பிக்பாஸ் 3 : நாள் 13 - (06.07.19)

பிக்பாஸ் 3
நாள் 13 - (06.07.19)


ஆண்டவர் ஐஸ் விக்கிறவன் மாதிரி ஒரு காஸ்ட்யூமோட வந்தார். 10 கோடி ஓட்டு வந்திருக்குறதாவும்....”இந்த ஓட்டுப் போடுற பழக்கத்த அப்பிடியே வச்சிருங்க நம்மளுக்கு தேவைப்படும்”னு வழக்கம் போல மையத்துக்கு ப்ரொமோஷன் பண்ணார். அப்பறம் உள்ள இருக்குறவனுங்க 13ம் நாள் பண்ண அழிச்சாட்டியத்த பாப்போம்னு சொல்லிட்டு. அகம் டீவி வழியே அகத்துக்கு கூட்டிட்டு போனார்.
சாண்டிக்கு வாழ்த்து சொல்லி ஆரம்பிச்சு எப்போ மாமா ட்ரீட்டு பாட்டு போட்டார் பிக்பாஸ். தின நடவடிக்கையில அபி நவரசங்கள் சொல்லிக் குடுக்கனும்...ஃபாத்திமா & சாண்டி, மோகன் & மது நவரச நாடகம் நடத்துனாங்க. (சனிக்கிழமை பாக்க வேண்டிய கன்றாவியாடா இது?)
சட்டுன்னு சாயங்காலத்துக்கு வந்தாய்ங்க....தண்ணியில்லா அந்த ஸ்விம்மிங் பூலுக்குள்ள உக்காந்து லாஸ், தர்ஷன், முகின் மூணு பேரும் எகிறி குதித்தேன் வானம் இடித்ததுன்னு பாடிட்டு இருந்தாங்க.
வனிதாவின் “வாட்ட கர்வாட் இன்னும் ஆரம்பிக்கலையே?”ன்னு நெனைக்குறதுக்குள்ள மீரா, வனி, ரேஷ்மா மூணு பேரும் பேசிட்டு இருந்தாங்க. மதுவப் பத்தி ஆரம்பிச்சு “பாத்திமா நீ ஒரு பொய் சொல்லினு சொல்லிட்டாங்க”ன்னு வனிதா கொளுத்திப் போட....ஆப்பாயில் மீரா நேரா ஃபாத்திமாகிட்ட போயி “அரிச்சந்திரன் அக்கா மக நானு! என்னய அப்பிடி எப்பிடி சொல்லலாம்னு கேக்க. (நம்ம கொளுத்தி போட்டது எவ்வளவு ஜகஜ்ஜோதியா எரியுதுன்னு வனிதா 4வது பெட்ல படுத்து ரசிச்சிட்டு இருந்தாங்க)
ஃபாத்திமா கூலா “இந்தா இதெல்லாம் உங்கிட்ட யாரு சொன்னாங்களோ அவங்க கிட்ட போயி கேளு”ன்னு சொன்னதும் மீரா கய கயன்னு கத்த ஆரம்பிக்க....தர்ஷன் கோவப்பட்டான் “இந்தா சும்மா இப்பிடி மரியாதை இல்லாம கத்தக் கூடாது, நீ பின்னாடி போயி பேசுறது எனக்கு தெரியும் ஒழுங்கா ஓடிடுன்னு சொன்னார். (வசீ, சிட்டிக்கு கோவம் வருது)
இத பத்தி பாத்திமா, மது, கக்கூஸ் வாசல்ல உக்காந்து பேசுனாங்க...மது “யாருன்னு தெரியல ஆனா அங்க யாருமே இல்லயே....அட ஆமா வனிதா இருந்தாங்கள்ள ஒரு வேளை நம்ம வனிதாவா கூட இருக்கலாம்”னு சொல்லிட்டு நைஸா நழுவிட்டாங்க.
மறுபடி என்ன எதுக்குன்னே தெரியாம மீரா சிம்பு மாதிரி தேம்பிட்டே பேசிட்டு இருந்தாங்க....
பின்ன ஆண்டவர் அகத்துக்குள்ள அகம் டீவி வழியே எண்ட்ரி....பொதுவா எல்லாரும் நடந்துக்கிட்டத பத்தி சொன்னார். வழக்கம் போல ஆண்டவர் தூர “தர்ஷன்”, ஈர “சாண்டி”, மல்டி டஸ்கர் “கவின்னு தன் அக்மார்க் கவுண்டர்கள அள்ளி வீசி அமர்க்களப் படுத்தினார்.
பின்ன ஆண்கள் கிட்ட மட்டும் வீட்ல நடந்த சண்டைகள் பத்தி கேட்டார். எல்லாருமே அது சின்னப் புள்ளத்தனமானதுன்னு சொன்னாங்க.
மது கிட்ட அன்னைக்கு விட்டுப் போன மோடிவேஷனல் ஸ்பீச்ச கண்டினியூ பண்ண சொன்னார். மது “அது மோடிவேஷனல் ஸ்பீச்சே இல்ல சார். சும்மா என்னோட அனுபவத்த சொன்னேன் ஆனா வேற மாதிரியா புரிஞ்சுக்க பட்டது”ன்னு ஒத்துக்கிட்டார். பின்ன “வேற யாரும் ஸ்பீச் குடுக்க வரீங்களா”ன்னு கேக்க வனிதா வந்தாங்க. எதோ ஒரு கருமத்த தயங்கி தயங்கி பேசுனாங்க. அதுக்கு ஆண்டவர் “நீயெல்லாம் திக்கி திக்கி பேசுறது பெரிய ஆச்சர்யம்”னு சொல்லி சர்காசம் பண்ணார்.
