பிக்பாஸ் 3 : நாள் 15 - (08.07.19)

பிக்பாஸ் 3
நாள் 15 - (08.07.19)


எச்சரிக்கை : இந்நிகழ்ச்சியில் வரும் வனிதாவால் உங்களுக்கு ரத்தக் கொதிப்பு, அளவில்லா கோபம், டிவி உடைப்பு சம்பவம், குறைந்தபட்சம் நீர் கடுப்பு போன்றவை ஏற்படலாம். ஜாக்கிரதை.
“வேணாம் மச்சான் வேணாம்” பாட்டோட ஆரம்பிச்சது நாள். சாக்ஷி அபிகிட்ட மதுவுக்கு ஓட்டு போட்டதால, தான் பட்ட மனக்கிலேசத்தைக் கண்ணீரால விளக்க...”இத நானே தீர்த்து வைக்கிறேன் மதுகிட்ட போறேன், என்னடி! என்னய உன் வலையில விழ வைக்கப் பாக்குறியான்னு கேட்டு நம்ம நட்புக் கொடிய உயரப் பறக்க விடுறேன்”னு சூளுரைச்சாங்க.
அப்பறம் தலைவர் வேட்பாளர்களுக்கான போட்டி “கனெக்டர்”னு சொல்லப்படுற ஒரே கயிற 3 பேரும் கட்டிக்கிட்டுத் திரியனும். யாரு மொத கழட்டிக்கிறாங்களோ அவங்க தோத்தாங்க.
3 பேரும் கக்கூஸ்ல இருக்குறப்போ வெளிய மீரா லாஸ்லியாவ கூப்பிட்டு எல்லார்கிட்டயும் போடுற “நீய் என்னிய ஏமாவ்த்திட்டே....நான் உண்ணவ் பிரண்டாவ் நெனச்சய்துக்குவ் என்னய செஞ்ச்சுட்ட”ன்ற பிட்ட போட, செல்லக்குட்டி லாஸ் “இந்தா, கணக்கு சொல்லித் தருவானாம் கணக்கு வாத்தி நீ பேசுறது பூராமே மாத்தி மாத்தி”ன்னு சொல்லிட்டு “லா..லல்ல...லா லா”ன்னு ஆடிக்கிட்டே போயிடுச்சு. (ஹவ் ஸ்வீட்)
இந்த சமயம் வெளிய இருந்த அந்த 3 பேருகிட்டயும் மது வந்து “ராத்திரியான ஷெரின், ரேஷ்மா, வனி இந்த 3 பிசாசுகளும் காது கிட்ட வந்து கத்துதுங்க. லக லகன்னு சிரிச்சுட்டே சுத்துதுங்க. யாரு தலைவரானாலும் அத மொதல்ல நிப்பாட்டுங்கடா சாமிகளா”ன்னு கோரிக்கை வைக்க, நம்ம சனியன் சகடை வனிதா அத பாக்க, “இந்தா போறேன் சொசைட்டிக்கு”ன்னு வீம்புக்கு வந்து இப்படியே இருந்தா எப்ப ஜெயிக்க? என்னமாவது பண்ணுங்க”ன்னு சொன்னதும் சாண்டி அங்குட்டு இருந்த சேர இங்குட்டு இழுத்துப் போட்டு உக்காந்ததும் வனிதா வாயில மொளகா வச்ச எரிச்சல்.
சாண்டி மொதல கழண்டுக்க, தர்ஷன் வேணும்னே விட்டுக் கொடுத்தார். “ஏன்?”னு எல்லாரும் கேக்க “அபிக்கு எதிரா எல்லாரும் திரும்பிட்டதால அவ தலைவரா இருந்தா நல்லா இருக்கும்”னு தான் விரும்புறதா சொன்னார். சாக்ஷி “அரே யார், அப்பிடி எல்லாரும்னு சொல்லாதே”ன்னு சொன்னத தர்ஷன் தன் இடது கையால தள்ளி விட்டார்.
டீம் பிரிச்சாங்க குக்கிங் டீம் வ(ச)னி. கக்கூஸ் கிளீனிங் சேரன், வெஸல் வாஷிங் சாண்டி, கிளீனிங் சரவணன். சேரனும், சரவணனும் அபிக்கு இன்னும் சரியா புரியலன்னு பேசிக்கிட்டாங்க.
இது முடிஞ்சதும் கக்கூஸ்ல சாக்ஷி “அய்யோ என் தல சுத்துதுன்”னு சொல்லி மீராவ கட்டிபிடிச்சத வெளிய இருந்து அபி பாத்துட்டு கோவமா போனாங்க.
சாக்ஷி கவின் கிட்ட “நீ மக்கள் ஆதரவ பாத்துட்டு லாஸ் பக்கம் திரும்பிட்ட...என்னய மறக்க விரும்பிட்ட”ன்னு சொன்னதும் கவின், “ரோஸ் மேரி! நீ என் ஜூஸ் மாரி”ன்னு சொல்லிப் பாத்தான். அந்த லூசு அத நம்புச்சோ இல்லையோ தெரியல.
