பிக்பாஸ் 3 : நாள் 29 (22.07.19)

பிக்பாஸ் 3நாள் 29 (22.07.19)


“டக்குன்னு டக்குன்னு பாக்காத” பாட்டோட பள்ளி எழுச்சி நடந்தது. பரதநாட்டியம் தெரியும்ன்ற ஒரே காரணத்துக்காக அபி எல்லா பாட்டுக்கும் அபிநயம் பிடிக்கிறது ஆயுள் கால தண்டனையா இருக்கு. எவிக்ட் ஆகாத சந்தோசம் அபி கண்ணுல தெரிஞ்சது. சல்பேட்டாவும், ஷெரினும் வழக்கம் போல பேயாடுச்சுங்க. நம்ம மீரா ஏன் எப்பவுமே தடுக்கி விழுகுற மோட்லயே ஆடுதுன்னு தெரியல. சட்டுன்னு பாக்க மூங்கில் கம்பு சரிஞ்சு விழுறாப்லயே இருக்கு.

காஞ்சுட்டிருந்த ஷாட்ச பாத்து “இத பாக்க நம்ம நைனாவோடது மாதிரியே இருக்கே”ன்னு அத கன்ஃபார்ம் பண்ணிக்க எல்லார்கிட்டயும் கேட்டுட்டு திரிஞ்சானுங்க கவினும் சாண்டியும். (நைனா டவுசர்தான் நேத்தே கழண்டுடுச்சே)

ரொம்ப நாள் கழிச்சு வந்த வயித்துப்போக்கு மாதிரி அந்த தினசரி நடவடிக்கைய இன்னைக்கு ஆரம்பிச்சானுங்க. “ட்ரெயின்ல வடை விக்குறது எப்பிடி?”ன்னு மது சொல்லிக் குடுக்கனுமாம். (அது வாய்க்கு ட்ரெயினயே வித்துரும்). வடை, வாயத்தொடைன்னு வித்துச்சு. ஒரு பயலும் வாங்குறாப்ல இல்ல. சட்டுன்னு சட்டிய வாங்கி ஷெரின் விக்க ஆரம்பிச்சதுதான் தாமசம், மொத்தமா வடையும் காலி. ரேஷ்மா வடைய சேரன் கிட்டதான் விக்க முடிஞ்சது. வீட்ல உக்காந்து நைனா இத பாத்துட்டிருந்தா “வட போச்சே”ன்னு ஃபீல் பண்ணுவார்.

நாமினேஷன் படலம்.

இந்த வாரம் சாக்ஷி, மீரா, சேரன், அபி, கவின், சரவணன் நாமினேஷன் லிஸ்டுல இருக்காய்ங்க. நாட்டுல மழை தண்ணி வருதோ இல்லையோ நாமினேஷன்ல மீராவும், சரவணனும் மாறாம வந்துடுறாங்க. மீட்டிங் மேட்டர் சீட்டிங் ஆனப்பறம் சல்பேட்டா மேல எல்லாருக்கும் இரிட்டேட்டிங் ஆயிடுச்சு போல....கக்கூஸ் செவருல கண்டவனும் எழுதுற மாதிரி எல்லாரும் சாக்ஷி பேர சரளமா சொல்லிட்டானுங்க. மத்தவனுங்க கூட ஓகே, ஆனா சாக்ஷிக்கு சாக்ஸா இருந்த நம்ம கவினும் சாக்ஷி பேர சொல்லிட்டான். (தட் நீயாடா என்னய கொல்லப்பாத்த மொமெண்ட்).

சேரனும், அபியும் பழைய டிக்கெட்டு. கவினோ புதிய விக்கெட்டு. உணர்ச்சிகளோட ஊஞ்சல் ஆடி விளையாண்ட கேசு, கக்கூஸ்ல கைய புடிச்சு இழுத்த கேசு, சாக்லேட்ட வச்சு சரசமாடுன கேசுன்னு மொத்த சாமியார் கேசையும் கவின் பேருல எழுதி நாமினேஷனுக்கு இழுத்துட்டு வந்துட்டாய்ங்க. கவின் பேர லாஸ் சொன்னது தெரிஞ்சா பயலுக்கு லூஸ் மோஷன் போயிரும்.

