பிக்பாஸ் 3 : நாள் 32 (25.07.19)
பிக்பாஸ் 3
நாள் 32 (25.07.19)
“ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா”ன்னு பாட்டப் போட்டு ஆடக்கூப்புட்டா, சாண்டி, தர்ஷன தவிர ஆடுனது முழுக்க “ஆடுங்கடி” தான். சாக்ஷி ஆட்டத்துல வர வர துள்ளல் ஜாஸ்தியாகுது. ஆனா அதுவே ஓவராகி கரண்டு வயர மிதிச்சு கை கால் இழுத்த காக்கா மாதிரியான எக்ஸ்பிரெஷனா போயிடுது. லாஸ்......பொண்ணுக்கு ஃபோல்க் டான்ஸும் நல்லாவே வருது.
கவின் கிட்ட கக்கூஸ்ல (எவள மாத்துனாலும் எடத்த மாத்த மாட்டேங்குறானே!) லாஸ் “என்னய நாமினேஷன்ல சொல்லி வெளிய அனுப்பிரு”ன்னு கேட்டுச்சு. “உன்னால நான் போவேனே தவிர உன்னய அனுப்ப நான் காரணமாக மாட்டேன்”னு கண்டிஷனா கையத் தூக்கி சொன்னான். (டேய் ஃபூல் அவ உன்னய கலாய்க்கிறாடா)
நேத்து மரியாதை மேட்டர்ல சேதமாகி பாதாளத்துல இருந்த சேரனுக்கு இன்னைக்கு வருத்தப்படாத வாலிபர் சங்க ஆளுங்க வாண்டடா பில்ட் அப் சாங் எல்லாம் பாடி அவர மரியாதை சோப்பால குளிப்பாட்டுனாங்க. (ஆப்புக்கப்பறம் சூப்பா?!) நேத்து “நீதாண்டா ஃபூல்”னு கை நீட்டி பேசி, ரப்ச்சர் பண்ணி பலகாரம் சாப்ட்ட ரேஷ்மாவும் இவங்க கூட சேர்ந்து அவருக்கு மரியாதை செஞ்சு பலகார மேட்டர்ல பரிகாரம் தேடிக்கிட்டாங்க.
2 நாளா கருமமா போயிட்டிருந்த கிராமத்து டாஸ்க்க சுவாரஸ்யமாக்க சரவணன் ஒரு ஸ்க்ரிப்ட்டு சொன்னார். (இத நேத்தாவது சொல்லியிருக்கலாம்)
சாண்டியையும், கவினையும் கூப்ட்டு, அந்த ஊர் நாட்டாமை சேரனும், இந்த ஊர்த் தலைவி மதுவும் கணவன், மனைவி. அவங்களுக்கு பொறந்தது தான் லாஸ். சின்ன வயசுல சேரன பிரிஞ்சு லாஸோட இந்த ஊருக்கு வந்து செட்டில் ஆகிட்டாங்க. இத இன்னைக்கு பஞ்சாயத்துல வச்சு பேசிடுவோம்னு சொன்னாப்ல. (நல்ல ஸ்க்ரிப்ட்டு! பாத்து பத்திரம். அப்பறம் பாக்யராஜ் கிட்ட போயி A.R முருகதாஸ் மேல ஒரு பிராது குடுக்க வேண்டி வரும்)
சரின்னு இந்த ட்ராமா ஆரம்பிச்சு நல்ல படியா போச்சு. திடீர்னு நம்ம லாஸ் சொம்ப தூக்கிட்டு ஓட, அத பிடிக்க சேரன் விரட்ட, மீரா உள்ளிட்ட பொண்ணுங்களும் லாஸ பிடிக்க, அங்க வந்த சேரன் லாஸ பிடிச்சு இழுத்துட்டு போக, சொம்ப வாங்குன சேரன் “சொம்பு நசுங்கிடுத்து”ன்னு சொன்னதும் கிளைமாக்ஸ் எண்ட் கார்டு போட்டோ மாதிரி எல்லார் முகத்துலேயும் ஓரே ச்சிப்பு. “ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு”ன்னு கிராமமே குதூகலமா இருக்கும் போது ஒரே ஒரு கேரக்டர் மட்டும் நாச வேலை செய்ய நகத்த கடிச்சுகிட்டு இருந்துச்சு.
