பிக்பாஸ் 3 : நாள் 24 தொடர்ச்சி & 25ம் நாள் (18.07.19)

பிக்பாஸ் 3நாள் 24 தொடர்ச்சி & 25ம் நாள் (18.07.19)


“கவினுக்கும் சொரணை இருக்கு”ன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள சாக்ஷிகிட்ட சங்கராபரணம் பாட ஆரம்பிச்சுட்டான். இந்த கக்கூஸ்ல இருக்குற பெஞ்ச்ச எடுத்து எறிஞ்சுட்டோம்னாலே போதும் கவின் தானா ஏறிக் குதிச்சு வெளிய வந்துருவான். கவின் காதலி இல்லாம கூட காதலிப்பான் ஆனா இந்த கக்கூஸ் பெஞ்ச் மட்டும் இல்லாம காதலிக்கவே மாட்டான். அவன் காதலுக்கு கண்ணு மட்டுமா, கக்கூஸும் இல்ல.

இன்னுமும் 2 பக்கமும் வாய் வைக்குற பாயாதான் இருக்கப் பாக்குறான் கவின். விஷயம் என்னன்னா ? ஒரு வாரத்துக்கு முன்ன தான் அவனுக்கும் லாஸ்லியாவுக்கும் FLAMES போட்டு பாத்துருக்கான். லவ்னு வருது. ஆனா சாக்ஷிக்கும் இவனுக்கும் போட்டுப் பாத்தானானு தெரியல ஏன்னா ENEMY ன்னு வருது. இவிங்க கதையப் பாக்குற நமக்கு வாயில அசிங்க அசிங்கமாத்தான் வருது.

மறுபடியும் மறுபடியும் கவின் 2 பேருகிட்டயும் போயி போட்ட ரெக்கார்டையே போட்டு போட்டுத் தேய்க்கிறதப் பாக்கும் போதெல்லாம் “செத்த செவனேன்னுதான் இரேன்டா தக்காளி”ன்னுதான் சொல்ல வருது. தன்னிலை விளக்கம் குடுக்க ஆளில்லாம இன்னைக்குக் கேமராகிட்ட பெனாத்த ஆரம்பிச்சுட்டான்.

லான்ல கட்டிலைப் போட்டு படுத்துகிட்டு லாஸ் மிட்நைட் எப் எம் ஓட்டிட்டு இருந்துச்சு. இங்குட்டு கக்கூஸ்ல சாக்ஷி அழுதுட்டே வெளிய வந்து ஷெரின் கூட கையக் கோத்துக்கிட்டு போயாச்சு. கவின் கவலையா வெளிய வந்து பாத்தா அங்க லாஸ்!

இவன் சும்மா இருந்தாலும் இந்த பொண்ணு சும்மா இருக்காது போல. திரும்பவும் பேசுறாய்ங்க பேசுறாய்ங்க பேசிட்டே இருக்காய்ங்க.

லாஸ் : நீ அவளுக்கு இம்போர்டண்ஸ் குடு.....அவளோட கதை...எனக்கு பிரச்சனையில்ல....

கவின் : மச்சாஆஆன் நான் ரெண்டு பேருகிட்டையும் .... அதனால ஹர்ட் ஆகிட்டேனா..... நாம ஒன்ணு நெனச்சு பண்றோம்.......அன்னைக்கு கூட..... ஆனா அந்த பொஸச்சிவ்னெஸ் வந்தப்பறம்..... நான் பாட்டுக்கு ஜாலியா..... இது எதுனாலனா..... ஒரு கட்டத்துல ஸ்டாப் பண்றோம்..... இங்க ஒண்ணு பேசி அங்க ஒன்ணு பேசி....நான் சொல்றது புரியுதா?

இந்த பச்செலபுடுங்கி இப்பிடிதாங்க பேசுறான். இதுல என்ன எழவு புரியுதுன்னு இதுகளும் அவங்கிட்ட ஒக்காந்து ஒக்காந்து பேசுதுகளோ....!

ஆக மொத்தத்துல எல்லாருமே அவங்கிட்ட இதப்பத்தி பேசியாச்சு....”அநேகமா இனி பொண்ணுங்க கிட்ட அவன் அவ்வளவா பேசமாட்டான்”னு நாம நெனைக்குறப்போ நல்லா ஏறுல பூட்டுன எருமை மாதிரி அதே 2 பொன்ணுங்ககிட்டையும் போயி பொங்கல் கிண்டிட்டு இருப்பான். யப்பா சாமிகளா இன்னும் 1 வாரத்துக்கு இவனுங்க லவ் டார்ச்சர காமிக்காதீங்க எரிச்சலோட சேர்த்து என்னென்னமோ வருது.

25ம் நாள்

“ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க”ன்னு டைமிங்ல பாட்டு போட்டது உள்ள இருக்குற உராங் உட்டானுகளுக்கே தெரியுறப்போ நமக்குப் புரியாதா என்ன!

இவிங்க லவ்வாங்கில நம்மள மறந்து போயிரப் போறாய்ங்கன்னு நெனச்ச மீரா காலையிலயே கதகளிய ஆரம்பிச்சது. கிச்சன்ல உக்காந்திருந்த க்ளீனிங் டீம் கேப்டன் மீரா தன் டீமேட் சாக்ஷிகிட்ட “சாக்ஷி அந்த டைனிங் டேபிள மட்டும் க்ளீன் பண்ணிடு. நான் அத பாக்குறேன்”னு சொன்னதும் சாக்ஷி “அப்பிடியே மேலு வளையாமயே திரிவியா? நைட்டு தொடச்சுட்டு படுன்னா அதச் செய்யாம இப்ப வந்து இதத் தொட அதத் தொடனு தொயரம் பண்ணிட்டு இருக்க?”ன்னு சொன்னதுக்கு மீரா வழக்கம் போல “என்னைய வெளிய தெருவுல தப்பா போர்ட்ரெயிட் பண்றதே உங்களுக்கு வேல பொழப்பா போயிருச்சு.... ரைட்டு எல்லாரும் போங்க”ன்னு ஆரம்பிச்சு விட்டுச்சு நாள. எல்லாரும் இதத் திட்டிட்டே போக “யப்பா யாரும் நம்மள மறக்கல ஃபார்ம்லதான் இருக்காய்ங்க”ன்னு மீராவுக்கு நிம்மதி.

