பிக்பாஸ் 3 : நாள் 37 தொடர்ச்சி & 38ம் நாள் (31.07.19)
பிக்பாஸ் 3நாள் 37 தொடர்ச்சி & 38ம் நாள் (31.07.19)
கலை நிகழ்ச்சி முடிஞ்ச களைப்புல எல்லாரும் கவுந்தடிச்சு தூங்கியிருப்பானுங்கன்னு பாத்தா சல்பேட்டா சைனா மூஞ்சியோட கக்கூஸ் பெஞ்சுல கேமராவ பாத்தபடி உக்காந்து “இதோ இதே பெஞ்ச்சுல உக்காந்துதான் கல்ப்ரிட் கவின் என் கால சொரண்டிக்கிட்டே ‘நம்ம குழந்தைக்கு மொட்டையடிச்சு இதே பெஞ்ச்சுல உக்கார வச்சுதான் காது குத்தனும்’னல்லாம் பேசிட்டு, இன்னைக்கு என்னய முதுகுல குத்திட்டு போறான். என் காதல்ல கல்லப் போட்டுட்டு லாஸ் தோள்ல கையப் போட்டுட்டு ‘உனக்குத் தெரியுமா ?கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல்னு அர்த்தமாம்! வைரமுத்து இதப்பத்தி பாட்டு கூட எழுதி இருக்காரு அத நான் உனக்கு பாடிக்காட்டுறேன்”னு கடலைய போட்டாமானிக்க இருக்கான்.
சரி இவந்தான் இப்பிடி இம்சை பிடிச்சவனா இருக்கானே? அந்த பிள்ளைகிட்டயாவது பிலாசபி பேசலாம்னு கூப்ட்டா ‘ஏணி மேல ஏறப்பா...என்னய கூப்டுறாரு எங்க சேரப்பா’ன்னு எங்கூட சேரவே மாட்டேங்குது. என்னய பாத்தா இவனுங்களுக்கு அப்பிடி தெரியுதா இல்ல இப்பிடி தெரியுதா? பேசாம வீட்டுக்கே போயிரலாம்னு இருக்கேன்! கேட் சாவி யாருக்கிட்ட இருக்கு?”ன்னு கேட்டு கேமராவ இம்சை பண்ணிட்டு இருந்துச்சு.
38ம் நாள்
“என் வீட்டுல நான் இருந்தேனே” பாட்டு பிக்பாஸ் வீட்ல இருந்தவனுங்களுக்கு அலாரமா அடிச்சது.
நைட்டு அப்பிடி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி சல்பேட்டா ஆராவாரமா ஆடிட்டு இருந்துச்சு. தனியா ஆடும்போது ஆட்டு உரலு சுத்துற மாதிரியும், கூட சேர்ந்து ஆடும்போது கடல் நண்டு கால அகட்டிகிட்டு ஆடுற மாதிரியும் சல்பேட்டா போடுற ஸ்டெப்பு ரொம்பவே தனித்துவமானது.
அந்த கலைநிகழ்ச்சி டாஸ்க் இன்னைக்கும் தொடர்ந்துச்சு. பத்மினி கெட்டப்புல இருந்த அபிக்கு “மறைந்திருந்து பார்க்கும்” பாட்டு. அதுல “நவரசமும்”னு வர லைனுக்கு அபி தவுட்டு ரசம் குடிச்ச பாவனைகள காட்டிட்டு இருந்துச்சு. சிம்ப்ளி சூப்பர்பு!
இந்த மதுவுக்கு சரோஜா தேவி கெட்டப்பாமே ! அதுக்கு ஏன் பொழுதுக்கும் கொல்லைக்கு போற மாதிரியே மூஞ்சிய வச்சிருக்காங்கன்னு தெரியல?
முகினுக்கு போக்கிரி பாட்டு, தர்ஷனுக்கு இளமை இதோ இதோ பாட்டு ! இதோட இந்த டாஸ்க் முடிஞ்சுதான்னு தெரியல....நம்ம நிம்மதியா இருக்கோம்னு தெரிஞ்சா மறுபடி ஆரம்பிப்பானுங்க போலருக்கு.