உன்னோடே கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
யாத் 34:10
ஹால்ல எல்லாரையும் உக்கார வச்சு கேப்டன் ரேஷ்மா “மீராவுக்கு ஏதோ மன உளைச்சலாம். அத எல்லார் முன்னிலையிலயும் உடச்சு விடனும்னு சொல்றா”ன்னு சொல்ல, நாட்டாமை “ஆகா ஏதோ பப்பாங்கி மேட்டர் போல”ன்னு ஆர்வமாகி அட்டென்ஷன்ல உக்காந்தார். மீரா தொண்டைய கணச்சுட்டு “இதோ உக்காந்திருக்காரே நாட்டாம அவரு என்ன ஏதுன்னு பாக்காம என்னய தொட்டு தூக்கி தொம்சம் பண்ணிட்டாரு”ன்னு சொல்லவும், மொத்த வீடும் சத்தமில்லாம நின்னுச்சு.
சேரனோ “என்னங்கடா ? நேத்தாவது மரியாதைய கெடுத்தானுங்க, இன்னைக்கு மானத்த வாங்கிருவானுங்க போலயே....காலையில இவிங்க பாட்டெல்லாம் பாடி; சந்தோஷப்படுத்துனது என் பாடிய எடுக்கதான் போல”ன்னு பதறிப்போயி“என்னது நான் உங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேனா?”ன்னு எக்கோ எபெக்ட்ல கேட்டார்.
மீரா சொன்ன மாடுலேஷன் சேரன் தன்ன தப்பான எண்ணத்தோட தொட்டாரு”ன்னுதான் இருந்துச்சு. ஆனா இத எல்லாரும் மாறி மாறி கேக்கவும் சட்டுன்னு சுதாரிச்ச மீரா “இல்ல இல்ல தப்பான்னா நீங்க நெனைக்கிற மாதிரி தப்பா இல்ல....இறுக்கமா இடுப்பப் பிடிச்சு இந்தப்பக்கமா இழுத்து விட்டாரு....நான் மென்மையான பூவு...இப்ப இவரால என் இடுப்புல நோவு”ன்னு கேச கன்வெர்ட் பண்ணுச்சு. சேரனோ “நான் எடுக்க வந்தது என் சொம்பு ; இடையில நின்ன உன்னய வேணும்னே இழுத்துப் போடல என்னய நம்பு”ன்னாரு. “ஆனாலும் உன் இடுப்ப நான் ஹர்ட் பன்ணியிருந்தா சாரி”ன்னும் சொன்னார்.
“நோ....நானுன்றதாலதான் இறுக்கிப் பிடிச்சாரு என் இடுப்ப, வேற யாரும்னா காட்டியிருப்பாரா இந்தக் கடுப்ப?”ன்னு கலவரமா கேட்டுச்சு மீரா. இந்த விஷயத்த கேட்ட முறை தப்புன்னு எல்லாரும் தம் கட்ட ,மீராவோ “அவருகிட்ட எனக்கு பேச்சில்ல அதனாலதான் நான் தனியா சொல்லாம சபையில செதறி விட்டேன்”னு சொன்னாங்க.
