பிக்பாஸ் 3 : நாள் 33 தொடர்ச்சி & 34 (27.07.19)
பிக்பாஸ் 3நாள் 33 தொடர்ச்சி & 34 (27.07.19)
ஆண்டவர் கருவறை இருட்டுல இருந்து பேச ஆரம்பிச்சார். “இது ரகசிய சுரங்கப்பாதை இது வழியா உள்ள இருக்குறவனுங்க என்ன பண்றாய்ங்கன்னு பாப்போம்”னு கூட்டிட்டு போனார். (இவிங்கள எங்க இருந்து பாத்தாதான் என்ன?). ஆண்டவர் வருகைக்காக எல்லாரும் அலங்காரம் பண்ணிட்டு இருந்தாய்ங்க. அப்பறம் ரகசிய அறைய காமிச்சார். இந்த வாரமோ இல்ல வரும் வாரங்கள்லயோ இங்க ஆளுக வரலாம்னு சொன்னார். “இந்த ரூமு ஒரு கண்ணாடி, முன்னாடி, பின்னாடி”ன்னு என்னென்னமோ சொன்னார்....ஆனா நமக்குதான் ஒன்ணும் வெளங்கல.
கட் பண்ணி காமிச்சா மேடையில தோன்றுனார். ஓடுற ட்ரெயின்ல இருந்து ஓடி வந்த டி டி ஆர் மாதிரி ஒரு காஸ்ட்யூம். “கிராமசபைகளின் வலிமைய உணர்த்த ஒவ்வொரு சீசன்லயும் ஒரு கிராமத்து டாஸ்க் பண்ண சொல்லி சொன்னேன்.....ஆனா இவனுங்க வலிமைய காமிச்சு கலவர பூமியாக்கி, கண்டபடி கத்தி.....யப்பா......கிராமத்த கொளுத்திக்காததுதான் பாக்கி....! மனுஷனுங்களா இவனுங்க”ன்னு சொல்லிட்டு, “ரைட்டு வெள்ளிக்கிழமை மீதிய பாப்போம்”னு சொல்லிட்டு அகத்துக்கு போனார்.
33ம் நாள் ராத்திரி
டைனிங் ஏரியால சாண்டி கிட்ட மீரா “டாஸ்க்கப்ப ரேஷ்மா திருடுன என்னோட மேக் அப் கிட்ட எங்கிட்ட குடுக்கல, ஆனா லாஸ்லியாவோடத லாஸ்லியாகிட்ட குடுத்துட்டா. கேட்டதுக்கு உன்னோடத கவின் எடுத்து ஒளிச்சு வச்சுட்டதா சொன்னா. நான் போயி கவின் கிட்ட “ஏண்டா அப்பிடி பண்ண?”ன்னு கேட்டா சாக்ஷி தான் ஒளிச்சு வைக்க சொன்னதா சொல்றான்.....இதுல இருந்து என்ன தெரியுது?”ன்னு மீரா சாண்டிய பாக்க....” இப்ப உங்கிட்ட உன் மேக்கப் கிட் இல்லேன்னு தெரியுது”ன்ற மாதிரி சாண்டி பாத்தார். (இது 3ம் உலகப்போர ஆரம்பிக்க ட்ரம்பும், புடினும் சேர்ந்து இண்டர்போல் மூலமா செஞ்ச ரகசிய ஆப்பரேஷன் 3W தான் இதுன்னு உங்கள்ல கித்னா பேருக்கு தெரியும்? ஆனா இது மீராவுக்கு தெரியும்)
கவின் & சாக்ஷி
சல்பேட்டா : (ரொம்ப டயர்டா தலையில கைய வச்சுகிட்டே ) “ஏண்டா.... மீரா மேக்கப் கிட்ட நான் ஒளிச்சு வைக்க சொன்னேன்னு சொன்னியாடா?
கவின் : “ஆமா, அத நான் ஏன் சொன்னேன் தெரியுமா?
சல்பேட்டா : தெரியும்.......! என் தாலியறுக்க தான!
கவின் : என்ன இப்பிடி பேசுற ? அவ உங்கிட்ட வந்து கேட்டிருந்தா உன்னய அவ எதாச்சும் திட்டி உன் மனசு காயப்பட்டு, அதனால நீ கஷ்டப்பட்டு.....
சல்பேட்டா : யப்பா டேய்.....போதுண்டா!
அவளாச்சும் இந்த மேட்டர சப்பயா டீல் பன்ணி இருப்பா....ஆனா நீ சாதாரண ராகிங் கேஸ ரஃபேல் உழல் மாதிரி மாத்தி வச்சுருக்க....! கேட்டா கக்கூஸ்ல நின்னு கத்துற....என்னதாண்டா வேணும் உனக்கு? லாஸ் ஜெயிலுக்கு போயிட்டு வர கேப்புல நாந்தான் உனக்கு எண்டெர்டெயின்மேண்டா
கவின் : அப்பிடியல்லாம் இல்ல மச்சாஆஆன்...