அடுத்து இன்னொரு டாஸ்க்! பேரு மொட்டக் கடுதாசி !
பேரப் போடாம கேக்க வேண்டிய ஆளுகிட்ட, கேக்க வேண்டிய கேள்விய சீட்டுல எழுதிப்போடலாமாம். அதுக்கு அவனுங்க பொதுவுல பதில் சொல்லுவானுங்களாம். (இத டாஸ்க்கா இல்லாம சும்மாவே தெனமும் பன்ணிட்டுதான இருக்கானுங்க!) ஒவ்வொரு ஆளா போயி எழுதி போட்டானுங்க. பிரதான கேள்வி சாக்ஷி – கவின் காவியக் காதல் பத்திதான்.
உண்ட மயக்கத்துல யாருகிட்ட ஒரண்டை இழுக்குறதுன்னு தெரியாம ரேஷ்மா அபிகிட்ட “என்னா சொல்றான் முகினு?” 2 பேரும் சந்தோஷமாத்தான இருக்கீங்க!”ன்னு ஆரம்பிக்க, “ஆத்தீ....வாண்டடா வலைய விரிக்குறாளே! இது கNணு வச்ச எதுவும் உருப்பட்டதே இல்லயே”ன்னு மைண்ட்ல நெனச்சுக்கிட்டே “அவனே பாவம் சின்ன வயசுல இருந்து நல்லது எதயும் பாத்ததே இல்லையாம். நாந்தான் நல்லா இருக்கேனே அதான் பாத்துக்கிட்டு இருக்கானாம். அவங்க வீட்ல அன்பே இல்லையாம்! என் கிட்ட தான் எக்ஸ்ட்ரா ரெண்டு மூட்டை அன்பிருக்கே அதான் அவனுக்கு குடுக்கலாம்னு கூடவே வச்சிட்டு இருக்கேன். சிங்கிளா இருந்தா எங்கூட மிங்கிளாகி இருப்பானாம். ஆனா வெளிய ஒரு கேர்ளாம் அதான் அவன் ஆளாம். மத்தபடி நீங்க வயித்தெரிச்சல் படுற அளவுக்கு ஒண்ணுமில்ல”ன்னு சொல்லிட்டு சோகமா மூஞ்சிய வச்சுக்கிட்டாங்க அபி. “அதான பாத்தேன்”னு ரேஷ்மாவும் ஒரு ஏப்பத்த விட்டாங்க.
அடுத்து பதில் சொல்ற படலம்
மது கிட்ட கேள்வி : ஆண்டவன் எல்லாத்தையும் லைவ்ல பாப்பான்.....தப்பு பண்றவங்கள லைன்ல நிப்பாட்டி கேப்பான்னு சொல்ற நீங்க மட்டும் ஏன் அடுத்தவங்கள டார்கெட் பன்றீங்க?
மது : டார்கெட் வச்சு அடிக்க நான் என்ன டான் ப்ராட்மேனா? நானே உங்கக்கிட்ட இருந்து தப்பிக்க 10 நிமிஷத்துக்கு ஒரு தடவ மௌன விரதத்துல இருக்கேன் இதுல இது வேறயா? அதெல்லாம் இல்லடா டேய்.
கேள்வி : படம் எடுத்து சம்பாதிச்சத விட இங்க வந்து என்ன பெருசா புகழ சம்பாதிக்கப் போறீங்க? எதுக்கு வந்தீங்க? என்ன காரணம்?
சேரன் : மக்கள் என்னய மறந்து கொஞ்ச வருஷம் சந்தோஷமா இருக்கானுங்க அதான் ஞாபகப்படுத்த வந்தேன். தவிர விஜய் சேதுபதிதான் என்னய போயிட்டு வாங்கன்னார். இதுல வெகுமானம் இருந்தாலும் கொஞ்சம் பகுமானத்துக்காகவும் வந்துட்டேன்.
