பிக்பாஸ் 3 : நாள் 34 தொடர்ச்சி & 35 (28.07.19)

பிக்பாஸ் 3நாள் 34 தொடர்ச்சி & 35 (28.07.19)


குறும்பட மேட்டர் குப்பறக் கவுத்துன காரணத்துனால அதத் தாங்க முடியாம சாண்டி கிட்ட பொலம்பிட்டிருந்தாங்க மீரா. “இந்த ஓணான் நம்ம வேட்டிக்குள்ளதான் வரணுமா?”ன்ற மாதிரி உக்காந்திருந்தார் சாண்டி. மீரா” பாத்தியா சாண்டி இவனுங்கள? இவனுங்களா ஒரு வீடியோ போட்டுக் காமிச்சு என்னய டேமேஜ் பண்றாய்ங்க.....இது எப்பிடி இருக்கு தெரியுமா? நீ கேளேன்”னு ஆரம்பிக்க, சாண்டியோ “இந்த வீட்ல இவ்வளவுதான் கேமரா! இதல இல்லாம வேற எந்த ஆங்கிள்ள அந்தாளு உன்னய அள்ளித் தூக்குனாரு?”ன்னு கேட்டார். “அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்? அத நாந்தான உணர்ந்தேன்!”னு அதே பால போட, சாண்டிக்கு சகுனமே சரியில்லன்னு தெரிஞ்சுப் போச்சு.

“உனக்குத் தெரியும்ல நான் எவ்வளவு நல்ல பொண்ணுன்னு? உனக்குத் தெரியும்ல நான் யாரு பிரச்சனைக்கும் போக மாட்டேன்னு? உனக்குத் தெரியும்ல நான் சீன் கிரியேட் பன்ண மாட்டேன்னு? உனக்குத் தெரியும்ல நான் அன்னை தெரசான்னு? உனக்குத் தெரியும்ல நான் உனக்கு தெரியும்லன்னு உங்கிட்ட பேசிட்டு இருக்குறது?”ன்னு கண்டினியூ பண்ண, சாண்டி”நீ ரொம்ப குழம்பிப் போயிருக்க, அங்க பாரு பச்சப் பசேலென புற்கள், நீல வானம் அதப் பாத்து ஆறுதலடை....குறிப்பா கொஞ்ச நேரம் பேசாம இரு, இவ்வளவு வெட்ட வெளிச்சமான பின்னாடி போயி சாரி கேளு”ன்னு சொல்ல, மீரா “தப்பே பண்ணாம நான் ஏன் சாரி கேக்கனும்?னு சலங்கையக் கட்ட, “உனக்கென்னப்பா நீ லூசு என்ன வேணும்னாலும் பேசுவ”ன்னு சாண்டி சைலண்ட் ஆனாப்ல.

35ம் நாள்

ஆப்பரேஷன் தியேட்டர்ல இருந்து அவசரமா அரை நாள் பெர்மிஷன் போட்டுட்டு வந்தா மாதிரி காஸ்ட்யூம்ல வந்தார் வசூல் ராஜா MBBS. மாஸ்க் மட்டும் மிஸ்ஸிங்! (யாருப்பா அது காஸ்ட்யூமர்?)
“வீடியோ போட்டுக் காட்டுனாலும் சில பேர் தங்கள் தப்ப ஒத்துக்க மாட்டேங்குறாங்க”ன்னு சொன்னதும் கைதட்டுன மக்களப் பாத்து “இப்ப எதுக்கு கைதட்டுனீங்க? நான் மீராவ பத்தி சொன்னேன்”னு சொல்ல அப்பதான் நம்மளுக்கு தெரிஞ்சது அவரு மீராவப் பத்தி சொல்லலன்னு! (ஏதோ அரசியல் பேசி இருக்காரு! எந்த நாட்டு அரசியலோ யாருக்கு தெரியும்?)

