பிக்பாஸ் 3 : நாள் 8 - (01.07.19)
பிக்பாஸ் 3
நாள் 8 - (01.07.19)
“ஒரு குச்சி ஒரு குல்பி” பாட்டு அலாரம்...
குல்பி
பாட்டுக்கு
ஒரு குல்பியே (லாஸ்லியா)
டான்ஸ் ஆடுகிறது
ஆச்சர்யக்குறி....
லாஸ்லியா அனாயாசமா ஆட...”அப்பா” சேரன் ஆனந்தமா பாத்து ரசிச்சிட்டு இருந்தாரு...! மது கூட முதல் நாள் விஷயத்தால சுருண்டு போகாம ஜாலியா வந்து டான்ஸ் ஆடுனாங்க.
மீரா, பாத்ரூமுக்கு வெளிய உள்ள ஒரு பெஞ்ச்ல உக்காந்து மெடிட்டேஷன்ற பேர்ல கைல காத்த பந்தா உருட்டி விளையாண்டாங்க...இத பாத்துட்டு உள்ள போன சாண்டி கேமராவப் பாத்து சொல்லிட்டிருக்கும் போது அபியும் சாண்டி கூட சேர்ந்து சிரிச்சிட்டு வெளிய வந்து பாத்தா, மீரா அந்தப் பக்க பெஞ்ச்சுக்கு மாறி இருந்தாங்க...பெஞ்ச் விட்டு பெஞ்ச் மாறுர யோகப்பயிற்சி போல.
சின்னதா கேப்டன் வைத்யாவ புகழ்ந்து சாண்டி & கோ கக்கூஸ் கச்சேரி நடத்துனாங்க.
தின நடவடிக்கை (daily activity) சாக்ஷி தற்காப்பு கலை பயிற்சி அளிக்கனும். தர்ஷன உதவியாளரா வச்சுகிட்டு எல்லாருக்கும் சொல்லிக் குடுத்தாங்க. பின்ன சாண்டிய ஒரு பாட்டு பாட சொல்லி அதுக்கேத்த படி எல்லாரயும் ஒரு காலத் தூக்கி எதோ பண்ணாங்க...”கரண்டு கம்பத்த பாத்த நாய் மாதிரி” எல்லாரும் காலத் தூக்கிட்டு இருந்தாங்க. (இத பாத்துட்டு தான் இன்னைக்கு டாஸ்குக்கு பிக்பாஸுக்கே ஐடியா வந்திருக்கும் போல).
அப்பறம் நச நசன்னு என்னமோ பண்ணானுங்க....முக்கியமா நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா சேரனுக்கு சாண்டி, சரவணன், கவின் மூணு பேரும் வச்ச பேரு “சைக்கிள்” (ஆட்டோகிராப் பாட்டு காரணமா) போக இவங்களுக்கு சேரன் இருப்பு பிடிக்கல. அவரு உள்ளேயும் பெரிய இயக்குனராவே நடந்துக்குறாருன்னு ஃபீல் பண்றாங்க. சோ கூட்டா பேசி அவர நாமினேஷன் பண்ண முடிவு பன்ணாங்க.
பொங்குன பொங்கலுக்கு லக்ஸுரி பட்ஜெட் பாயிண்ட் முழுசா கிடைச்சது. எல்லாரும் லிஸ்ட் சொல்ல, வனி எழுதுனாங்க. முடிச்சதும் ரேஷ்மா “சமூகத்துக்கு சந்தோசந்தானே”ன்னு சம்பிரதாயமா கேக்க...மீரா வழக்கம் போல “ஏய்ங்கிய்ட்ட யாஆரும்மேய் கேய்க்கலவ்”னு சொன்னத யாரும் கண்டுக்கல, நம்மள தவிர.
