பிக்பாஸ் 3 : நாள் 26 தொடர்ச்சி & 27ம் நாள் (20.07.19)
பிக்பாஸ் 3நாள் 26 தொடர்ச்சி & 27ம் நாள் (20.07.19)
*பிக்பாஸ் பதிவுகள் யாரையும் புண்படுத்த அல்ல. முற்றிலும் “நகைச்சுவைக்குட்பட்டது”
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ......!
இன்னைக்கான மொத்த எபிஸோடும் ஆண்டவர் ஆட்டந்தான்!
HR மேனேஜர் காஸ்ட்யூம்ல வந்தார் ஆண்டவர். இன்றைய கர்னாடகாவின் நிலையும் கவினோட நிலையும் ஓண்ணு....இத அறியாதவன் வாயில மண்ணுன்னு ஆரம்பிச்சார். அவரு சொன்னது எப்பவும் போல புரியலன்னாலும் கைதட்டி க்ரௌடு சமாளிச்சுச்சு. அவரும் நமக்கு புரிஞ்சிருச்சுன்னு நம்பிட்டார். கவின் மேட்டர கையோட எடுத்துட்டுதான் வந்தார். காதல் கண்ணை மறைக்கும் சரி ஆனா உள்ள இருக்குற காதல் கண்ணாபின்னான்னு எல்லாத்தையும் மறைச்சுருச்சுன்னு ஆரம்பிச்சார்.
சரி வாங்க அகத்துக்குள்ள யாரு அகப்பட்டிருக்கான்னு பாப்போம்னு கூட்டிட்டு போனார். உள்ள கேப்டன்ஷிக்கான டாஸ்க்கு..... வேட்பாளார் பேப்பர் கப்ப அடுக்கனும், எதிர்ப்பாளர்கள் அத பந்த கொண்டி எறிஞ்சு உடைக்கனும்..... அவங்க அவங்க ஆதரவாளர்கள் அத தடுக்கனும்னு சொல்லி ஆரம்பிச்சானுங்க.....ரேஷ்மாவுக்கான ஆதரவாளர்கள் முழுக்க பெண்கள். அப்டின்னா அங்கதான் வைத்தியும் இருக்கனும்ன்றது திருவள்ளுவர் எழுதாம விட்ட 1331வது குறளாச்சே! பொண்ணுங்களோட சேர்ந்து ஆனந்தமா அணை கட்டி விளையாண்டாரு வைத்தி.....!(அந்த கரடிக்குதான் எவ்வளவு ஆனந்தம்) ரேஷ்மா இந்த வார கேப்டனா ஜெயிச்சு வந்தாங்க ! நைனா இந்த வெற்றிய கொண்டாடி தீர்த்தாப்ல.
அப்பறம் வைத்திய ஹீரோவா காஸ்ட்யூம் பண்ணி “ஐ ஆம் அ டிஸ்கோ டான்ஸர்” பாட்டுக்கு பொண்ணுங்களோட ஆட வச்சார் சாண்டி ! (வைத்தி எம்பி எம்பி பி எஸ் படிச்சார்)
அப்பறம் நேரத்த ஓட்ட என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு மொக்கை கேம விளையாட சொன்னானுங்க....இதுக்கு மீராகிட்ட சொல்லியிருந்தா ஒரு சிறப்பான தரமான போர்ட்ரேயிட் பஞ்சாயத்த கூட்டியிருக்கும்....நம்மளுக்கும் எண்டெர்டெயின்மெண்டா இருந்திருக்கும்...ஐடியா இல்லாத பிக்பாஸ்!
ஆறுதலான ஓரே விஷயம் ! கவின் கொஞ்சம் சந்தோசமா இருந்தான் !
27ம் நாள்
அதே “ஐ அம் எ டிஸ்கோ டான்ஸர் பாட்டு !” (அறிகுறி எல்லாம் நைனா வெளிய போற மாதிரியே இருக்கு) ஆட்டக்காரி லாஸ் 2 நாளா சரியா ஆடல !
அப்பறம் நம்ம சல்பேட்டா சாக்ஷி பொறந்த நாளாம். பிக்பாஸ் கேக்கு குடுத்தனுப்புனார். AV ல அவங்க அப்பா அம்மா வாழ்த்து சொன்னாங்க. சேரன் இதையெல்லாம் தூரமா நின்னு பாக்க, அவர் கண்ணு தூரல் போட்டுச்சு.
இன்னைக்கு ஆண்டவர் காட்சியளிச்சதே கவினுக்காகவும், மீராவுக்காகவும்ன்ற மாதிரிதான் இருந்துச்சு.
லாஸ் கிட்ட “வெந்த சப்பாத்தியில ஏன் வேலப் பாச்சுன?”ன்னு கேட்டார். “அதுவா, அது தர்ஷன் மேல உள்ள கோவத்துல ஷெரின் கிட்ட விளையாட்டா செஞ்சேன்”னு சொன்னாங்க. (என்னா ஒரு புத்திசாலித்தனம்!).
