பிக்பாஸ் 3 : நாள் 99 (30.09.19)


பிக்பாஸ் 3நாள் 99 (30.09.19)


“மரண மாஸ்” பாட்டு போட்டாரு பிக்பாஸ். “ஆடனுமா வேணாமா?”ன்னு ஒவ்வொருத்தரா யோசனையா எந்திரிக்க, பட்டுன்னு ஒரு 4 பேரு கதவத்தொறந்து உள்ள வந்து ஆடுனானுங்க. ஒரு காலத்துல சல்பேட்டாவோட சகதி டான்ஸ் ஒரு பக்கம், டங்கா மாரி பாட்டுக்கு அபியோட அபிநயங்கள், சேரன் சாரோட சிவாஜி குத்து, மீராவோட புல்தடுக்கி டான்ஸுன்னு ஆடுகளமா இருந்த எடம்டா இது ஆனா இன்னைக்கு ஆடுறதுக்கு ஆளு இல்லாம ஜோடி நம்பர் ஒன் செட்டுல இருந்து கடன் வாங்கி நாலு டான்ஸர்ஸ கூட்டிட்டு வந்து ஆடுற நிலமை ஆகிப்போச்சு. அப்பறம் அவங்களோட சேர்ந்து நம்ம ஆளுகளும் ஆட, சிறப்பா துவங்குச்சு காலை...
அப்பறம் பாதாள உலகத்துக்குள்ள பச்சிலை புடுங்க போற மாதிரி ஷெரினோட அம்மாம் பெரிய பழைய கவுனுக்குள்ள சாண்டி போனாப்ல...! சாண்டிக்கு பொம்பள வேஷம் போட்டாங்க ஷெரின். அப்ப நம்ம பிக்பாஸ் டைமிங்கா “சந்தியா உங்க மைக்க மாட்டுங்க”ன்னு சொன்னாரு. சாண்டியோட பெண்பால் சந்தியாவாம். அப்பறம் அந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு சாண்டி “ராத்திரி நேரத்து பூஜையில், மேகம் கறுக்குது, வசீகரா”ன்னு பெண்கள் பாட்டுக்கு பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தாப்ல. என்ன பண்றதுன்னு தெரியாம இப்பிடியே கூத்தடிச்சிட்டு இருந்தாங்க.
பிக்பாஸ் கூப்பிட்டு “இவ்ளோ பஞ்சாயத்துலையும் தப்பிச்சு உள்ள இருக்கீங்க வாழ்த்துகள். இன்னும் கடுமையான போட்டிகள்லாம் இருக்கு. அதனால எல்லா திறமைகளையும் தொறந்து வெளிய கொண்டுவாங்க”ன்னு சொன்னாரு. “எவ்வளவோ நல்ல கண்டெஸ்டெண்ட்டுகளை எல்லாம் விட்டுட்டு உங்கள போயி உள்ள உக்காரவச்சானுங்க பாரு அந்த மக்களுக்கு எதாச்சும் உருப்படியா செய்தி சொல்லுங்க”ன்னாரு.
வயசுப் பொன்ணுங்களுக்கு சில சமயம் மன அழுத்தம் அதிகமானாலோ, ஒரு மாதிரி வெக்ஸானாலோ எல்லாரோடயும் இருந்தாலும் அவங்களோட ஆக்டிவிட்டீஸ்ல சில குறிப்பிட்ட மாற்றம் தெரியும். அப்பிடி ஏதோ ஒரு பிரச்சனைதான் லாஸுக்கு இருக்குன்னு நெனைக்கிறேன். இப்பல்லாம் எப்ப மத்தவங்களுக்கு முன்னாடி நின்னு பேச ஆரம்பிச்சாலும் ரெண்டு வார்த்தைக்கு ஒரு தடவ கைய ஆட்டி, ஒரு கால உதைச்சு “க்ஹேக் க்ஹேக்”னு கழுதை ஏப்பம் விட்டாப்ல ஒரு வினோத ஒலி எழுப்புறாங்க. இது ஒரு வேளை நியூரோ பிராப்ளமா கூட இருக்கலாம். சீக்கிரமா கவின் இவங்கள ஒரு நல்ல டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போறது நல்லது. அப்பறம் கல்யாண மேடையில கழுதை ஏப்பம் விட்டா நல்லாவா இருக்கும்?
எல்லாருமே முன்னாடி வந்து “நான் ஃபைனலுக்கு வருவேன்னு நெனைக்கல”ன்னு சொன்னாங்க. அதான நெனச்சவனையெல்லாம் விரட்டி விட்டா நெனைக்காத ஆளுகாதான் ஃபைனல் வருவீங்க.
