பிக்பாஸ் 3 : நாள் 5 - (28.06.19)

பிக்பாஸ் 3
நாள் 5 - (28.06.19)


சின்ன மச்சான் பாட்ட சவுண்டா போட்டு எழுப்பிவிட்டார் பிக்பாஸ். அடுத்த இரண்டு லைனும் வழக்கம் போலதான்.
இந்த தடவ காலை டாஸ்க் பாத்திமா எல்லாருக்கும் லாஃப்டர் தெரபி சொல்லிக் குடுக்கனும். (அனுபவசாலி போல) எல்லாருக்கும் சிரிக்க சொல்லிக் குடுத்தாங்க....ஆனா “இப்பவே நல்லா சிரிச்சுக்கோங்கடா சின்னப்பய மக்கா....இன்னைக்கு இதுக்கப்பறம் சிரிப்பே இல்ல”ன்னு சிம்பாளிக்கா பிக்பாஸ் சொன்னது அப்போ புரியல இந்த பதருகளுக்கு.
டைனிங் டேபிள்ள மீரா, வைத்யாகிட்ட “சட்ட கொக்கிய போட்டு விடுங்க”ன்னு எதார்த்தமா சொல்ல... ”கையெல்லாம் பதார்த்தம் அப்றமா வரேன்”னு வைத்யா டபாய்ச்சுட்டு போயிட்டார். போனவரு போன இடம் கேப்டன் வனிதாகிட்ட “காட்டையெல்லாம் அழிக்கிறாராம் ஜக்கி....மீரா என்னய போட்டு விட சொல்லுறா கொக்கி”ன்னு கோர்த்து விட்டுட்டார். வனிதா அதிசயமா ரொம்ப நாகரீகமா மீராகிட்ட “ஏம்மா மீரா கொக்கி போட்டு விட சொன்னியா”ன்னு கேக்க. “என்ன கொக்கி போட்டு விட சொன்னியா? அதெல்லாம் அவரு எனக்கு அப்பா...நான் கேட்டதுல எதுவுமில்ல தப்பா”ன்னு கேப்டன மதிக்காம ஓடிடுச்சு.
இந்த விஷயத்த பத்தி மத்தவங்களோட வனிதா மீட்டிங் போடும்போது (அதாவது பொரணி) மீரா ஏற்கனவே ஒரு சமயம் “எனக்கு இங்க அம்மா அப்பான்னு யாரும் கிடையாது”ன்னு சொன்னதா எல்லாரும் சொன்னாங்க. அதே மீரா “வைத்யா எனக்கு அப்பா மாதிரி”ன்னு சொன்னது லுச்சாத்தனம்னு எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.
அழுகை டாஸ்க்கோட கண்டினியூட்டி “வனிதா & கவின் தங்கள் கதைய சொன்னாங்க...கவின் கதை சொல்லி முடிச்சதும் வைத்யா கட்டிப்பிடிக்க “கட்டிப்பிடிக்க வேண்டிய 5 அம்முகுட்டிகளும் என்னய இன்னேரம் அள்ளி தூக்கியிருக்க வேணாமா”ன்னு சீண்டி சில கட்டிப்பிடிகள வாங்கி கட்டிக்கிட்டார்.
அடுத்து “பாத்திரம் துலக்க (விலக்குறதுக்கு எந்த “ல” வரும்னு தெரியல அதனால துலக்கன்னு மாத்திட்டேன்) முடியாது சண்டிய வர சொல்றேன்”னு மீரா சொல்லிட்டு போக...அவங்க எந்த மாதிரியான பாத்திரம்னு (கேரக்டர்) புரிய வச்சது இதுக்கப்பறமான சம்பவங்கள். வனிதா இதப்பத்தி எல்லாரையும் வச்சு பேசும்போது மீரா ஒத்துழைப்பு குடுத்து பேசாம வனிதாவயே “வாய மூடு”ன்னு சொல்லிட்டு வெளிய போயாச்சு. வெளிய போயி அழுதிட்டிருக்கும் போது எல்லாரும், குறிப்பா சாக்ஷி & அபி அவங்கள சமாதானப் படுத்துனது நல்ல விஷயம் தட் மீன்ஸ் கல்லுக்குள் ஈரம்.
அந்த மைண்டோட உள்ள வந்து வனிதாவ எல்லாரும் நீங்க “கத்திப் பேசாதீங்க”ன்னு (பின்ன துப்பாக்கின்னு பேசவா? இது என்னோட மைண்ட் வாய்ஸ்...ஃப்ரீயா விடுங்க) சொன்னதும் வனிதா டென்ஷனாகி “பூராம் அன்னை தெரசா மாதிரி பேசாதீங்க...அவங்க அவங்களாவே பேசிப்பழகுங்க”ன்னு சரியாவே சொன்னாங்க. மதுமிதாவுக்கு, மொத நாளே பரம எதிரியா பேசி டார்கெட் பன்ணி மூஞ்சிய காமிச்ச சாக்ஷி & அபி இப்போ போயி ஆறுதல் சொல்றது சரியாப்படலேன்னு தனக்கு பட்டத பட்டுன்னு சொன்னாங்க.
இதுக்கு ஷாக்ஷி பெருசா விளக்கம் குடுத்தாலும், மதுமிதா கேட்டதுல ஒரு நியாயம் இருந்தது....ஆனாலும் அண்ணன் சேரன், மது, சாண்டி, மீராவ வச்சுட்டு மீராவுக்கு அட்வைஸ் குடுக்க முயற்சிக்க...அதுக்கு மீரா நீதிடா, நேர்மைடா, நியாயம்டான்னு சொல்ல. (இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாதுன்னுற மாதிரி எல்லாம் பாத்தாங்க). சரி உன் இஷடம்னு சொல்லி விட்டுட்டாங்க...
ரைட்டு....முதல் சீசன் ஜூலி & இரண்டாம் சீசன் ஐஸ்வர்யா இந்த கலவைதான் மீரா.....
றெக்க இல்லாத தேவதையாவே இருந்தாலும், “இந்த வீட்டுக்கும் நம்மளுக்கும் சம்பந்தமே இல்ல”ன்னு சுத்திட்டு இருக்குற லொஸ்லியா இப்டியே இருந்தா 3வது வாரம் வெளியதான் போகனும்.
அடுத்து நம்ம எம்.ஜி.ஆர்....பேருக்கேத்த செயல் வேணும்....
மொத்தத்துல.....சின்ன மச்சான் பாட்டுல ஆரம்பிச்சு....சிரிப்பு தெரப்பிய தொட்டு....கொக்கி போடப் பாத்து....பாத்திரத்த கழுவாம....பஞ்சாயத்த இழுத்து....நிலவரத்த கலவரமா மாத்தி ஆகான்னு சொன்னா......அதுதான் இந்த 5 வது நாள்!
நாளைக்கு ஆண்டவர் டே!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)