பிக்பாஸ் 3 : நாள் 24 (17.07.19)
பிக்பாஸ் 3நாள் 24 (17.07.19)
ஆடி மாசப் பொறப்பு “ஆடலுடன் பாடலைக்கேட்டு”ன்னு பொறந்துச்சு பிக்பாஸ் வீட்டுல. கவின கடுப்பேத்தவோ என்னவோ சல்பேட்டா சாக்ஷி சாண்டி கூட சேர்ந்து பப்பரப்பான்னு பாங்ரா டான்ஸ் ஆடிட்டு இருந்துச்சு.
வைத்தி சாக்ஷிகிட்ட “நேத்து மீரா நல்லாத்தான் பண்ணினா ஆனா இந்த சாண்டி கடங்காரன் அவ கையத் தட்டி விட்டுனுட்டான்”னு என்னமோ கொடைக்கோனார் கொலைவழக்க கண்டுபிடிச்ச மாதிரி அடிச்சு விட்டாரு. சாக்ஷியோ “அத விடு நைனா, நைட்டு என்னயவே மீரா சுத்தல்ல விட்டுட்டா தெரியும்ல?”ன்னு கதை சொன்னத முழுசா கேட்டதுக்கப்பறமும் அன்னைக்கு கணக்குக்கு கட்டிப்பிட வைத்தியம், கன்னத்து முத்தம்னு ஒண்ணும் அமையலயேன்னு வைத்திக்கு வருத்தம். (ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே வைத்தி !).
வீட்டுக்குள்ள இன்னைக்கு சுத்தி சுத்தி விக்ஸுன்னு எழுதுன மாதிரி ஒரே விஷயந்தான். அது “யாரு மனசுல யாரு ? அவங்களுக்கு என்ன பேரு?”
கவின் – லாஸ்
லாஸ் – கவின்
அபி – முகின்
இவிங்களுக்குள்ள நட்பா ? இல்ல காதலா ? இல்ல வேறெதுவும் கன்றாவியா ? வாட்ச் ஆஃப்டர் த பிரேக் !
ஆரம்பத்துல லாஸெல்லாம் நமக்கு மடியாதுன்னு நெனச்ச கவின், மடிச்சு பீரோவுல வச்சது சாக்ஷிய....ஆனா 7ம் நம்பர் பஸ்சுக்கு காத்திருந்தவனுக்கு ஏரொப்ளேன் டிக்கெட் கிடைச்ச மாதிரி லாஸ் கிடைச்சதும் சாக்ஷிய சைட்டிஷ் ஆக்கிட்டான். சாக்ஷிக்கோ இப்ப “இந்த மூஞ்சிக்கே நம்மள பிடிக்கலேன்னா வேற எவனுக்கு பிடிக்கும்”ன்ற பதட்டம். ஆனா லாஸுக்கோ “இவிங்க பஞ்சாயத்துல நம்மள சொம்பாக்கிருவானுங்களோ”ன்ற பயம். (ஏம்ப்பா நான் சரியாத்தான பேசுறேன்?)
வைத்தி இந்த வாரம் வெளிய போகும்போது பாடப்போற பாட்ட சாண்டி கம்போஸ் பண்ணிட்டு இருந்தாப்ல. கவின் “அடேய் முடிவே பண்ணிட்டியா?”ன்னு கலாய்ச்சான். 4 ஆம்பளப்பசங்க உக்காந்து பேசிட்டு இருக்குறது எவ்வளவு நல்லா இருக்கு பாக்க ! அப்பிடியே கட் பண்ணா ரேஷ்மா குரூப்பு குரூரமா பொரணி பேச்சிட்டு இருக்குதுங்க. யார மட்டைப் பண்ண பிளானோ தெரியல ?
இந்த முகின் அபிகிட்ட “காலத் தூக்கி கக்கத்துல வை”ன்னு என்னமோ சொல்லிட்டான் போல அது வெடுக்குன்னு வெட்டிக்கிட்டு உள்ள போச்சு “என்ன உனக்கும் போச்சா?”ன்னு கவின் கேட்டது விரக்தியின் வலி.
இன்னைக்கு நடந்த டிக் டிக் டிக் லக்ஸுரி டாஸ்க்ல ரெண்டு குரூப்புகளும் வெளங்காம விளையாண்டதால பாயிண்ட் எதுவும் இல்ல....அதுனால மொத்தமா 1200 தான் கிடைச்சது. அதையும் இந்த சல்பேட்டா சாக்ஷி “கும்பலா சுத்துவோம் நாங்க குப்பு குப்புனு பொகைய கக்குவோம்”னு கூட்டமா போயி தம்மடிச்சதால 100 பாயிண்டு கட்டு. அங்க ஒரு தடவைக்கு ஒரு ஆள் தான் “தம்ம”னுமாம்.
“நீயா?நானா?”ன்னு ஒரு டாஸ்க்கு அதுக்கு நடுவர் இந்த மீரா கிராக்கு. டீம் பிரிஞ்சு தலைப்புக்கேத்த மாதிரி விவாதிக்கனுமாம் (இவனுங்கதான?...........சிறப்பா செய்வானுங்க!)
தலைப்பு : க்ளீனிங் டீம் ஒழுங்கா தொடச்சு கழுவுச்சா இல்ல ஓபி அடிச்சுச்சா?