ரொம்பத் தீவிரமா எல்லாரும் மீராகூட பேசிட்டு இருக்கும்போது நம்ம சல்பேட்டா கவின் கிட்ட கமுக்கமா “இப்பிடி ஒரு சம்பவமே நடக்கல, ஏன்னாஅங்க நின்னது மீராவே இல்ல....நாந்தான் நின்னேன். இதச் சொன்னா நான் பொய் சொல்றேம்பானுங்க....ஏன்னா மீட்டிங்க் மேட்டர்ல என் சீட்டிங் அப்பிடி......என்னமோ போ”ன்னு விரக்தியா விவரிச்சுட்டு இருந்தாங்க. (ப்ரே ஃபார் சல்பேட்டா)
மீரா எல்லாப் பக்கமும் கம்பு சுத்திட்டு இருந்தாங்க. மீரா கேப்பு விடாம கேட்ட இன்னொரு கேள்வி “வந்த அன்னைக்கு நான் பெண்கள தொடமாட்டேன்னு தெளிவா சொன்னவரு இன்னைக்கு என்னய தொட்டா என்ன அர்த்தம்?” (ம்ம்ம்ம்....உன்னய ஒரு பொண்ணாவே மதிக்கலன்னு அர்த்தம்). சித்தப்பூ கூட அதிசயமா சேரனுக்கு சப்போர்ட் பண்ணார். சேரனோ ஒரு கட்டத்துல சபையில எந்திருச்சு நின்னு “எல்லாரும் என்னய மன்னிச்சுருங்க.....அழுதுக்கிட்டே ஆண்டவர் கிட்ட போறேன் ஆள விடுங்க”ன்னு சொல்லிட்டு பெட்டுக்கு போயிட்டார்.
சமாதனப்படுத்தப் போன லாஸ் & ரேஷ்மாகிட்ட அவரு அழுத சத்தம் கேட்டு மொத்த பேரும் உள்ள போக, இதப் பாத்த மீரா “ரைட்டு, ஒண்ணு கூடிட்டாய்ங்க இனி நம்மள ஒட்டுமொத்தமா சேர்ந்து ஓட்டாம விடமாட்டானுங்க”ன்னு தலைய ஆட்டிக்கிச்சு. சேரன் “இதுவரைக்கும் அப்பிடி இல்ல....இப்ப சொல்றேன் நான் ஒரு டைரக்டர். தமிழ் மக்களுக்கு பிடிச்ச டைரக்டர்....இங்க வந்து பொம்பள கேசுல வம்புல மாட்டிக்கிட்டு போனா நல்லா இருக்காது.....தன்மானந்தான் என் சொத்து”ன்னு கெத்தா ஒரு ஸ்பீச் குடுத்தாரு.
வெளிய சரவணன் மீராகிட்ட “தர்ஷன் கூடயும் உனக்கு சண்டைதான் ஆனா டாஸ்க்கப்ப அவன மட்டும் கட்டிபிடிச்சு உருண்ட?”ன்னு கேக்க, “யோவ் அது டாஸ்க்குயா”ன்னு சமாளிச்சுச்சு. “உனக்கு தொட்டது பிரச்சனையா? இல்ல சேரன் தொட்டது பிரச்சனையா?ன்னு அடுத்த பால போட, “டவுட்டே வேணாம், சேரன் தான் பிரச்சனை”ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லுச்சு. கவின் வந்து பேசும்போது “அவரு ப்ளான் பண்ணித்தான் இதப் பண்ணாரு”ன்னு பகருச்சு. மறுபடியும் மெல்ல கூட்டம் சேர ஆரம்பிக்க, ஓப்பனிங்க நல்லா பண்ண மீராவுக்கு க்ளோசிங்க ஒழுங்காப் பண்ணத் தெரியாம எப்பவும் போல “ஓகே ஓகே ஃபைன்....இத க்ளோஸ் பண்ணுங்க”ன்னு பல்பு காட்டுச்சு.
பொறுமையா டைனிங்க் டேபிள்ள உக்காந்து முகின் மீராகிட்ட “இப்ப நீ சொன்ன விதத்தால அவரு தப்பா போர்ட்ரேய்ட் பண்ணப் படுவாருன்னு “போர்ட்ரேய்ட் பெத்த புள்ள” உனக்குத் தெரியாதா?”ன்னு கேக்க, அத காதுல வாங்காம எப்பவும் போல மீரா மெதப்பா பேச, முகின் அல்டிமேட் ஆங்கிரில “பீப்”னு ஆரம்பிச்சு டைனிங்க் டேபிள டம்முனு தட்ட......”ஆகா கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ? அடிப்பாய்ங்க போலயே....கைய கிய்ய வைக்குறதுக்கு முன்னாடி கடுகளவு சேதாரமில்லாம உன் பிள்ளைய கிச்சன் வரைக்கும் கொண்டு போயி சேத்துருய்யா என் கருப்பசாமி”ன்னு சொல்லிக்கிட்டே வெளிறுன மூஞ்சியோட வெடுக்குன்னு இடத்த காலி பண்ணிட்டு ஓடிடுச்சு.