கேள்வி : ஒதுங்கியே இருக்கீங்க? கூட இருக்குற ஆண் எருமைகளுக்கு அறிவுறை சொல்றதில்ல? யாரையும் குடும்பமா நெனைக்கிற மாதிரி இல்லயே?
பதில் : அன்னைக்கு மீரா செங்குட்டுவன் மேல அப்யூஸ் கேஸ் போட்டப்ப எல்லாரும் எருமை மாதிரி நின்னீங்க நாந்தான் அவருக்கு ஆதரவா மொத குரல் குடுத்தேன். ஸோ நான் ஒதுங்கி இல்ல புரியுதா?
பட்டர்பிளை பார்க் மாதிரி ஜோடி ஜோடியா 10 மணிக்கு மேல ஆளுக்கு ஒரு பிள்ளைய கூட்டிகிட்டு லான் பக்கமா இங்கிப் பிங்க்கி பாங்க்கி வெளையாடப் போறவனுங்கள கையப் புடிச்சு நிப்பாட்டுனா எவ்வளவு அசிங்கமா கேப்பானுங்கன்னு எனக்குதான் தெரியும்! இதுக்குள்ளயெல்லாம் தலைய குடுத்தா உங்கள மாதிரி ஒண்ணுமில்லாமதான் போக முடியும்.
அடுத்து உங்களயெல்லாம் குடும்பமா நெனைக்கிறதாலதான் சட்டி சட்டியா சமச்சுக் கொட்டுறேன். நீங்க திங்கிற தீனிக்கு செஃப் தாமுவே தலையில துண்டப் போட்டுட்டுதான் போகனும் ஆனா நான் சிரிச்சுட்டே சமச்சுக் கொட்டுறேன். அதுவும் போன வாரம் வரைக்கும் மீராவுக்கெல்லாம் ஓவர் டைம்ல ஊத்தப்பம் ஊத்திக்குடுத்தேன். அஞ்சு தோசைக்கு மேல கேட்டா உங்க அம்மாவே தலையில அம்மிக்கல்ல தூக்கி போடுவாங்க. ஆனா இங்க பொரணி பேசிக்கிட்டே ஆளுக்கு 10 தோசய கட்டு கட்டுன்னு கட்டுறீங்க. என்னய பாத்து குடும்பமா பழகலன்றீங்க. வடை இருக்கான்னு கேட்டு சமையக்கட்டு பக்கம் வாங்கடி வெசத்த வைக்கிறேன். (சித்தப்பூவெல்லாம் வெளிய போகவே வாய்ப்பில்ல)
கேள்வி : அபிய நண்பின்னு சொல்லிட்டதால மன உளைச்சல்ல இருக்கா! அவள ஏமாத்திட்டியா? கைபொம்மை செய்யுறதும், அபிய கையப் பிடிச்சு இழுக்குறதையும் தவிர உனக்கு வேற எதுவுமே தெரியாதா?
முகின் : லவ்வரா இருந்து லோல் படுறத விட பெஸ்டியா இருந்து பெர்பார்மன்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பன்ணிட்டோம். கைக்குழந்தையா இருந்ததுல இருந்து கஷ்டத்த கக்கத்துல வச்சுக்கிட்டே சுத்திட்டு இருக்க பழகிட்டேன் என் பையனாவது நல்ல வாழ்க்கை வாழட்டும்னு ஆசப்படுறேன். பாசம் வைக்குறவங்ககிட்ட மட்டையா மடங்கிருவேன். அபிகிட்ட அண்டா அண்டாவா அன்பு இருக்கு. அன்பு கொடவுன் அவ. அதுனாலதான் அவ கூட சுத்துறேன். அன்பிற்கு உண்டோ அடைக்குந் தாழ்; அபிதான் என்னோட பார்பி டால்.
கேள்வி : வந்தப்ப இருந்த மாதிரி இப்ப இல்ல திமிருத்தனம் கூடிப்போச்சு. ஒரு வாரம் நல்லா பேசுற மறுநாள் மூஞ்சிய தூக்குற எது நீ? யாருகிட்டயும் பேச மாட்டேங்குற ஏன்?
