பிக்பாஸ் 3 : நாள் 10 (தொடர்ச்சி) & 11ம் நாள் - (04.07.19)

பிக்பாஸ் 3
நாள் 10 (தொடர்ச்சி) & 11ம் நாள் - (04.07.19)


வனிதா சேரன் கிட்ட மறுபடியும் “உங்க டீம் எபெக்டாவே இல்ல. பெட்ரூம்லாம் 1 நாள் விட்டு 1 நாள் க்ளீன் பண்றதெல்லாம் என்னால பொறுத்துக்கவே முடியாது”ன்னு சொல்ல. சேரனோ, “நாங்க தினமும்தான் க்ளீன் பண்ண போறோம் ஆனா அங்க உள்ளவங்கதான் “ஹூ இஸ் த டிஸ்டபர்ன்ஸ்னு கேக்குறாங்க. அதனால நாங்களும் ஆளில்லாதப்ப க்ளீன் பன்றோம்”னு சொன்னார். சேரன் “வனிதா நீ கேப்டனா இருக்குறப்போ நாங்க உன் பேச்ச கேட்டோம்ல, அதே மாதிரி இப்போ வைத்யா கேப்டனா இருக்குறப்போ நாங்க வைத்யா பேச்சதான் கேப்போம். நீ எதுவா இருந்தாலும் லீடர் கிட்ட பேசி அவர மூலமா சொல்லுன்னு”ன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொன்னார்.
வனிதாவுக்கு இது பொறுக்க முடியல ரேஷ்மாகிட்ட போயி “இனி சும்மா கூட சேரன் கிட்ட பேச மாட்டேன் அவரு என்னய அவமானப் படுத்துறாரு. நான் ஒண்ணும் தனியா போயி கேக்கல, எங்க டீம் கேப்டன்ற முறை, அப்பறம் வைத்யாவ பக்கத்துல வச்சுகிட்டுதான பேசுனேன். பட் சேரன் இஸ் மோரன்”னு சொன்னங்க.
பின்ன சம்பந்தமில்லாம ஒரு டீம் மீட்டிங்க போட்டு வைத்யா “இந்த வீட்ல நாந்தான் கேப்டன்” அப்டின்னு மத்தவங்களுக்கு மட்டுமில்ல தனக்கும் ஞாபகப்படுத்திக்கிட்டார். “கிவ் ரெஸ்பெக்ட் & டேக் ரெஸ்பெக்ட்”னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். ஆனா யாரும் கேட்டா மாதிரி இல்ல.
“இவ்ளோ நாள் ஆகியும் நாம இன்னும் நம்ம சிக்னேச்சர் அழுகைய அழுகலையே....இந்தப் பக்கி பயபுள்ளைக நம்மள பெர்பார்மென்ஸ் பண்ணவே விட மாட்றாங்களே”ன்னு, அவரே இன்னைக்கு அவருக்கான ஒரு சூழ்நிலைய உருவாக்குனார். சுத்தி மது, சாண்டி, லாஸ்லியானு உக்காந்திருக்க.... கைய ஃபோனா மாத்தி தன் வீட்டுக்கு பேசுறதா நெனச்சு கற்பனையா பேசுனார். ரெண்டாவது வார்த்தையிலயே விம்மி வெடிக்க ஆரம்பிச்சு, உடஞ்சு.......அப்பறம் அவரே முடிச்சுட்டார். இத பாத்த லாஸ்லியா ஓடி வந்து அவரு மேல சாஞ்சு அழுக....அவரோ “குட்டிக் கழுதை....ன்னு தலைய தடவ ஆரம்பிச்சுட்டார்.
நைட் லான்ல லாஸ் & சாக்ஷி கிட்ட கவின் தன் காதல் நிலைய பத்தி சொல்ல...அதுக்கு லாஸ் “நான் உன்னய லைக்கு பட் நாட் லவ்வு”ன்னு சொல்ல, கவின் அதுக்கு “இது போதும் எனக்கு இது போதுமே”ன்னு சந்தோஷமா சிரிச்சான்.