பிராக்டிகலா இன்னைக்குதான் கவின் அபிக்கு கொக்கி போட்டாரு...அதாவது ஹூக் மாட்டி விட்டாரு.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாமினேஷன்.....இதுல சில பேரோட நாமினேஷன் யாரு யாரா இருக்கும்னு நம்மளுக்கே நல்லா தெரியும். மது, மீரா, சாக்ஷின்னு பல பேரோட கணிப்பு. இதுல அபி தப்புனாங்க. அதிக இதயம் வாங்குன சரவணனும் நாமினேட் ஆனார்...பாத்திமாவும் ஆச்சர்யம் கூடவே கவின் பயங்கர ஆச்சர்யம். சோ மீரா, மது, சாக்ஷி, சேரன், சரவணன், கவின், ஃபாத்திமா இவங்கதான் நாமினேஷன்ல இருக்காங்க.
அபி ரொம்ப ஆச்சர்யமா, சாக்ஷிய பக்கத்துல வச்சுக்கிட்டே சேரனோட நாமினேஷனுக்கு ஆச்சர்யத்தையும், வருத்தத்தையும் காமிச்சார். சேரன் தன்னையும் இந்த உலகத்தில் மனிதர்கள் நாமினேட் பன்ணுவாங்களான்ற ஆற்றாமையில இருந்தார்.
“கொஞ்சம் தனியா பேசனும்”னு சொன்னா கவுண்டர் “அதோ அங்க பாரு அங்க யாருமே இல்ல அங்க போயி பேசு”ன்னு சொல்ற மாதிரி, மது இந்த தனியா பெனாத்துற பெர்பார்மென்ஸ ஒரு வழக்கமா மத்திகிட்டாங்க. அது இப்ப ஓவர் ஆக்டிங்ல வந்து நிக்குது.
கவினும், சாக்ஷியும் பிக்பாஸ் கேமராவ பாத்து “நியாயமா நடந்துக்குற எங்களுக்கே இந்த அநியாயமான்னு வருத்தப்பட்டாங்க.
பாத்திமா பப்பாளி ஜாம் செய்ய போறேன்னு சொல்ல. “என்னது பப்பாளில ஜாமா?”ன்னு பாம் போட்டாப்ல அதிர்ச்சியானாங்க வனிதா.
பின்ன வனியும், ரேஷ்மாவும் பாத்திமா பிகேவியர பத்தி பேசிக்கிட்டாங்க.
பின்ன வனியும், ரேஷ்மாவும் பாத்திமா பிகேவியர பத்தி பேசிக்கிட்டாங்க.
அடுத்து டாஸ்க். எலும்புத்துண்ட இந்தப்பக்கத்துல இருந்து அந்தப்பக்கமா எடுத்துட்டு போகனும். எலும்புத்துண்டுன்றதால எல்லாரும் நாய் வேஷம் போட்டாங்க. (5 வது பாராவ கனெக்ட் செய்து கொள்ளவும்) பாத்திமா டீம் வென்றது.
பின்ன லான்ல ஒரு பாட்டு கச்சேரி ! (இன்னும் நீச்சல் குளத்துல தண்ணி வரல).
லைட் அணஞ்சப்பறம் அபி, சாக்ஷி, செரின் கூட்டணி பேச்சுவார்த்தை ஓடுச்சு. சாக்ஷிக்கு அபி மேல ஒரு கருத்து வேறுபாடு. தான் சொன்ன ஏதோ விஷயத்த அபி ரகசியம் காக்க தவறியதையும், சேரனோட நாமினேஷனுக்கு கவலைப்பட்டதையும் சாக்ஷி சுட்டிக்காட்ட...அபியோ, “உனக்காக உயிரையும் தருவேன்”னு சொல்ல. “அதெல்லாம் வேணாம் ஒழுங்கா இருந்தா இரு இல்லேன்னா ஆள விடு”ன்னு சாக்ஷி சொன்னதோட 8ம் நாள் ஏகபோகமா முடிஞ்சது!
Comments
Post a Comment