பிக்பாஸ் 3 : நாள் 6 - (29.06.19)
பிக்பாஸ் 3
நாள் 6 - (29.06.19)
ஆமா இன்னைக்கு ஆண்டவர் டே...! வந்ததும் விளம்பர இடைவேளைகளுக்கு நன்றி சொன்னார். காரணம் கண்டெஸ்டெண்டோட உணர்ச்சி பொங்கல் அதுவும் பொங்கலோ பொங்கலா இருக்குன்னு சர்காசம் பன்ணிட்டு.... ரொம்ப அலசாம அவசரமா அகம் டீவி வழியா அகத்துக்கு போனாரு.
5ம் நாள் மீதி போயிட்டிருந்தது....கிச்சன்ல சரவணன் தன்னோட பங்குக்கு மீராகிட்ட பேசுனார். ஆனா எப்பவும் போல மீரா “இப்பிடி போயி அப்பிடி போயி இப்பிடி போனானாம்....அப்பிடி போயி இப்பிடி போயி எப்பிடியோ போனானாம்”ன்ற மோட்ல பேசிட்டிருந்தாங்க. “உங்கள மாதிரியே நானும் இருக்கனும்னு நெனைக்கிறது தப்பு”ன்னு சப்புன்னு அடிச்ச மாதிரி சொன்னாங்க மீரா. சரவணனோ “ஆத்தீ இவ பயத்துக்கே பயம் காட்டுவா போலயே”ன்ற மாதிரி மூஞ்சிய மாத்திக் காட்டுனாரு.
இந்தப் பக்கம் வைத்யா தன் பங்குக்கு, என்ன பிரச்சன பண்றதுன்னு தெரியாம...ஒரு சின்ன விஷயத்துக்குப் போயி எவனும் “இனிமே என்னய அப்பான்னு கூப்பிடக் கூடாது...குறிப்பா தர்ஷன்னு” சொல்லிட்டாப்ல. பின்ன எல்லாரும் அதுக்காக வைத்யா மேல வருத்தப்பட...பின்ன அப்பான்னா அப்பிடிதான்னு சமாளிச்சு அவரே தர்ஷன “மை சன்”னு கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.
6ம் நாள் காலை அலாரத்துக்கு முன்னாடியே பல பேரு எழுந்திருந்தாங்க....ஆங்கிலப்பாடல் ஒன்ணு காத்துல மிதந்து வர, என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது “ஒத்தையடிப் பாதையில” பாட்டு ஆரம்பிச்சது. இந்த செகண்ட்ல இருந்து இன்னைக்கு ஷோ லாஸ்லியா (அப்டிதான் சொல்லனுமாம்) கைல போகுது.....எஸ், லாஸ்லியா ஆர்மியே உயிர்கொள்....லாஸ்லியா ஆன் ஃபயர்!
லாஸ்லியா எல்லாருக்கும் பாட்டு சொல்லிக்குடுக்கும் டாஸ்க்....பாடிக்கிட்டே எக்ஸ்பிரஷன் குடுத்து, ஆடிக்கிட்டே பிபி குடுத்து....ப்ப்ப்பா! தேவசேனாக்கள் பிறந்த வீட்டுக்குச் செல்லட்டும்...லாஸ்லியா வந்துவிட்டாள்! ஹாரீசின் ட்யூன் (வசீகரா...) சாகாவரம் பெற்றது!
