பிக்பாஸ் 3 : நாள் 12 - (05.07.19)

பிக்பாஸ் 3
நாள் 12 - (05.07.19)


குலேபா பாட்டு எழுப்பி விட எல்லாரும் ஆடியபாதமானாங்க. வனி கேமரா மூலமா தன்ன பெத்தவங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும், தான் பெத்தவங்களுக்கு மிஸ் யூவும் சொல்லிக்கிட்டாங்க.
கவினும் சாக்ஷியும் தனியா பேசிக்கிட்டாங்க....”நான் உனக்கு நூல் விட்டா நீ அந்த நூல லாஸ்லியாவுக்கு விடுற”ன்னு கேக்க. “நீ கூடதான் நான் உனக்கு நூல் விட்டா நீ அத எடுத்து முகினுக்கு விடுற”ன்னு கவின் கேக்க “ஆக மொத்தம் இங்க நூல்கண்டு யாவாரந்தான் ஓடிட்டு இருக்கு”ன்னு பிக் பாஸ் மனசுக்குள்ள நெனச்சிருப்பாரு.
தின நடவடிக்கை சரவணன் எல்லாருக்கும் கோழி பிடிக்க கத்துக் குடுக்கனும். தான் ஒரு டெமோ காமிச்சாரு. அப்பறம் அபி கோழிய பிடிச்சாங்க.
அப்பறம் கிச்சன்ல சமைச்சுகிட்டு இருந்த ரேஷ்மாகிட்ட மது, “இந்த ஓட்ஸ் சாப்டுறதெல்லாம் ?! நமக்கு பழக்கமில்ல, பிடிக்கல சோ ஏதாச்சும் ஆல்டர்னேட் உணவும் வச்சுக்கோங்க, முந்தைய குக்கிங் டீம் பழைய சாதமாவது வச்சிருப்பாங்க அப்பிடி கூட செய்யுங்க”ன்னு நியாயமா வேண்டுகோள் வைக்க, ரேஷ்மாவும் “ஓ உங்களுக்கு பிடிக்கலையா சாரி”ன்னு சொன்னாங்க. ஆனா பக்கத்துல இருந்த அபியோ “ஓட்ஸ் சூப்பர், எனக்கு ரொம்ப பிடிக்கும், ஓட்ஸ் சப்புடுறது ?! ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி”ன்னு வம்பிழுத்தாங்க.
மது இந்தக் கோரிக்கைய கேப்டன் வைத்யாகிட்ட சொன்னாங்க. அவரும் தான் பாத்துகுறதா சொல்லி (யாரு ? நீ ? பாத்துக்குவன்னு நெனச்சிருப்பாங்க)....ரேஷ்மா கிட்ட சொன்னதும் ரேஷ்மா சட்டுன்னு கோவப்பட்டு “எல்லாருக்கும் தனித் தனியா சமைக்க முடியாது, செஞ்சதுக்கு பாராட்டு சொல்ல ஆளில்ல...குறை சொல்ல மட்டும் வந்துடுறாங்க ரேஸ்கல்ஸ்”னு மது காதுபடவே சொன்னாங்க.
பின்ன வெளிய போயி சேரன் கிட்ட “பழைய சாதம் கேட்டதுக்கு பச்சை பச்சையா பேசுறாங்க.... ஓட்ஸ் சாப்புடுறதே எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன் ஆனா நீ செய்யுறது நல்லா இல்லன்னு நான் சொல்லல...எல்லாத்தயும் மேல உள்ளவன் பாத்துக்குவா”ன்னு கையால சைகை காமிச்சு அமைதியானாங்க. சாப்பாடு ஒரு பொது விஷயம் மது சொன்ன மாதிரி அட்லீஸ்ட் பழையா சாதத்த கூட எடுத்து வைக்கலாம்....ஏன்னா ஓட்ஸெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா!
சாப்பாட்டு ராமன்னு ஒரு டாஸ்க், பாத்திமா, முகின், ரேஷ்மா டீம் பாயிண்டுக்கேற்ப குடுத்த உணவ டைமுக்குள்ள சாப்பிடனும். இதோட இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிஞ்சது. 1870 பாயிண்ட் மொத்தமா ஜெயிச்சிருந்தாங்க.
இப்போ சாண்டிய கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிட்டு பிக்பாஸ் 7 நாமினேட்டர்கள்ல ஒருத்தர ஹவுஸ்மேட்ஸ் ஒரு மனதா தேர்ந்தெடுத்து வெளிய அனுப்பலாம். ஆனா இது பிராங்க் டாஸ்க்...மீராவ கார்னர் பண்ணுங்கன்னு சொல்லியனுப்புனார். (இதல்லவோ லட்சியம்)
வெளிய வந்து டாஸ்க் பேப்பர சாண்டி படிக்கும் போதே சில பேரு இது உண்மையில்லன்னு சொன்னாங்க. ஆனா பல பேரு மூஞ்சி செத்துச்சு. சாண்டி அப்பறம் எல்லாரையும் தனியா கூப்பிட்டு இது பிராங்க்....மீராவ டார்கெட் பண்ணனும்னு சொல்ல, அபி & டீமுக்கு ஏமாற்றம்.
