பிக்பாஸ் 3 : நாள் 18 - (11.07.19)
பிக்பாஸ் 3
நாள் 18 - (11.07.19)
பேட்டே பராக்....னு எழுப்புனார் பிக்பாஸ். கவின் & சாண்டி குழுவினரின் கானா கச்சேரி கரை புரண்டு ஓடுச்சு. லாஸ்லியாவ பாத்து கவின் பாடப் பாட சாக்ஷி முகத்துல சோகை புடிக்க ஆரம்பிச்சது. லாஸ்லியாவுக்கோ பாட்டு பாடுனவனயே புடிக்க ஆரம்பிச்சது போல தெரிஞ்சது. அப்பறம் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டைதான்”னு மாத்திப் பாடி குதூகலமானாங்க எல்லாரும்.
மீரா, சாண்டி & கவின் 3 பேரையும் கூப்ட்டு கவின் இன்ஸ்பெக்டர், மீரா கான்ஸ்டபிள், சாண்டி ஆவி மீடியேட்டர்னு சொன்னார் (ஆவிகிட்ட விசாரிக்கவாம்) கொலையாளிய கண்டுபிடிக்க விசாரணை பண்ண சொன்னார். அதுக்கேத்த ட்ரெஸ்ஸ போட்டாங்க 3 பேரும்.
விசாரணைன்ற பேருல ஏதேதோ பண்ணானுங்க. அப்பறம் சேரன் வெளிய சாக்ஷிட்ட வந்து “உள்ள நடக்குற கூத்தப் போயி பாரு”ன்னு சொல்லி அனுப்பி வைக்க (ஒரு பெரிய மனுஷன் செய்யுற வேலையாயா இது), டைனிங் ஹால்ல லாஸ் & கவின் ஒரே தட்டுல சாப்டுட்டு இருந்தாங்க. சாக்ஷி முகம் சாக்பீஸ் மாதிரி போச்சு.
ஆச்சர்யமா மீரா மண்டையில இருந்த களிமண்ணுல ஒரு கதவு தொறந்து “கொலைகாரன் முகின் & வனிதாவா கூட இருக்கலாம்”னு சொன்னத சாண்டி ட்விஸ்ட் பன்ணி விட்டாப்ல.
டாஸ்க் நடுவுல சேரன் திடீர்னு ஒரு பஞ்சாயத்த தூக்கிட்டு வந்தாரு, அதாவது “என்ன விளையாட்டுனே தெரியாம விளையாட முடியாது, 4 பேரும் வெயில்ல காஞ்சு கஷ்டப்படுறாங்க....உங்களுக்காகதன்னு அடிக்கடி சொல்லி காயப்படுத்துறாங்க. அதனால ஒண்ணு குற்றவாளி குற்றத்த ஒப்புக்கோங்க அல்லது லக்ஸுரி பட்ஜெட்டே வேணாம்”னு சொன்னதும் கவின் இதுக்கு ஒத்துக்கல 3 நாள் பட்ட கஷ்டம் வீணாப் போயிரும்னு சொல்ல அத வனியும் வழிமொழிஞ்சாங்க. காரணம், நேத்து கொலைகார நாய்னு சேரன் சொன்னதுக்காக இன்னைக்கு சேரனுக்கு எதிரா கடப்பாரையவே சுத்துனாங்க வனி.
உள்ள “சேரன் செங்குட்டுவன் என்ன சொல்றாரு?”ன்னு சித்தப்பு கேக்க, மீரா இதான் சாக்குன்னு “அவரு இப்பிடிதான் எப்பவும் ஒரே நச நசப்பு... என் மேல கூட அவருக்கு பர்சனல் கச கசப்பு”ன்னு தெளிச்சு விட்டுச்சு.
இந்த கேப்புல வனிக்கு அடுத்த டாஸ்க், இன்ஸ்பெக்டரயே போடனும் அதாவது கவின...அவன் துப்பாக்கிய திருடி ஒளிச்சு வச்சா செத்துருவானாம். 10 நிமிஷத்துல முடிச்சாங்க வனி.
கவின் செத்தாச்சுன்னு அறிவிச்சாரு பிக்பாஸ்.
இப்ப சேரன் கேமராகிட்ட போயி “விளையாட்டு என்னன்னு வெளிப்படையா சொன்னா பழகிக்குறேன் இல்லேன்னா பிரச்சனையில்ல நான் விலகிக்கிறேன்”னு சொன்னாப்ல. இத விமர்சிச்ச வனி & மீராவ “என் முடிவ யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேயாதீங்க”ன்னு கண்டிஷனா சொன்னார்.
இப்ப சேரன் கேமராகிட்ட போயி “விளையாட்டு என்னன்னு வெளிப்படையா சொன்னா பழகிக்குறேன் இல்லேன்னா பிரச்சனையில்ல நான் விலகிக்கிறேன்”னு சொன்னாப்ல. இத விமர்சிச்ச வனி & மீராவ “என் முடிவ யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேயாதீங்க”ன்னு கண்டிஷனா சொன்னார்.
கவின் செத்ததும் மீரா இன்ஸா ப்ரொமோஷன் ஆனாங்க. பிக்பாஸ் “யாரு குற்றவாளி?”ன்னு மீராவ கேக்க, மீரா லாஸ் & மதுன்னு சொல்லிட்டு இருக்கும்போதே வனிக்கு போன் வர, சமாளிச்சு பாத்த வனி வேற வழி இல்லாம எல்லாருக்கும் முன்னாடி போன் எடுத்து பேச, பிக் பாஸ் உண்மையைச் சொல்லச் சொன்னார்.