சம்பந்தமில்லாம ஒரு சஸ்பென்ஸுக்காக “சீக்ரெட் ரூம் இருக்கு அதுல யாரு வேணும்னாலும் போகலாம்”னு கொளுத்திப் போட்டார்.
அகம் வழியே அகம்.

இன்னைக்கும் ஆண்டவர் அடிச்சு விளையாண்டார். மத்தவங்க மாதிரி செஞ்சு காமிக்கிறது குறிப்பா சரவணன் மாதிரி எக்ஸ்ப்ரெஷன் குடுத்தது செம்ம.

காலர் ஆஃப் த வீக் சாண்டிக்கு....”காமெடியெல்லாம் ஓகே! ஆனா சண்டையினா மட்டும் ஏன் சைடு வாங்குறீங்க?”ன்னு கேக்க “இவனுங்கள நம்பி குரல் குடுக்கப் போனா வெரல எடுத்துருவானுங்க....இருந்தாலும் இனிமே உண்மைக்குக் குரல் கொடுப்போம்”னு கன்னிப் போராளியானார்.

நாமினேட்டர்கள் கிட்ட “நாமினேஷனுக்கு காரணம் என்ன?”னு கேட்டார். ஒவ்வொருத்தரும் ஒன்ணொன்னு சொல்ல சரவணன் “நான் 2 பேருக்கு போட்டா, எனக்கு 2 பேரு போடுவான்ல”ன்னு சொன்னது பட்டாசு. அப்பறம் காப்பாற்றப்படுபவர் கவின்னு மக்களே சொல்ல குஷியானார் கவின்.

சித்தப்பூ சேஃப்னு சொன்னதும் சரவணன் “அயோக்யப் பயலுக அனுப்பி விட மாட்றானுங்களே”ன்னு எக்ஸ்ப்ரெஷன் குடுத்தார்.

“வெளிய போறதுக்கு யாரு ரெடி?”ன்னு கேட்டதுக்கு “நான் பொட்டியத் தூக்கிட்டு போக மாட்டேன்”னு சொன்னாங்க அபி. “அப்ப சரி.... வாங்க மீரா பேசலாம்”னு சட்டுன்னு முட்டைய உடைச்சார் ஆண்டவர். அதிர்ச்சி இல்லையே தவிர ஹவுஸ்மேட்ஸ்க்கு சந்தேகம் இருந்தது. மீராவ சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிருவாங்களோன்னு. அதுவும் சல்பேட்டா “மீராவ இவ்வளவு சீக்கிரம் வெளிய கூப்ட்டானுங்களே இதுல ஏதோ உள்குத்து இருக்கு”ன்னு சொல்ல, மதுவோ “அந்த அளவு ஒர்த் பீஸ் இல்ல மீரா”ன்னு சரியா அடிச்சாங்க.
வெளிய போற நேரத்துல கைகுடுக்க வந்த சேரன் கிட்ட “உனக்கு முன்னாடி என்னய அனுப்புறேன்னு சொன்ன மாதிரி செஞ்சுட்ட”ன்னு சொன்னதும் சேரனோ “யாரு நானா? நானே வாரா வாரம் ஏன் நாமினேஷன்ல வரேன்னு தெரியாம இருக்கேன் இதுல உன்னய எங்குட்டு நான் அனுப்புறது”ன்னு பாத்தார்.

ஆண்டவர் அருகில் நின்னாங்க மீரா. “விட்டா நீ வில்லுப்பாட்டே பாடுவ”ன்னு மைண்ட்ல நெனச்சுக்கிட்டு மீராவ பேச விடாம ஆண்டவரே அதுக்கும் சேர்த்து பேசுனார். “வெளிய வரும் இந்த பொண்ணுக்கு பாதுகாப்பு நீங்கதான் தரனும். அது திருந்த ஒரு ஸ்பேஸ் குடுங்க”ன்னு கேட்டார். “யாரயோ பத்தி பேசிட்டு இருக்காரு போல”ன்ற மாதிரியே நின்னாங்க மீரா. சந்தோசக் குறும்படம்னு போட்டுக் காமிச்சார் அதுல சந்தோஷத்தத் தவிர எல்லாம் இருந்துச்சு. பின்ன உள்ள ஹவுஸ்மேட்சுக்கு அகம் டீவி வழியா டாட்டா சொல்லிட்டு கிளம்பிட்டாங்க மீரா.