அப்பறம் மிகக்கடுமையான டாஸ்க். zomatoல கோட் யூஸ் பண்ணி உணவு ஆர்டர் செய்யனும். அந்த உணவுக்கு பிரச்சாரம் செய்யனும். ஷெரினும், சாண்டியும் ஒரு செட்டு, லாஸும், முகினும் ஒரு செட்டு. சாண்டி ஆர்டர் பண்ண சிக்கன் கொத்து புரோட்டாவத் தவிர மத்த ஆளுங்க ஆர்டர் பண்ண எதுவும் இந்த கிரகத்தோடது இல்ல போல. இந்த விளையாட்டு கொஞ்ச நேரம் போச்சு.
அப்பறம் “ஆரம்பமே அதிருதடா”ன்னு பாட்டோட ஃபாத்திமா மேடம், ரேஷ்மா, நைனா, மீரா நாலு பேரும் வந்தாங்க. பாவிப்பயலுக சல்பேட்டாவ விட்டுட்டு வந்துட்டானுங்க...!
நிறைய கிஃப்ட்டுகளோட வந்தாங்க. நைனா மோகன் அப்பிடியே சாண்டிய கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து அன்பப் பொழிஞ்சாப்ல. அப்பிடியே கட் பண்ணா நாளைக்கு கட் பணியன போட்டுக்கிட்டு கக்கூஸ் பக்கத்துல உக்காந்து ஷெரின் கிட்ட சாண்டிய பத்தி பெனாத்திக்கிட்டு இருப்பாப்ல. அப்பிடியே ஃபைனல் டச்சா கண்ணீர்விட்டு ஒரு கட்டிப்பிடி வாங்கிக்குவாப்ல. ப்ளடி பக்கர்....!
ரேஷ்மா போட்டுட்டு வந்த ட்ரெஸ்ஸு சேலையா? சுடிதாரா? இல்ல நாய் கடிச்ச பாதியா?னு இந்த தீபாவளிக்கு S.J.சூர்யா தலைமையில விஜய் டிவியில சிறப்பு பட்டிமன்றம் போடலாம். வந்த எல்லாரும் சொல்லி வச்சாப்ல முகின மோந்தானுங்க.
முகின் & மீரா...
மீரா : டாய்...முகின் ஓனக்காக என்னா வாங்கினு வந்தேன் பாருடா....
முகின் : எனக்கு வாங்குனத விடு, நீ ஜாமீனெல்லாம் வாங்கிட்டியா? இன்னும் வெளிய சுத்திட்டு இருக்க?
மீரா : டேய் @#$%^, &**&^%$#, @#$%^%$.... நான் என்ன ஊக்கையா? என்னய உள்ள வச்சிருவானா அவன்....
முகின் : இந்தா இது டிவி பேட்டி இல்ல அடங்கு...
மீரா : இந்தாடா இந்த சூப்பர் மாடல் வாங்கிட்டு வந்த கிஃப்ட்டு
முகின் : யார்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்த? உன்னயெல்லாம் பாத்தா காசு போட்டு வாங்கிட்டு வந்த மாதிரி தெரியலயே?
மீரா : டேய் இதுக்கு பதில் சொல்லனும்னா “பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே” அவ்ளோதான் சொல்ல முடியும்
முகின் : சனியனே ஒன்னு அந்த கிஃப்ட்ட குடு இல்ல ஆள விடு..
மீரா : இந்தாடா....
முகின் : பெரிய பையா இருக்கு ? தர்ஷனுக்கு வாங்குனதா?
மீரா : பிக்பாஸ் இவனப் பாத்தீங்களா ? ஆசை ஆசையா கடையில இருந்து எடுத்துட்டு...சாரி சாரி வாங்கிட்டு வந்தா இவன் பேசுறதப் பாத்தீங்களா? நான் என்ன அப்பிடியா? இல்ல இப்பிடியா? என்ன பிக்பாஸ் எங்கிட்ட இவன் பேசுறது சரியா? ட்ரம்புக்கு அடுக்குமா? கார்பெட்டு காலத் தடுக்குமா?
பிக்பாஸ் : அடேய் முகின்....தயவு செஞ்சு அந்த கிஃப்ட்ட வாங்கு...! இவள பேச மட்டும் விடாத...! //
அதான் இவ்வளவு பேரு இருக்கானுங்களே? அழ வச்சு ஆனந்தப் படுவோம்னு சொல்லி அழுகாச்சி தருணங்களை எல்லாம் ஃபோட்டோ புடிச்சு சொவத்துல மாட்டி வச்சிருந்தானுங்க. அதப் பாத்துட்டு அதப் பத்தி பேசனும்.
