானா ராகத்துல ஆரம்பிச்சு அம்சாவணி ராகத்த ஆலாபணையாக்கி காம்போதி ராகத்த தொடையில தட்டி ஆதிதாளம் போட்டு ஸ்ரீ பிரியா ராகத்துல முடிச்சார்.
“சரி வெள்ளிக்கிழமை இந்த ராமசாமிங்க என்ன பண்ணானுங்கன்னு ஒரு எட்டு பாத்துருவோம்”னு சொல்லிட்டு காமிச்சார்.
சல்மார் சைரனா கதற சம்பிரதாயத்துக்கு எல்லாரும் ஆட அப்டியே கட் பண்ணா மதியமாகிடுச்சு. புரோட்டாவும் கோழிக்கறியும் வந்துச்சு. தூங்கிட்டு இருந்த ஷெரின எழுப்பி 1”0 வினாடிகளில் புரோட்டாவை சாப்பிடுவது எப்பிடி?”ன்னு க்ளாஸ் எடுத்தாப்ல தர்ஷன். அப்பறம் லாஸுக்கு ஒரு கவர் வர, “ஆகா பிக்பாஸ் போட்டோ வந்திருச்சுடா வாங்கடா அவன் யாருன்னு பாத்துருவோம்”னு பிரிச்சா நைட்டு பிளாட்பாரத்துல தூங்குறவங்கள எரிச்சு விளையாண்ட சைக்கோ கொலைகாரன இருட்டுல தூரமா நின்னு எடுத்த மாதிரி ஒரு போட்டோ இருந்துச்சு. அதான் பிக்பாஸுன்னானுங்க. நம்பிட்டோம்.
அப்பறம் என்ன? ஸ்பான்சர் இண்டெகரேஷன் தான். பர்ஸ்டு ஏர்டெல். புதுசா வந்திருக்குற எக்ஸ்ட்ரீம் பாக்ஸ அறிமுகப்படுத்தி படங்கள நடிச்சுக் காட்ட சொல்லி விளையாண்டானுங்க. சூது கவ்வும் படத்துக்கு எதுக்கு கழுதை மாதிரியெல்லாம் செஞ்சு காமிச்சானுங்கன்னு நலன் குமாரசாமிக்குதான் வெளிச்சம். அப்பிடி இப்பிடின்னு என்னமோ விளையாண்டு முடிச்சானுங்க.
அடுத்து லெவிஸ்டா காஃபி. அந்த மக்குல இந்த மக்குக என்னத்தையாச்சும் எழுதி வைக்கனும்.
ஆண்டவர் வந்தார். அகம் – அகம்.
எண்ணிப்பாத்துட்டு “என்னங்கடா ஒருத்தன காணோம்னு என்னாச்சுன்னு சொல்லுங்கடா?”ன்னார். “அதை தாங்கள்தான் கூற வேண்டும்”னு தீபாம்மா ஸ்டைல்ல எல்லாரும் சொல்ல,” மொத உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க அப்பறம் நான் சொல்றேன்”னு சொன்னார். “பிகரோட சுத்திட்டு இருந்தவன பொட்டிய காட்டி வெளிய போக வச்சுட்டான் பிக்பாஸு”ன்னு எல்லாரும் புகார் சொன்னாங்க. அப்பறம் அத ஒட்டி பேசுனாரு. “கவின் போன கவலையில கைய கிழிச்சுக்குற அபாயத்துல இருந்த லாஸ எல்லாரும் தாங்குனது தரமான செயல்”னு பாராட்டுனார். லாஸும் “ஆமாங்க ஆத்துக்காரர் போன சோகத்துல அழுகையோட திரிஞ்ச எனக்கு இந்த திருவாத்தானுங்க ஆதரவா இருந்தானுங்க. கூறிப்பா ஷெரின் சிறப்பு”ன்னு சொல்லுச்சு.
