பிக்பாஸ் 3 : நாள் 16 - (09.07.19)

பிக்பாஸ் 3
நாள் 16 - (09.07.19)

“வச்சுக்கவா உன்ன மட்டும்” பாட்டு ஒலிக்க எல்லாரும் எந்திருச்சு ஆடுனாங்க. அபிய பழைய நண்பர்கள் யாரும் சேர்த்துக்கல. லாஸ்லியா வழக்கம் போல தனித்தவில் வாசிக்க, சாண்டி & குரூப் நல்லாவே ஆடுனாங்க.
ஆடிக்கிட்டே வெளிய வந்து பாத்தா லான் ஏரியா சுடுகாடா மாத்தப்பட்டிருந்தது....அதாவது செட்டு! (செட்டுப் போடாமலேயே அக்கா வனிதாவால அந்த வீடு அப்பிடித்தான் இருக்கு) சேரன் அதப் பாத்து “என்னமோ புதுசாப் பண்ணப் போறாய்ங்க”ன்னு ஆர்வமானார்.
தின நடவடிக்கையில மீரா எல்லாருக்கும் யோகா சொல்லித் தரணுமாம். மூச்சுப் பயிற்சி சொல்லிக் குடுத்தாங்க. மத்தவங்கள்லாம் மூச்சப் போட்டு ஆத்துனாங்க. சாண்டி வழக்கம் போல அத காமெடி பண்ணி கலாய்ச்சாப்ல. இந்தக் கூட்டத்துல அபி, மது பக்கத்துல உக்காந்திருந்தது நம்ம கண்ணுல பட்டது. வனி ரொம்ப அகலமா வாயத் தொறந்து மீராவோட யோகா கத்துக் குடுக்கும் முறைய பாரட்டுனாங்க. ஆனா மீராவ தன் பக்கம் வச்சுக்குறதுக்கான முயற்சிதான் இதுன்றது ராகுல் காந்திக்குக் கூட தெரியும். இன்னைக்கு அபிக்கு தலைவரா முதல் நாள்.
கட் பன்ணா சமயக்கட்டுல “சல்பேட்டா சாக்ஷி”, ஷெரின் கிட்ட “மீரா வனி கூட ஒட்டி உறவாடி நம்ம 2 பேத்தயும் வனி கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறா ப்ளடி கல்ப்ரிட்” அப்பிடின்னு சொல்ல. ஷெரின் “டோண்ட் ஒரி பேபி அப்பிடி நடக்க விடமாட்டேன்னு சபதம் போட்டாங்க. (கடவுளே உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் குடுத்தாலும், நீங்க ட்விஸ்ட் பன்ணிக்கிறீங்களே டாங்கீஸ்)
12 மணிக்கு பல்லு விளக்குது லாஸ். (இதுனால அதோட ஆரோக்யத்துக்குதான லாஸ்) கவின் பின்னாடியே வந்தான்...என்னமோ ஹர்ட் பண்ணிட்டானாம் அதுக்கு சாரி கேட்டான். வாயில பிரஷ்ஷோட பதில் சொல்ல முடியாம அபிநய சரஸ்வதியா மாறி கவினுக்கு பதில் சொல்லுச்சு செல்லாக்குட்டி.
சட்டுன்னு கவின் கிட்ட “உன் மன்னிப்ப ஏத்துக்கனும்னா இன்னைக்கு முழுக்க என்னய நீ பாக்கக் கூடாது, நானா உன்ன பாத்தாலும் மூஞ்சிய திருப்பிக்கனும்”னு சொல்ல. “பாத்துக்கிட்டே இருக்குறாப்ல ஏதும் தண்டனை இல்லையா?”ன்னு கவின் கேக்க, பட்டுனு உள்ள வந்தாரு சேரன் “ஏண்டா குளிக்க வந்த பொன்ணுகிட்ட என்னடா பேச்சு?”ன்னு கேக்க கவின் “எல்லாம் நல்ல விஷயந்தான்”னு சொல்லி கலாய்ச்சு அனுப்பிட்டான்.
அப்பறம் இந்த வாரத்துக்கான லக்ஸுரி டாஸ்க் : ஜெயில்ல இருந்து தப்புன கொலையாளி வீட்டுக்குள்ள இருக்கான் அவன கண்டுபிடிக்கனும். இதான் டாஸ்க். எல்லாரையும் கன்ஃபெஷன் ரூமுக்குள்ள கூப்பிட்டு அங்க இருந்த கட்டையால “கொலையாளிய பாத்தா எப்பிடி சாத்துவீங்க?”ன்னு டெமோ காமிக்க சொன்னார் பிக்பாஸ். எல்லாரும் “லொஜக், மொஜக், வஜக்”னு செஞ்சு காமிக்க, நம்ம மோகன் செய்ய செய்ய “ஆத்தி இவன் நம்ம காதக் கடிச்சு வச்சுருவான் போலயே”ன்னு பிக்பாஸே பீதியாகுற அளவுக்கு வீடு கட்டுனார்.
வனிதான் இந்த வீட்டோட கொலைகாரின்னு சொன்னார். (ஒரு வாசகம்னாலும் திருவாசகம் பிக்பாஸ்) அவங்கதான் பிக்பாஸ் சொல்ற ஆளுகள கொலை பண்ணனுமாம். (“நீங்க சொல்லாமலேயே இங்க அததான் செஞ்சுட்டு இருக்கேன்”னு வனிதா மைண்ட் வாய்ஸ் சொல்லியிருக்கும்) கூட்டாளியா முகின வச்சுக்கனும். ரகசிய செல்போன் ஒன்ணு குடுக்கப்பட்டது. முகின் கிட்ட “நீதான் வனிதாவோட கூட்டாளி”ன்னு சொன்னப்ப அவன் மூஞ்சி போன போக்கு, வயித்துப் போக்கு போறவன் மாதிரி மாறுனத கவனிக்க முடிஞ்சுது.
