பிக்பாஸ் 3 : நாள் 17 - (10.07.19)

பிக்பாஸ் 3
நாள் 17 - (10.07.19)


பிக்பாஸும் லாஸ்லியா ரசிகராகிட்டாப்ல போல “கண்ணு அது பன்னு மாதிரி” பாட்ட அலாரமா போட்டாப்ல. லாஸ்லியாவும் “ஓ மை காட் ! திஸ் இஸ் மை சாங்கு”ன்னு எந்திரிச்சு போயி ஆடுச்சு. கூடவே எல்லாரும் வந்து ஆட, தர்ஷன் ஷெரின அணை கட்டுனான்.
இன்னைக்கு பிக்பாஸ் குடுக்கும் தின நடவடிக்கை எதும் இல்ல. ஆனா தினமும் வாடிக்கையா நடக்குற பஞ்சாயத்து வழக்கம் போல ஆரம்பிச்சது.
(ரேஷ்மா, மீரா, சாண்டி + தலைவர் சேரன் = இதுதான் க்ளீனிங் டீம்). ஹால்ல உக்காந்திருந்த சேரன நோக்கி மீரா வர, சேரன் விளையாட்டா “என்ன மீரா நல்ல தூக்கமா ? நீ வரதுக்குள்ள நானே கக்கூஸ கழுவிட்டேன்”னு சொல்ல. மீரா “நானுந்தான் கழுவுறேன்”னு வழக்கம் போல காதுல வாங்காம முனங்கிட்டு உள்ள போயிடுச்சு.
உள்ள ரேஷ்மாகிட்ட மீரா “நான் வேலை செய்யுறத கணக்குலயே எடுத்துக்காம என்னய வேலை செய்யாத ஆள் மாதிரியே காமிக்க பாக்குறாரு சேரன்”னு சொல்லிச்சு. அதுக்கு ரேஷ்மா அப்பவே மறுப்பு சொன்னாங்க.(மிமிக்கிரி டிப்ஸ் : எல்லா எழுத்தையும் நெடிலா போட்டு பேசுனா, மீரா மாதிரி பேசலாம்...குரல் மட்டும் கொஞ்சம் TMS மாதிரி இருக்கனும்).
பின்ன உள்ள வந்த சேரன் கிட்ட “நான் கழுவிட்டுதான் இருக்கேன் ஆனா நீங்க அத மறுக்குறீங்க, மத்தவங்ககிட்ட திட்டமிட்டு மறைக்கிறீங்கன்”னு சொன்னதும், சேரன் ரொம்ப பொறுமையா “அன்னைக்கு காலையில 6 மணி இருக்கும்” மாடுலேஷன்ல “யம்மா ஆளுக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்னு சரி சமமா பிரிச்சோமா”ன்னு ஆரம்பிக்க. “அதெல்லாம் செல்லாது நீங்க என்னய களங்கப்படுத்தப் பாக்குறீங்க”ன்னு சொல்லி போர்வைய பொத்திக்கிச்சு.
பின்ன பேசுன சாண்டியையும் “டேய் நீ மாஸ்டர் இல்ல மான்ஸ்டர்”னு திட்டிடுச்சு. ரேஷ்மா கூட “இந்தாம்மா எல்லாரும் சரியாதான பேசுறோம் நீ மட்டும் ஏன் சைடு வாங்கி பேசுறே?”ன்னு கேட்டாங்க. மீராகிட்ட பிடிச்சது என்னன்னா யாரு உண்மைய எடுத்து சொன்னாலும் “நீயும் ஒரு ஆன்டி- மீரா கோஷ்டி”ன்னு சொல்லிட்டு போறதுதான்.
கேப்டன் அபிகிட்ட மீரா வந்து “மீரான்னா மிஸ் பெர்ஃபெக்ட்னு அர்த்தம். நான் கக்கூஸ தவறாம செய்யுறேன் சுத்தம். ஆனா சேரன் எப்பப் பாத்தாலும் என்னய சொல்லுறாரு குத்தம்”னு கம்ப்ளெயிண்ட் பண்ணாங்க.
பின்ன டைனிங் டேபிள்ள எல்லாரும் இருக்குறப்போ வந்து சேரன் கிட்ட “சொல்லுங்க சார் என்ன பிரச்சனை?”ன்னு மறுபடியும் ஆரம்பிக்க, சேரன் மூடி வச்சிருந்த தன்னோட மூணாவது கண்ண தொறந்தாரு. “போறியா இல்ல பொட்டு வச்சு விடவா”ன்னு சவுண்ட குடுக்க. மீரா வழக்கம் போல வெளிய போயி பெஞ்சுல உக்காந்து தன் அக்மார்க் சிம்பு அழுகைய அழுதாங்க.
ஆக மீரா மறுபடி முருங்கை மரம் ஏறியாச்சு........
மறுபடியும் கொலைகாரி டாஸ்க் தொடரும்னு சொன்னார் பிக்பாஸ். சாக்ஷியும், மோகனும் அகெயின் ஆவியா மாறி சுடுகாட்டுக்குப் போனாங்க. நடு நடுவுல இந்த மோகன் வேற சிரிப்பு வர மாதிரி கோவப்பட்டுட்டு இருந்தாரு. (சாண்டி கலாய்ச்சதுக்கு).