லாஸ் : எப்பப்பாத்தாலும் இங்க ரெண்டு பேரு சேர்ந்துகிட்டு மூணாவதா ஒருத்தன பத்திதானடா பேசுறீங்க. இதுல நான் கலந்துக்க அவஷ்யமில்ல!
அவன் இன்னிக்கு இவ கூட இல்ல, சரவணனுக்கு சாம்பார் வைக்கத் தெரியல, சாக்ஷிக்கு சடை போட தெரியல, மதுவுக்கு மண்டகணம்னு எப்பப் பாத்தாலும் பொரணி..... இதுல நான் கலந்துக்கலேன்னா மூட் அவுட் ஆகுறீங்க ஏமிரா இதி? இப்பிடியெல்லாம் பேச எனக்கு அவஷ்யமில்ல!
நான் ஆடுறதும் பாடுறதும் எனக்காக! நான் என்ன காபரே டான்ஸரா ? உங்கள மகிழ்ச்சிப்படுத்த ஆடுறதுக்கு? ஓடுங்கடா! அப்டியெல்லாம் ஆடிப் பாட எனக்கு அவஷ்யமில்ல!
ஏதோ எங்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்றதால சேரன அப்பா அப்பான்னு சொல்லிட்டு இருக்கேன். என்னைக்காவது எனக்கு அட்வைஸ் பண்ணா அவன் டப்பா டான்ஸ் ஆடிடும். அப்பிடிப்பட்ட அப்பாவே எனக்கு அவஷ்யமில்ல!
படுத்து தூங்க பெட்டு எனக்கு அவஷ்யமில்ல! பல்லு வெளக்க பிரஷ்ஷு எனக்கு அவஷ்யமில்ல! இட்டிலிக்கு சட்னி எனக்கு அவஷ்யமில்ல! அட இந்த பிக்பாஸ் வீடே எனக்கு அவஷ்யமில்லடா! (போயி உக்காந்துக்கிச்சு)
மூஞ்சில ஒருத்தனுக்கும் ஈயாடல. “யாருடா இதுகிட்ட கேள்வி கேட்டது? கொஸ்டீனுக்கு ஆன்சர் சொல்றேன்னு கொலநாசம் பண்ணிட்டு போறா! அவளையெல்லாம் அப்பிடியே விட்ருங்கடா நம்ம மானம், மரியாதையாவது தப்பிக்கும். நமக்கு இது அவஷ்யமில்லன்”னு மைண்ட்ல நெனச்சுக்கிட்டானுங்க!
கேள்வி : கவினுக்கு! என்ன கேட்டிருப்பானுங்கன்னு உங்களுக்கே தெரியும்.
கவின் : இதுவரைக்கும் குடுத்த தன்னிலை விளக்கத்துக்கே 20 கிலோ கொறஞ்சுட்டேன். இப்ப மறுபடியும் மொதல்ல இருந்தா? என்னத்த சொல்றது எல்லாம் என் விதி! கமல் சார் சொன்னப்பறம் சரி இனிமே 2 வேணாம் ஒன்னு போதும்னு நான் பாட்டுக்கு லாஸ் பக்கமா ஒதுங்கிட்டேன். அதப் பாத்துட்டு ‘யப்பா கமல் சார் சொன்னத ஒண்ணும் மனசுல வச்சுக்காத. நீ மனசுல வச்சுக்க வேண்டியது என்னையத்தான்’னு வந்தா! நானும் சர்தான் சல்பேட்டான்னு இருந்தேன். ஆனா மறுபடி ஜெயில் மேட்டர்ல ஜெர்க் ஆகிடுச்சு சல்பேட்டா. அத வெளக்கப் போனப்பதான் பொடனியில சாத்தப் போயிட்டேன். ஆனாலும் செருப்பால அடிச்சுக்கோன்னு கைல குடுத்து சாரி கேட்டேன். அதுக்கும் அவ கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உன் மேல இல்ல வெறுப்பு இந்தா உன் செருப்புன்னு குடுத்துட்டுப் போயிட்டா. அப்பறம் மீரா கூட டேரா போட்டு என்னய கொல்ல கூட்டு சதியான்னு கேட்டா. ஆத்தி இதுக்கு மேல மாரடிக்க நம்மளால முடியாதுன்னு ஆமா நான் ஆஃப்கான் தீவிரவாதிதான் எங்கூட சேராத இந்த முடிவுல இருந்த மாறாதன்னு வந்துட்டேன். நல்லவ மாதிரி பேசிட்டு நான் சாரி கேட்டு அவ மன்னிச்ச விஷயத்தயே காரணமா சொல்லி நாமினேஷன்ல கொண்டு வந்துட்டா. இதெல்லாம் நல்லாவா இருக்கு! இனிமே உன் சங்காத்தமே வேணாம் ஆளவிடு (வருத்தமா போயிட்டான்)
கேள்வி : சாக்ஷி.....
