பிக்பாஸ் 3 (நாள் : 1)

பிக்பாஸ் 3நாள் : 1

உள்ளார இருக்கும் எல்லாருக்கும் உல்லாலா சாங் போட்டு எழுப்பி விட்டார் பிக்பாஸ்...! உலக வழக்கப்படி டான்ஸ் வந்த ஆளுங்க...வராத ஆளுங்கன்னு எல்லாம் அதுங்க இஷ்டத்துக்கு ஆட...காலியான ஸ்விம்மிங் பூல்ல கடப்பாரை நீச்சல் அடிச்ச சாண்டிக்கு நாடியில ரத்தம் வர...கண்டெஸ்டெண்டுங்க எல்லாம் "என்ன ரத்தக் காவெல்லாம் வாங்குது?" மோடுக்கு போனாங்க !

பலசரக்கு மளிகை வந்தது ஆளாளுக்கு வந்து அள்ளிட்டு போக...பிக்பாஸ் குடுத்து விட்ட பிளேடுல தனக்கும் ஒண்ணு வேணும்னு அபிராமி சொன்னது கவின் காதுல விழாம, நம்ம காதுல விழுந்தது!
பிக்பாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி "இங்க நாங்க குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்படுறோம். ஆனா இந்த பிக்பாஸ் வீட்டப் பாருங்கன்னு" இங்க சோசியல் மீடியால பேசிக்கிட்டது பிக்பாஸுக்கு தெரிஞ்சிடுச்சு போல....அதனாலதான் நீச்சல் குளம் இருக்கு ஆனா தண்ணி இல்லன்னு பப்பரப்பான்னு கெடக்கு ! இத அப்பிடியே கண்டினியூ பண்ணி தண்ணிக்கும், எரிவாயுக்கும் மீட்டர் போட்ட மேட்டர் சொன்னார் பிக்பாஸ்! ஆகான்னு சொல்லி எல்லாரும் கைதட்ட (குறிப்பா சேரன் சார்) இந்த அவல நிலைய நெனச்சு கண்ணீர் வடிக்கிறத விட்டுட்டு இப்பிடி கைதட்டி சலம்புறீங்களே சைத்தான்களேன்னு பாத்திமா பீபி சாரி பாபு சுட்டிக்காட்ட...இப்பவாச்சும் தோணுச்சேன்னுதான் கைதட்டுனோம்னு சேரன் சார் பாசிட்டிவ் பாரசெட்டமால் போட்டு எல்லாரயும் காப்பாத்துனாரு!
எல்லாரும் லான்ல சுத்தி உக்காந்து மோகன் வைத்யாவோட இசை என்னும் இன்ப வெள்ளத்துல இந்தப் அக்கம் நீந்த...பாத் ரூம்ல கவின் ஷாக்‌ஷி & ஷெரின் கூட எங்க வீட்டுக் குத்துவிளக்கேன்னு தனித்தவில் வாசிச்சிட்டு இருந்தார்...எடிட்டருக்கு வாழ்த்துகள்!
அடுத்து மோகன் வைத்யாவ உள்ள கூப்ட்டு ஒலைய குடுத்து விட...தலைவர் & டீம் பிரிக்குறதுல ஒரு மாற்றம் இருந்தது. யாரு யாரு எந்த கார்டு எடுக்குறாங்களோ அந்த வேலை அவங்களுக்கு. (ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தாச்சு போல) வனிதா விஜயகுமார் இந்த வார தலைவி. பளபளன்னு ஆக்குவோம்னு சொல்லி கவின், ஷெரின் லாம் கக்கூஸ்(டாய்லெட்னு சொல்றதுல பஞ்ச் இல்லயாம்....சாண்டி சொன்னாரு) கழுவ போயாச்சு! அப்றம் ஒரு டீம் பிரிக்குற விளையாட்டு...இந்த விளையட்டால கிடச்ச ஒரே நல்ல விஷயம் ஷெரினுக்கு லெக் பீஸுன்ற பேரு கெடச்சதுதான். சைடு கேப்புல அண்ணன் சேரன் "கும்பலா சுத்துவோம்னு" குத்தாட்டம் போட்டது ஆறுதல்.
இவ்வளவு பொண்ணுங்க இருக்குறப்போ ஆம்பள தடிமாடுங்கல்லாம் குறட்டை விட்டு தூங்க...அபிராமி, ஷெரின், சாக்‌ஷி மூணு பேரும் லான்ல உக்காந்து பேசிட்டு இருந்தாங்க....(இப்ப வரை யாரும் ஸ்மோக்கிங் ரூம் போகாதது ஆச்சர்யம்) இதுதான் முக்கியமான இடம், அபிராமி சரவணன் மீனாட்சி பாத்த காலத்துலயே (இதுக்கே அபிராமிய டைட்டில் வின்னராக்கிடலாம்) 7 வது வேட்டையனா வந்த கவின டாவடிச்ச சரித்திரத்த சொன்னாங்க. அப்பவே அவர ஃபாலோ பண்ணி ரெக்வெஸ்ட் குடுத்து கரெக்ட் பண்ண பாத்தா அவர் " எட்டுக்கால் பூச்சிக்கு 6 காலா இல்ல 7 காலான்னு" கேக்குற தத்தின்னு சொல்ல...இருந்தாலும் சீசன் முடியுறதுக்குள்ள கவினோட குவின் ஆக ட்ரை பண்றதா சொல்ல...இதோட நாள் 1 நல்ல படியா முடிஞ்சது!
இந்த சந்தோஷம் பொறுக்காத பிக்பாஸ் இன்னைக்கு என்ன பண்றார்னு பாப்போம்!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)