பிக்பாஸ் 3 : நாள் 84 (15.09.19)
பிக்பாஸ் 3நாள் 84 (15.09.19)
கருப்பு டீ
சர்ட் போட்டு நெருப்பு மாதிரி வந்தாரு ஆண்டவர். “தொழிலாளார்களுக்கு குழந்தை இருக்கலாம்
ஆனா குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது. ஆனா இவனுங்க ஆனுவல் எக்சாமே இல்லாம இருந்த
5ம் வகுப்புக்கெல்லாம் அரசுப் பொதுth தேர்வுன்னு அட்ராசிட்டி பண்ணிட்டு இருக்கானுங்க.
இதுனால பாஸாகாத புள்ளைங்க படிப்ப விட்டுட்டு வேலைக்குதான் போகும். இதெல்லாம் நல்லாவா
இருக்கு? நீங்களும் இதுக்கு கொஞ்சம் குரல் குடுங்க. முக்கியமா இங்க நான் அரசியல் பேசல”ன்னார்.
ஆடியன்ஸ் எதுக்கும் இருக்கட்டும்னு அதுக்கும் கையத்தட்டி வச்சானுங்க. “சரி வாங்க உள்ளா
போவோம்”னார்.
அகம் – அகம்
உள்ள போனதும்
“லாஸு கால் மேல காலப் போடு”ன்னார். நல்ல வேளை கவின் பக்கத்துல உக்காரல இல்லேன்னா அம்மணி
சந்தோஷமா அவன் மேல காலப் போட்டிருக்கும். “உங்ககிட்டையும் பேசுறதுக்கு ஆசப்பட்டு ஒரு
காலர் வந்திருக்காங்க பேசித் தொலைங்க”ன்னு சொன்னார்.
காலர் ஆஃப்
த வீக்
கேள்வி : முகின்
நீங்க ஏன் எந்த பஞ்சாயத்துக்குள்ளையும் போறதில்ல?
முகின் : நான்
பண்ண பஞ்சாயத்து போதாதா? தவிர இங்க யாரு தடுக்கப் போனாலும் பஞ்சாயத்த அவனுங்க மேல திருப்பிடுறானுங்க.
நமக்கு கொஞ்சம் கோவம் ஜாஸ்தியா வரும் அப்பிடி எதுவும் நம்மள சீண்டுனா இன்னும் ரெண்டு
கட்டிலுக்கு கால் உடையும் அதான் போறதில்ல.
“மக்கள விடுங்க
வர 3 வாரத்துல அடுத்து அடுத்து யாரு போவான்னு நீங்களா புத்திசாலித்தனமா யோசிச்சு வச்சிருப்பீங்களே
? எங்க ஆளுக்கொருத்தரா ஆர்டரா சொல்லுங்க”ன்னார்.
பெரும்பாலும்
வனி, கவின், லாஸ் இந்த ஆர்டரத்தான் சொன்னானுங்க.
“கேப்டன்ஸி
டாஸ்க்குல ஏன் கலந்துக்காம கழண்டுகிட்ட?”ன்னு வனிதா கிட்ட கேக்க, “கேப்டனானா ஒரு வாரத்துக்கு
நாமினேஷன்ல இருந்து தப்பிக்கலாம். ஆனா இவனுங்ககிட்ட மாட்டிக்குவேன். அதான் துனிஞ்சு
மக்கள் தீர்ப்ப ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”னு சொன்னாங்க.
தர்ஷன் கிட்ட
இதே கேள்விய கேக்க...”விட்டுக்குடுக்கல அவளுக்கு ஒரு மோட்டிவேஷன் குடுக்கலாமேன்னுதான்.
சேரப்பா வேற இல்ல. கவின் பயலும் கொண்டாட்டமா இருந்தான் சரி கேப்டனாக்கி விட்டுட்டா
கொஞ்சம் வேலை வெட்டிய பாக்கும்னுதான் அப்பிடி பண்ணேன்”னு சொன்னாப்ல.
மறுபடியும்
கண்டெண்ட் இல்லாத்தால பிக்பாஸன் அதே ஃபேமிலி ரவுண்ட கண்டினியூ பண்ணாப்ல. பாக்க விட்டுப்போன
ஆட்களயெல்லாம் நேர்லயும், வீடியோவுலயும் பேச வச்சானுங்க. அதுக்காக சாண்டி மாமியாரையெல்லாமாடா
கூட்டிட்டு வந்து படுத்துவீங்க? அவங்க “சாண்டி என் பொன்ணுங்களுக்கு தகப்பனா இருக்காப்ல”ன்னு
சொன்னா பரவாயில்ல அவங்களுக்கே அப்பா மாதிரின்னு சொல்றாங்க. முடியலடா டேய்.
கடைசியா ஆண்டவருக்கு
ஒரு வீடியோ. சாருஹாசன் வந்து பேசுனாரு.
ரொம்ப அவசரமா
சேரன் சார் “சார் சார் இன்னைக்கு தர்ஷனுக்கு பொறந்தநாளு”ன்னு சொல்லி ஸ்கோர் பண்ணப்
பாக்க, “ஏன் எங்களுக்கு தெரியாதா? தர்ஷன் அம்மாவுக்கே கொண்டாடுறோம் அவன விட்டிருவோமா?
ஏன் இந்த அவசரம்? பொறுமை பொறுமை”ன்னு அவர அமைதிப்படுத்துனார் ஆண்டவர்.
அடுத்து எவிக்ஷன்...”சொந்தக்காரங்க
உள்ள வந்தப்ப போட்ட பாட்ட போடுவோம். யாருக்கான பாட்டு ஓடுதோ அவங்க சேஃப்”னு சொன்னார்.