வனி, தானும் முகினும்தான்னு உண்மைய சொன்னதும் எல்லாருக்கும் அதிர்ச்சி. இது நாளப்பின்ன ஒரு பிரச்சனையா வெடிக்க நிறைய வாய்ப்பிருக்கு. ஆனா இப்ப பிரச்சனை வேற.
வனி, தானும் முகினும்தான்னு உண்மைய சொன்னதும் எல்லாருக்கும் அதிர்ச்சி. இது நாளப்பின்ன ஒரு பிரச்சனையா வெடிக்க நிறைய வாய்ப்பிருக்கு. ஆனா இப்ப பிரச்சனை வேற.
“யாரு ஒழுங்கா விளையாண்டாங்க இந்த டாஸ்க்குல?”ன்னு பிக்பாஸ் கேக்க வனி & வயது காரணமா மோகன்னு எல்லாரும் சொன்னாங்க. பின்ன” ப்ளேயர் ஆஃப் த வீக் யாரு?”ன்னு கேட்டதும் ஒரு மனதா சாக்ஷிய சொன்னாங்க. “ஆக இந்த 3 பேரும் அடுத்த வாரத்துக்கான தலைவர் வேட்பாளர்”னு பிக்பாஸ் சொன்னதும் வனி சந்தோஷப்பட்டது சரி, ஆனா மிஸ்டர் மோகன், பாஜக வேட்பாளரா அறிவிச்சதும் கங்கை அமரன் ஆனந்தப்பட்ட மாதிரி ஏன் அவ்வளவு சந்தோசப்பட்டார்னு இப்ப வரைக்கும் விடை தெரியல.
அப்பறம் இதையே மாத்திக் கேட்டார் பிக்பாஸ் “ஒழுங்கா விளையாடாத 2 பேரு யாரு?”ன்னார். சேரன் தானா முன்வந்து பேரு குடுத்தார். இன்னொருத்தர யாரும் சொல்லாததால கேப்டன் அபிய முடிவெடுக்க சொன்னாங்க. அபி, சரவணன் & சேரன சொன்னதும் சரவணன் மொதல ஒத்துக்கிட்டார். ஆனா டைனிங்க் ஹால்ல தன்னோட அதிருப்திய சொன்னதும் “ஆகா இன்னைக்கு நிம்மதியா தூங்க ஒரு பஞ்சாயத்து கிடைச்சது”ன்னு குவாட்டர பாத்த கோவிந்தன் மாதிரி வனி பரபரத்து பஞ்சாயத்த கூட்டுச்சு.
வனி “கடமைய சரியா செய்யாம உணர்வுக்கு இடம் குடுத்த கவின் தான் ஜெயிலுக்குப் போகனும்னு சொன்னாங்க. ஆனா சாக்ஷி இத ஒத்துக்கல ஆனா அதுக்காக வனிதா சாக்ஷிய எகிறுனாங்க (சாக்ஷிக்கு வனிதா மேல மெல்ல மெல்ல விரிசல் அதிகமாகிட்டே போகுது.....அடுத்த வாரம் இந்த நிலம் என் கைல சிக்குச்சு வனி நீ செத்தன்னு சீமான் அண்ணன் மாடுலேஷன்ல சாக்ஷி சொன்னாப்ல எனக்கு கேட்டுச்சு) “உம்மூட்டு துப்பாக்கியவே களவாட விட்டுட்ட அப்பறம் எப்பிடி நீ கொலைகாரன பிடிச்சிருப்ப?”ன்னு கொக்கி போட்டாங்க வனி. கவின் லூசு மாதிரி உடனே ஒத்துக்கிட்டான். அவன் என்னமோ வனி சொன்னத கேக்கலேன்னா சாக்ஷிய வனி என்னமாச்சும் பண்ணிடுமோன்ற பயத்துல ஒத்துக்கிட்ட மாதிரி தெரிஞ்சுது.
பின்ன சம்பந்தமில்லாம அபி எந்திருச்சு “சேரனுக்கு பதிலா யாரும் ஜெயில் பாக்குறீங்களா?”ன்னு கேக்க லாஸ் கைய தூக்குச்சு. வனி முந்திக்கிட்டு எந்திருச்சு “இங்க என்ன உங்களில் யார் அடுத்த காந்தி தாத்தா போட்டியா நடக்குது அவங்கவங்கள தியாகியா காட்ட”ன்னு காட்டுக் கத்து கத்துச்சு. லாஸ்லியாவோ “நான் கொஞ்சம் கதைக்கனும்”னு சொன்னத கேக்க விரும்பாத வனி “அவ்ளோ ஈஸியா உன்ன நல்லவன்னு பேரு வாங்க விட மாட்டோம்”னு வன்மத்தோட பேசுனது எல்லார் காதுலயும் விழுந்தது. (லாஸ் ஆர்மியே கேட்டுச்சா?)இதுக்கு கோவப்பட்டு லாஸ் கக்கூஸ் போக பின்னாடியே வந்த கவின் சமாதானப்படுத்த முயல “கவின் என்னோட இனி கதைக்காதன்னு லாஸ் கண்ணீர் சிந்த....நமக்கோ நெஞ்சில் உதிரம் கொட்டுச்சு.
உள்ள சரவணன், பசங்கள கூப்ட்டு “ஏண்டா அந்த பொண்ணு என்னய நல்லா விளையாடாத லிஸ்டுல சேக்கும் போது ஒரு பயலாவது நான் நல்லா விளையாண்டேன்னு சொன்னீங்களாடா? ஒழுங்கா அவன் அவன் வேலைய பாக்குறதுதான் நல்லது போல, நான் காட்டுனது பாசம் ஆனா நீங்க செஞ்சது மோசம்”னு சொன்னதோட......AWESOME ஆ இன்னைக்கு முடிஞ்சது.
Comments
Post a Comment