பிக்பாஸ் 3 : நாள் 22 (15.07.19)

பிக்பாஸ் 3
நாள் 22 (15.07.19)

“ஒரசாத” பாட்டோட ஸ்டார்ட் ஆச்சு நாள். “வாரியர் வனிதா” வெளிய போன கவலை ஒரு பக்கிக்கும் இல்ல. எல்லாம் ஜாலியா ஆடிட்டு இருந்தாய்ங்க. (இத வனிதா டீவில பாத்து “திஸ் இஸ் அன்ஃபேர்”னு சொல்லிட்டிருப்பாங்க). மர்டர் மீரா தனியா “ஒரசாத”ன்னு ஆடிட்டு இருந்தது ஒரு குறியீடாக் கூட இருக்கலாம்.
சமையக்கட்டுல எல்லாரும் “காபி....காபி”ன்னு கத்திட்டிருக்க, சரவணன் சைலண்டா வைத்திய சைகையில கலாய்ச்சுட்டு இருந்தார். இத வைத்தி இந்தப்பக்கம் உக்காந்த ரேஷ்மா & சாக்ஷிகிட்ட , அப்பறம் அந்தப்பக்கம் உக்காந்த அதே சாக்ஷிகிட்டன்னு சொல்லி குமுறிக் குமுறி அழுதார். சாக்ஷியோ “நைனா உங்கள யாராச்சும் ரொம்ப சீண்டுனா சைனா பைட்டர் ஓல்ட் மாங்க்கா மாறி மாஞ்சா பைட் போடுங்க. அப்பிடியும் அடங்கலேன்னா கேப்டன் எங்கிட்ட வாங்க நான் பாத்துக்குறேன்”னு வாக்குக் குடுத்தாங்க. இதாண்டா டைமிங்னு காத்திருந்த வைத்தி கட்டிப் பிடிச்சுக்கிட்டார் ஆறுதல் தேடிக்கிட்டார். (என்னா உழைப்பு!)
பின்ன இதப்பத்தி சாண்டி, சரவணன் கிட்டப் போயி சொல்ல “ நாராயணா இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா”ன்ற மோடுல வேகமாப் போயி ஆழ்நிலை தியானத்துல இருந்த வைத்திய அசைச்சு எழுப்புனார். “யோவ், காபிய யாருக்கும் குடுக்காம குடிக்கிறியே உனக்கு அறிவிருக்கா?”ன்னு சைகையில கேட்டேன்னு சைகைக்கு விளக்கம் குடுக்க “இத கேக்காமயே இருந்திருக்கலாமோ?”ன்ற மாதிரி வைத்தி மூஞ்சி போச்சு. பின்ன சரவணன் கோவமா சாரி கேட்டுட்டுப் போயிட்டார். வெளிய இருந்த வைத்தியோ சரவணன் உள்ள போயிட்டாருன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு “நீங்க மட்டும் தடுக்கலேன்னா” ரேஞ்சுக்கு சாக்ஷி கைய அவரு பிடிச்சுகிட்டு எகிறிட்டு இருந்தார். (தட் கொக்கி குமாரு, கொரங்கு குமாரு மாதிரி பெரிய பெரிய ரவுடிங்க (வனிதா) இருந்த ஸ்டேஷன்ல இப்பிடி ஒரு சப்ப குமாரு மொமெண்ட்).
பின்ன முக்கியமான கட்டம் நாமினேஷன் டைம் ! மீராவத் தவிர ஏறக்குறைய எல்லாரும் மீராவ நாமினேட் பண்ணாங்க. பின்ன இறுதியில மீரா, சரவணன், சேரன், அபி, வைத்தி ஆகியோர் இந்த வார நாமினேஷன்ஸ். சல்பேட்டா சாக்ஷி அபிய நாமினேட் பண்ணதுல இருந்து தன் தாயம்மா வனிதாவ மறக்கலேன்னு புரியுது.
பின்ன லாஸ் & கவின் ஓரமா உக்காந்து கதைச்சு கொண்டு இருக்குறப்போ சல்பேட்டா சாக்ஷி சைலண்டா வந்து 2 பேருக்கும் சாக்லேட் குடுத்துட்டு சிரிச்சிட்டே போனது ஒரு ஹாரர் ஸ்டோரி போல இருந்துச்சு. என்னைக்கு கவின கடிச்சு வைக்கப் போகுதோ?
அடுத்து சமையக்கட்டுல மதுகிட்ட சரவணன் “நீ சமைக்கவே வேணாம் சைலண்டா என் பக்கத்துல நில்லு”ன்னு சலம்ப, மது கோச்சுகிட்டு கேப்டன் கிட்ட போனாங்க. அப்பதான் லாஸ் & கவின பத்தி சாக்ஷி ரேஷ்மாகிட்ட பேச ஆரம்பிக்க, அதுக்குள்ள மது அழுதுட்டே பஞ்சாயத்துக்கு வர “பேக்கரிய டெவலப் பண்ணதும் போதும் பன்னு வேணும் வெண்ண வேணும்னு உசுர வாங்குறாய்ங்க”ன்னு சாக்ஷி “என்னமா மது?”ன்னு கேட்டாங்க. சட்டியில வைக்கப் போனேன் சாம்பாரு; சரவணனோ என்னய வேணாம்னு வெரட்டுறாரு”ன்னு பிராது குடுத்தாங்க.
