பிக்பாஸ் 3 : நாள் 18ம் நாள் தொடர்ச்சி & 19 வது நாள் - (12.07.19)

பிக்பாஸ் 3
நாள் 18ம் நாள் தொடர்ச்சி & 19 வது நாள் - (12.07.19)


“இந்த சித்தப்பன கைவிட்டீங்களேடா?”ன்னு சரவணன் பொலம்பிட்டு இருந்தப்ப சட்டுன்னு சம்பந்தமில்லாம மது உள்ள பூந்து “மீராதான் எங்கிட்ட வந்து கவினும் லாஸும் ஒரே தட்டுல ஒன்ணா சாப்டுறாங்கன்னு சொன்னா அத வச்சுதான் சாக்ஷிய வனி திட்டுனாங்க”ன்னு சொன்னதும், மீரா “ஆல்லோ, நான் ஓண்ணும் சோல்லல....நான் ஓங்கிட்ட பேச்ச நீறுத்தியே நாலு நாளாச்சு”ன்னு நெடிலப் போட்டு நெடுகக் கத்திட்டு இருந்தாங்க. சரவணனோ “கூல் மீரா, அதான் வீடியோலா இருக்கும்ல, அதுவுமில்லாம சொன்னாதான் என்ன” அப்பிடின்னு கேட்டார். (உனக்கென்ன? என்னயதான தொங்க விட்டு அடிப்பாய்ங்கனு மீரா மைண்ட் வாய்ஸ் சொல்லி இருக்கும்)

மது டகால்னு போயி வனிகிட்ட “மீரா சொன்னான்னுதான நான் வந்து உங்ககிட்ட சொன்னேன்?”ன்னு கேட்டதும் வனி தடுமாறுனப்பவே தெரிஞ்சது மீரா ஏதோ டகால்டி பன்ணி இருக்குன்னு. மது வேற அப்பப்ப “குறும்படம் இருக்குடியேய்”னு திகார் திகார்னு சொல்லிட்டு இருந்தாங்க.
கவினும், சேரனும் ஜெயில் பறவையானாங்க....கம்பிகளுக்கு வெளிய கண்ணீர் கசிவோட லாஸ் நிக்க, கவினோ “இப்போ என்னய நம்புறியா? மன்னிச்சிரு நான் எதாச்சும் பண்ணியிருந்தா தப்பா; இதோ என் கூடதான் இருக்காரு உங்கப்பா”ன்னு சேரன் பக்கம் திரும்புனார். லாஸும் சமாதானமாகிடுச்சு.
இந்தப் பக்கம் தர்ஷன், சாண்டி, முகின், மீரா உக்காந்திருக்க...சாண்டிகிட்ட மீரா “என்னய பத்தி சொல்லு”ன்னு கேட்டதும் சாண்டி “மீரா ரொம்ப போல்டு ஆனா பாத்தா ஓல்டு”ன்னு கலாய்க்க, தர்ஷனோ “நீ ஒரு அழகிய பச்சோந்தி”ன்னு சொன்னதும், அவன தனியா கூட்டிட்டு போயி “ஏண்டா அப்பிடி சொன்ன?”ன்னு கேட்டதும் தர்ஷன் காரணங்களை அடுக்குனார். “நட்புன்னா என்னன்னு தெரியுமா?”ன்னு மீரா கேக்க ,”அது உனக்கு தெரியுமா? சரியா சொல்லலேன்னா செருப்பாலயே அடிப்பேன்”னு சொன்னதும் மீரா “அல்லோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ் கத்தி பேசுனா எனக்கு புடிக்காது”ன்னு சொல்ல “அப்போ நீ கத்துறியே?”ன்னு கேட்டா “அது பேரு கத்தி பேசுறது இல்ல என் வாதங்களை நான் அழுத்தமா வைக்கிறேன்னு அர்த்தம்”னு ரத்தம், தக்காளி சட்னி விளக்கம் குடுத்தாங்க.