இங்க எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கு? என்னைக்கோ ஒரு சனிக்கிழமை ஆண்டவர் கேட்ட புரியாத கேள்விக்கு பதில் தெரியாம ரைமிங்கா “அன்பு ஒண்ணுதான் அனாதையா”ன்னு நந்தலாலா பாட்டு வரிய சொன்னான் முகின். ஆனா அதுல இருந்து அவனையே அனாதை மாதிரி ட்ரீட் பண்றானுங்க.....க்யூன்?
ரேஷ்மா என்னமோ அவன அரசாங்க அனாதைன்னே டிக்ளர் பண்ணி பேசுச்சு. “உனக்காக உலகமே இருக்கு நீ இனிமே அனாதை கிடையாது”ன்னு சொல்லுச்சு. அவனுக்கு அவங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சின்னு ஒரு நல்ல குடும்பமே இருக்கே? பின்ன ஏன் அப்பிடி சொல்றாங்க? “அது என் பையன்”னு வேற சொல்லுச்சு. என்ன கருமமோ?! “எப்பவும் என் கூடவே இருப்பான். நான் அழுதா அழுவான், நான் சிரிச்சாலும் அழுவான். நான் அழ வேணாம்னு சொன்னாலும் அழுவான். அழுதுக்கிட்டே அழுவான்...அழப்போறேன்னு சொல்லிட்டு அழுவான்”னு “அழுவான் அழுவான்”னு சொல்லிட்டே இருந்துச்சு. கடைசியில மறுபடியும் “நீ அனாதையில்ல”ன்னு சொல்லிட்டுப் போச்சு. மூதேவி ! அவந்தான் அனாதை இல்லையே !
அப்பறம் நைனா ! ரேஷ்மாகிட்ட இருந்தே லீட் எடுத்து “எனக்கு இந்த வீட்லயே ரொம்ப பிடிச்சது முகின் தான்”னு பல்டி பக்கர பதற விட்டாரு. முகின் அழுதப்பயெல்லாம் இவரு அதத்தாங்காம கக்கூஸ்ல உக்காந்து அழுவாறாம் ! நைனா கிட்ட பிடிச்சதே நைனாவோட  தெள்ளவாரித்தனம் ஊருக்கே தெரியும்னு தெரிஞ்சே இப்பிடி பேசுவாப்ல.
இப்பிடியே எல்லாரும் என்னன்னத்தையோ பேசுனானுங்க. அக்கா மீரா முன்னாடி வந்தாங்க. “என் கண்ணுக்கு தெரிஞ்ச ஃபோட்டோ என்னோட இருபது இன்ச் இடுப்ப இஷ்டப்பட்டு கிள்ளுனாருன்னு நான் பிராது குடுத்தப்ப நீங்க எல்லாரும் சேரன் சார சமாதானப்படுத்துனீங்கள்ல அந்த ஃபோட்டோதான். செம்ம கேஸ்ல அது ! அன்னைக்கு நான் கொஞ்சம் சரியா வார்த்தைகள கோர்த்து கரெக்டா சொல்லியிருந்தா அது ஒரு வெண்பாவா இருந்திருக்கும் தப்பா தவளையாட்டம் கத்துனதால வம்பா போயிடுச்சு. எனிவே கைப்பட்டு கண்ணிபோயிருந்த என் இடுப்பு இப்ப கொஞ்சம் பரவாயில்ல”ன்னு போயிடுச்சு.
முடிச்சிட்டு வெளிய வந்து பாத்தா....லான்ல ஸ்டேஜ்ஜு, சாப்பிடுறதுக்கு டேபிள் சேரெல்லாம் போட்டு நல்லா ஷோக்கா வச்சிருந்தானுங்க. மறுபடியும் எல்லாருக்கும் புது ட்ரெஸ்ஸு. எல்லாரும் போட்டுட்டு வந்து டான்ஸ் ஆடுனாங்க. அப்பறம் சாப்பாடு வந்துச்சு. சாப்பிடாம எல்லாரும் உக்காந்திருக்க, “என்ன எல்லாரும் டயட்ல இருக்கீங்களா? அள்ளித்தின்னுங்கடா அப்ரசண்டிகளா”ன்னு பிக்பாஸ் சொன்னதும் ஆளாப்பறந்து அள்ளிபிரிச்சானுங்க. அவ்வளவுதான்.


Comments

  1. தலைவரே ரொம்ம கவலைப்படாதிக இன்னைக்கு இல்ல நாளைக்கு வனிதா மற்றும் சாக்ஷி உள்ள வராங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)