எடுத்ததும் கவின் சேஃப்.
“வாங்குன அறைக்கும்
, ஓட்டுக்கும் இனியாச்சும் ஒழுங்கா விளையாடுறேன்”னு சொன்னாப்ல. அடுத்து அப்டியே தர்ஷ்,
சாண்டி சேஃப். அதுக்கு மேல பாட்டு போடாம வனிதாவ வெளிய கூப்ட்டார்.
எல்லாரும் கட்டிப்பிடிச்சு
கையக்குடுக்க சேரன் சார்....
சேரன் : என்ன
நடக்குது இங்க?
வனி : தெரிஞ்சதுதான
சார்
சேரன் : அது
இருக்கட்டும், என்ன நடக்குது இங்க?
வனி : ஓட்டுப்போடலேன்னா
போக வேண்டியதுதான
சேரன் : புரியுது
ஆனா என்ன நடக்குது இங்க?
வனி : சரி விடுங்க
நீங்க இருக்கீங்களே...
சேரன் : நான்
இருக்கேன் ஆனா என்ன நடக்குது இங்க?
வனி : என் பிட்ட
எனக்கே போடுறது கூட பரவாயில்ல ஆனா “அத என்னடா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க” மோட்ல
சொல்றதுதான்.....முடியல!
சேரன் : கொலையே
பண்ணாலும் இந்த கவின் பய வெளிய போக மாட்றானே...அதான் புரியலன்னேன்...!
வனி : அது அவனுக்கே
புரியல....! கவின் சேஃப்னு சொன்னதும் உங்க பொண்ணு ரியாக்ஷனப் பாத்தீங்கள்ல? அவங்க வீட்ல
ஒரு ஆளாகிட்டோம்ன்ற மெதப்புல அவனுங்க கிட்ட எதையும் வாயக்குடுத்துடாதீங்க. அப்பறம்
அடுத்த வாரம் வெளிய வந்து நிக்கனும்....பாத்து சூதானமா இருங்க....!
சேரன் : வெளிய
போனதும் எங்க அப்பாவ கேட்டதா சொல்லு...
வனி : அப்பிடியே
இட்லிப் பொடி, ஊறுகாய் பாட்டில், சீயக்காய்னு எதும் குடுங்களேன் குடுத்துடுறேன்....!
ஏங்க பிரான்ஸுக்கா போறேன்? பிக்பாஸ் வீட்ல இருந்து வெளிய போறேங்க....உடம்பப் பாத்துக்கோங்க
வரேன்//
“உடைக்க வேண்டிய
மெடல உடைக்க முடியாது அத துடைச்சு எடுத்துட்டுப் போயி வீட்ல வச்சுக்குறேன்”னு பிக்பாஸ்
கிட்ட சொன்னதும் டீச்சருக்கு கீழ்படியும் முதல் பெஞ்ச் மாணவன் போல அதுக்கு ஒத்துக்கிட்டு
வி.வி.குட் வாங்கிக்கிட்டார் பிக்பாஸ்.
வெளிய வந்தாங்க
வனிதா “கமல்ஹாசனா சொல்றேன் போல்டான ஆளா இரு ஆனா போல்டான ஆளா மட்டும் இருக்காத. இப்ப
இருக்குற இந்த அன்னை வனிதா உனக்கு சூட் ஆகுது. இத அப்பிடியே மெயிண்டெயின் பன்ணு. ஹெல்த்துக்கு
நல்லது அதாவது மத்தவங்க ஹெல்த்துக்கு சொன்னேன்”னு அட்வைஸுனார். அப்பறம் உள்ள இருக்குற
எல்லாருக்கும் டாட்டா பை பை சொன்னாங்க. சேரன் சார் அப்பவும் வனிதாவுக்கு 8 பக்க கட்டுரை
வாசிச்சாரு. லாஸும் கவினும் ஒண்ணா உக்காந்திருந்தாங்க.
வனிதா ஆசைப்படி
அவங்க கூட ஒரு ஆட்டத்தப் போட்டுட்டு அவங்கள அனுப்பி வச்சுட்டு. அவரும் போயிட்டாரு.
உள்ள காமிச்சானுங்க.
“ஒழுங்கா மைக்க மாட்டுங்கடா மாடுகளா! கேப்டன் நான்
சொல்றேன் கேளுங்கடா”ன்னு லாஸு லூஸு மாதிரி விளையாண்டுகிட்டு இருந்துச்சு. “என்னயத்தவிர
எவனும் ரூல்ஸ ஃபாலோ பண்றதில்ல”ன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள “ஆமா ஆமா உன்னய மாதிரி
யாரு ஃபாலோ பண்ணுவா ஆனா அந்த மைக்க மட்டும் போர்வை உரசாம பாத்துக்கோ”ன்னு பிக்பாஸ்
கலாய்ச்சாப்ல....! வனி போன சந்தோஷம் போலருக்கு. புள்ள பூச்சிய எல்லாம் அடி ஆனா வனிகிட்ட
மட்டும் பம்மு.
அப்பறம் தர்ஷனுக்கு
கேக் வந்துச்சு. “வாழ்த்துகள் சிஷ்யா”ன்னு பிக்பாஸ் சர்ப்ரைஸ் குடுத்தார். கடைசியா
ஷெரினுக்கு குருநாதா டி ஷர்ட்ட குடுத்துட்டானுங்க. அப்ப சேரன் சாருக்கு? அது அவ்வளவுதான்.
Comments
Post a Comment