18ம் நாள் முடிஞ்சது
“இந்த உலகத்தில் தர்மம் அழிந்து எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன்....அதாவது சம்பவாமி யுகே யுகே” - கீதை
19வது நாள் காலை
“வாட்ட கர்வாட்” பாட்டுக் கதற கொஞ்ச பேரு ஆடுனாங்க. தின நடவடிக்கையில லாஸ்லியா எல்லாருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்க கத்துக் குடுக்கனுமாம். பட்டாம்பூச்சிகிட்டயே இப்பிடி சொன்னா எப்பிடி பிக்பாஸ் ? லாஸ்லியா அழகா பட்டாம்பூச்சியா சிறகு விரிச்சு ஆட பின்னாடி சாண்டி” ஓ பட்டர்ஃப்ளை பாட்டுப் பாட....காலை சோலையானது. இந்த நிகழ்வப்ப வனிதா பேசுன எதையுமே லாஸ் காதுல வாங்கிக்கல.... பழிக்குப் பழி; புளிக்குப் புளி.
சேரன் & கவின் ரிலீஸ். அப்பறம் தலைவர தேர்ந்தெடுக்கும் டாஸ்க், பஸ்ஸர் அடிச்சதும் ஒரு ஸ்டிக்கர மத்தவங்க மேல ஒட்டனும் அகெயின் பஸ்ஸர் அடிக்கும் போது யார் மேல ஸ்டிக்கர் இருக்கோ அவங்க அவுட்.
ஆட்டம் ஆரம்பிச்சதும் வனி மோகன் மேல ஸ்டிக்கர ஒட்ட அத திரும்ப வனி மேல ஒட்ட முயற்சி பண்ணி 5 நிமிஷத்துலயே “நான் விலகிக்கிறேன்”னு சொன்னார். “ஏன்”னு கேட்டா “நோ எங்கரேஜ் ஒன்லி டிஸ்கரேஜ்”னு பொலம்புனாரு. ஆனா வயசுதான் காரணம்னு எல்லாருக்கும் தெரியும்.
இப்போ வனி & சாக்ஷி மட்டும்...அடியே சக்கரக்கட்டி உம்மேல ஸ்டிக்கர ஒட்டின்னு சாக்ஷி மேல வனி ஸ்டிக்கர ஒட்ட முயற்சிக்க, சாக்ஷியோ வனிக்கு ஓட்டம் காட்ட வனிக்கு இதுக்கு மேல ஓட தம்மில்லாம “டேய் கேமாடா இது கேமே இல்லடா இதுல நான் ஜெயிக்குற மாதிரி டிசைனே இல்லடா, இத நிறுத்துங்கடா நான் ஜெயிக்குற மாதிரி ரூல மாத்துங்கடா”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே.........
“அப்பிடியெல்லாம் நடக்காது; நடக்கவும் கூடாது”ன்னு ஒரு குரல். "யாருடா அது பட்டப்பகல்ல பிக்பாஸ் வீட்டுல வனிகிட்டயே சவுண்ட குடுக்குறது?"ன்னு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்டும் திரும்பி பாத்தா...... அது நம்ம தர்ஷன் (சம்பவாமி யுகே யுகே). “அதென்ன உனக்கு மட்டும் ரூல் சேஞ்ச் பண்ணனும்?”னு கேக்க “நான் உங்கிட்ட பேசல”ன்னு வனி சொல்ல “ஆனா நான் உங்கிட்டதான் பேசுறேன்...எல்லா விஷயத்துலயும் நீ மட்டும் சம்பந்தமில்லாம உள்ள பூந்து கடை வைக்குற, நாங்க நியாயத்த கேட்டா மட்டும் வலிக்குதோ?”ன்னு 6 பாலையும் சிக்ஸரா அடிச்சிட்டு இருந்தாப்ல. சாக்ஷி இது எதுக்கும் கொஞ்சம் கூட அசஞ்சு குடுக்கல....கேப்டனாவும் அறிவிக்கப்பட்டாங்க.