அப்பறம் ஆண்டவர் உள்ள வந்து போஸ்டர் ஒட்டிட்டு போனதப் பத்தி பேசுனார். “இந்த மாதிரி நானும் திரிஞ்சிருக்கேன். புது ஆளுங்களுக்கு இப்பிடி வாய்ப்பு கிடைக்குறது கஷ்டம்”னு வழக்கம் போல தன் கதையோட சேர்த்து ஜிலேபி போட்டார்.
“அப்பறம் ஷெரின் மிடில் பெஞ்சுல இருந்து சரசரன்னு மொத பெஞ்சுக்கு வந்துட்ட வாழ்த்துகள்”னு சொன்னார். அப்ப ஷெரின் இந்தவாரம் போகல போல.
மிஸ்ஸிங் அக்யூஸ்டு கவின் வந்தாப்ல. “நீ பணத்துக்காக போகல ஏன்னா இந்த 5 லட்சத்துக்கு போகலேன்னா அடுத்து இது 8,10ன்னு ஏறியிருக்கும் ஆனா அஞ்சுக்கே கையத் தூக்கிட்ட. ஆனா ஏன் அப்பிடி செஞ்ச?” அப்பிடின்னு கேட்டார். “எங்க இருக்க விட்டாய்ங்க. அதுமட்டுமில்லாம நம்ம நேர்மைக்கும், உண்மைக்கும்”னு ஆரம்பிக்க ஆண்டவர் “சரி உள்ள போயிடலாமா?”ன்னு கட் பண்ணி உள்ள போனார். எல்லாரும் பரவசமா பாத்தானுங்க.
“என்னங்கடா நல்லா இருக்கீங்களா? உங்கள நம்பி என் பொண்டாட்டிய விட்டுட்டு வந்திருக்கேன் பாத்துக்கோங்கடா”ன்னு சொன்னாப்ல. சாண்டி “அடேய் நீ என்ன சொன்னன்னு புரியல?””ன்னு கேட்டதும் இன்னும் 7 நாளுல வெளிய வர போற வந்து பேசிக்கலாம்”னு சொன்னான். அடுத்து லாஸு. லாஸும் கவினும் பேசிக்கிட்டது ஃப்ரெஷ்ஷா இருந்துச்சு. அழகான ஒரு லவ் சீன் அது. ஆண்டவரும் அப்ப அப்ப உள்ள வந்து டைமிங்க போட்டு அந்த சீன இன்னும் அழகாக்குனார். பின்ன யோசிச்சு யோசிச்சு பேசுனதப் பாத்துட்டு “ஏன் பயப்படுற நான் என்ன அந்தப் பொண்ணோட அப்பாவா? ஏற்கனவே அந்த போஸ்டுக்கு ஆள் சேர்ந்த மாணியமா இருக்கு. இது நானும் வேறையா?”ன்னு காலாய்ச்சார். அப்பறம் கவின் லாஸ்கிட்ட “எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க. ஐ ஆம் வெயிட்டிங்”னு சொன்னதும் அதுக்கு லாஸ் எக்ஸ்ப்ரெஷனும் சீரியஸா அருமை. பின்ன ரெண்டு பேரும் பேசிட்டே இருந்ததப் பாத்துட்டு ஆண்டவர் “இவனுங்கள விட்டா இங்க இருந்தே குடும்பம் நடத்துவானுங்க அதனால கட்”னு சொல்லிட்டு அவனுக்கு 5 லட்ச ரூபா செக்க கைல குடுத்து அனுப்பி வச்சார். அப்டியே அவரும் கிளம்பிட்டார்.
பின்ன கவின பாத்த பரவசத்த பகிர்ந்துட்டு இருந்தானுங்க உள்ள. அதோட முடிஞ்சது.
பிங்குறிப்பு : எபிஸோட பாக்காம எழுதுன பதிவு இது....! இருக்குற 7 நாளைக்கும் இப்பவே எழுதி வச்சுடலாம் போல.....

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)