பின்ன ஒவ்வொருத்தரா முன்னாடி வந்து மீராவ நாமினேட் பண்ண ஊறுகாயா மதுவையும் நாமினேட் பண்ணாங்க. அபி & கோ பிராங்க்கா இல்லாம உண்மையாவே மதுவையும், மீராவுக்கும் காரணம் சொன்னாங்க. இதுல பாத்திமா கொஞ்சம் ஓவராவே போயி “இவ்வளவு பேரு நாமினேட் பன்ணியும் சிரிக்கிற மீரா ஒரு தேவதை, பெண் தெய்வம்னு (கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா?)” சொல்லி கண்ணீர் கடல் பெருக்குனாங்க. மதுவோ கவின நாமினேட் பன்ணாங்க...இன்னுமும் அவங்க இயல்பு நிலைக்கு வரலன்றது நல்லாவே தெரிஞ்சது. அசிங்கமா அடிச்சுக்குற அபி & டீம் கூட அப்பப்ப மீராகிட்ட “சாரி ,ஹாய், பாய்” சொல்லிக்கிறாங்க...ஆனா மது.....ஒண்ணும் சொல்றதுக்கில்ல.
அப்பறம் இது பிரங்க்குன்னு தெரிஞ்சு மீரா சந்தோஷப்பட...அபி & கோவுக்கு பாத்திமா மீராவ இப்பிடி புகழ்ந்தது எரிச்சல். இத வனிதா நேரடியாவே பாத்திமாகிட்ட “என்னங்க தெய்வம் அப்பிடி இப்பிடின்னு ஓவரா போறீங்க அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க”ன்னு சொன்னதும், பாத்திமா “வனி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்....உன் கருத்த நீ வச்சுக்கோ என் கருத்த சொல்லவும் எனக்கு உரிமையுண்டு”ன்னு இதுவரை யாரும் குடுக்காத பதிலடிய வனிதாவுக்கு குடுத்து நானும் பழைய ரவுடிதான்னு நிரூபிச்சாங்க.
ரேஷ்மா மறுபடியும் மதுவ கழுவி ஊத்த, மீராகிட்ட வனிதா & ரேஷ்மா நட்புக்கரம் நீட்டுனாங்க. மீராவும் ரொம்ப எளிதா இவங்க கிட்ட ஒட்டிக்கிட்டாங்க. அப்பறம் அபி கிட்ட மீரா “நமக்குள்ள என்ன பிரச்சனை? நாம் முதன் முதலில் சந்தித்தது எப்பொழுது என நினைவிருக்கிறதா கண்மணி?” மோட்ல கேக்க. அபி சொல்ல வரும்போது வழக்கம் போல மீரா குறுக்கிட்டாங்க. மீராவுக்கு தான்தான் இவங்களோட மெண்டார், இவங்கள விட பெரியாளுன்னு காமிச்சுக்க விருப்பம் ஆனா அபியோ அப்பிடியெல்லாம் இல்லன்னு மறுக்குறாங்க.
அபி ஒரு கட்டத்துல “இப்போ என்ன உன்னாலதான் நான் மாடல் ஆனேன்னு சொல்லனுமா? உனக்காக வேணும்னா சொல்றேன்”னு சொல்ல. வனிதா, “அபி, அவ என்னைக்குமே அப்பிடி சொன்னதில்ல அவ நல்லவதான், அவளும் பெண்தானே, அவளும் நம்ம ஹவுஸ்மேட்டு”ன்னு சம்பந்தமில்லாம மீரா மேல லைட்ட திருப்பி அபிய கடுப்பேத்தினாங்க. மீராகிட்ட உன்ன சுத்தி உள்ளவங்கள புரிஞ்சுக்கோன்னு அட்வைஸ் வேற. வனியோட டார்கெட் மதுவ தனிமைப்படுத்தனும். (ஏய் டகால்டி...ஸ்மெல் பண்றா டாக்-அ ஃபேஸ் பாத்து கண்டுபிடிப்போம்)
பின்ன ஸ்மோக்கிங்க் ரூம்ல அபி “அடுத்த வாரம் நான் வெளிய போயிடுவேன்”னு சொல்ல...”.யூ ஃபூல் இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குற என்னயப்பத்தி கவலப்படாம அடுத்த வாரத்த பத்தி கவலைப்படுறே யூ செல்ஃபிஷ்”ன்னு சாக்ஷி அபி மேல பிராண்ட....வனி வேற சாக்ஷிகிட்ட வந்து “அவ கொஞ்ச்சம் பைத்தியம் அவள நம்மதான் சங்கிலி போட்டு கட்டி நல்லா பாத்துக்கனும்ன்ற ரேஞ்சுக்கு சொல்ல. (“ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்.....வனிதாக்கு வாய் ரொம்ப நீளம்”னு) நம்மளால பாடாம இருக்க முடியல.
ஆனா அபி கொஞ்ச நேரத்துல எல்லார்கிட்டயும் வந்து “நான் சுயநலமா யோசிச்சதுக்கு சாரி”ன்னு சொல்லிக்கிட்டாங்க.
அப்பறம் வழக்கம் போல விஜய் டீவி தன் புத்திய காட்டிய நேரம்....சாண்டி பொறந்தநாள கொண்டாடுறேன்ற பேருல இழவு வீட்ட விட கேவலமா மாத்தி வச்சான்.
ஆண்டவர் இஸ் கமிங்....

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)