11ம் நாள் “மரணம் “மாசு” மரணம்”னு அலாரம் (க்ளீனிங் டீம குறிவச்சு பாடுனதோ என்னமோ) தர்ஷன், மீரா, கேப்டன் வைத்யா மட்டும் லான்ல ஆட...மத்தவங்க உள்ளயே ஆடிக்கிட்டாங்க (லாஸ்க்கு யாரச்சும் புதுசா நாலஞ்சு ஸ்டெப் சொல்லிக் குடுத்தா புன்ணியமா போகும்).
தின நடவடிக்கையில பாத்திமா எல்லாருக்கும் செய்தி வாசிக்கக் கத்துக்கொடுக்கனும். நல்லா பன்ணாங்க.
சாக்ஷி ஷெரின் கிட்ட “நான் முகின் கிட்ட பழகுறது கவினுக்கு அப்செட்டாகுது”...அவன் “பொசசிவா இருக்குறது தப்புதான்னு ஒத்துக்குறான் ஆனாலும் அவனுக்கு காண்டாவதுன்னு சொல்றான்”னு சொன்னாங்க. ஷெரின் நிலமைய சரியா அவனுக்கு எடுத்துசொல்லுன்னு சொன்னாங்க.
வனிதாவ பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்ட்டு உங்கள சில பேர் (போலீஸ்) பாக்க வந்திருக்காங்கன்னு சொன்னார். மறுபடியும் ஹவுஸுக்குள்ள வந்து எல்லார் முன்னாடியும் வனிதா ரேஷ்மாகிட்ட என்ன பிரச்சனைன்னு சொன்னாங்க. ஆனா இதுக்கப்பறம் இந்த பிரச்சனைய பத்தி தனியா எந்த குழுவும் டிஸ்கஸ் பன்ணிக்காதது ஆசார்யம் அல்லது எடிட்ல போயிடுச்சான்னு தெரியல.
பாத்திரம் கழுவிட்டு இருந்த கவின் & சாக்ஷி, வனிதாகிட்ட “இந்த டீம்ல நாங்க மட்டுந்தான் வேலை பாக்குறோமாம். நீங்க சும்மா இருக்கீங்களாம்”னு சொன்னதும். வனிதா கரகத்த தூக்கி தலையில வச்சாச்சு...”என் டீம்ல நாங்க என்ன வேணும்னாலும் பண்ணுவோம் அத யாரும் கேக்க கூடாது ஆனா அடுத்த டீம்ல என்ன நடந்தாலும் நான் கேப்பேண்டான்”னு கத்திட்டு இருந்துச்சு. பிரச்சனைக்கு சாம்பிராணி போடுறதுல சாக்ஷிக்கு அர்ஜுனா விருது குடுக்கலாம்.
ஹைலைட்டா சாண்டி ரெண்டு நாளா நடந்த சண்டைய , பாத்திமா, மது,மீரா, லாஸ்லியா முன்னாடி காமெடியா செம்ம சூப்பரா செஞ்சு காட்டிட்டு இருந்தாரு. பேச்சு பேச்சா இல்லாம அடிச்சு நாறியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்னு வேற ஜாலி கமெண்ட் பண்ணார்.
பின்ன சாண்டி டீமுக்கு டாஸ்க் ....சாண்டி & மது கலந்துகிட்டு நல்லா பண்ணாங்க.