பிக்பாஸ் எரிவாயு குறையப் போகுதுன்னு எச்சரிக்கை குடுத்தார். இருக்குற எரிவாயு வாரம் வாரம் ரீ-ஃபில் ஆகுமா இல்ல மொத்தத்துக்கும் இதானான்னு தங்களை தாங்களே குழப்பிக்கிட்டாங்க. ஆனா வனிதாவோ, கேஸ விடு, பால் இல்லையேன்னு என்ன பண்றது?ன்னு கேட்டாங்க. (வனிதாவோட மாஸ்க் மூஞ்சிதான் இப்போ ட்ரெண்டிங்க் டெம்ப்ளேட்)
பொங்கலோ பொங்கலின் தொடர்ச்சி...ரூம்ல எல்லாரும் இருக்க மீராவ காணோம்....வனிதாவோ “யார கேட்டு இவ போனா? உக்காந்திருக்குற ஆளெல்லாம் லூசா”ன்னு அவசியமே இல்லாம கண்ணா பிண்ணான்னு கத்த ஆரம்பிச்சாங்க....உண்மையாவே எரிச்சல் வர மாதிரிதான் பண்ணாங்க. இப்போ மீரா & கவின் லேட் கமிங் ஸ்டூடண்ஸா உள்ள வந்தாங்க.(அப்பதான் கவினும் அவ்வளவு நேரமா இங்க இல்லேன்றது தெரியும்) அப்றம் வனிதா “எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தைகள் Calm, chill, Relax. இத யாரும் யார்கிட்டயும் கோவமாவோ, சோகமாவோ இருக்கும்போது சொல்ல வேணாம்னு சொன்னாங்க.
சாண்டி முறை...தான் ஒரு அனாதைன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள லாஸ்லியா அழ ஆரம்பிக்க, உடனே சாண்டி “சும்மா பொய் சொன்னேன்”னு சொல்லி அவரு ட்ரெஸ்ஸ தொலச்ச கதைய சொல்லி இடத்த கலகலப்பாக்குனாரு.
லாஸ்லியா.....தன்னோட அக்கா மரணம், தந்தையோட பிரிவு பத்தி சொன்னாங்க. குறிப்பா “எந்த ஒரு காரணத்துக்காகவும் யாரும் தற்கொலை முடிவுக்கு போகாதீங்க....அது உங்கள சுத்தி உள்ளவங்கள படு பயங்கரமா பாதிக்கும்”னு வேண்டுகோள் விடுத்தது கிளாஸ். லாஸ்லியாவோட ஒவ்வொரு எக்ஷ்பிரஷனும் அவ்வளவு அழகு...குறிப்பா “உங்க ரகசியத்த சொல்லுங்க” கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்ன அவங்க குடுத்த “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”......சத்தம் இன்னேலருந்து பல பேருக்கு ரிங்க்டோனா மாறும் வாய்ப்பு அதிகமா இருக்கு. “நான் சைட் அடிப்பேன்”ற அவங்க ஸ்டேட்மெண்ட் உள்ள உள்ள தடிமாடுங்களுக்கு ஒரு ஜெர்க்குதான். சொல்லி முடிச்சு வந்ததும் சேரன் பின்னாடி இருந்து லாஸ்லியா முகத்த பிடிச்சு “என்னடா? எப்பிடிடா?ன்ற தன்னோட அக்மார்க் வார்த்தைகள சொல்லி அன்பு காட்டுனார்.
அடுத்து MGR, தன்னோட அப்பா அம்மா சண்டையப் பத்தி சொல்லி “இனி யாரும் குழந்தைங்க முன்னாடி சண்டை போடாதீங்க அது அவங்கள மன்ரீதியா பாதிக்கும்னு” வேண்டுகோள் வச்சார். சேரன் அவர “ஓ மனமே” பாட்ட பாட சொல்ல அவரும் அழுகையோட பாடினார். (இந்த MGR க்கு லாஸ்லியா மேல ரெண்டு கண்ணு...அவன் எங்க இருந்தாலும் கேமராவ கரெக்டா கண்டுபிடிக்கிற மோடி மாதிரி கரெக்டா லாஸ்லியாவுக்கு பின்னால நிக்கிறான்)
சட்டுன்னு ஒரு கட்டத்துல பெட் ரூம்ல வனிதா, மீராகிட்ட வந்து சாரி மீரா உனக்கு அப்பா இல்லேன்னு தெரியாது....நான் அப்பிடி சொல்லி இருக்கக் கூடாது, ஆனா நீயும் மத்தவங்களுக்கு ஸ்பேஸ் குடுன்னு சொல்லி கை குடுத்தது ஆச்சர்யம். ஆக எல்லாரும் அனுப்புற சமாதானப் புறாவ, வந்ததும் வறுத்துத் திங்கிறது மீராதான்றது இப்பவரை உண்மை.
