Posts

Showing posts from July, 2019

பிக்பாஸ் 3 : நாள் 37 தொடர்ச்சி & 38ம் நாள் (31.07.19)

பிக்பாஸ் 3 நாள் 37 தொடர்ச்சி & 38ம் நாள் (31.07.19) கலை நிகழ்ச்சி முடிஞ்ச களைப்புல எல்லாரும் கவுந்தடிச்சு தூங்கியிருப்பானுங்கன்னு பாத்தா சல்பேட்டா சைனா மூஞ்சியோட கக்கூஸ் பெஞ்சுல கேமராவ பாத்தபடி உக்காந்து “இதோ இதே பெஞ்ச்சுல உக்காந்துதான் கல்ப்ரிட் கவின் என் கால சொரண்டிக்கிட்டே ‘நம்ம குழந்தைக்கு மொட்டையடிச்சு இதே பெஞ்ச்சுல உக்கார வச்சுதான் காது குத்தனும்’னல்லாம் பேசிட்டு, இன்னைக்கு என்னய முதுகுல குத்திட்டு போறான். என் காதல்ல கல்லப் போட்டுட்டு லாஸ் தோள்ல கையப் போட்டுட்டு ‘உனக்குத் தெரியுமா ?கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல்னு அர்த்தமாம்! வைரமுத்து இதப்பத்தி பாட்டு கூட எழுதி இருக்காரு அத நான் உனக்கு பாடிக்காட்டுறேன்”னு கடலைய போட்டாமானிக்க இருக்கான். சரி இவந்தான் இப்பிடி இம்சை பிடிச்சவனா இருக்கானே? அந்த பிள்ளைகிட்டயாவது பிலாசபி பேசலாம்னு கூப்ட்டா ‘ஏணி மேல ஏறப்பா...என்னய கூப்டுறாரு எங்க சேரப்பா’ன்னு எங்கூட சேரவே மாட்டேங்குது. என்னய பாத்தா இவனுங்களுக்கு அப்பிடி தெரியுதா இல்ல இப்பிடி தெரியுதா? பேசாம வீட்டுக்கே போயிரலாம்னு இருக்கேன்! கேட் சாவி யாருக்கிட்ட இருக்கு?”ன்ன

பிக்பாஸ் 3 : நாள் 37 (30.07.19)

Image

பிக்பாஸ் 3 : நாள் 36 (29.07.19)

பிக்பாஸ் 3 நாள் 36 (29.07.19) “நாடோடி போக வேண்டும் ஓடோடி”ன்னு புரட்சித்தலைவரோட எனெர்ஜெடிக் பாட்டோட பட்டாசா ஆரம்பிச்சது நாள். சேரனுக்கு ஆட்டம் ஜாஸ்தியாவே இருந்துச்சு மீரா போன நிம்மதியில ரொம்ப நாள் கழிச்சு கபி கபி போலருக்கு. கக்கூஸ் பெஞ்சுல சேரன் “மாயக்கண்ணாடி சேரனா” மாறி முகினுக்கு முடி ட்ரிம்மிக்கிட்டு இருந்தார். இந்த வாரம் ஒளிவு மறைவில்லாத ஓப்பன் நாமினேஷன்.... ரொம்ப சிம்பிள் : லாஸத் தவிர பெண்கள் எல்லாரும் பாரபட்சமில்லாம கவினுக்கு குத்துனாங்க. ஆண்கள் எல்லாரும் சேர்ந்து ரேஷ்மா, சாக்ஷி, மது & அபின்னு பொண்ணுங்களுக்கு குத்துனாங்க. இந்த வார நாமினேஷன் : கவின், ரேஷ்மா, சாக்ஷி, மது & அபி நாமினேஷன்னாலே பிள்ளையார் சுழி அபி ,அதுக்கு கீழ போடுற கோடு சல்பேட்டா. மதுவுக்கு சாண்டி மேல வள்ளுன்னு விழுந்தது வினையாகிடுச்சு. கவினுக்கு அவன் சல்பேட்டாவ சாவடிச்சுருவேன்னு கத்துனது காரணமாகிடுச்சு. ரேஷ்மாவுக்கு தன்னோட நியூட்ரல்தான் தகராறு. சாக்ஷியப் பொறுத்தவரை கவின ஒரு கோவத்துல நாமினேட் பண்ணிடுச்சு. ஆனா ஒரு வேளை அவன் இந்த வாரம் வெளிய போகலே

