பிக்பாஸ் 3 : நாள் 23 (16.07.19)
பிக்பாஸ் 3
நாள் 23 (16.07.19)
“ஜிங்குனமணி ஜிங்குனமணி”யடியச்சு எழுப்புனார் பிக்பாஸ். லாஸ் ஆடிட்டே வெளிய ஓடுச்சு. சைடுல சேரன் “அயர்ன் மேனா” மாறி சட்டைய இஸ்திரி போட்டுட்டு இருந்தார்.
இன்னைக்குன்னு பாத்து 3 பஞ்சாயத்து :
1. கண்ணத்தில் முத்தமிட்டால்....
இன்னைக்கு ஆராய்ச்சி மணிய அழுத்தி அடிச்சது நம்ம வைத்தி “கக்கூஸ் கழுவ முடியல தன்ணி சேரல.....டீம் மாத்தி விடுறியா?”ன்னு கேப்டன் சாக்ஷிகிட்ட கேக்க “ சரி வேற எங்க போவ?”ன்னு அவங்க கேட்டதுக்கு “குக்கிங் போறேன்”னு வைத்தி சொன்னதும். “நைனா அங்கதான் பூச்சாண்டி சரவணன் இருக்காப்ல....உன்னைய ஒடச்சு சூப்பு வச்சு குடிச்சுட்டா என்ன பண்ணுவ?”ன்னு பயமுறுத்துனதும், “அப்போ வெசெல் வாஷிங் போறேன்”னு சொன்னதுக்கு, சல்பேட்டா சாக்ஷி “அந்தத் தண்ணி மட்டும் உனக்கு சேருமாக்கும்?”ந்னு கேட்டதுக்கு வைத்தி வாயில ப்ளாஸ்திரி போட்டுண்டார்.
வெளிய வந்த சாக்ஷி அபிகிட்டயும் ரேஷ்மாகிட்டயும் வந்து “நைனா இனிமே வெசெல் வாஷிங்”னு சொன்னதும் “ குனிஞ்சு நிமிந்து குண்டாவ கழுவ கஷ்டமாயிருக்குன்னு போன தடவ பொலம்புன ஆள்தான வைத்தி !”னு ரேஷ்மா கேக்க “நானும் சாட்சி”ன்னு அபி சொன்னாங்க.
பின்ன வந்த வைத்திகிட்ட “என்னா நைனா இந்தப்பக்கம்?”னு ரேஷ்மா கேக்க, “நான் குக்கிங் டீம்தான் போறேன்னு சொன்னேன் சாக்ஷிதான் சைடு வழியா இங்க போக சொல்லிட்டா”ன்னு சொன்னார். இத சாக்ஷிகிட்ட ரேஷ்மா கேக்க, “ஹாங்.....ஆல்ரெடி ஐ டோல்ட் யூ நா?”ன்னு இழுக்க.....”ம்க்கும்”னு ரேஷ்மா தலையில அடிச்சுகிட்டாங்க.
கவின் “உன் கேப்டன்சியிலதான் ஆளுக அணி தாவுறது அதிகமா நடக்குது பாத்துக்கோன்னு எச்சரிச்சான்.
இதப் பத்தி வைத்தியும் சாக்ஷியும் காதும் காதும் வச்சா மாதிரி கக்கூஸ்ல கதைச்சுக்கிட்டாங்க. “என் கேப்டன்சி சரியில்லன்றானுங்க”ன்னு சாக்ஷி சொன்னதுக்கு, “குறையொன்றுமில்லை சல்பேட்டா சாக்ஷி”ன்னு எம்.எம் சுப்புலக்ஷ்மி ரேஞ்சுக்கு அளந்துட்டு வெளிய வந்து பாத்தா ரேஷ்மா, லாஸ் & அபி. மோகன் மூடுக்கு வந்தாப்ல.....! “காலையில இருந்து ஒரே சத்தம், வாங்க உங்க 3 பேருக்கும் குடுக்குறேன் கண்ணத்துல முத்தம்”னு சொல்லி ஒரு வழியா 3 பேருக்கும் முத்தம் குடுத்து இன்னைக்கு டாஸ்க்க முடிச்சார். இத அபி சொல்லி காட்டியும் விடலையே வைத்தி......(டேய் டாடி....!)