மாறி மாறி கத்திக்கிட்டு ஒரு வழியா நிறுத்துனானுங்க இதுல மீராவ சரவணன் பங்கம் பண்ணார்
தலைப்பு : இந்த வீட்டுல இருக்குறது நட்பா இல்ல அதையும் தாண்டியா ?
“அதெல்லாம் அதையும் தாண்டிதான் இங்க இருக்கு. இல்லேன்னா என்னய பொண்ணு பாக்க வான்னு சொல்லுமா மீரா?”ன்னு மது ஆரம்பிக்க, கடைசியில கவின இழுத்து கடைத்தெருவுல விட்டாய்ங்க....”இப்பவே சொல்லு உனக்கு யாரு யாரு எப்பிடி?”ன்னு லாஸ் கேக்க, சாக்ஷியும் “ஆமான்டா சொல்லுடா டால்டா”ன்னு கத்திட்டு இருந்தாங்க. கவின் “மச்சாஆஆஆன்”னு ஆரம்பிக்கும் போதே வேட்டிக்குள்ள வெட்டிக்கிளி புகுந்தாப்ல வைத்தி வைப்ரேஷன் மோடுல “அடேய்....பொண்ணுங்கள ஏமாத்தாதீங்கடா, அவங்க நம்பிக்கையை கெடுக்காதீங்கடா, அவங்க சந்தோசத்த பொதைக்காதீங்கடா, அவங்கள தொட்டுப் பேசி தவறு செய்யாதீங்கடா”ன்னு வைத்தி சேலம் வைத்திய சாலை தாத்தா மாதிரி குதிச்சிட்டு இருந்தாப்ல. (“நீ சொல்றதெல்லாம் பொய் மேல வைக்காத கை”ன்னு எல்லா பொண்ணுங்களும் ஒரு நாள் கையத் தட்டி விடப் போகுது நைனா பீ கேர்புல்) இதுல முகின் வேற சும்மா இருக்க முடியாம “அபி எனக்கு பிரண்டு”ன்னு சம்பந்தமில்லாம எந்திரிச்சு சொல்ல, அபி அப்செட். விவாதம் முடிஞ்சது.
தலைப்பு : இங்க பேசி ஜெயிக்குறானுங்களா? இல்ல பேசாம ஜெயிக்குறானுங்களா?
பேசாமயே ஜெயிக்கலாம்னு சரவணன் சொல்ல அத சொல்றதுக்குக் கூட நீ பேச வேண்டி இருக்குன்னு சேரன் கொக்கி போட....(தலையில அடிச்சுக்குற எமோஜிய இந்த இடத்துல போட்டதா நெனச்சுக்கோங்க). “பேசி ஜெயிக்கிறதவிட இங்க பேசாம ஜெயிக்குறதுதான் உண்மையான வெற்றி”ன்னு சொன்னது நம்ம மீரா ! (எங்க உன் திருமுகத்த ஒருமுகமா எங்களுக்குக் காட்டு...!)
வெளிய வந்ததுதான் தாமசம், முக்குக்கு முக்கு உக்காந்து பேச ஆரம்பிச்சானுங்க. “உம்மேலதான் அபி எனக்கு கபி கபி”ன்னு முகின் போட்ட பிட்டுல அபி மொத்தமா காஆஆஆலியாகிட்டா!
“பொண்ணெல்லாம் கேக்க வர சொல்லல. அம்மாகிட்ட வந்து பேசுன்னுதான் சொன்னேன் நீ என்னய தப்பா போர்ட்ரெயிட் பண்ணாத”ன்னு மதுகிட்ட யாரு சொன்னான்றது நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா?
லாஸ் கவின் கிட்ட “மொத உங்க 2 பேரு பஞ்சாயத்தையும் முடிச்சிட்டு, உங்க 2 பேருக்குள்ளயும் ஓன்னுமில்லேன்னா மட்டும் எங்கிட்ட வந்து பேசு அதுவரைக்கும் டாட்டா பை பை ஃப்ரம் லாஸுன்னு”ன்னு போயிட்டாங்க.
“தோழியா? இல்லை காதலியா? யாரடா நான் கவினு”ன்னு சாக்ஷி கேக்க, மச்சாஆஆஆன்னு ஆரம்பிச்சவனா “அடேய் அப்பிப்புடுவேன்! சுருக்கமா சொல்லுடா”ன்னு சொல்ல அவன் “நட்புன்னு சொன்னப்பறமும் வந்து என்னய எமோஷனல் பிளாக்மெயில் பண்ற நீ”னு சொன்னதும், சாக்ஷி பொசுக்குன்னு “ஓகே இன்னேலருந்து எங்கிட்ட இருந்து உனக்கு விடுதலை போ போயி கொடியேத்தி முட்டாய் குடுத்து கொண்டாடு”ன்னு சொல்ல, கொஞ்சமும் யோசிக்காம கவின் “ஓகே சூப்பர்...எங்க இருந்தாலும் நல்லா இரு”ன்னு சொன்னது நமக்கே அதிர்ச்சி.....முகினுக்கும் வெ.மா.சூ.சொன்னு கொஞ்சம் இருக்கு போல. “சொன்னது நீதானா?”ன்னு சாக்ஷி கவின் முகத்த பாக்குறதோட இன்னைக்கு நிறுத்தம்.
Comments
Post a Comment