வனிதா இன்னைக்கு கொலை பண்ண வேண்டிய மொத ஆள் ஷெரின். தர்ஷனுக்கு ஷெரின் முத்தம் குடுத்தா ஷெரின் கொலையானதா அர்த்தமாம் (ஏம்மா இதெல்லாம் ஒரு டாஸ்க்காம்மா?) “உனக்கு உதவி பண்ணதுக்கு தர்ஷனுக்கு முத்தம் குடு”ன்னு வனி ஷெரின் கிட்ட சொல்லி வாய மூடுறதுக்குள்ள ஷெரின் தர்ஷனுக்கு பறக்கும் முத்தம் குடுத்தாங்க....கையிலன்னு சொன்னதும் அங்கேயும் ஒரு பச்சக். (இத சரவணன் பாத்துட்டிருந்தது பின்னால எப்பவாச்சும் கலாச்சாரக் கண்ணி வெடியா வெடிக்கலாம்....டிசைன் அப்பிடி)
ஷெரின் ஆவியாகியாச்சு. பின்ன கொஞ்ச நேரம் ஆவிகள் சேட்டை தொடர்ந்துச்சு.
“சல்பேட்டா சாக்ஷி”க்குள்ள தூங்கிட்டிருந்த அன்னியன் அலாரம் வச்சு முழிக்க “ எனக்கென்னமோ லாஸ் & மது மேலதான் சந்தேகம்னு சொல்ல, ஷெரின் “நானும் சாட்சி”னு சொன்னதும் கூப்புடுடா கேப்டனன்னு அபிய கூப்ட்டு சாக்ஷி “யரையும் எங்கள டிஸ்கரேஜ் பண்ண வேணாம்னு சொல்லு அவங்களுக்கும் சேர்த்துதான் இங்க வெயில்ல காயுறோம்”னு சொன்னாங்க. ஷெரின் கொஞ்சம் குறிப்பா “அப்பறம் அவங்களுக்குத் தேவையான கீயும் பீயும் (நெய்யும்,பச்ச பட்டாணியும்) கிடைக்காதுன்னு சொல்லி வை....எங்ககிட்ட இருந்து அவங்கள தள்ளி வை”ன்னு சொன்னாங்க.
அடுத்து ரேஷ்மாவ கொலை பண்ணனும். முகின் அவனா cold காபி போட்டு ரேஷ்மாகிட்ட குடுத்து அப்பிடியே அவ மேல தெரியாம கொட்டுன மாதிரி கொட்டிடனும். அப்பிடி பண்ணா ரேஷ்மா மர்டராம். (வேணாம் பிலிப்சே!). சும்மா சொல்லக்கூடாது....வனி ரொம்ப திறமையா இந்த கொலைகள அசால்ட்டா செஞ்சுட்டு வராங்க.
ரேஷ்மாவும் ஆவிகள் உலகத்துக்குப் போயாச்சு.
பின்ன ஒரு ஊடு டாஸ்க். செத்தவங்களப் பத்தி பகிர்ந்துக்கலாம் ஆனா கமெடியா கையாளனும். சாண்டி வந்து வழக்கம் போல கலக்குனார். அடுத்து சேரன் பேசுனார் (அவரு பேசி முடிக்கிற வரை ஒரு தங்கர் பச்சன் படம் பார்த்த பீலிங்கு) இடையில சேரன் கொலைகார நாய்னு ஒரு வார்த்தை சொன்னதும் வனிதா மூஞ்சிய காமிச்சாங்க. “பிக்பாஸ் சொன்னாலும் சொல்லாட்டியும் அடுத்த உண்மையான மர்டர் நீதாண்டியேய்”ன்ற மாதிரி அப்பிடி ஒரு பார்வை. ஆனா இத வெளிய சொல்லி சண்டை போட முடியாத “எட்டாத எடத்துல எறும்பு கடிச்ச நிலமை” வனிக்கு.
அடுத்து மது, காமெடியா பேசுறேன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் பத்தி உண்மையான கவுண்டர்கள வைச்சாங்க. சாண்டியோ “பத்த வச்சுட்டியே பரட்ட”ன்னு கட்டைய குடுக்க, “தென்னங்கொல்ல, வேப்பங்கொல்ல, கம்பங்கொல்ல......நீ பேசுன கமெடிக்கு சிரிப்பே வல்ல”ன்ற மாதிரி எல்லாரோட மூஞ்சியும் போக, மது ஜகா வாங்கிட்டாங்க. ரேஷ்மா “அடியே உன் வாயிதான் உனக்கு சனி”ன்னு சொன்னது அசரீரி மாதிரி கேட்டுச்சு. அப்பறம் தர்ஷன் ஸ்பீச் குட். சரவணன் மவுன அஞ்சலி செலுத்துனார்.
இன்னைக்குப் பல மாவட்டங்கள்ள மழையாம்! வேற ஒண்ணுமில்ல கவின் இன்னைக்கு தனியாவே திரிஞ்சான். தனியாத் திரிவேனேத் தவிர ஆம்பளைங்கக் கிட்ட பேசமாட்டேன்றதுல ஸ்ட்ரிக்டா இருக்கான்.
ஷெரின் கூட தர்ஷன் கடலை போட்டுட்டு இருந்தான். என்னவோ பையன் ஷெரின் பைத்தியம் புடிச்சு அலையுறான் (புலி நக்குனாலே செத்துப் போயிருவ உனக்கு புலி மாதிரி கொறட்ட ஹூம்ம்ம்ம்). லைட்டு அணைஞ்சு போச்சு. நாளும் முடிஞ்சு போச்சு.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)