இத பாத்துட்டு மீரா வேகமா சமையக்கட்டுக்கு போயி சரவணன் கிட்ட “சித்தப்பூ உங்கள கெட்டவனா போர்ட்ரெய்ட் பண்ணப் பாக்குறாங்க”ன்னு வார்னிங் குடுத்தாங்க. இது மூலமா தன்னை இல்ல, யாரத் தப்பா போர்ட்ரெயிட் பண்ணப் பாத்தாலும் பொங்கியெழும் பாக்கெட் பாலுதான் நம்ம மீரான்னு நல்லாவே புரிஞ்சுது. பாரத் மீரா கி ஜே !
பின்ன சரவணனே ஒரு வழியா மதுவ சமாதனப்படுத்தி சாம்பார் சாதத்த பரிமாறுனார்.
இந்த ஓரம் அபி & முகின், அந்த ஓரம் லாஸ் & கவின். இது பிக்பாஸ் வீடா இல்ல காம்பவுண்ட் சுவர் கட்டுன கடற்கரையாடா?
அப்பறம் ஒரு டாஸ்க் “நான் சொல்வதெல்லாம் உண்மை !” எதிர்ப்பதமான இரண்டு கேள்விகளுக்கு அதற்கேற்ற நபர சுட்டிக் காட்டனும். வழக்கம் போல மர்டர் மீராவ எல்லாரும் நெகட்டிவ் ஷேட் கேள்விகளுக்கு அடையாளப் படுத்துனாங்க. “தனக்கு தோள் கொடுக்கும் நபர் யாரு?ன்னு கேட்டதுக்கு அபி முகின சொல்லி “ஐ லவ் யூ” வேற சொல்ல, சல்பேட்டா சாக்ஷியோட முகம் சொங்கிப்போச்சு.
மீரா எழுந்து வந்தாங்க “ 1. நீங்கள் போட்டிப் போடும் அளவுக்கு தகுதியான நபர் யார் ?, 2. தகுதியே இல்லாத நபர் யார்?” இந்த ரெண்டு கேள்விகளும் மீராவுக்கு வந்தது. “என் கூட போட்டிப் போட தகுதியிருக்கும் ஒரே நபர் தர்ஷன்”னு சொல்லி, அவனுக்கு இன்னும் தன் மனசுல பட்டா போட்ட கொட்டா இருக்குன்னு காமிச்சாங்க. தகுதியே இல்லாத ஆளுன்னு பட்டுன்னு சேரன சொல்லிட்டாங்க.
அப்பறம் எல்லாரையும் பார்த்து “என் பேர எல்லாரும் சொன்னதால உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்த சொல்லிக்க ஆசப்படுறேன், “பழி போடும் உலகம் இங்கே, பலியான உயிர்கள் எங்கே?”னு நா.முத்துக்குமார் வரிகள நசுக்கி விட்டாங்க. (ஏன் ? எதுக்கு ? இதுக்கும் இங்க நடக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கு அர்த்தம் அவங்களுக்காவது தெரியுமா? இதையெல்லாம் நீட் தேர்வுலயே கேக்கலாம்) எல்லாரும் என்னய எதிர்க்கவும், ஜெயிக்கவும் வலுவில்லாம என்னய நாமினேட் பண்ணி வெளிய தொறத்தப் பாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் என்னயப் பாத்தா பயம், மீரான்னா பயம் “அப்டின்னு சொல்லிட்டு உக்காந்துட்டாங்க. (தட் ஆம்பளையா இருந்தா எங்களுக்கு ஃபர்ஸ்ட் பேட்டிங் குடு பாப்போம் மொமெண்ட்).
அப்பறம் சித்தப்பூக்கு அவரோட பையன் போட்டோவ பிக்பாஸ் அனுப்புனார். எல்லாரும் நெகிழ்ந்தாங்க.
“சும்மா இருக்கோமே எதயாச்சும் சொறியலாமே”ன்னு எல்லாரும் சேர்ந்து லாஸ்லியாவ கவினப்பாத்து “அண்ணன்”னு கூப்பிட சொல்ல....அவங்களும் கூப்பிட்டுட்டாங்க. இதுக்கு மூட் அவுட் ஆகி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டான் கவின். அவனப் போயி “கன்ணத்தொட, சிரி....இப்ப எப்பிடி இருக்கு மொகற!”ன்னு லாஸ் சமாதானப்படுத்துனாங்க.
பின்ன வைத்தி மொரட்டுத்தனமா ஜிப்ரீஷ்ல ஓபெரா பாட....எல்லாரும் பாராட்டுனதோட லைட்டு அணைஞ்சுப்போச்சு.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)