பிக்பாஸ் 3 : நாள் 7 - (30.06.19)

பிக்பாஸ் 3
நாள் 7 - (30.06.19)


“உங்களில் நான்” ரொம்பவும் டைம் எடுத்துக்காம அகம் டீவி வழியா அகத்துக்குள்ள போனார்....சட்டுன்னு ஏதோ பாஷையில பேச அதுக்கு அபியும் அதே பாஷையில பதில் சொல்ல, அது ஃப்ரென்ச்சாம்! “பாத்தீங்களா ஃப்ரென்ச் தெரியாதவங்களுக்கு ஃப்ரென்ச் புரியல, அதனால தமிழ்லயே பேசுங்க”ன்னாரு. அதாவது அபி & சாக்ஷி அதிகமா ஆங்கிலம் பேசுறததான் இப்பிடி ஃப்ரென்ச் மூலமா புரியவச்சாராம். (வேணாம் பிலிப்சே...)
பாத்திமாவ இதுவரை நடந்தத செய்தியா வாசிக்க சொன்னாரு...அவங்க அதுக்கு நோட்ஸ் எடுக்கும் போதே மது, பாட்டில் குழந்தை விஷயத்த பத்தி சொல்ல வேணாம்னு சொன்னாங்க. ஆனா அத செய்தியில சொருகிட்டாங்க பாத்திமா. அடுத்து லாஸ்லியா முறை, செல்லம் செய்தி வாசிக்கிறத தவிர எல்லாம் பண்ணுச்சு...கைய கால ஆட்டி, சிரிச்சு, பாடி இப்பிடி ஒரு செய்தி வாசிப்பாளர செவ்வாய் கிரகத்துல கூட பாக்க முடியாது. (இத கமலும் குறிப்பிட்டார்)
ஆண்டவர் பிரேக் சொன்னதும் அகத்துக்குள்ள காட்டப்பட்டது, அபி திடீர்னு கோவப்பட்டு போயி தண்ணி குடிக்க, சாக்ஷி & ஷெரின் போயி சமாதானப்படுத்துனாங்க. மேட்டர் இதுதான், அபியோட தண்ணி பாட்டிலுக்கு MGR டயாப்பர் மாட்டிவிட்டு குழந்தையாக்க...அபி அத தங்களோட குழந்தைன்னு சொல்லி விளையாடி இருக்காங்க(இதெல்லாம் எப்ப நடந்துச்சுன்னே தெரியல...ஹாட்ஸ்டார் பாக்கனும் போல), இததான் பாத்திமாவ சொல்ல வேணாம்னு சொல்லி, பாத்திமா அத சொல்லி அதனால மது அப்செட்டாகி முனுமுனுக்க, அதன் காரணமா அபி டென்ஷனாகிட்டாங்க.
மதுகிட்ட வந்து அபி “ஏன் இப்பிடி இத பொதுவா சொல்லி அசிங்கப் படுத்துறீங்க?”ன்னு கேக்க, “நான் ஒரு தமிழ் பொண்ணு என்னால இதெல்லாம் ஜீரணிக்க முடியாது...எங்க வீட்லயெல்லாம் இத பாக்குறாங்க, சமுதாயம் கெட்டுப் போகும் இதனால”ன்னு “துப்பட்டா போடுங்கள் தோழி” குரூப்பு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க (போன சீசன்ல ரித்விகா & ஜனனி இதே ஸ்டார்டஜிய யூஸ் பண்ணாங்க) ஆனா இதுக்கு பல பேருகிட்ட இருந்து எதிர்ப்பு மதுவுக்கு. ஷெரின், “தமிழ் பொண்ணு இதுல எங்க இருந்து வருது, நான் தமிழ் பொண்ணு இல்ல, அதனால எங்களுக்கெல்லாம் கலாச்சாரமே இல்லயா?ந்னு” சரியாவே கேட்டாங்க.
இந்தப் பஞ்சாயத்து கமல் கிட்டயே போச்சு! அவர் ரொம்ப கூலா, இதுல என்ன பிரச்சனை உண்மையா பாட்டில் பொறக்காது பின்ன என்ன? நல்ல வேளை நான் தமிழ் பொண்ணு கிடையாது ஆனா பொண்ணா நடிச்சிருக்கேன்னு டைமிங்ல பிண்ணுனார்.
பின்ன அவரே பிரச்சனைய திசைதிருப்ப கேப்டனோட செயல்பாடுகள பத்தி கேட்டார். வனிதா தான் சரியாவே செஞ்சிருக்குறதா சொன்னாங்க. இப்போ மறுபடி பிரேக். மறுபடி பஞ்சாயத்து ஷெரின் நேரடியாவே மதுகிட்ட சண்ட போட்டாங்க. அபி கண்ல கண்ணீரப் பாத்ததும் கவினுக்கும் ஆத்திரம். கவினும் தன் பங்குக்கு மதுவ கட்டி ஏறிட்டாப்ல.(இந்த பஞ்சாயத்தால தேடிட்டு இருந்த ஸ்மோக்கிங் ரூம் எங்கன்னு தெரிஞ்சது)