பிக்பாஸ் 3 : நாள் 34 தொடர்ச்சி & 35 (28.07.19)

பிக்பாஸ் 3 நாள் 34 தொடர்ச்சி & 35 (28.07.19) குறும்பட மேட்டர் குப்பறக் கவுத்துன காரணத்துனால அதத் தாங்க முடியாம சாண்டி கிட்ட பொலம்பிட்டிருந்தாங்க மீரா. “இந்த ஓணான் நம்ம வேட்டிக்குள்ளதான் வரணுமா?”ன்ற மாதிரி உக்காந்திருந்தார் சாண்டி. மீரா” பாத்தியா சாண்டி இவனுங்கள? இவனுங்களா ஒரு வீடியோ போட்டுக் காமிச்சு என்னய டேமேஜ் பண்றாய்ங்க.....இது எப்பிடி இருக்கு தெரியுமா? நீ கேளேன்”னு ஆரம்பிக்க, சாண்டியோ “இந்த வீட்ல இவ்வளவுதான் கேமரா! இதல இல்லாம வேற எந்த ஆங்கிள்ள அந்தாளு உன்னய அள்ளித் தூக்குனாரு?”ன்னு கேட்டார். “அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்? அத நாந்தான உணர்ந்தேன்!”னு அதே பால போட, சாண்டிக்கு சகுனமே சரியில்லன்னு தெரிஞ்சுப் போச்சு. “உனக்குத் தெரியும்ல நான் எவ்வளவு நல்ல பொண்ணுன்னு? உனக்குத் தெரியும்ல நான் யாரு பிரச்சனைக்கும் போக மாட்டேன்னு? உனக்குத் தெரியும்ல நான் சீன் கிரியேட் பன்ண மாட்டேன்னு? உனக்குத் தெரியும்ல நான் அன்னை தெரசான்னு? உனக்குத் தெரியும்ல நான் உனக்கு தெரியும்லன்னு உங்கிட்ட பேசிட்டு இருக்குறது?”ன்னு கண்டினியூ பண்ண, சாண்டி”நீ ரொம்ப குழம்பிப் போயிருக்க, அங்க பாரு

பிக்பாஸ் 3 : நாள் 33 தொடர்ச்சி & 34 (27.07.19)

பிக்பாஸ் 3 நாள் 33 தொடர்ச்சி & 34 (27.07.19) ஆண்டவர் கருவறை இருட்டுல இருந்து பேச ஆரம்பிச்சார். “இது ரகசிய சுரங்கப்பாதை இது வழியா உள்ள இருக்குறவனுங்க என்ன பண்றாய்ங்கன்னு பாப்போம்”னு கூட்டிட்டு போனார். (இவிங்கள எங்க இருந்து பாத்தாதான் என்ன?). ஆண்டவர் வருகைக்காக எல்லாரும் அலங்காரம் பண்ணிட்டு இருந்தாய்ங்க. அப்பறம் ரகசிய அறைய காமிச்சார். இந்த வாரமோ இல்ல வரும் வாரங்கள்லயோ இங்க ஆளுக வரலாம்னு சொன்னார். “இந்த ரூமு ஒரு கண்ணாடி, முன்னாடி, பின்னாடி”ன்னு என்னென்னமோ சொன்னார்....ஆனா நமக்குதான் ஒன்ணும் வெளங்கல. கட் பண்ணி காமிச்சா மேடையில தோன்றுனார். ஓடுற ட்ரெயின்ல இருந்து ஓடி வந்த டி டி ஆர் மாதிரி ஒரு காஸ்ட்யூம். “கிராமசபைகளின் வலிமைய உணர்த்த ஒவ்வொரு சீசன்லயும் ஒரு கிராமத்து டாஸ்க் பண்ண சொல்லி சொன்னேன்.....ஆனா இவனுங்க வலிமைய காமிச்சு கலவர பூமியாக்கி, கண்டபடி கத்தி.....யப்பா......கிராமத்த கொளுத்திக்காததுதான் பாக்கி....! மனுஷனுங்களா இவனுங்க”ன்னு சொல்லிட்டு, “ரைட்டு வெள்ளிக்கிழமை மீதிய பாப்போம்”னு சொல்லிட்டு அகத்துக்கு போனார். 33ம் நாள் ராத்திரி டைனிங் ஏரியால சாண்டி