பிக்பாஸ் 3 : நாள் 9 - (02.07.19)
பிக்பாஸ் 3
நாள் 9 - (02.07.19)
“ஓ மை டார்லிங்” பாட்டோட ஸ்டார்ட் ஆச்சு நாள். வழக்கம் போல லாஸ்லியா ஆட (கரகாட்டக்காரன் கனகாவுக்கு அப்பறம் இவங்கதான் பெரிய ஆட்டக்காரி போல) கூடவே அப்பா சேரனும் இணைய...ஒரே மகிழ்ச்சிதான்.
Daily Activity மதுவுக்கு வந்திருந்தது...வாழ்கையில எப்படி உயர வேண்டும் ? அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்னு? எல்லாருக்கும் மோடிவேஷனல் ஸ்பீச் குடுக்கனும். ஒரு நல்ல சந்தர்ப்பத்த மது வீணடிச்சாங்க. முந்தா நாள் நடந்த விஷயத்த இதன் மூலமா திசை திருப்பி விட்டு, இவங்கள பத்தின பிம்பத்த மாத்தி இருக்கலாம்....ஆனா மறுபடியும் அந்த கலாச்சார பேச்சுக்கு விளக்கம் குடுக்குறாப்ல இந்த வாய்ப்ப தவறா பயன்படுத்தி இன்னுமும் பேர டேமேஜ் பன்ணிக்கிட்டாங்க.
இத ஆரம்பத்துலயே கணிச்ச வனிதா அங்கயே கேட்ட போட்டு நிப்பாட்டி, “இந்தா நீ சுத்தி சுத்தி குறுக்கு சந்துலயே ஓடிட்டு இருக்க. மெயின் ரோட்டுக்கு வா”னு இழுக்க. ஏறக்குறைய எல்லாரும் அத ஆதரிச்சாங்க. மதுவோட தற்போது நட்புல இருக்குற மீரா, வனிதாவுக்கு எதிரா மதுவ ஆதரிச்சாங்க. மதுவோ “நான் இன்னும் முடிக்கவே இல்ல, அதுக்குள்ள ஜட்ஜ் பண்றீங்க”ன்னு குற்றம் சொன்னாங்க.
இந்த சீசனோட றெக்கையில்லா சமாதானப் புறாக்கள் தர்ஷனும், லாஸ்லியாவும்தான். எவன் எங்க சண்டை போட்டாலும் நிலமையை பகுத்தாய்ந்து, பிரித்து பொருள் சொல்லி, உண்மையை விளக்கி, மனித மாண்புகளின் தன்மையை படம் போட்டு காட்டி.....ஸ்ஸப்ப்ப்பா! ஆனா கேக்குறவனுங்களோ “ஒரு ஊத்தப்பம்”னு போயிடுறானுங்க!
பின்ன இது கிச்சன் ஏரியாவுல தொடர்ந்தது....”தாலியவே கழட்டி வச்சுட்டு ஷோவுக்கு வருவாங்களாம் ஆனா பாட்டில் குழந்தை மட்டும் ஆகாதாம்...வாட் இஸ் திஸ் ரா?”ன்னு வனிதா கேக்க. மது என்னமோ சொல்லி கடைசியில ரெண்டு பேரும் தலா ஆளுக்கு ஒரு “ஷட் அப் பண்ணுங்க” சொல்லி முடிச்சுகிட்டாங்க. வனிதா உணர்ச்சி வசப்படுற ஆளு, கொஞ்சம் முன் கோபி கூட, குரலோ JBL Speaker ஆனா என்ன சண்டை போட்டாலும், சண்ட போட்ட ஆளுகிட்ட முதலில் போயி பேசுறது அவங்கதான். மதுகிட்ட கூட போயி தான் ஏன் அப்பிடி சொன்னேன்னு விளக்குனாங்க. மதுவுக்கு இந்த நாளும் பின்னடைவுதான்.
“ஆடியோ லாஞ்சுக்கு போவதால் ஏற்படும் நன்மைகள்”னு ஒரு பாடம் வேற எடுத்தாங்க வனி. கூல். கவினின் கக்கூஸ் கச்சேரி இன்னைக்கு லாஸ்லியாவுக்கு (கவின் நல்லா பாட்டு எழுதுறாப்ல) கவின் பாட, சாண்டி வாசிக்க, லாஸ்லியா ஆட....தில்லானா மோகனாம்பாள் 3.0 வெர்ஷன பாக்குறாப்ல இருந்தது.
லக்ஸூரி டாஸ்க், 4 அணியா பிரிஞ்சு...அணிக்கு ஒருத்தர் போட்டிய விளக்கனும் ஆனா எந்த வகையிலும் உதவக் கூடாது. இத மத்த அணி ஹால்ல உக்காந்து டிவில லைவ்ல பாக்கலாம்.
