பிக்பாஸ் 3 : நாள் 20 & 21 (13.07.19)

பிக்பாஸ் 3
நாள் 20 & 21 (13.07.19)

வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் வரும் “அத்திவரதர்” ஆண்டவர் வந்தார் செம்ம யூத் காஸ்ட்யூமோட....
உள்ள இருக்கும் ஹவுஸ்மேட்ச பத்தி பூடகமா பேசிட்டு...20ம் நாள பாக்கலாம்னு சொல்லிட்டார்.
20ம் நாள்
“சொடக்கு மேல சொடக்கு” போட்டு எழுப்புனார் பிக்பாஸ். தின நடவடிக்கையில வனி இன்னைக்கு மழலையர் பள்ளி டீச்சரா இருந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கனும். (பிக்பாஸ்....ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்). “யாரு ஆயாம்மாவா வறீங்க?”ன்னு வனி கேட்டதுக்கு ஏகோபித்த ஆதரவா எல்லாரும் மீராவ சொல்ல...மீரா ஆயாம்மாவா வாந்தாங்க....அப்பறம் ரைம்ஸ் பாடி கலைஞ்சானுங்க.
மது சரவணனோட குக்கிங் டீம்ல போராடிட்டு இருந்தாங்க. மதுவப் பத்தி வனி & ரேஷ்மா பொரணி பேசுனாங்க “பேசுறதெல்லாம் தமிழ்ப்பொண்ணு ஆனா சமையல் விஷயத்திலயோ களிமண்ணு”ன்னு பேசிட்டு இருந்தாங்க. வனி வந்து கொஞ்சம் குக்கிங் டீம்ல மதுவுக்கு கொடச்சல குடுக்க ஆரம்பிக்க சரவணன் மதுகிட்ட “லூஸ்ல விடு, காதுல விட்டுக்காத”ன்னு சொல்லிட்டார். ஓட்டை விழுந்த கேரி பேக் மாதிரி வனிதா மூஞ்சி போச்சு.
கவின் லாஸ்கிட்ட தன்னிலை விளக்கம் குடுத்துட்டு இருந்தான். இந்தியாவுலேயே, ஏன் இந்த உலகத்துலேயே ஒவ்வொரு நாளும் ஒரே ஆளுகிட்ட தன்னப் பத்தி தன்னிலை விளக்கம் குடுக்கும் ஓரே ஆள் அது நம்ம கக்கூஸ் கவின் தான். (ஏன் நீ யாருன்னு உனக்கே மறந்துபோச்சா மொமெண்ட்)
சமையல் சரியில்லன்னு “சல்பேட்டா” சாக்ஷி , வனி & ஷெரின் சொல்லிட்டு இருந்தாங்க. வனிக்கெதிரா ரெண்டு நாளா சிலுப்புன சாக்ஷி வனிகிட்ட மறுபடியும் நெருக்கமானது.....சுத்தி சுத்தி மூத்திர சந்துல ஓடுற எஃபக்ட்.
திடீர்னு லாஸ் மீராகிட்ட போயி “எங்கிட்ட கதைக்கிறதா இருந்தா எங்கிட்ட கதை....என்னப்பத்தி மத்தவங்ககிட்ட கதைக்காத”ன்னு சொல்ல, நமக்கு ஒண்ணும் புரியல, என்னன்னு பாத்தா தர்ஷனுக்கு மீரா கொக்கி போட பாத்திருக்கு. ஆனா தர்ஷன் “நான் ஒரு “பொண்ண” டாவடிச்சுட்டு இருக்கேன்”னு சொல்லிட்டான் போல...!
இந்த மீரா இருக்குற உயரத்துக்கு மத்தவங்க சொல்ற அறிவுறை எல்லாமே அவங்க காதுக்கு போய் சேருறதுக்கு கஷ்டமா இருக்கனும் அல்லது அது செவிடா இருக்கனும்....எப்பவும் போல அது பேச்ச மட்டும் பேசிட்டு “யாரும் பாச தாவயில்ல”ன்னு போயிருச்சு. வனியோ சாக்ஷிக்கு கவினப்பத்தி சாம்பிராணி போட்டுட்டு இருந்தாங்க. “ஹாங்...யூ ஆர் ரைட்...ஒய் ஹீ டூயிங் லைக் திஸ்?”னு தகரத்துல தேச்ச குரல வச்சு கேட்டுட்டு இருந்தாங்க சாக்ஷி.
21ம் நாள்
ஆண்டவர் இன்னைக்கு வருகைன்னு அறிவிக்கும் விதமா ஹே ராம் பாட்டு....ஆண்டவர் வந்தார்....அகம் டூ அகம்
சாண்டி நகைச்சுவைக்கு, வனிதா & முகினுக்கு டாஸ்க்குக்காகன்னு பாராட்டு. பின்ன சாண்டி & கவின் ஆண்டவர் ஆன்தம் பாடுனாங்க அதுக்கும் பாராட்டு. குறிப்பா இந்த இடத்துல “நகைச்சுவை என்பது ஒரு பண்பு”ன்னு சொன்னார்....சூப்பர்!
அடப்போங்கையா எழுதவே போரடிக்குதுன்னு சொல்ல நெனைக்குறதுக்குள்ள பாயிண்டுக்கு வந்தார் ஆண்டவர்.
சாக்ஷிகிட்ட “அபி கொலைகாரியா இருந்தா அவளக் கொன்னு தின்னுட்டு அகம் பிரம்மாஸ்மினு அகஸ்மாத்தா போயிடுவேன்னு சொன்ன! ஆனா அது வனிதான்னு தெரிஞ்சதும் வண்டை வண்டையா கேக்காம“வாவ்”னு சொல்லிட்டயே?”ன்னு கேக்க....”ஹவ் டு ஐ டெல் யூ?”ன்னு மூஞ்சிய வச்சுகிட்டு ஏதேதோ பேசி சமாளிச்சாங்க சாக்ஷி.
