பிக்பாஸ் 3 : நாள் 21 (14.07.19)
பிக்பாஸ் 3
நாள் 21 (14.07.19)
எழு ஞாயிறு போல வந்தார் ஆண்டவர் (ஞாயிற்றுக் கிழைமைன்றதால மேட்ச் பண்ணேன்)
அகம் டூ அகம்
காலர் கொஸ்டீன் ஆஃப் த வீக் : மொக்கை கேள்வி கேக்குறதுக்காகவே ஒருத்தர செலக்ட் பண்றானுங்க போல ! அவரு மோகன் கிட்ட” ஏன் நீங்க கோவப்பட்ட ஒருத்தரோட அடுத்த நிமிஷமே தேடிப்போயி கட்டிப் பிடிச்சுக்கிறீங்க?ன்னு கேட்டார். (அதாவது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? மொமெண்ட்) அதுக்கு மோகன் “நான் எப்பவுமே இப்பிடித்தான்; இப்பிடித்தான் நான் எப்பவுமே”ன்னு சொன்னார்.
மீரா – தர்ஷன் பஞ்சாயத்தப் பத்தி கேட்டார் ஆண்டவர். மீரா இத எதிர்பாக்கல. எக்ஸாம்னே தெரியாம வந்த எட்டாவது பெஞ்ச் ஸ்டூடெண்ட் மாதிரி முழிச்சாங்க....தர்ஷன் ஆரம்பிச்சான்....அப்பறம் கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்த பொண்ணு வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விடுறாப்ல மீரா பதில் சொன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆங்க! ஆண்டவரே அலுத்துப் போயிட்டார். தர்ஷன் “அம்மா மேல சத்தியமா”ன்னு சொன்ன விஷயத்த கூட மீரா மறுத்தாங்க. யெஸ்! மீரா நெறைய பொய் சொல்றாங்க, மாத்தி மாத்தி பேசுறாங்க அடுத்தவங்ககிட்ட பொரணியும் பேசுறாங்க (ஜூலி வாழ்க). தர்ஷன அவங்க பேசவே விடல....ஆண்டவருக்கு முன்னாடியே தர்ஷன் கிட்ட அட்ராசிட்டி பண்ணிட்டு இருந்தாங்க.
வனியோ “இந்த வீட்ல என்னமோ இருக்கு....தண்ணி வருதோ இல்லையோ இங்க வர எல்லாருக்கும் லவ்வு வந்திடுது”ன்னு கலாய்ச்சாங்க. ஆண்டவர் இத கவின் ஹேண்டில் பண்ணட்டும்னு ஜாலியா சொன்னதும் “நானே எம் பிரச்சனைய சமாளிக்க முடியாம ஜெயில் பாத்துட்டு வந்திருக்கேன் இதுல இவிங்க பஞ்சாயத்து வேறயா?”ன்னு ஜாலியா கமெண்ட் பன்ணாரு.
சித்தப்பூட்ட பேசுனார் ஆண்டவர் “உங்க தண்டனை முடிவையே மாத்திட்டீங்களே?”ன்னு கேக்க, “இங்க இருக்குறதுக்கு நான் சிரியாவுக்கே போயி சில்லறை மாத்திட்டு வந்துருவேன்” ரேஞ்சுக்கு சொல்லிட்டு “பையன் கண்ணுக்குள்ளயே இருக்கான் வீட்டுக்குப் போறேன்”னு சொன்னதுக்கு கமல் கவுண்டர போட “அட என் 2 பொண்டாட்டியையும் ஒரே வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன் என்ன ஆகுமோன்னு பதறுது”ன்னு சரண்டரானார்.
சரி எவிக்சனுக்கு வருவோம்! “சேஃப் ஆகும் மொத ஆளு யாருன்னு தெரிஞ்சுக்க வீட்டுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்குற கார்ட எடுத்துட்டு வாங்க”ன்னு சொன்னதும் அந்த கொலைகார டாஸ்க் சவுண்ட போட்டாங்க. அத கேட்டதும் “வனிதா நான் யாரையும் கொலையே பன்ணலையே?”ன்னு கேட்டது சுவாரஸ்யம். பின்ன சரவணன் எடுத்துட்டு வந்த கார்டுல எதேச்சையா?! அவரு பேரே இருந்துச்சு. “ அவரு (உங்ககிட்ட இருந்து) சேஃப் உள்ளதான் இருப்பாரு”ன்னு சித்தப்பூவோட 2 மனைவிகள் கிட்டயும் சொன்னது அக்மார்க் ஆண்டவர் டைமிங்.