பிரேக் முடிஞ்சு வந்த ஆண்டவர்கிட்ட, மீரா எழுந்து “சார் வனிதா கேப்டன்ஷியில் குறை உள்ளது”ன்னு நக்கீரன் மாதிரி ஆரம்பிச்சாங்க. ஒரு தலை பட்சமா செயல்படுறதாவும்..தன்னை புறக்கனிக்கிறதாவும் சொன்னாங்க (இது ஒரு பக்கா அட்டென்ஷன் சீக்கிங் முறை....இன்னைக்கு யாரும் தன்னப் பத்தி பேசலயேன்றதுக்காக பண்ணது போல இருந்துச்சு) ஆனா இத சேரன் மறுத்தார்..."மீரா வந்த நாள்ள இருந்தே டண்ட டாட டாட டாட டா வாதான் இருக்கு அபிக்கும் அதுக்கும் முன்பகை வேற, அப்றம் வனிதாகிட்ட பிரச்சனை அதனலதான் இப்பிடி பேசுறாங்க, போக எப்பவுமே விக்ரமன் படம் மாதிரி இருக்க முடியாது”ன்னும் சொல்லி முடிச்சார்.
அடுத்து கொஞ்சம் நிலமைய கூலாக்க, பிடிச்சவங்களுக்கு இதயத் தலகாணிய குடுக்க சொன்னார் கமல். ஆளாளுக்கு மாத்தி மாத்தி குடுக்க...சரவணன் அதிக இதயம் பெற்றவரானது ஆச்சர்யம்!
அடுத்து எலக்ஷன், வெளிப்படையாவே நாமினேஷன் கேட்டார் கமல். வைத்யா, MGR, ரேஷ்மா, மீரா நால்வரும் எழுந்தாங்க. தேர்தல் வாக்குறுதியும் குடுத்தாங்க. கமல் ஆதரவுக்கரங்கள தூக்க சொல்லி எல்லாரும் தூக்குனதும் சேரன் எழுந்து “சார் இப்பிடி வெளிப்படையா ஆதரவு குடுக்கும் போது பிரச்சனை வரும்”னு சொன்னதும் சரவணன் “நாங்க எல்லாம் கையத்தூக்குனப்பறம் இப்பிடி சொல்லக் கூடாது”ன்னு சொன்னார்.சேரன், “இருங்க முழுசா கேட்டுட்டு பேசுங்க...காரணத்தயாவது வெளிப்படையா சொல்ல சொல்லுங்க”ன்னு கேட்டுக்கிட்டார்.
ஒரு வழியா மெஜாரிட்டி வாங்கி வைத்யா கேப்டனானார். எலெக்ஷன் இந்த வாரம்...ஆனா எவிக்ஷன் அடுத்த வாரம்னு சொல்லிட்டு கிளம்பிட்டார் ஆண்டவர்.
அப்றம் மறுபடி மது, தனியா உக்காந்து புலம்புனாங்க...(இதுவும் ஒரு அட்டென்ஷன் சீக்கிங் தான்) அப்றம் அபி வந்து மது பெட்ல படுத்துக்க முடியாது மாறனும்னு சொல்ல...மது தான் மாற முடியாது அவங்கள மாறிக்க சொல்லுங்கன்னு மறுத்தாங்க. பின்ன வனி லாஸ்லியாவ மது பெட்ல மாற சொல்லி அந்த இடத்துக்கு அபிய போக சொன்னாங்க. மீரா, சேரன் கிட்ட ஏதோ விளக்கம் சொல்ல முற்பட சேரனோ உங்கிட்ட பேச விருப்பமில்ல...எங்கிட்ட பேசாதன்னு வெளிப்படையாவே சொன்னார்.
மது, கேமராகிட்ட வந்து “அவசரப் பட்டுட்டியே குமாரு”ன்ற மாதிரி “சரி இனிமே நடிக்கக் கத்துக்குறேன் கூல்”னு சொல்லிக்கிட்டாங்க. பின்ன ஷெரின கூப்ட்டு சாரி கேட்டுகிட்டாங்க. அபிய பெட் மாற வேணாம்னு சொல்லியும், அபி இல்ல சரியா வராதுன்னு கிளம்பிட்டாங்க.
இப்போ மீராவும், மதுவும் லான்ல....இந்த வாரம் இவங்க ரெண்டு பேரும்தான் நட்புல இருப்பாங்க போல....(இது கூடா நட்பா, கேடா முடியுமான்னு போகப் போக தெரியும்)
ஆக வரும் நாட்கள் ஜக்ஜ்ஜோதியா இருக்கும்ன்றதுல எந்த சந்தேகமும் இல்ல

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)