சாக்ஷி : அது சரி....மொழி பிரச்சனைய நீயி மீராவும்தான பேசி வச்சு கெளப்புனீங்க? அது என்னடா எங்கூட உக்காந்து கால நேரம் தெரியாம கடலை போடுறப்ப மட்டும் உனக்கு மொழிப்பிரச்சனையே வரதில்ல....ஆனா பொதுவுல என்னய போட்டு விட்டுட்டுப் போற....
கவின் : (கோவமா) ஆமா நான் அப்பிடிதான் நான் கெட்டவன், திருடன், முரடன், முதல்வன், இந்தியன், அன்னியன்......ஆஆஆஆஆ உனக்கு நல்லது பண்ண நெனச்சதுக்கு என்னய செருப்பால அடிக்கனும்.....(போயிட்டான்)
சாக்ஷி : ம்ம்க்கும்....
அடுத்த காட்சி டைனிங்க் ஏரியால
சாக்ஷி : (கொஞ்சலா) கவின் பேபி, நீ சும்மா கோவப்படாத....நீ என்னய காப்பாத்துறேன்னு சொல்லி எத ஆரம்பிச்சாலும் கடைசில என்னயதான தொங்க விட்டு அடிக்கிறாய்ங்க......அதையும் நீ லாஸ் மடியில படுத்துக்கிட்டே பாத்து சிரிக்குற....! இப்ப எனக்கு என்ன பிரச்சனைன்னா உன் பக்கத்துல இருக்கும்போதே என்னய படுத்தி எடுக்குகுற, இதுல உன் கூட சண்டை போட்டு போயிட்டேன்னு வைய்யி எனக்கு தூக்கு தண்டனையே வாங்கி குடுத்துருவ.....அதனால சாரி....நீ என் கூடயே இரு.
34ம் நாள்
“தமிழண்டா நான் ஒரு தமிழண்டா” பாட்டு அலாரம். சல்பேட்டாவ கடுப்பேத்தவே இந்தப் பாட்டு போல.....அர்த்தம் தெரிஞ்சிருந்தா பிக்பாஸ்கிட்டயே “டோண்ட் டேக் கல்ச்சுரல் திங்”னு கத்தி இருக்கும். கேப்டன் தேர்வுக்கான போட்டி. தண்ட டாஸ்க். தர்ஷன் கேப்டன். தர்ஷன் ரொம்ப தெளிவா இதுவரை இருந்த கேப்டன்கள் பண்ண தப்புகள் இனிமே நடக்கக் கூடாதுன்னு கறாரா பேசுனான்.
லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போன மாதி ஜாலியா போன லாஸ் & அபிய பிக்பாஸ் சிறப்பா செஞ்சுட்டு இருந்தார். சாப்பாடு, வேலைன்னு செம்ம டார்ச்சர்.....”சின்னம்மா மாதிரி ஷாப்பிங் போறதுக்கெல்லாம் வசதி இருக்கும்னு நெனச்சா.....வ.உ.சி மாதிரி செக்கிழுக்க சொல்றாய்ங்ளே”ன்னு கதறல் ரெண்டும். ஆனாலும் நைட்டுதான் விட்டானுங்க.
ரேஷ்மாவும், மதுவும் தாங்கள் நாமினேஷன்ல இல்லாததால யாரு வெளிய போவான்னு புரணி டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தாங்க கவின்& சாக்ஷிய ரெண்டு பேரும் சொன்னதால அதுங்க ரெண்டும் மரமண்டைன்னு புரிஞ்சது.
ஆண்டவர் வருகை:
ஆண்டவர் அரசியலுக்கு போகாம நடிகராவே இருக்கலாமேன்னு நம்மளுக்கு தோன வைக்குறாப்ல எப்பவுமே சீசனுக்கு ஒரு எபிசோட் அமையும்......இந்த சீசனுக்கு அது இதுவா இருக்கலாம்.
டாஸ்க்குல தர்ஷனோட ஒன் லைனர்களுக்கு பாராட்டு, ரேஷ்மா திருட்டுக்கு பாராட்டுன்னு ஆரம்பிச்சு மது சாண்டி பிரச்சனைய ஆரம்பிச்சார். மது அன்னைக்கு சமாதானம் ஆகாம ஆண்டவர் கிட்ட அம்பைரிங் கேக்க காத்திருந்தாங்க போல.....ஆனா ஆண்டவர் அவங்க பால் எல்லாத்தையும் வைட்ன்னு சொல்லிட்டு இருந்தார். “கலாய்க்குறவன காலர பிடிச்சு கேளுங்க”ன்னு சொன்ன மதுவையே கலாச்சுட்டு இருந்தார் ஆண்டவர். சாண்டிய பேருக்கு தண்டிக்கிற மாதிரி தண்டிச்சு மேட்டர முடிச்சு விட்டார். ஆனா மதுவுக்கு நீதி கிடைக்கலன்னு அவங்க ரியாக்ஷன்ல இருந்து தெரிஞ்சது.