“எலிக்கு பல்லு மொளச்சா எல்லாத்தையும் கொரண்டி வைக்கும்”ன்ற மாதிரி இந்த சாக்ஷி & கோவுக்கு என்னவாவது பண்ணிட்டே இருக்கனும் போல. கிச்சன்ல கவின் இருக்கும்போது...சாக்ஷி & அபி “இந்த லாஸ்லியா ஏன் நாம பேசுறத கேட்டு மூஞ்சிய காமிச்சிட்டு போறா?”ன்னு கேக்க. இத பொறுக்க முடியாத கவின் கக்கூஸ் வாசல்ல வச்சு லாஸ்லியாகிட்ட “என்ன கோபம்?”னு கேக்க “அதெல்லாம் ஒண்ணுமில்லையே அதுங்களா பேசிட்டு இருந்தாங்க. நான் அங்க சும்மா நிக்குறதுக்கு அந்தப் பக்கமா போனேன்”னு சொல்ல....கரெக்டா அப்போ சாக்ஷி உள்ள வர, லாஸ் சாக்ஷிகிட்டயே “என்னய எதும் தப்பா நெனச்சீங்களா?”ன்னு கேக்க “இல்ல இல்ல சும்மாதான்”னு சொன்னதும் லாஸ் கிளம்பிடுச்சு. பின்ன கவின் கிட்ட வந்து சாக்ஷி “முட்டாப்பயலே இத ஏன் அவகிட்ட சொன்ன, இது எதிரி நாட்டு ஒற்றன் யாருன்னு கண்டுபிடிக்குற சீக்ரெட் மிஷின்....லாஸ் தான் அந்த ஒற்றனான்னு கண்டுபிடிக்க நாங்க விரிச்ச வலைதான் இது”ன்னு இந்தப்பக்கம் சொல்லிட்டு இருக்கும்போதே லாஸ் அந்தப்பக்கம் அபிகிட்ட போயி “என்னய நீங்க தப்பா நெனச்சதா கவின் சொன்னான்”னு சொல்ல அபி அப்பிடியெல்லாம் இல்லனு கேசுவலா மழுப்பிட்டு அத ஷெரின் கிட்ட சொல்ல, “கவின வச்சுகிட்டு ஒரு கொலை கூட பண்ண முடியாது”ன்ற முடிவுக்கு வந்தாங்க. கவினும் வங்குன மாட்டுல எலி மாதிரி இந்த 5 பொன்ணுங்ககிட்ட மாட்டிகிட்டான்.
அடுத்து அவ்வை ஷன்முகி டாஸ்க்....சாண்டி காலையில பண்ணது பிக்பாஸுக்கு பிடிச்சு போச்சோ என்னமோ ஆண்களையெல்லாம் பெண் ஹவுஸ்மேட் கேரக்டர்ல நடிக்க சொன்னாப்ல. சும்மா சொல்லக்கூடாது செம்மயா பண்ணாங்க. பெண்கள் எல்லாரும் அவங்க போட்ட சண்டைகள் இவ்வளவு சின்னப்புள்ளத்தனமானதான்னு நெனச்சு சிரிக்குற அளவு ரசிச்சாங்க. மதுவ தவிர. வைத்யா மது மாதிரி பண்ணதுல சில விஷயம் மதுவுக்கு பிடிக்கல. இந்த டாஸ்கோட வின்னரா, வனிதாவா ஆக்ட் பண்ண தர்ஷன் மற்றும் ரன்னரா, பாத்திமாவா ஆக்ட் பண்ண சரவணனுக்கு பரிசு குடுத்தாங்க.
மது பின்ன வைத்யா மாதிரி பன்ணி காட்டுறேன்னு சொல்லி வேணும்னே அவர வெறுப்பேத்துற மாதிரி பண்ணினாங்க. அப்ப அங்க பாத்திமா, சரவணன் முகின் இவங்க மட்டுமே இருந்தாங்க. வைத்யாவுக்கு இது நல்லா புரிஞ்சுது. பின்ன வனி இத யூஸ் பண்ணாங்க. வைத்யா இயல்பா எடுத்துக்கிட்டதா சொன்னாலும் எல்லார்கிட்டயும் போயி மது தன்ன வச்சு செஞ்ச்சிட்டான்னு சொல்லிட்டு இருந்தார்.
கட்டக்கடைசியா சாண்டியோட ப்ரில்லியண்ட் கொரியோகிராபியில ஜோடி ஜோடியா (மீராவ தவிர) வெண்ணிலவே வெண்ணிலவே” பாட்டுக்கு சூப்பரா டான்ஸ் ஆடுனாங்க. அடுத்த எபிஸோட்ல யாரு டப்பா டான்ஸாடப் போகுதுன்னு பாக்கலாம்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)