ஆனாலும் பேர சொன்னதுக்காக பேத்தோவா வந்து கவின் கிட்ட மன்னிப்பு கேட்டுச்சு லாஸ். “எதுக்கு மன்னிப்பு?”ன்னு கேட்டதுக்கு, “நடிப்புன்னு சொன்னேன் அன்னைக்கு; அது உண்மையான துடிப்புதான்னு தெரியுது இன்னைக்கு”ன்னு கதைக்க, கவினோ காதல் கதைக்கு கமா போட்டுறலாமான்னு தடுமாறுனது நமக்கு நல்லாவே தெரிஞ்சது. ஆனாலும் கொஞ்சம் சுதாரிப்போட நகர்ந்துட்டான். (செவல தாவுடா தாவு)

அஞ்சு நிமிஷ கேப்புனாலும் அத்தி வரதர் மாதிரி அக்கடான்னு படுத்துடுது நம்ம மீரா! இன்னைக்கு பிக்பாஸ் சுட்டு எழுப்புனார். உடனே ஃபார்முக்கு வந்த மது “மீரா! வெளிய போயி கொடியில காயுற துணிய எடுத்துட்டு வா”ன்னு விரட்டுனாங்க.(அலார்ட்டா இருக்காங்களாமாம்). நாளைக்கே மீரா கூட மதுவுக்கு போர்ட்ரெயிட் க்ளாஸ் இருக்கும்.

ஆமா யாராச்சும் இந்த லாஸ்லியா வேலை பாத்து இதுவரை பாத்தீங்க ? இந்தா இதும்பாய்ங்களே.....ஆங்....இந்த டாடி லிட்டில் பிரின்ஸஸ் மாதிரி எப்பப் பாத்தாலும் கேமராவப் பாத்து பாடுறதும், ஆடுறதும், அப்பா சேரன் கையால முகத்த மூடுறதும், வேலைன்னு சொல்லிட்டா ஒளிஞ்சு ஓடுறதும்னு சண்டையில சட்டையே கிழியாம இருக்கே? ஏதாச்சும் கேட்டா மைனாம்மா கதை, நைனா அம்மா கதைன்னு கதை விட்டு கைதட்டல வாங்கிட்டு கம்ஃபர்டபிளா உக்காந்துக்குது. (இத சொன்னா நம்மள ஆர்மி வச்சு அடிப்பாய்ங்க).

சேரன், லாஸ், சாக்ஷி 3 பேரும் உக்காந்திருக்க, லாஸ் சாக்ஷிகிட்ட “நீ என்னயப்பத்தி எங்கிட்டயே சொல்லி இருக்கலாம்”னு எதோ சொல்ல....”ஹாங் நான் உங்கிட்டதான் சொன்னேன்”னு சாக்ஷி இழுவையப் போட, சேரனோ “அவ என்ன சொல்ல வரான்னா, நீ கொஞ்சம் அறிவாளின்றதால அந்த அயோக்யப் பய கவின் கிட்ட இருந்து தப்பிச்சிட்டியாம். சாக்ஷி மாதிரி சாம்பாரா இருந்திருந்தா அவன் கிட்ட மாட்டி இருப்பேன்னு, நான் சொல்லல சாக்ஷி சொல்றா”ன்னு லாஸ் கிட்ட எச். ராஜா ரேஞ்சுக்கு மொழிபெயர்க்க, சாக்ஷியோ “அட நன்னாரிப்பயலே கவுரவம் கவுரவம்னு என் கவுரவத்தையே கெடுத்துட்டியேடா”ன்னு பாத்தாங்க.

சாண்டியும், கவினும் நைனாவ நெனச்சு பாடிட்டு இருக்கும்போது சரவணன் கிட்ட “நைனா ஒரு குழந்தை மாதிரி அதான் அவருக்கு போக மனசில்ல”ன்னு சொல்ல, சரவணனோ “யோவ் அதெல்லாம் இல்ல..... அந்தாளுக்கு வீட்ல யாருமில்ல கேக்க. அதான் இன்னும் 10 நாள் இங்க இருந்திருக்கலாம்னு ஃபீலிங்கு”ன்னு போட்டு உடைச்சாப்ல.

சல்பேட்டாவுக்கு வழக்கம் போல எவிக்ஷன் காய்ச்சல் வந்திருச்சு....! பக்கி, பேரு வந்தாலே பேக் அப் மூடுக்கு வந்துரும் போல. ஷெரின் கிட்ட “அவ்வளவுதான் கிளம்புற மூடுக்கு வந்துட்டேன்”னு பொலம்ப “அது சரி நாமினேஷன்ல வரவே கூடாதுன்னா எப்பிடி? காலம் பூராம் இங்கயே இருப்பியா ? இங்க ஸ்விம்மிங் பூல்ல தண்ணி கூட இல்ல” அப்பிடி இப்பிடின்னு ஷெரின் வேப்பிலை அடிச்சிட்டு இருந்தாங்க.