லாஸ் பேர சொன்னதும் மாஸா கைதட்டல் விழுந்துச்சு. பின்ன அதுகிட்ட மைம்மா கதை கேட்டார். (மைம்மான்னா கிளியாம். கடைசியில அந்தக் கிளி செத்தேப் போச்சுன்னு கதை சொல்லி முடிச்சாங்க). “ஒப்பீனியன ஓப்பனா சொல்லும்மா....இலையில ஊத்துன ரசம் மாதிரி ஓடாத....பிரியாணில ஊத்துற தால்சா மாதிரி உள்ள இறங்கு”ன்னு சொன்னார்.
ரைட்டு.... இன்னைக்கு கண்டெண்ட் தர்ஷன் & வனிதான். வனிய முடிஞ்ச அளவு வறுத்தார். குறிப்பா வனிகிட்ட “ஒரு வேளை மத்தவங்க மேல லைட்ட திருப்பிற கூடாதுன்னு நெனைக்கிறீங்களோ?”ன்னு கேட்டது அருமை. அதே போல “பேசுற அளவு கேளு”ன்னு சொன்னதும் ஷார்ப்பு ஜி.
வனி தன்னோட எந்தக் காரணமும் செல்லாம போறத எதிர்பாக்கவே இல்ல. விட்டிருந்தா கைதட்டுற மக்களையே கூட “திஸ் இஸ் அன்ஃபேர்! கைதட்ட உங்களுக்கு ரைட்ஸே இல்ல....என்னோட பொதுவான கருத்து என்னன்னா பிக்பாஸே ஒரு பிக்காளி பாஸ்”னு சொல்லியிருப்பாங்க.
“நேத்து மொளச்ச காளான்னு தர்ஷன எதுக்கு சொன்ன தண்ணிக் குண்டாவே?”ன்னு கேட்டதுக்கு “சின்னப்பையன் வயசு காரணமா சொன்னேன்”னு சொன்னதும். பாரதியார பக்கத்துல இழுத்து “தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”ன்னு சொல்லி தர்ஷன் ஒரு அக்கினிக் குஞ்சுன்றதையும் பதிவு பண்ணார். இதுக்கு மீரா பதறனும்.
தர்ஷன் “வனிகிட்ட நான் சாரி கேக்க வேண்டிய அவசியமில்ல, ஆனாலும் “செட் ப்ராப்பர்ட்டி” சேரன் சொன்னதுக்காக கேட்டேன்”னு போட்டுக் குடுத்துட்டான். (வெல்டன் தர்ஷன்)
“தங்கியிருக்குற ஆளுகள்ளயே அநியாயத்துக்காக பொங்கியிருக்குற ஒரே ஆளு தர்ஷன் தான் அவனுக்கு ஏன் யாரும் சப்போர்ட் பன்ணல?”ன்னு கேட்டதுக்கு சேரன் சொன்ன பதில் சுத்த லுச்சாத்தனமானது. “வனிகிட்ட சண்டை முடிஞ்சு ஒரு நாள் பொறுத்து போதிக்கலாம்னு இருந்தேன்”னு சொன்னார். இதுக்கு ஆண்டவர் “உன் படம் மாதிரி டைம் எடுத்துகிட்டா 100 வருஷமாகும் சொல்லிக்காட்ட....இது வெறும் 100 நாள் ஷோதான், உடனே ரியாக்ட் பண்ண பழகு”ன்னு சேரனுக்கு செப்பல் ஷாட் தந்தார்.
தர்ஷனுக்கு கிடைச்ச கைத்தட்டு எல்லாமே மத்தவங்கள அசைச்சுப் பாத்துச்சு...குறிப்பா வனி & டீம. “அவனத் தொட்டா கெட்டோம்”னு நெனச்சிருப்பானுங்க.
மதுவும் “இங்க பேச வாயத் தொறந்தாலே தெய்வக்குத்தம்னு சொல்றானுங்க...பெரிய ரோதனையா இருக்கு”ன்னு உள்ளக் குமுறல கொட்டிட்டாங்க.
அபி & மது பேச்ச பத்தி கேட்ட ஆண்டவர் “மது உங்க பேச்சுல கற்பழிப்புக்கு பெண்களின் உடைதான் காரணம்னு சொல்ற மாதிரி அர்த்தம் வருது அத நான் கண்டிக்கிறேன்”னு பொங்கிட்டார். “ஆண்களுக்கும் உண்டு கற்பு”ன்னு காட்டமா சொன்னார். "விக்டிம்கள குற்றவாளியாக்காதீங்க”ன்னு சொன்னது சூப்பரோ சூப்பர்.
பின்ன எவிக்ஷன் ஆளுங்க கிட்ட மத்தவங்களுக்கு அட்வைஸ் குடுக்க சொன்னார். “எவிக்ஷன் கார்டு உள்ள இருக்கு”ன்னு சொல்லி சாண்டிய எடுத்துட்டு வர சொல்லி படிக்க சொன்னார். அதுல மோகன் பேரு இருக்கவும் மோகன் எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தத பாத்துட்டு ஆண்டவருக்கே அள்ளு விட்டு “யோவ் வைத்தி போதும்யா! கார்ட ஒழுங்காப் படி அது சேஃப் கார்டு....உள்ளயே திரி”ன்னு சொல்லிட்டார். நாளைக்கு தெரியும் யாரு வெளியேன்னு.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)