பிக்பாஸ் 3 : நாள் 14 - (07.07.19)
பிக்பாஸ் 3
நாள் 14 - (07.07.19)
ஆண்டவர் கிளைமாக்ஸ்ல விஜயகாந்த் போட்டுட்டு வர மாதிரி லாங் கோட் காஸ்ட்யூமோட வந்தார். ரொம்ப நேரம் எடுத்துக்காம உள்ள நடக்குற அக்கப்போர நமக்கு காமிச்சார்.
அபி, சாக்ஷி கூட உக்காந்து “வனி சொல்றத நான் கேக்குறேன், மதிக்கிறேன் ஆனா அதுக்காக என் சுதந்திரத்தை எப்பிடி விட்டுக்குடுக்க முடியும்?”னு கேக்க சாக்ஷியும் “ஆமா ஆமா டெபனெட்லி நீ உன்னய மாதிரியே இரு ஒண்ணும் பிரச்சனை இல்ல”ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே வனி அங்க வந்தாச்சு...”இங்க பாரு நடந்த எல்லாத்துக்கும் நீதான் காரணம், எல்லாருமே உன் விஷயத்துக்காக சண்டை போட்டுதான் கெட்ட பேரு வாங்கி நிக்கிறோம். சாக்ஷி இன்னைக்கு வெளிய போனா அதுக்கு நீ மட்டுந்தான் காரணம்”னு சொல்ல. ரேஷ்மாவும், வனியும் ஷெரின் & சாக்ஷி மண்டைய கழுவ ஆரம்பிச்சாங்க.
சாப்பிட்டுட்டு இருந்த அபிய மறுபடியும் குற்றம் சாட்ட ஆரம்பிச்சாங்க வனி. ஒரு கட்டத்துல “என்ன விளையாடுறியா? எங்கள பாத்தா லூசு மாதிரி தெரியுதா?”ன்னு எகிற ஆரம்பிச்சுட்டாங்க (வனி இஸ் இஞ்ஜூரியஸ் டு ஃபேமிலி). “நானெல்லாம் என்னைக்காவது யார்கிட்டயாவது சண்டை போட்டிருக்கேனா?ந்னு கேட்டதும் சாக்ஷிக்கே அதிர்ச்சி (நமக்கும்).அபி எழுந்து பாத்ரூமுக்குள்ள போயி குலுங்கி குலுங்கி அழுது, தான் வீட்டுக்கு போறேன்னு பிக்பாஸ் கிட்ட கதற ஆரம்பிச்சாங்க.
வனி பண்ண தப்புலயே இப்ப பண்ணதுதான் மிகப் பெரிய தப்பு ஒருத்தருக்கு குற்ற உணர்ச்சிய விதைச்சு அது மூலமா அவங்கள அவங்களுக்கே தண்டனை குடுக்க வைக்குற மாதிரியான செயல்....ஒரு கொலை செய்யுறதுக்கு சமம். இத தெரிஞ்சே செய்யுற சைக்கோதான் வனிதா.
அபி அழுதுட்டு இருந்தப்ப மது அங்க வந்து இதுதான் கேப்புன்னு “அபிநயம் பிடிக்கும் உனது கண்கள் அழுது வடிவதேன்?....உன் அழகு உனக்கு தெரியுமா என் செல்வமே....உன் உயரம் என்ன அழகுத் தமிழ் என்ன....” அப்பிடின்னு ஆறுதல் சொல்றேன்ற பேருல சம்பந்தமில்லாம கண்ணாம்பாள் மாதிரி பேசிட்டு இருந்தாங்க. ஆனா அபி ரொம்ப தெளிவா “இருக்குற பஞ்சாயத்து போதாதா. இத பாத்தா வேற ஆத்தா வனிதா ஆட்டமா ஆடிரும்”னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டு “நான் என் நண்பர்கள் கிட்ட போறேன்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
போனவங்க நேரா ஸ்மோக்கிங் ரூம்ல இருக்கும் ஷெரின் & சாக்ஷி கிட்ட போயி “நான் கமல் சார்கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்”னு சொன்னதும் ஷெரின் “அப்பிடி போயிட்டா எல்லாம் சரியாகிருமா? இருந்து எல்லாத்தையும் சரி பண்ணு”னு சொன்னாங்க. அபியும் “சரி அப்பறம் இன்னொரு விஷயம், மது வந்து பேசுனா ஆனா நான் பேசல இத ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா திரும்ப அது வேற மாதிரி வரும் அதான்”னு சொன்னாங்க.
வனிதா கேங்குல அபிய விட மீரா ரொம்ப நெருக்கமான ஆளாகிட்டாங்க.
“காலர் ஆப் த வீக்”னு சொல்லி ஒரு பொன்ணு பேசிச்சு கவின் கிட்ட. ஆர்வமா எல்லாரும் என்ன கேள்வி கேக்க போகுதுன்னு பாத்தா “கவின் நீங்க யார உண்மையா லவ் பண்றீங்க?”ன்னு கேக்க “ஏம்மா இருக்குற பிரச்சனையில இதான் உனக்கு முக்கியமா?”ன்னு கவினே நம்ம மனசுல இருக்குறத கேட்டுட்டார். தான் சும்மா அப்பிடி விளையாண்டுகிட்டு இருக்கேன் அப்பிடியெல்லாம் யாரையும் நான் லவ் பண்ணலேன்னு சொன்னார். அப்றம் அந்தப் பொண்ணுகிட்ட 1 கேள்விதானான்னு கேட்ட கவின் கிட்ட “உள்ள பூந்து போடுறியே கொக்கி”ன்னு ஆண்டவர் கலாய்ச்சார்.