பின்ன மது அபிகிட்ட பேசிட்டு இருந்தாங்க....அபி ரொம்ப தெளிவா பேச மதுவோ “பொதுவாவே உங்க கேங் போடுற ட்ரெஸ்ல எனக்கு உவப்பில்ல நான் மீராவ கூட குனிஞ்சு கூட்டாத, காலத் தூக்கிக் காட்டாதன்னு சொல்லிப் பாத்துட்டேன். ஆனா கேக்கல, உடைதான் கற்பழிப்புக்குக் காரணம்”ன்ற மாதிரி சொன்னதும், அபி, “அப்பிடி பாத்தா சின்னக் குழந்தை கற்பழிப்பு கூடதான் நடக்குது அதுக்கு ட்ரெஸ் காரணமில்ல”ன்னு சொல்ல, “எனக்கு உன் மேல பாட்டில் குழந்தை பிரச்சனை மட்டுந்தான்”னு மது சொன்னாங்க. மறுபடி மறுபடி மது கலாச்சார கம்பிய பிடிச்சு தொங்குறது சரியில்ல.
நாமினேஷன் : எதிர்பார்த்தபடி வனி, மீரா, மது, சரவணன், மோகன். கவினும் மீராவ நாமினேட் பண்ணது அவன் முழிச்சு 2 நாளச்சுன்றத காட்டுச்சு.
அபி, பொதுவா வனி & கோ இருக்குறப்போ “நைட்டு லைட் ஆப் பண்ணப்பறம் பேசாதீங்க”ன்னு சொல்ல, “அத சொல்ல பிக்பாஸ் தலைவருக்கு அதிகாரமில்ல”ன்னு வனி ஆரம்பிக்க. அப்பறம் மது பேசுனத பத்தி அபி சொன்னதும் வனி காச்சு மூச்சுன்னு கத்த ஒரு கட்டத்துல அபி “இப்பிடி மீன் மார்க்கெட் ,மாதிரி கத்தாதீங்க”ன்னு சொன்னதும் 10 டெசிபல்ல வனி “ஏய்...அப்ப உனக்காக கத்துனப்போ தெரியலயா இது மீன்மார்கெட்டுன்னு“ அப்பிடி இப்பிடின்னு 100 மடங்கு கூச்சல் போட (சார் வாட் இஸ் த ப்ரொசீஜர் டூ நாடு கடத்திங் வனிதா?)
அபி “அம்மா தாயே ஆள விடு”ன்னு போயிட்டாங்க. பின்ன வனிதா அதுவாவே சாண்டிகிட்ட “நான் செஞ்ச்சது தப்பா?”ன்னு கேக்க “அபியையும் கொஞ்சம் பேச விடுங்க”ன்னு சாண்டி சொன்னதும் ,தர்ஷன கூப்பிட அவனும் அதயே சொல்ல “நீ ரொம்ப பொங்காத உன்ன நான் கூப்புடவே இல்ல”ன்னு சொன்னதும் தர்ஷன் காண்டாகி “நீங்க கூடதான் மதுவ தூக்குல தொங்குன்னு சொன்னீங்க அதுக்கு என்ன பன்றது?”ன்னு கேக்க வனியோ “நான் உங்கிட்ட பேச விரும்பல”ன்னு விட்டுடுச்சு. (தர்ஷன் ரைஸ் ஆவுறான் ரைஸ் ஆவுறான்)
பின்ன மதுகிட்ட வனிதா போயி “என்ன பேசுனன்?”னு கேக்க மது” நான் பொதுவாதான் சொன்னேன்”னு பிளேட்ட மாத்த....அந்தப் பக்கம் ஷெரின் கிட்ட அபி “எனக்காக ஒரு விஷயத்துக்கு நின்னாங்கன்றதுக்காக அவங்க காலக் கழுவ முடியாது”ன்னு தெளிவா சொன்னாங்க.
ஷெரின், மதுகிட்ட “மறுபடியும் மொத இருந்து சொல்லு”ன்னு சொன்னதும், “ஆக்சுவலா எனக்கு ஷெரின் கிட்ட பேச விருப்பமில்ல”ன்னு மது சொல்லி வாய மூடுறதுக்குள்ள “சர்தான் போடி”ன்னு ஷெரின் கிளம்பிடுச்சு.
பின்ன சேரன் வந்தார் அபிகிட்ட “நீ சொன்னது சரி ஆனா நீ கேப்டன், வனி சொன்னதும் சரி ஆனா வனி கேப்டன் இல்ல”ன்ற மாதிரி யாருக்கும் எதுவும் புரியாம பேசி அபி மேல தப்பிருக்குன்னு தீர்ப்பு சொல்லி சொம்புல தண்ணிய குடிச்சிட்டு கிளாம்பிட்டார். (வெரி வொஸ்ட்ரா டேய்)
வனிதா ஒரு வேளை வெளிய போயிட்டா அடுத்த வனிதா ரேஷ்மாதான் (காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க)
லாஸ், அபிகிட்ட “நாம அல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம் ஆனா போறப்போ போனா போதும் நீயா போகவேணும் என்று நினைக்காதே”ன்னு ஒரு உலக பிலாஸபியஉதிர்த்தது.
இந்த எபிசோடின் ஜீரணிக்க முடியாத வார்த்தைய கக்குனது நம்ம சால்ட்டு கோட்டா சாக்ஷிதான். சேரன், மது, லாஸ், முகின், தர்ஷன் கூட உக்காந்து இருந்த அபிய பார்த்து வனி & ரேஷ்மாகிட்ட “அவ சந்தோசமா இருக்கா, நாமதான் லூசு, இனி அவ கூட நாம அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது”ன்னு சொன்னதோட “நியாயமா இருக்குற நமக்கே இந்த நிலமைன்னா?”ன்னு கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி......கேரள முதலமைச்சருக்கே கூட கெட்ட கோவம் வந்திருக்கும்.
16ம் நாள் யாருக்குக் காரியம்னு பாப்போம்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)