2. சாக்லேட்
நேத்தே சொன்னேன் சாக்லேட் விஷயத்துல சாக்ஷி பஞ்சாயத்து பண்ணும்னு....அது இன்னைக்கே நடந்துருச்சு....! லாஸ் சாக்லேட்ட பிரிச்சுட்டு இருக்கும்போது ஷெரின் “இது கவின் குடுத்த சாக்லேட்டா?”ன்னு வேணும்னே சங்கூத, அது சாக்ஷி காதுல ஷார்ப்பா விழுந்துச்சு லாஸ் “ஆமா”னு சொல்லிச்சு. சாக்ஷி திரும்பி “கவினுக்கு நான் குடுத்த என் சாக்லேட்டையா உனக்கு குடுத்தான்?”னு கேட்டுட்டு வெளிய போச்சு.
கவின் கிட்ட போயி “நான் குடுத்த சாக்லேட்ட எங்க?”ன்னு ஒரு கேள்விதான் கேட்டுச்சு. “நீ எனக்கு குடுத்தத நான் லாஸ் கிட்ட குடுத்தேன். ஆனா நீ எனக்குன்னு குடுத்தத எங்கிட்டயே வச்சுக்கிட்டேன். எனக்குன்னு குடுத்த உன்னோட சாக்லேட்ட நான் உனக்காகன்னு வச்சுட்டு, எனக்கு குடுத்த என் சாக்லெட்ட லாஸ்கிட்ட குடுத்தேன்”னு முருகனப் பாத்த அவ்வையார் பாட்டி மாதிரி பாடி முடிக்க....சாக்ஷி போயி அரை மணி நேரமாகியிருந்துச்சு.
சமாதானப்படுத்த வந்த கவின, “கிட்ட வந்தா ஏக் மார் தோ துக்கடா! மார்ல தட்டி மல்லாக்க படுக்க வச்சா மர்கயா சாலா... ஓடிரு”ன்னு வெரட்டி விட....வெளிய வந்து கம்பிய தொடச்சுட்டு நின்னான். அங்க வந்த லாஸ் “உங்கிட்ட ஒரு முட்டாய் வாங்குனது குத்தமாடா?”ன்னு கேட்டுட்டு அவங்கிட்டயே அந்த சாக்லேட்ட குடுத்துட்டு போயிடுச்சு.
போன பொண்ணு நேரா அப்பா சேரன் தோளுல சாஞ்சு அழுக “என்னடா.....யாருடா....எதுக்குடா?”ன்னு அவர் கரைய, அங்க வந்த ரேஷ்மா “சார் சின்ன விஷயம்தான் நீங்க கோவப்பட்டு கவின கத்திய எடுத்து குத்தி அவன் குடல உருவி அங்க இருக்குற ராவணன் போட்டாவுக்கு மாலையா போட்டுறாதீங்க”ன்னு சொல்ல, சேரன் மனசுக்குள்ள “நான் அவ்வளவு கோவமே படலயே!”ன்ற மாதிரி பாவமா பாத்தார்.
ரெண்டு ஹெட்லைட்டும் எரியாத எல்லோ கலர் கார் மாதிரி ஆகிட்டான் கவின். “விடு அத நாம ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கலாம்”னு சாண்டி சொன்னது டைமிங் டைனமைட்.
3. யாரடி நீ மோகினி ?
டிக் டிக் டிக்னு ஒரு டாஸ்க். 100 கடிகாரத்துல, அலாரம் வச்ச 2 கடிகாரத்த 10 செகண்ட்ல கண்டுபுடிச்சு ஆஃப் பண்ணனும். சாண்டியும் மீராவும் போட்டியாளரா உள்ள போக உற்சாகபடுத்த சேரன் போனாரு. போன ஜோருல சாண்டி ஒரு கடிகாரத்த கண்டுபிடிச்சு ஆஃப் பண்ண, ரெண்டாவத கண்டுபிடிச்சு மீரா அது பக்கத்துல போயி நிக்க, அத கைல எடுத்து ஆஃப் பண்ணார் சாண்டி. வெளிய வந்ததும் இத கவின் ஜாலியா “நீ இல்லேன்னா சாண்டி இன்னும் சீக்கிரம் கண்டுபிடிச்சிருப்பான் நீ வேஸ்டு”ன்னு கலாய்க்க. இதுக்கப்பறம் முழுக்க முழுக்க நடந்தது “மீரா”க்கிள்.