அடுத்து மதுவும் காப்பாற்றப்பட....அதுக்கான மது ரியாக்ஷன சாண்டி ஜாலியா செஞ்சு காமிச்சார்.
இப்போ ரெண்டுல ஓண்ணு.......வனிதா எவிக்ட் ! செமி பைனல்ல பொசுக்குன்னு அவுட்டாகி அத நம்பாம ரிவ்யூ கேட்ட கோலி மாதிரி வனிதா முகம் மாற.... அவங்க தோழிகளாகிய (சாக்ஷி, ரேஷ்மா & ஷெரின்) மூ – தேவிகள் முகத்துல ஈயாடல. முகின் கூட “இது சீக்ரெட் ரூம் சர்ப்ரைசா இருக்கலாம்”னு சொல்லிட்டு இருந்தான்.
இதுக்கு எப்பிடி ரியாக்ட் பண்றதுன்னு யாருக்கும் புரியல...நமக்குமே இது அதிர்ச்சிதான். ஆண்டவர் வனிதாவ “வா இங்க பாத்துக்கலாம்”னு கூப்பிட வழியனுப்பல் ஆரம்பிச்சது....”சல்பேட்டா சாக்ஷி” வனிகிட்ட வந்து “நீதிக்கும் நேர்மைக்கும், நியாயத்துக்கும் உருவமா இருக்குற உனக்கே இந்த நிலமைன்னா கவலைப்பட வேண்டியது கடவுள்தான்....இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு சாபம் குடுத்தாங்க.
வனி உண்மையாலுமே வெளிய போயிட்டாங்க. "ஓட்ட நம்பர் மாத்திப் போட்டானுங்களா?"ன்னு ஆண்டவர் கிட்ட ஜாலியா கேக்குற மாதிரி சீரியஸாவே கேட்டாங்க.
ஆண்டவர் அவங்கள மக்களோட உக்கார வச்சுட்டு ஹவுஸ்மேட்டுகள் கிட்ட வனிதா எவிக்ஷன பத்தி கேக்க, லாஸ் & தர்ஷன் ஒரே மாதிரி “சின்ன விஷயத்த அப்பிடியே விட்டா சரியாகிடும் ஆனா வனி உள்ள புகுந்து அத பெருசாக்கி சண்டைய போட்டு மண்டைய உடைக்க விட்டு ஜாலியா இருக்கும்”னு சொன்னாங்க. சேரனோ “அது கத்திப் பேசுனது கொஞ்சம் கலவரத்த உண்டு பண்ணும் அதனால கூட இருக்கலாம்”னு சொன்னார். அபியோ “என் நட்புகள உடச்சது வனிதா”ன்னு சொன்னாங்க. அத ஷெரின் அந்த இடத்துலயே மறுத்தாங்க.மூ-தேவிகளும் “எச்சூஸ்மி வனிதாவுக்கு சிலை வைக்க இடம் கிடைக்குமா?” ரேஞ்சுக்கு உருகுனாங்க.
சாக்ஷி இந்தக் கசப்பின் காரணமா கேப்டன்சியில சில கடுமைகள காட்டுனாலும் காட்டலாம். அப்பறம் ஷெரின் அபிய மறுபடியும் தங்கள் குழுவுல சேர்த்துகிட்டாங்க.....
வாழ்க்கைய பத்தி வனி தனது ஆகச்சிறந்த ஸ்பீச் குடுத்தாங்க. ஆண்டவரே அலுங்கிட்டார். வனிய வழி அனுப்பி வச்சார்.
ஹவுஸ்மேட்ஸ் யாரும் இன்னும் வனிதா போயிட்டத நம்பாத மாதிரிதான் இருக்கு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல வனிதா மறுபடியும் உள்ள வந்திருவாங்கன்னு பயத்துல இருக்குற மாதிரிதான் இருக்கு. சில்லி பாய்ஸ்.
அடுத்து “அக்கினி குஞ்சு” தர்ஷன கூப்ட்டு மீரா மறுபடியும் ஆரம்பிக்க “நீ உனக்கு ஆள் இருக்குன்னு ஊருக்கே சொன்ன ஆனா எங்கிட்ட ஏண்டா செப்பல?”ன்னு கேக்க “உங்கிட்ட என்ன கூந்தலுக்கு சொல்லனும்?”னு கோவமா கேட்ட தர்ஷன் கிட்ட மீரா “இனிமே நான் உன் க்ளோஸ் பிரண்டு இல்லே”ன்னு சொன்னதும், தர்ஷன் “நான் இனிமே பிரண்டே இல்ல உனக்கு ஹவுஸ் மேட்டா மட்டும் பாரு”ன்னு சொன்னதுக்கு “டேய் போடா உன்ன ஹவுஸ்மேட்டா கூட அட மனுஷனாக் கூட பாக்க மாட்டேன்”னு சொல்லிட்டாங்க.