அப்பறம் படாத பாடுபட்டு எல்லாரும் முகின தண்ணி குடுத்து தணிச்சானுங்க. இந்த அபிக்கும், முகினுக்கும் உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா என்ன? நடை, உடை, பாவனையெல்லாம் அப்பிடியே இருக்கு. சேரன் அபிய கூப்பிட்டு “என்னவாம் முகின் டென்ஷனாகுறான்?னு கேக்க, “ஆங்...எங்க வீட்டு ஆம்பளை பேசும்போது என்ன? ஏது?ன்னு பொறுமையா கேக்காம பொசக்கெட்டு பேசுனா மீரா, அதான் அவுகளுக்கு கோவம் வந்து செல்லய திருப்பப் போயிட்டாக & ஐ ஆம் அல்சோ டயர்டு பிகாஸு ஆப் தட்டு மீரா”ன்னு கலந்து பேசிட்டு போயிட்டாங்க.
அப்பறம் சேரன எல்லாரும் சேர்ந்து சமாதனப்படுத்தி “அதெல்லாம் உங்களப் பத்தி எங்களுக்குத் தெரியும், மீராவப் பத்தி இந்த ஊருக்கே தெரியும்”னு அவர சாந்தமாக்குனாங்க. லாஸ் மீரா மேல செம்ம காண்டுல இருக்குறாங்கன்னு நம்மளோட 9த் சென்ஸ் சொல்லுது.
பின்ன நாட்டாமையோட ஊர்திருவிழா. இந்த ஊருக்கு அழைப்பு குடுத்து மைனர தலைமை தாங்கும்படி சொல்லி நட்புக்கரம் நீட்டுனார் சேரன். விழாவுல பேசுன மைனர் சரவணன் சேரனுக்கு நன்றி சொன்னது, இனிமே சேரன் மேல அவரு பகையா இருக்கமாட்டாருன்ற யோசனைய தந்துச்சு.
பின்ன கலை நிகழ்ச்சி நடந்துச்சு. கலை நிகழ்ச்சியா அது? “லாஸ்” & ஷெரின்” நடத்துன சிலை நிகழ்ச்சி அது!
2 லிட்டர் மாஸா பாட்டில் லாஸா மாறி வந்து போட்டுச்சு பாருங்க ஒரு டீலக்ஸ் ஆட்டம். ய்ப்பப்பா......! அடுத்து வந்ததோ சூப்பர் டீலக்ஸ் ஷெரின்.....! சேரன பாத்து அவருகிட்ட இடுப்ப ஆட்டி ஒரு ஸ்டெப்ப போட்டாங்க பாருங்க, சேரன் “பேசாம மீரா குடுத்த பிராத ஷெரின் கிட்ட உண்மையாக்கிருவோமா?”ன்னு நெனச்சிருப்பார்.
இதப் பத்தி தனிப் புத்தகம் எழுத வேண்டி இருப்பதால் இப்போதைக்கு அடுத்த லைனுக்கு தாவுவோம்.
எல்லாரும் தனித் தனியாவும், சேர்ந்தும் ஆட, கடைசியில சாண்டியும், கவினும் இன்னைக்கு நாள ஆரம்பிச்ச “ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா” பாட்டையே இன்றைய க்ளைமாக்ஸ் பாட்டாவும் பாடி "வாழ்க்கை ஒரு வட்டம்டா"ன்னு சொல்லாம சொல்லி நச்சுன்னு முடிச்சானுங்க இந்த நாள.
Comments
Post a Comment