கவின் மக்களால் காப்பாற்றப்பட்டார்னு சொன்னார் ஆண்டவர். அப்பறம் அப்பிடி இப்பிடின்னு ஜிக்ஜாக் விளையாட்டு விளையாடி பாத்திமா வெளிய வந்தாங்க.
ஆண்டவர் உள் நிலவரத்த பத்தி கேக்க “வனிதா ரொம்ப டாமினண்டா இருக்காங்க. மது, லாஸ்லியா தவிர எல்லா பொண்ணுங்களும் வனிதா பின்னாடி போறாங்க. ஆண்கள் எதுக்குடா வம்புன்னு எதிர்த்து கேக்குறதில்ல. மோகன் வனிதாவோட கைப்பிள்ளையாவே மாறிட்டார்”னு சொன்னாங்க.
அப்பறம் அடுத்த தலைவருக்கான வேட்பாளர்கள ஃபாத்திமா தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னதும் தர்ஷன், அபி, சாண்டி 3 பேரையும் செலெக்ட் பன்ணி அதுக்கான காரணங்களை சொன்ன போது உண்மையாவே ஆச்சர்யமா இருந்தது. ஆண்டவர் கூட “அடுத்தடுத்து என்ன பண்றதுன்னு உங்கக் கிட்ட நான் போன் பண்ணி கேட்டுக்க வேண்டி வரும் போல”ன்னு சொல்ற அளவு இருந்தது பாத்திமாவின் கனிப்பு. ஆண்டவர் அதோட கிளாம்பிட்டார்.
தான் வெளிய போகாதது சாக்ஷிக்கு பெரிய ஆறுதல். அத விட அபிக்கு பெரிய ரிலீஃப். மீராகிட்ட சாக்ஷி “நாம மொத இருந்து புதுசா பிரண்டா இருக்கலாம்”னு சொன்னாங்க...அவங்க ஆளுங்க எல்லாத்தையும் தேடி தேடி போயி கட்டி பிடிச்சுக்கிட்டாங்க. வனிதா,” நான் சொன்னேன்ல அந்தம்மாதான் போகும்”னு சொல்ல. ரேஷ்மா “இத சத்தமா வெளிய சொல்லிட்டு திரியாத”ன்னு எச்சரிச்சாங்க. பாத்திமா பிரிவுல சோகமான மோகன் கதறி அழுகுறத பாத்துட்டு வனிதா “இந்தாளு ஏன் இந்த அழுக அழுகுறாப்ல? நேத்துதான் எங்கிட்ட அந்தமா கூட பெரிய சண்டை போடப் போறேன்னு சொன்னாரு”ன்னு சொன்னாங்க (ஆனாலும் உங்கிட்ட வந்து பேசுறானுங்க பாரு அவங்கள சொல்லனும்) “சரி இது கூட நடிப்புதான் ஏன்னா அடுத்த வாரம் அவருதான போகனும்” அப்பிடின்னு ஜோசியம் வேற சொல்லிட்டு போனாங்க.
கவின் சாக்ஷிகிட்ட “நாம நெனைக்கிற மாதிரி இல்ல. இதுவரை நாம நெனச்சது எல்லாம் மாறி மாறி நடக்குது அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்”னு பாத்திரத்தோட சேர்த்து நிலமையை விளக்கிட்டு இருந்தார்.
சாண்டி தலைவரோட வேலை என்னன்னு ரேஷ்மா கிட்ட கேக்க ரேஷ்மாவோ “நான் என்னைக்கு கேப்டனா இருந்தேன்? மோகன் கிட்ட கேளு”ன்னு சொன்னதும் “யாரு அந்த ஒரு நாள் கேப்டனா?”ன்னு கலாய்ச்சார். ரேஷ்மா “அபி தலைவராகிடுவா அவ ஒரு ஸ்ட்ராங் கேண்டிடேட்டு”ன்னு சொன்னாங்க. அதுல ஒரு வன்மமும் இருந்துச்சு. வனிதாவும் “எமோஷனலான ஆட்கள் தலைவரா வந்துடுவாங்க”ன்னு சொன்னாங்க.
பின்ன மீரா ஓரே அழுகாச்சி தர்ஷன் தன்ன பின்னாடி போயி பேசுற ஆளுன்னு சொன்னதால. சமாதனப்படுத்த வந்த சாக்ஷிக்கே சமாதானம் தேவைப்படுற அளவு லூசு மாதிரி பேசுனாங்க மீரா. சேரன் அபிக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தார் “ரொம்ப அவங்களுக்கு பயந்து சாகாத தைரியமா இரு”ன்னு சொல்லிட்டு இருந்தார்.
மொத்ததுல அபியும், கவினும் கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அபி ஒருவேளை தலைவராகிட்டா இந்த வாரம் வனி & கோவோட ஆட்டம் பேயாட்டமா இருக்கலாம். இதே அபிகிட்ட மீராவுக்காக சண்டை போட கிளம்பலாம் நம்ம வாரியர் வனிதா!
Comments
Post a Comment