ஃபாத்திமா “குணம் நாடி” திருக்குறள பொதுவா சொல்லி முடிச்சாங்க....அது எல்லாருக்கும் பொருந்தும்னு ஆண்டவர் சொன்னார்.
பின்ன முகின் கிட்ட பஞ்சாயத்த பத்தி கேட்டார்...முகின், சாக்ஷி, மீரான்னு எல்லாரும் அவங்க அவங்க கருத்த சொல்ல. ரைட்டுனு கேட்டுக்கிட்டார். அப்பறம் 9 பேரு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீங்களே மோகன் அவரு கேப்டன்சி இப்போ உங்களுக்கு ஓகேவான்னு கேக்க....மது மட்டும் “இல்லங்க இவருக்கு தப்பா ஓட்டுப் போட்டுட்டேன் அவரு என் கிட்ட பாரபட்சமா நடக்குறாரு”ன்னு குற்றம் சுமத்துனாங்க. மோகன் “அப்பிடியெல்லாம் இல்ல சார், இவங்க எப்போ பாத்தாலும் மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு யார்கிட்டயும் பேசாம ஓம் நமச்சிவாயன்னு திரியுது நம்ம என்ன பண்ண முடியும்?”னு சொன்னார்.
அப்பறம் ஒரே ஆளப்பத்தி நல்லதாவும் கெட்டதாவும் பேசனும்னு ஒரு டாஸ்க் குடுத்தார் ஆண்டவர். இது நேரத்த ஓட்டுறதுக்காகன்னு பச்சையா தெரிஞ்சுச்சு.
அப்பறம் எவிக்ஷனுக்கு வந்தார். ஒரு போர்டுல எல்லாரோட ஃபோட்டாவும் இருக்க “யாரு போகனும்னு நீங்க முடிவு பன்ணி க்ராஸ் போடுங்க”ன்னு சொன்னார். வனி மொத ஆளா வந்து எல்லாருக்கும் சேர்த்து மதுவுக்கு கிராஸ் போட ஆண்டவர் அதெல்லாம் தப்புன்னு கடிஞ்சுகிட்டார்.
சரவணனுக்கு நல்லதுன்னு சில பேரு அவருக்கு ஓட்டு போட ஆண்டவர் “உங்களுக்கு நல்லதுன்னு நெனைக்கிற ஆளுக்கு போடுங்க”ன்னு சொன்னார்.
பெரும்பாலும் அந்த பிராங்க் டாஸ்க்ல போட்ட மாதிரி மது & மீராவுக்குதான் ஓட்டு விழுந்தது. ஆனா அபி மதுவ விட்டுட்டு மீராவுக்கு ஓட்டுப்போட்டு வனி & கோவுக்கு பேதி மாத்திரை குடுத்தார். மது இப்பவும் கவினுக்கு ஓட்டு போட்டார் அதுக்கு மக்கள் கைதட்டல் பலமா இருந்தது. மெஜாரிட்டி மதுவுக்கு.
ஆனா ஆண்டவர் “இந்த வாரம் மக்களால் காப்பாற்றப்படுபவர் மது”ன்னு சொன்னதும் மதுவோட ரியாக்ஷன்ல 1000 சவுகார் ஜானகி, 500 பண்டரி பாய், 250 சேரன் எல்லாரும் தெரிஞ்சாங்க. “இங்க என்ன அவார்டா குடுக்குறாங்க”ன்னு ஆண்டவர் மனசுக்குள்ளயே கேட்டிருப்பார். இதோட நாளைக்கு பாப்போம்னு ஆண்டவர் எஸ்கேப்பிகா.
வனி & கோ, அபி ஓட்டு போட்டத பத்தி அபிகிட்ட “உன்னய புரிஞ்சுக்கவே முடியல”ன்னு சொல்ல “இப்பதான் ஒரு தெளிவான சுய புத்தியோட ஒரு முடிவு எடுத்திருக்கேன். இது என் ஓட்டு என் உரிமை”னு சொல்லிட்டு போயிட்டாங்க. “நம்ம கூட பழகியும் எப்பிடி இது இன்னும் தெளிவா இருக்கலாம்”னு வனிதாவுக்கு ஓரே எரிச்சல். சாக்ஷியும், ஷெரினும் மது காப்பாத்தப் பட்டதுக்கு பயங்கர அப்செட்.
கவின் அந்த மக்கள் கைதட்டல் விஷயத்தால கொஞ்சம் அள்ளு விட்டிருந்தார். சரவணன் கிட்ட இத பத்தி பேசிட்டு இருக்கும்போது வனிதா வந்து “மக்கள் உன்ன லவ் பண்றாங்க”ன்னு சொன்னாங்க. சரவணனும் கவினும் புரியாம பாக்க.... “மதுவ சப்போர்ட் பன்ணி மக்கள் ஓட்டுப்போடல. அவ இருந்தா சண்டை நடக்கும்ன்ற காரணந்தான்” அப்பிடின்னு MA பிலாஸபி ரேஞ்சுக்கு ஒரு கருத்த உதிர்த்திட்டு போக, நமக்கு ஒரு நிஷம் தலையே சுத்திருச்சு. “பாத்து பாத்து கண்கள் பூத்திருக்கோம் நாமினேஷன்ல நீ வருவாய் என....
இன்னைக்கு கதை இன்னைக்குதான் தெரியும். காத்திருப்போம்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)