தர்ஷனுக்கு ஷெரின் சப்பாத்தில ஆர்டின் வுட...தங்கச்சி லாஸ் அந்த சப்பாத்தி இதயத்த பஞ்சர் ஆக்க....”ஏம்மா?”ன்னு கேட்டதுக்கு “அப்பிடித்தான் செய்வேன்....இதயத்த குத்துவேன்....கொல்லுவேன்”னு சொல்லிட்டு போயிருச்சு. லாஸ் கூப்பிட்டப்ப “வரேன்”னு சொல்லிட்டு வராம ஷெரின் கூட இளிச்சுட்டு இருந்தான் போல...அந்தக் கோவமாம் பிள்ளைக்கு. பாத்தும்மா நம்மாளுகளுக்கு அழகாவும் லூஸாவும் இருந்தாதான் க்யூட்னு கொஞ்சுவான்....இப்பிடி குத்துவேன் கொல்லுவேன்னு சொல்லிட்டு இருந்தா அழகா இருந்தாலும் அஞ்சு ஓட்டு வித்யாசத்துல உன்னைய வெளிய அனுப்பிருவான் பாத்துக்க.

லாஸுக்கு முன்னாடியே தர்ஷன் கூட ஒரே தட்டுல உக்காந்து ஷெரின் சாப்பிட்டது ஷெரினோட க்ளாசிக் பழிவாங்கல்.

பிக்பாஸ் கூப்பிட்டு கடிகார டாஸ்க்ல “நல்லா விளையாண்ட ரெண்டு பேரு யாரு?”ன்னு கேட்டதுக்கு ரேஷ்மா & தர்ஷன் செலக்டட். ப்ளேயர் ஆஃப் த் வீக் நம்ம சரவணன்....சேரனும் சரவணனுக்கு ஓட்டுப்போட்டது அத்திவரதர் அதிசயம். இந்த 3 பேரும் அடுத்த வார தலைவர் கேண்டிடேட்ஸ். ஒழுங்கா விளையாடாத 2 தண்டங்கள் சாக்ஷி & மீரா. செக்கிழுக்க ஜெயிலுக்கு போற மாதிரி ஒண்ணுக்கொன்ணு வம்பிழுக்க ஜெயிலுக்கு போச்சுதுங்க.

போனதும் பஞ்சாயத்து.....உள்ள இருந்த சாக்ஷி வெளிய இருக்குறவங்ககிட்ட பேசுறதால அந்த சத்தம் தாங்க முடியாம “தலையே வெடிச்சிரும் போல”ன்னு மீரா பொலம்ப, அத யாரும் காதுல வாங்கல. கோவமா அங்க இருந்த கக்கூஸ்ல போயி மீரா செட்டில்ட். “போனவள ஆளக்காணோம்”னு சேரன் கேக்க, சாண்டியோ “அவ உள்ள பந்த உருட்டிட்டு இருப்பா”ன்னு (தியானம்) சொல்ல...”அதுக்குள்ள உக்காந்து என்னத்த உருட்ட முடியும்?”னு சேரன் அப்பாவியாத்தான் கேட்டார்னு எடுத்துக்குவோம். ஆமென்!

சில மணி நேரங்களுக்குப் பிறகு...........! வெளிய வந்த மீரா கேமராவ பாத்து வழக்கம் போல ஆரம்பிக்க....கேமராவுக்கே கெதக்குன்னு இருந்திருக்கும். மீராவுக்கு மீராவா இருக்குறதுதான் பிரச்சனையே. மறுபடியும் “என்னய அன்னைக்கு ஏன் லூசுன்னு சொன்ன ? அது வெளிய உள்ளவங்களுக்கு நான் லூசாகிட்டேன்னு போர்ட்ரெயிட் ஆகிடும். மொழி தெரியாம நீ பேசுறது தப்பாகிடும். உனக்கு தமிழ் தெரியல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழில்”னு ஆரம்பிச்சு “தமிழ் மொழியின் அருமை தெரிஞ்சுதா மாச்சி”ன்னு க்ளாஸ் எடுத்தாங்க மீரா. கல் எடுக்கலாம்னு தேடுனேன் கிடைக்கல. எதுக்கெடுத்தாலும் “வீடியோ போடுங்க! வீடியோ போடுங்க!”ன்னு மீரா சொல்றது எந்த வீடியோவன்னு தெரியல.....!

இந்த கேப்புல ஷெரினப் பாத்து மீரா சொடக்கு போட, “மீரா சொடக்கெல்லாம் போட்டு கூப்புடாத....மரியாதையா சொல்றேன்...உன்னய சாவடிச்சுருவேன்”னு சொன்னதும் மீரா மியாவ் ஆகிடுச்சு. யாரையுமே பேச விடாம, தானும் ஒரு நிலையில இல்லாம எல்லாரையும் ஒரண்ட இழுக்குறதுக்கும் ஒரு தைரியம் வேணும். இன்னும் இந்த நாள் முடியல. இதுக்கு மேல என்னாலையும் முடியல.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)