அடுத்து சேரன் கேஸ்
கேஸ், விசாரணை, தடவியல் சோதனை, வீடியோ ஆதாரம், சாட்சிகள் விசாரணை.......தீர்ப்பு!
மீராவுக்கு ரேரா கிடைச்ச சாதகமான குறும்படம் இன்னைக்கு அப்பிடி அமையல! அன்னைக்கு பொதுவுல சொன்னப்பவே பெருசுபடுத்துன விஷயத்த, சாண்டி கிட்ட டெமோ காட்டுனப்ப நமக்கே அதிர்ந்துதான் போச்சு.....! குறும்படத்த பாத்ததும் மீரா முகம் “இதெல்லாம் என்னய தப்பா போர்ட்ரெயிட் பண்றதுக்காக கமலும், பிக்பாஸும் சேர்ந்து பண்ண வீடியோ இத சொன்னா நம்ப மாட்டானுங்க”ன்ற மாதிரி இருந்துச்சு
ஆனா இந்த கேசோட ஒவ்வொரு முடிச்சையும் மீராவ வச்சே அவுத்தது சத்தியமா ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் படம் பாத்த திருப்தி....மீரா முகமூடி கிழிஞ்ச்சது டாரா!
“மீரா இப்ப என்ன சொல்றீங்க?”ன்னு கேட்டதுக்கு “விருமாண்டிக்கு எங்க அரிக்குதுன்னு நல்லம நாயக்கருக்கு தெரியாது. அது போல நான் உணர்ந்தது உங்களுக்கு தெரியாது. பகலவன் வருவான் பனித்திரை விலகும்.....அதுபோல என் உண்மையும் உங்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்”னு சொன்னதும் ஆண்டவருக்கே அசிடிட்டி வந்துருச்சு.
ஃபேஷன் ஷோல கலந்துக்குற பொன்ணுங்க எல்லாம் அங்க பேசுறதுக்குன்னு ஒரு 15 தமிழ் வார்த்தை கத்து வச்சுருப்பாங்க. மீரா நெறைய ஃபேஷன் ஷோல கலந்துக்குறதால “உணர்ந்த, நெகிழ்ந்த, நிகழ்ந்த, மானுட சமுதாயம், மனது நோகாத, அமைதி, யுத்தம் இல்லாத உலகம்னு தெரிஞ்சு வச்சுருக்குற வார்த்தைகள எல்லாம் எல்லா இடத்துலயும் சரளமா யூஸ் பண்ணுது....இதக் கேக்கும்போதெல்லாம் நம்மளுக்கு ஃப்யூஸ் போயிடுது.
“இதுக்கு மேலயும் என்ன ஆதாரம் இருக்க முடியும்?”னு கேட்டதுக்கு “தட் இஸ் விஞ்ஞானம்”ன்ற ரேஞ்சுக்கு பாத்தாங்க மீரா!
“சரி நீ மாத்தி மாத்தி பேசுறேன்னு தெளிவா தெரியுது....ஆனா இது புலி வருது கதை மாதிரி என்னைக்கவது எவனச்சும் கற்பழிச்சுட்டான்னு வந்து நிக்கும் போது தன்ணிய ஊத்தி அழிச்சானா? இல்ல ரப்பர வச்சு அழிச்சானான்னு காமெடியா கேட்டுட்டு போயிறப் போறானுங்க. சோ பொய் சொல்லிப் பழகாதன்னு சொல்லி முடிச்சுட்டார்.
சேரன் ஆண்டவருக்கு நன்றி சொன்னார். பொண்ணுங்க எல்லார்கிட்டையும் சேரனப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதுக்கு எல்லா பொண்ணுங்களும் “குட்”டுன்னு காண்டக்ட் சர்டிபிக்கேட் குடுக்க, லாஸோ “கடிச்சது பொம்பளை எறும்பா இருந்தா, கடிச்சாலும் பரவாயில்லன்னு மகளேன்னு கட்டிப்பிடிச்சு கதறுவாரு.....அவரப் போயி....ஹாஆஆஅ!”னு பொங்குச்சு.
ஆண்டவரும் “இந்த மாதிரி கேஸ் வந்தா உடனே பயந்து போயி பதுங்காதீங்க. நான் இருக்கேன் டார்ச் லைட்டு அடிக்க”ன்னு சப்போர்ட் பண்ணார். சேரன் சேஃப்னு சேஃப் கார்டு காமிச்சு எண்ட் கார்டு போட்டார்.
Comments
Post a Comment