சாக்ஷி : பேப்பர வையி.....நனே சொல்றேன். கவின் சொன்ன எல்லாம் சரிதான். வந்தப்ப எனக்கு வணக்கம் சொல்லி வாரி அணைச்சது கவின் தான். ஒரு இஷ்க்குல எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு. என்னைக்கு லாஸ பாத்தானோ பொறைய பாத்த டாகி மாதிரி பின்னாடியே போயிட்டான். போகப் போக லாஸ எண்டெர்டெயின் பண்ண என்னய எதுலயாவது போட்டுக்குடுத்து படுத்த ஆரம்பிச்சுட்டான். சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டேன். அப்பறம் சரிப்பா இனிமே உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னும் சொல்லிட்டேன். சோகமா இருந்தா சொரண்டுறதுக்கு வருவானேன்னு பாத்தா படுபாவிப்பய என் கண்ணு முன்னாடியே அவ கையப்புடிச்சு சுத்திட்டு இருக்கான். ஒரு கோல்டு மெடலிஸ்ட இப்பிடி கொரங்காட்டுறான் கேக்க யாருமில்ல. (மூக்க சிந்திட்டே போயாச்சு)
சட்டுன்னு லாஸ் முன்னாடி வந்து “கவின் கையப் புடிக்கிறேன், கண்ணத்த கடிக்கிறேன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமையில்ல”ன்னு சொல்லும்போதே சாக்ஷி இடையில “நான் உன்னய சொல்லவே இல்ல நீ பேசாத”ன்னு சொல்ல அப்பிடி இப்பிடின்னு சக்காளத்தி சண்டை ஸ்டார்ட் ஆக லாஸ் கோச்சுகிட்டு உள்ள சலோ.
சாக்ஷி : ஏண்டா கவினு உனக்கு இப்ப சந்தோஷமா ? அவ என்னய கொஞ்சமாச்சும் மதிக்கிறாளான்னு பாரு. நான் உங்கிட்ட நம்பிப் பேசுன எல்லாத்தையும் பொதுவுல சொல்லி பொங்கல் வச்சுட்டியே நியாயமா இது?
கவின் : யாரு ? நானு ? நம்ம பேசுனது நமக்குள்ளயே இருக்கட்டும்னு சொல்லிட்டு உள்ள போறதுக்குள்ள நம்ம பேசுனத எல்லாரும் கமா மாறாம எனக்கே மிமிக்ரி பண்ணி காட்டுற அளவுக்கு எல்லார்கிட்டயும் டீட்டெயிலா சொல்லிட்டு என்னய குத்தம் சொல்ற நீ. ஒழுங்கா ஓடிரு நாக்காலிய கொண்டி அடிச்சுப்புடுவேன்.
சாக்ஷி : அப்போ நான் உனக்கு வேணாமா?
கவின் : என்னடி கேட்ட.....? விடுறா இன்னைக்கு இவள குத்துகொல பண்ணிப்புடுறேன்.....
இந்தக் கரச்சலோட முடிஞ்சிருக்கு!
Comments
Post a Comment