சாக்ஷிதான் முதலில் கொலை செய்யப்பட வேண்டிய நபர். “அவ மேக்கப்ப கலைச்சுட்டா அதுதான் கொலை”ன்னு பிக்பாஸ் சொன்னதும் “என்னது இதுதான் கொலையா? நான் வேணும்னா சாக்ஷிக்கு சாப்பாட்டுல விஷம் வச்சு, கத்தியால குத்தி, காருல இடிச்சு, கயித்துல தொங்க விட்டு கொடூரமா கொன்னுடவா?”ன்னு கேக்குறாப்ல மூஞ்சி இருந்துச்சு. அரை மனசோட இந்த டாஸ்க்க முடிக்க கெளம்புனாங்க. சம்பிரதாயத்துக்கு முகின் கிட்ட டாஸ்க்க விளக்கிட்டு நேரா எல்லா பொண்ணுங்க கிட்டயும் போயி “வாங்க எல்லாரும் பேய் வேஷம் போடலாம்”னு சொல்லி சாக்ஷி மூஞ்சில தண்ணியடிச்சு பழைய மேக்கப்ப சாக்ஷியவே தொடைக்க வச்சுட்டாங்க.
இத பிக்பாஸ்கிட்ட “வாத்யாரே ஃபர்ஸ்டு மர்டர்”னு கவுண்ட் சொன்னதும். பிக்பாஸ், கொலை செய்யப்பட்டது சாஷின்னு அறிவிச்சாரு. “பாடிய அதுக்கேத்த ஆவி ட்ரெஸ்ஸ போட்டு மயானத்துல கொண்டு போயி விட்டுட்டு வாங்க”ன்னு சொன்னாரு. பின்ன சாக்ஷிய ஆவியோட குணநலன்ல இருக்க சொன்னாரு.
வனி ரொம்ப தெளிவா எல்லாரோட சந்தேகப் பார்வையையும் அபி மேல திருப்புனாங்க, கேட்டதுக்கு “அவதான் மொத கன்ஃபெஷன் ரூமுக்கு போனா ,வந்தவகிட்ட என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறா”ன்னு திருப்பி விட்டாங்க.
அடுத்து மோகன கொலை பண்ணனும். மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வச்சுட்டா அதுதான் கொலை. (மோகன், மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடுனா நம்மதான் கொலையாகனும்) “வாங்க கேம் விளையாடலாம்”னு சொல்லி வனி எல்லாரையும் வெளிய கூப்ட்டு வந்து உக்கார வைக்க, முகின் மோகன மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஸ்டெப் போட வைக்க, அவரு கொலையானதா பிக்பாஸ் அறிவிச்சார். பின்ன அவருக்கும் ஆவி ட்ரெஸ்ஸ போட்டு மயானத்துல இறக்கி விட்டாங்க. சாண்டி, இதுக்கு அழுகுறேன்னு சொல்லி “அவர விட்டிருந்தா 4 நாளுல அவரே வெளிய போயிருப்பாரே”ன்னு டைமிங் அடிச்சது செம்ம.
பின்ன என்ன நெனச்சாரோ பிக்பாஸ் “இன்னைக்கு இந்த விளையாட்டு போதும், எல்லாரும் நார்மல் மோடுக்கு வாங்கான்னு சொல்லிட்டார்.
இப்போ கக்கூஸ்ல வனி, ரேஷ்மா, சாக்ஷி மீட்டிங் “சல்பேட்டா சாக்ஷி” வனிகிட்ட “என்னய கொலை பண்ண விஷயத்துல அபி இன்வால்வ் ஆகியிருந்தா நான் சும்மா விடமாட்டேன்”னு சொன்னதும் “ஆனா நீதான் சாகலையே”ன்னு வனி சொல்ல “ஆனா நான் செத்துட்டேன்னு பிக்பாஸ் சொல்லிட்டாரே மோட்ல சாக்ஷி சொன்னதக் கேட்டு வனிக்கே ஜெர்க் ஆச்சு.
“இது டாஸ்க்குதான ! பிக்பாஸ் சொன்னத எல்லாரும்செய்யுறாங்க” னு சொன்னதும், சாக்ஷி நரம்பு புடைக்க “டாஸ்க்காவே இருக்கட்டும் ஆனா இதுல அபி அல்லது மது சம்பந்தப்பட்டிருந்தா கடிச்சு ரத்தத்தக் குடிச்சுருவேன்”னு வாம்பையர் ரேஞ்சுக்கு பேசுனாங்க.
வனியோ “அவ சம்பந்தப் பட்டிருக்காளான்னு தெரியல ஆனா அபியும் ,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்”னு சின்னம்மா சொன்ன காரணம் மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க. (இது வனிதாவோட அடுத்த நாளைக்கான எண்டெர்டெயின்மெண்ட்க்கு சேர்த்து வைக்கிறது)
ஆனா “எப்பிடி இருந்தாலும் இதுல நம்மள இழுத்து விட்ருவானுங்க”ன்னு அபி ஒரு மாதிரி கணிச்சார். சேரனும் இதுல அபிக்கு எச்சரிக்கை குடுத்தார்.
லைட் எல்லாம் அணைஞ்சதும் “உன்னைப் போல அழகிய நான் பாத்ததில்லையடி”ன்னு லாஸ் பாடுனது கேட்டுச்சு (கண்ணாடிய பாத்து செல்லக்குட்டி பாடியிருக்கும் போல). இன்னைக்கு முடிஞ்ச்....

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)