பிக்பாஸ் ரேஷ்மாவ கூப்பிட்டு “எப்பப் பாரு இங்க ரெண்டு மூணு பேரு தூங்கிட்டே இருக்கானுங்க. பகல்ல தூங்குனா வீட்டுக்காகுமா? தலைவி உனக்கே இது தெரிய வேணாமா? போ போயி எவனும் தூங்காம பாத்துக்க”ன்னு மெரட்டி அனுப்பிவிட, வெளிய வந்து “இந்தா யாராச்சும் தூங்குனா தூக்கிருவேன்னு கத்திட்டு இருந்தாங்க ரேஷ்மா. கன்ஃபார்ம் பெர்த்துல எப்பவும் போல கால நீட்டி தூங்குன மீராவ மறுபடியும் எழுப்பி விட்டாய்ங்க.

யாருக்கும் தெரியாம அபியும், லாஸும் சேருக்கு பின்னாடி மறைஞ்சு சோடி போட்டு தூங்க, சுட்டு பிடிச்சார் பிக்பாஸ். ரேஷ்மா வரதுக்குள்ள ரெண்டும் கக்கூஸுக்குள்ள ஓட, வெளிய வந்த ரேஷ்மா தூங்குனது யாருன்னு தெரியாம “டேய் உங்களுக்கு சோறாக்குவேனா இல்ல யாரும் தூங்காம தேவுடு காப்பேனா?”ந்னு கத்திட்டே உள்ள போக அபியும், லாஸும் ஸ்கூல் புள்ளைங்க மாதிரி வந்து ரேஷ்மா முன்னாடி நின்னாங்க. ரேஷ்மாவோ “இனிமே இப்பிடி தூங்காதீங்க”ன்னு ரொம்ப உக்கிரமா கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க (ஆனாலும் கடலை முத்து ரொம்பத்தான் ஸ்ட்ரிக்டு)

சாண்டி, சந்தேகமே இல்லாம பெஸ்ட் எண்டெர்டெயினர் ! நைனா வைத்தி போல பண்றேன்னு சொல்லி சும்மா வச்சு செஞ்சாப்ல ! நைனா இத வீட்ல இருந்து பாத்திருந்தாருன்னா 11 மணிக்கு கடையில போயி “முழம் கயிறு என்ன விலை?”ன்னு கேட்டு நின்னிருப்பாரு. கன்ணீர் சிந்தி, கட்டியணைச்சுன்னு குஜால் பெர்பார்மென்ஸ போட்டாப்ல சாண்டி.

எல்லா படத்துலையும் மொட்ட ராஜேந்திரன போடுறாப்ல எல்லா எபிஸோடுக்கு ஒரு மொக்கை டாஸ்க் வைக்கனும்னு வேண்டுதலோ என்னவோ! இன்னைக்கும் அப்பிடி ஒண்ணு. குலுக்கி எடுத்த சீட்டுல இருக்கும் பாட்டு அல்லது டயலாக்க யாருக்காச்சும் டெடிக்கேட் பண்ணனும். இதுல தெரிய வந்த ஒரே உருப்படியில்லாத விஷயம் சல்பேட்டாவுக்கு கவின் மேல இன்னும் ஒரு இஷ்க்கு இருக்குன்னுதான். (இந்த பிஞ்ச்சு போன பிரஷ்ஷ வச்சு எத்தனை தடவடா பெயிண்ட் அடிப்ப?)

முகின் சும்மா எதோ பாட்டப் பத்தி பேச லாஸ் டக்குன்னு “முகின் நீ அடிக்கடி மட்டந்தட்டி பேசுற. அது எனக்கு பிடிக்கல”ன்னு சொல்ல....”சரி ஓகே”ன்னு அப்போதைக்கு சொன்னாலும். பாத்திரம் கழுவுற இடத்துல “நெசமாத்தான் சொல்றியா?”ன்னு முகின் மறுபடியும் கேக்க “ஆமாம்”னு சொன்னாங்க லாஸ். இத பேசிட்டு இருக்கும்போதே அபி வந்து முகின் கிட்ட “சாக்கி வேணுமா?, மம் மம் வேணுமா?”ன்னு வந்து கொனட்ட, “போ வரேன்”னு வெரட்டிட்டு, “அப்பிடி மட்டந்தட்டி இருந்தா சாரி”ன்னு லாஸ் கிட்ட சொன்னாப்ல முகின்.

கட் பண்ணா கக்கூஸ் பெஞ்சுல முகின் & அபி. இன்னும் அந்த பெஞ்ச் எத்தனை காதல பாக்கப் போகுதோ? ஆனாலும் முகின் கிட்ட ஒரு கெத்து இருந்துச்சு. இதுவே கவினா இருந்திருந்தா சீனே நாறி சாரி.... மாறியிருக்கும். முகின் நிலமைய சரியா எடுத்து சொல்லி சீரா முடிச்சான் சீன.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)