வனியோட சிங்கம் டீமுக்காக வனி போட்டியாளரா போக, வைத்யா போட்டிய விளக்க...வனிதா ஜெயிச்சுட்டாங்க. அடுத்து சாண்டியோட அன்னப்பறவை டீம். சாக்ஷி & தர்ஷன் போட்டியாளார்கள். மீரா வாசிப்பாளர். கலஞ்சு போன கமல் படத்த ஒண்ணு சேர்க்கனும்.
உற்சாகப்படுத்துறேன்ற பேர்ல மீரா கத்திகிட்டே இருக்க...அப்பப்போ மறைமுகமா டிப்ஸ் குடுக்க. பதட்டத்துல ஒழுங்கா சேர்க்க முடியாம தோத்தாங்க. வெளிய வந்த மீராவ கவின் “நீ ஏன் கத்திகிட்டே இருந்த? அதுவுமில்லாம உதவி வேற பண்ற”ன்னு கேக்க. “நான் மறைமுகமாதான் பண்ணேன் நான் அப்பிடி பண்ணலேன்னா இந்த அளவு கூட வந்திருக்க மாட்டாங்க”ன்னு மீரா சொன்னாங்க.

வைத்யா மீராவ பாரட்ட எதோ சொல்ல வர மீராவோ”யப்பா சாமி சும்மா இருங்க வந்துருவீங்களே உடனே தூக்கிட்டு”ன்னு சொன்னதும் கவின் கோவமாகி “உங்கிட்ட தூக்கிட்டு வரதுக்கு யாரும் இங்க வரல. ஒழுங்கா பேசு”ன்னு முடிச்சிட்டார். மறுபடியும் வைத்யாவ மீரா ஏதோ சொல்லி நிப்பாட்ட வைத்யா வைல்ட் அனிமலா மாறி “மரியாதையா பேசு மீரா, வயசுக்கு மரியாதை குடு”ன்னு மிரட்டினார். பின்ன மீரா சிம்பு மாதிரி தேம்பி தேம்பி அழுக...இதுல பெரிய காமெடி என்னன்னா, மீரா “நான் இருந்த ஃபீல்ட் ரொம்ப டீசெண்ட் யாரும் இப்பிடி கத்தி, டீசென்சி இல்லாம நடந்துக்க மாட்டாங்க”ன்னு சொன்னதுதான். இந்த மீராதான் “வந்துருவீங்க எல்லாரும் தூக்கிட்டு”ன்னு பொது இடத்துல சொன்னது.
வைத்யா மீராகிட்ட சமாதானம் சொல்லி கைய குடுத்து, கட்டிபிடிச்சு ஆசீர்வாதம் பண்ணிட்டு போனார். மீரா திடீர்னு நம்ம MGR அ பாத்து “உனக்கும் எனக்கும் இருந்த நட்பு மூணு நாளைக்கு முன்னமே முறிஞ்சு போச்சு”ன்னு டிக்ளேர் பண்ணாங்க. (ஏண்டா , மூணு நாள் முன்ன வரை நட்புல இருந்ததே எங்களுக்கு இப்பதான தெரியும்)
மீராவோட பிரச்சனையே தன்ன ஒரு பில்லா ரேஞ்சுக்கு நெனச்சுக்கிட்டு இண்டர்போல் ஆட்கள் தன்ன பிடிக்க வலை வீசிட்டு காத்திருக்குற மாதிரி ஒரு ஃபீல் குடுத்துட்டு இருக்காங்க. எல்லாருமே தன் கூட சண்டை போட பயிற்சி எடுத்துட்டு வந்த மாதிரியும், தன்ன மட்டுமே எல்லாரும் கார்னர் பண்ற மாதிரியும், தன்னோட யார் சேர்ந்தாலும் அவங்கள தன் கிட்ட இருந்து பிரிக்க சதி பண்றதாவும் நெனச்சுக்கிறது மட்டுமில்லாம அடுத்தவங்க கிட்டயும் சொல்றாங்க.

லாஸ்லியா குடுத்த முதிர்ச்சியான அறிவுறைய கூட “யம்மா லாஸ்லியா உனக்கு ஒன்ணும் தெரியாது...பேயாம இருக்கணும்”னு சொல்லி வாயடச்சுட்டாங்க. “இதுக்கு எங்கிட்ட ஒரு பிளான் இருக்கு”ன்னு மீரா சொல்ல. “அது என்ன?”ன்னு மது ஆர்வமா கேக்க. “நான் இப்பிடியே இருக்குறதுதான்”னு மீரா தன் ரகசிய திட்டத்த சொன்னதும், லாஸ்லியா முகத்துல கஷ்டப்பட்டு அடக்குன மாதிரியான ஸ்மைல். நமக்கோ கெக்கபிக்கே.
இதுக்கு பேரலலா, உள்ள மீரா & MGR உரையாடல சாக்ஷி & அபி அரசல் புரசலா கேட்டுட்டு வந்து அனாவசியமா பொங்கிட்டு இருந்தாங்க. இதுக்கு மேல அடுத்த எபிஸோட் பாத்தாதான் தெரியும்.
Comments
Post a Comment