அகெயின் தனது சேம் சிம்பு அழுகை, சேம் “என்னய தப்பா போர்ட்ரெய்ட் பண்றாங்க” குற்றச்சாட்டு...."என்னையெல்லாம் ஜப்பான் ஜாக்கிசான் காதல் சொல்லி கரெக்ட் பண்ணப் பாத்தாரு....ஆனா இந்த தர்ஷன் என்னய வெரி ஓல்டு வர்ஷன்னு அவாய்ட் பண்ணிட்டான்"னு பொலம்பல். எனக்கு தெரிஞ்சு 30வது நாள் அன்னைக்கு ஆண்டவர்கிட்டயே “உங்கள உலக நாயகனா கமிச்சுக்கிறதுக்கு என்னய தப்பா போர்ட்ரெய்ட் பண்ணாதீங்க”ன்னு சொல்லி வாங்கி கட்டிக்கப் போகுது. ஆமென்!
இந்த வைத்திய யாராச்சும் கட்டி வச்சா பரவாயில்ல....யாராச்சும் சுண்டல் சாப்ட்டு கேஸ் விட்டாக் கூட கதறி அழுது எல்லாரையும் கட்டிப்பிடிச்சு முத்த மழை பொழியுறாப்ல...இன்னைக்கு சாக்ஷிய அப்பிடி பண்ணிட்டு இருக்கும் போது சித்தப்பூ “இந்தா நீ மொத அந்தப்புள்ள மேலருந்து கைய எடு, கிச்சன்ல வந்து என்ன வேலை பாக்குற ? காப்பி கீப்பி குடிக்கிறியா?”ன்னு கரிசனமா கேட்டு விரட்டி விட்டார்.
வைத்தி இருக்குற ரேஞ்சுக்கு தானும் எதாச்சும் வில்லத்தனம் பண்ணலாம்னு நெனச்சு முகின் கிட்ட வந்து சரவணனப் பத்தி வத்தி வைக்க, சாண்டி உள்ள புகுந்து உன் பிஞ்சு மூஞ்சிக்கு இதெல்லாம் தேவைதானா? கட்டிப்பிடிச்சமா, கதறி அழுதமான்னு இரு நைனா”ன்னு பார்வையாலயே சொல்லிட்டு, அந்த இடத்த கலைச்சாப்ல.
சித்தப்பூ, சாண்டி, மீரா, கவின் உக்காந்திருக்க, கவின் “ ஒரு பெரிய ஆள அசால்ட்டா தூக்கிட்டானுங்களே”ன்னு ஆச்சர்யப்பட்டு “இனி சண்டை போட யாருமில்லையே?”ன்னு கேக்க “இதோ நானிருக்கிறேன்”னு மீரா சொல்லிக்கிட்டே “நானெல்லாம் பால் பாக்கெட் போடுறவனையே பச்ச பச்சயா கேப்பேன்....மீரான்னா மிடிய போட்டுகிட்டு மிட்டாய் சாப்புடுறவன்னு நெனைச்சியா ? ரெக்கார்ட எடுத்துப் பாரு மீராடா....மர்டர் மீரா...செஞ்சுருவேன்....உங்களுக்கெல்லாம் நாந்தாண்டா அடுத்த வனிதா....இனிமே எல்லாரும் என் கைலதாண்டா முத்தம் குடுக்கனும்”னு சொன்னதும் சாண்டி “அக்காங்....இத அங்க சொல்லியிருக்கனும்”னு சொன்னதும் “மரியாதைக்காக விட்டேன்”னு சொன்னது யாரு மரியாதைக்காகன்னு அதுக்கு மட்டுமே வெளிச்சம். இத சொல்லிட்டு வீர நடை போட்டு மீரா போக மத்த 3 பேரும் “இனி இந்த லூச கட்டிகிட்டு அழுகனுமா?”ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க.
இந்த காவிய நாள்ல இங்கிலாந்து வேர்ல்டு கப்ப ஜெயிச்சு சரித்திரத்துல இடம் பிடிச்சிருக்கு. இது நம்ம பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகள் நடவடிக்கைகள்ல எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும்னு வரவிருக்கும் நாட்கள்ல பாப்போம்.
அருமையான எழுத்து நடை. படிக்க சுவாரசியம். வாழ்த்துக்கள்
ReplyDeleteSema writeup!!!brilliant and sarcastic at its best!!
ReplyDelete