அடுத்து வைத்திகிட்ட “ஆமா நீ ஏன் அணி தாவிகிட்டே இருந்த ? கக்கூஸ் கழுவுற டீம்ல இருந்து எதுக்கு கபால்னு தாவுன? அருவருப்பா ? இல்ல அலர்ஜியா?”ன்னு கேக்க (ஆங்....அந்த டீம்லதான் பொம்பள பிள்ளையே இல்லையேன்னு வைத்தி மைண்டுக்குள்ள சொல்லிட்டிருப்பார்) “அலர்ஜிதான் ஆண்டவா. அது மட்டுமில்லாம சேரனே எல்லாத்தையும் கழுவி, தொடச்சுடுறாரு நமக்கு ஒரு வேலையும் இல்ல”ன்னு சமாளிச்சார். ஆண்டவரோ மைண்ட்ல “என்ன இல்லேன்னுட்டான் ஆனா எங்கிட்ட அத வச்சு கண்டெண்ட் இருக்கே! இருந்தாலும் சொல்லுவோம்”னு “அதான பாத்தேன்! அருவுருப்புன்னு மட்டும் சொல்லி இருந்தேன்னா அவ்வளவுதான் உன்னைய.....அதெல்லாம் அவங்கவுங்க வீட்டு கக்கூஸ அவங்கவங்க கழுவுறதுதான் கதி மோட்சம் தரும்”னு தாறுமாறா சொல்லிட்டு நகர்ந்தார்.
மீராகிட்ட வந்து “என்னதாம்மா உன் போர்ட்ரெயிட் பிரச்சனை?”ன்னு கேக்க சாண்டியும், சேரனும் “வீடியோல இருக்கு! வீடியோல இருக்கு!ன்னு மீரா சொல்ற அந்த வீடியோவ போட்டு விட்டீங்கன்னா அதுல என்ன கருமந்தான் இருக்குன்னு நாங்களும் பாத்துருவோம்”னு கோரிக்கை வைக்க, “ரைட்டு பாத்துருவோம்”னு ஆண்டவர் சொன்னதும் சல்பேட்டா சாக்ஷி மூஞ்சி தீஞ்சி போன மாதிரி ஆச்சு. (ஏண்டா கேக்கு குடுத்த கேப்புல ஆப்பு வைக்குறீங்களேடா) நீண்ட சீசனுக்குப் பிறகு குறும்படம். சாக்ஷிதான் “மீட்டிங் போடலாம்”னு சொன்னது தெரிய வந்துச்சு. எல்லாருக்குமே அதிர்ச்சி. ஆனா மீராவுக்கு முழுசா ஆதரவும் குடுக்க முடியாம, சாக்ஷியையும் விட்டு குடுக்காம எல்லாருமே “அந்த டென்ஷன்ல என்ன சொன்னோம்னு மறக்குறது சகஜம்தான”ன்னு ஒரு சஜ்ஜஷனுக்கு வந்தானுங்க.
அப்பறம் சாக்ஷிகிட்ட எல்லாரும் “அதெல்லாம் யாரும் உன்ன தப்பா நெனைக்கல”ன்னு சொல்லிக்கிட்டானுங்க. ஆண்டவரும் “மறதியெல்லாம் ஒரு தேசிய வியாதி. அது உங்களுக்கு வந்ததுல ஒண்ணும் ஆச்சர்யமில்ல”ன்னு முடிச்சார்.
ரைட்டு.....கக்கூஸ் காதலன் கவின் பிராது ! “யோவ் செந்திலாவது ஒரு பழத்த வச்சுகிட்டு அதான் இதுன்னு விளையாண்டார். உங்கிட்டதான் ரெண்டு இருக்கே அப்பறம் என்னயா பஞ்சாயத்து?”ன்னு கேக்க, கவின் தன்னிலை விளக்குனான். அப்பறம் சரி சாக்லேட்ட சாக்லேட்டால எடுப்போம்னு சொல்லி, 2 சாக்லேட்ட குடுத்து “இப்ப நீ யாருக்கு குடுக்குறேன்னு பாப்போம்”னு சொல்ல....பயபுள்ள மறுபடியும் சாரி வழக்கம்போல 2 பேருக்கும் குடுத்தான். ஆனா சாக்ஷியோ “ஃபீலிங்ஸ கொன்னுட்டான் இப்ப நான் பீனிக்ஸ் பறவையா நிக்குறேன் சோ அவன் இனிமே எனக்கு வேணாம்”னு சூரா சொல்லிட்டாங்க. லாஸ் ரொம்ப பட்டும் படாம “சர்தான்”னு விட்டுட்டாங்க.
ஆண்டவரோ “இதுவே ஒரு பார்க்குலயோ இல்ல பீச்சுலயோ நடந்திருந்தா பெருசா தெரிஞ்சிருக்காது. இந்த 4 சுவத்துக்குள்ளன்றதால சுத்தல்ல விட்டிருச்சு வேற ஒண்ணுமில்ல”ன்னார் (அதான இல்லேன்னா கவின் ஏன் சல்பேட்டாவ கட்டிட்டு அழப்போறான்) பிரேக் சொல்லிட்டு போன கேப்புல கவின் போயி கக்கூஸ்ல அழுதுட்டு வந்துட்டான்.
அப்பறம் ஆண்டவர் வந்தார் “அவ்வளவுதான் இந்த பஞ்சாயத்துக்குள்ள நுழைய முடியும். அது அப்பாவாவே இருந்தாலும். இல்லேன்னா இது தனி மனித உரிமை மீறலாகிடும்”னு சொன்னார். க்ளாஸ்!
ஆண்டவர் “எவிக்ஷன்ல இருந்து யாரு தப்பிக்குறான்னு பாக்கலாம்”னு சொல்லிட்டு “உள்ள எனி கெஸ்ஸெஸ்?”னு கேக்க எல்லாம் மாறி மாறி சொல்லிட்டு இருந்தானுங்க. ஆனா சேரன் மட்டும் ரொம்ப கான்பிடண்டா தான் சேஃப்னு சொன்னார். அதையும் பாக்காலாம் ஆனா நாளைக்குனு போயிட்டார்.
Comments
Post a Comment