அந்த வீட்ல மொத்தம் 7 ஆண்கள் ஆனா இந்தக் கவின் ஒரு ஆம்பளகிட்டயும் பேசுறதில்ல...இப்ப கூட 3 பொண்ணுங்களோட லான்ல படுத்து கடலை சாகுபடி பண்ணிட்டிருந்தாரு. சாக்ஷியும் அவர்கிட்ட ப்ரபோஸ் பன்ண “என் தன்ணி பாட்டில காலையிலக்குள்ள என் கிட்ட இருந்து எடுத்துட்டா நான் உன்ன ஏத்துக்குறேன்...இல்லேன்னா நான் உனக்கு அண்ணன்”னு சொன்னாரு. (சேலஞ்சுக்குண்டான மரியாதை போச்சேடா உங்களால) அப்றம் சரியா எடிட்டிங் புரியல...கவின் வந்து லாஸ்லியாகிட்ட நான் உனக்கு அன்ணனும் இல்ல, தம்பியும் இல்லன்னு சத்தியம் வாங்கிட்டு பாட்டில லாஸ்லியாகிட்ட குடுத்துட்டு சாக்ஷி தோள்ல கையப்போட்டு நடந்து போயிட்டார்.
ஆண்டவர் தரிசனம்...எல்லாரையும் உக்கார சொல்லிட்டு, சொல்லாம வந்த மீராவுக்கு ஸ்டோர் ரூம்ல இருந்து தர்ஷன மெடல் எடுத்துட்டு வர சொல்லி, “யார் கையால வாங்கனுமோ வாங்கிக்கோ”ன்னு சாய்ஸ் குடுக்க...தர்ஷனே போடட்டும்னு சொல்லிட்டாங்க. தர்ஷன் போட்டார் மெடலை.
கமல், தர்ஷன் கதையை தெனாலியோட ஒரிஜினல் வெர்ஷன் மாதிரி இருக்குன்னு சொன்னாரு....சரவணணோட முதல் மனைவிய அவருக்கு தாய்னு சொன்னாரு. பின்ன உள்ள இருந்து வரும் கேள்விக்கு பதில் சொல்லப்போறதா சொன்னார். ஆண்டவர்கிட்ட அரசியல் இல்லாத கேள்விகள் கேட்டா அதுக்கான பதில விட சுவாரஸ்யம் வேற எதுவும் இருக்காது! ஏன்னா நாம கேள்விப்பட்ட பெரிய பெரிய ஆளுங்க கிட்டயெல்லாம் பழகுன ஆளு அவரு. அவரோட பதில்களும் அட்டகாசமா இருக்கும் இத தனியாவே ஒரு கட்டுரையா எழுதலாம். இந்த செஷன்ல தோல்விப்படத்த பத்தி சொல்லும்போது “என்னோட தோல்வி அடைந்த தேவர்மகன் தான் குணா, வெற்றியடைந்த குணாதான் தேவர்மகன்”னு சொன்னார். கிளாஸ்!
அப்றம், அரங்கேற்றம் படத்துக்கு தன்னை பாலச்சந்தர் தேர்வு செஞ்ச விதம், AVM செட்டியார்கிட்ட தான் கேட்ட முதல் சம்பளம், இப்பிடி ஏகப்பட்ட சுவாரஸ்யமான பதில்கள் (இன்னும் கிரேசியப் பத்தி பேசாம இருக்குறது ஏமாற்றம் & வருத்தம்) ஆனா எங்க சுத்துனாலும் கடைசியா மையத்துல வந்து கோர்க்குறது போரிங்.
சாண்டி, முறை வந்ததும் அதோட கட் பண்ணி 6ம் நாள முடிச்சு... தொடரும் போட்டார் ஆண்டவர்.
Comments
Post a Comment