இத சொன்னதுக்கு மீரா வருத்தப்பட, கவின் வழக்கம்போல “ஹர்ட் பன்ணியிருந்தா சாரி”ன்னு சொல்லி ரெண்டு பேரும் ஹை ஃஃபை குடுத்துக்கிட்டாங்க. இத பத்தி ரேஷ்மா சாக்ஷிகிட்ட சொன்னதும் தலைவியா லட்சணமா மீராகிட்ட போயி “சொல்லிவிடு வெள்ளி நிலவே”ன்னு கேக்க “என்னய பத்தி வெளிய தப்பா போர்ட்ரெயிட் பண்ணப்பட்டிருக்கும் இத எல்லாருக்கும் விளக்கனும்”னு கேக்க சாக்ஷி ஏற்பாடு பண்ண மீட்டிங்ல மீரா விளக்க, கவினோ “இதுக்குதான் நான் உள்ள சாரி கேட்டு சட்டிய உடைச்சுட்டு வந்தேனேடா? மறுபடியும் எதுக்கு ஆறம்பிக்கிறீங்க?”ன்னு கேட்டுட்டு உள்ள போக, மீர கவின கூப்ட்டு “நான் மீட்டிங் போடவே சொல்லல இது சல்பேட்டா சாக்ஷி வேலை”ன்னு சொல்லிட்டாங்க.
பின்ன சாக்ஷி & ரேஷ்மா கவின கூப்ட்டு “அடேய் அவ கூட நாங்க சும்மாதான் ச்சேட்டிங்கு ஆனா அவதான் கேட்டா மீட்டிங்கு”ன்னு சொல்லிட்டு மீராவ இழுத்துட்டு வந்தாங்க.
சாக்ஷி : மீரா நீதான மீட்டிங் வேணும்னு சொன்ன?
மீரா : “நான் எங்க கேட்டேன்? நான் மீட்டிங்ல சொல்லணும்னு சொன்னேன் ஆனா நீதான மீட்டிங்க போட்ட
சாக்ஷி : ஆமா அப்ப மீட்டிங் போட்டாதான நீ மீட்டிங்ல சொல்ல முடியும் ?
மீரா : ஆமா ! நீ போட்ட மீட்டிங்கலதான் நான் சொல்லிட்டேனே
சாக்ஷி : அப்போ நீ மீட்டிங் வேணும்னு கேட்டது உண்மைதானே!
மீரா : “நான் எங்க கேட்டேன்? நான் மீட்டிங்ல சொல்லணும்னு சொன்னேன் ஆனா நீதான மீட்டிங்க போட்ட
சாக்ஷி : அப்ப மீட்டிங் போட்டாதான நீ மீட்டிங்ல சொல்ல முடியும் ?
மீரா : ஆமா ! நீ போட்ட மீட்டிங்கலதான் நான் சொல்லிட்டேனே
(இதே மாதிரி 3 செட்டு பேசிக்கிட்டாய்ங்க)
மீரா : “நான் எங்க கேட்டேன்? நான் மீட்டிங்ல சொல்லணும்னு சொன்னேன் ஆனா நீதான மீட்டிங்க போட்ட
சாக்ஷி : ஆமா அப்ப மீட்டிங் போட்டாதான நீ மீட்டிங்ல சொல்ல முடியும் ?
மீரா : ஆமா ! நீ போட்ட மீட்டிங்கலதான் நான் சொல்லிட்டேனே
சாக்ஷி : அப்போ நீ மீட்டிங் வேணும்னு கேட்டது உண்மைதானே!
மீரா : “நான் எங்க கேட்டேன்? நான் மீட்டிங்ல சொல்லணும்னு சொன்னேன் ஆனா நீதான மீட்டிங்க போட்ட
சாக்ஷி : அப்ப மீட்டிங் போட்டாதான நீ மீட்டிங்ல சொல்ல முடியும் ?
மீரா : ஆமா ! நீ போட்ட மீட்டிங்கலதான் நான் சொல்லிட்டேனே
(இதே மாதிரி 3 செட்டு பேசிக்கிட்டாய்ங்க)
சாக்ஷி டென்சனாகி “ஏய் மீரா நீ லூசா இல்லே லூசு மாதிரி நடிக்கிறியா?”ன்னு கேட்டதும் மீரா ஜெர்க்கிங். ஒரு கட்டத்துல தாக்குதல சமாளிக்க முடியாத மீரா “சாரி மாச்சி எனக்கு தாரியல”ன்னு “அய்யோ எனக்கு மயக்க மயக்கமா வருதே” மொமெண்டுக்கு போயிட்டாங்க. பின்ன அவங்க அக்மார்க் சிம்பு அழுகையோட இந்த நாள் முடிஞ்சது.....நமக்கு கிழிஞ்சது.
Comments
Post a Comment