இத வனியால ஜீரணிக்கவே முடியல “டேய் பிக்பாஸ் இங்க வாடா....என்னயவே தாக்குறானுங்கடா...டேய் நான் மைக்க போட மாட்டேண்டா...நான் விளையாட மாட்டேண்டா...என் மானம் போச்சு மரியாதை போச்சுடா....டேய் பிக்பாஸ் வாடா”ன்னு அறுப்புக்கு வந்த பண்ணி மாதிரி அங்குட்டும் இங்குட்டும் ஓடிட்டு இருந்துச்சு....
ஷெரின் தர்ஷன நைசா வெளிய தள்ளிட்டு வந்து “தர்ஷனுக்கு கோவம் கூட வருமா?ன்னு கேட்டது அவ்ளோ க்யூட். சாண்டியும், கவினும் கூட இதுக்கு தர்ஷன் பக்கம் நின்னானுங்க. “குரல உயர்த்தி பேசிட்டா எல்லாம் அடங்கிப் போவனுங்கன்னு நெனைக்கிறது தப்பு. எனக்கும் கத்த வரும்னு சொன்னான். (பேக்ரவுண்டுல நிக்கல் நிக்கல் சல் தேரே பாட்டு போட்டிருந்தா செம்மயா இருந்திருக்கும்). “அடிக்கத் தெரியாம இல்ல....அடிக்கக் கூடாதுன்னு இருக்கோம்”னு அவன் பார்வை சொல்லிச்சு. “இப்போ உனக்கு ரொமாண்டிக்கா பேசுனா ஓக்கேவா?”ன்னு ஷெரின் கேட்டதும் தர்ஷன் தர்பூசணியா செவந்து போயிட்டான்.
மைக்க போடுன்னு நன்பர்கள் சொன்னத கேக்காம இருந்தாங்க வனி. தன் கூட்டாளிகள கூட திட்ட ஆரம்பிச்சாங்க....(நேத்து சேரனுக்கு சொன்ன திஸ் இஸ் கேம், விளையாண்டே ஆகனும், கண்டிராக்ட் சைன் பண்ணி இருக்கோம்ன்ற எல்லாத்தையும் மறந்துட்டாங்க போல)
ஒட்டு மொத்த வீடும் தர்ஷன சுத்தி உக்காந்திருந்தத பாத்ததும் வனிக்கு அள்ளு விட்ருச்சு...”ரைட்டு பிடி நழுவுது”ன்னு புரிஞ்சிருச்சு யாருமே சொல்லாம மைக்க எடுத்து மாட்டுச்சு. பின்ன எல்லார் முன்னாடியும் வந்து தர்ஷன் கிட்ட என்னமோ பேசி குழப்ப தர்ஷன் அப்போதைக்கு சாரின்னு சொல்லி முடிச்சான்.
இதுல சுத்த சுண்ணாம்பு நம்ம சேரன் தான். கடைசியில தர்ஷன் மேல தப்புன்ற மாதிரி சீன மாத்த முயற்சி பன்ணாப்ல. இதுக்கு ஒரு நாள் மாட்டுவாப்ல.
இப்ப சாக்ஷி செம்ம ஸ்மார்ட்டா டீம் பிரிச்சாங்க....இதுல ரூம் க்ளீனிங்க் டீம்ல வனி, மீரா, சேரன்....ஆனா இந்த டீம் கேப்டன் மீரா. வனிக்கு அடுத்த அடி.
சரவணன் டீம் குக்கிங் அவரோ மதுவ “நீ சமைக்க வேணாம்...சமைக்க கத்துக்கோ”ன்னு சொல்லிட்டு இருந்தார்....அந்தப்பக்கம் வனி தான் சொன்னத அவங்க டீம்ல யாரும் கேக்கலன்னு பொலம்பிட்டே உள்ள வந்தாங்க வனி....ஆக வனிய எல்லாரும் கட்டம் கட்டுறானுங்க.
நாள் முடியப்போற நேரத்துல லாஸ் "கண் பேசும் வார்த்தைகள்" பாட்டப் பாடுனாங்க...நா.முத்துக்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மாதிரி இருந்துச்சு....
இன்னைக்கு வனிகிட்ட இருந்து ஆண்டவர காப்பாத்த வேண்டியது பிக்பாஸ் பொறுப்பு....

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)