அப்பறம் நேரத்த ஓட்ட ஒரு கேம்! யாரு வில்லன்? யாரு ஹீரோ? யாரு ஜீரோ?ன்னு. ஹீரோவா சேரனும், ‘நல்ல’ வில்லனா தர்ஷனும் செலெக்ட் ஆனாங்க.

அப்பறம் மது, சேரன், ரேஷ்மா 3ம் மீராவப் பத்தி பேசிட்டு இருந்தாங்க. சேரன் முகத்துல ஒரு நித்யானந்தா நிம்மதி தெரிஞ்சது. லாஸ் சாண்டியக் கூப்பிட்டு “உனக்கு பிடிக்காத விஷயத்த காமெடியா சொல்ற ஆனா நேரடியா சொன்னா நீ வில்லனாகிடுவ”ன்னு விளக்கிட்டு இருந்துச்சு.

நல்லா கவனிச்சீங்கன்னா நம்ம சல்பேட்டாவுக்கு நாமினேஷன் காலங்களத் தவிர மத்த நேர ஆக்டிவிட்டீஸ்லாம் செம்ம தோரணையா இருக்கும். ஆனா நாமினேஷன் காலங்களிலோ மழையில நனஞ்ச மஞ்சக் கலர் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கிப் போயி இருக்கும். அந்த நேரத்துலதான் நம்ம கவின் அத கொரங்காட்டுவான். ரைட்டு அதுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கே! அதனால இன்னைக்கு கொஞ்சம் தோரணையா கவினக் கூப்ட்டு “என்னவாம் இந்த லாஸ்லியாவுக்கு? 5 நாளா அக்காகிட்ட ஒழுங்காப் பேசாம மூஞ்சியத் தூக்குறா? சொல்லி வை நான்லாம் சொடக்குப் போடுற நேரத்துல சொருகிட்டுப் போயிருவேன்”னு சொல்ல, கவின்”நீ சாண்டிக்கு குடுக்காம எனக்கு கொ.ப.செ பதவி குடுத்ததால இருக்கும்”னு சிரிக்காம சல்பேட்டாவ கலாய்க்க, அது அதுக்கும் சீரியசா “அதெல்லாம் என் முடிவு தெர்தா! போ போயி புத்திமதி சொல்லு”ன்னு அனுப்புச்சு. அட லூசே! இத அவங்கிட்டயா போயி சொல்லுவ? இன்னேரம் உனக்கான அடுத்த வார ப்ளான ரெடி பண்ணி வச்சிருப்பான் கவின்.

அடுத்து அபியக் கூப்பிட்டு “நல்லாத்தான் உள்ள வந்த, இப்ப முகின கட்டிக்கிட்டு அழுகுற ! ஒழுங்கா டாஸ்க் பண்ணி, நல்லா பாட்டுப்பாடி, ஜாலியா இருந்தான் இப்ப உன் கூட சுத்தி உன்னய மாதிரியே ஒண்ணுமில்லாம போயிட்டான். நாந்தான் கவினால நாசமாப் போனேன். இதோ அரை மணி நேரத்துல ஒரு பஞ்சாயத்தக் கூட்டிருவான். நீயாச்சும் புத்தியோட பொழைக்கப் பாரு”ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.

“இப்பதான் மரத்தடியில உக்காந்து சிந்திச்சேன் இந்த யோசனை ஆப்பிள் விழுந்துச்சு அதான் உங்கிட்ட தூக்கிட்டு ஓடியாந்தேன்”ற மாதிரி சல்பேட்டா சொன்ன அதே வசனத்த இடையில மானே, தேனே, பொன்மானே போட்டு முகின் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க அபி. அங்க வந்த லாஸ்லியாகிட்ட “நான் சொன்னதுல முகின் பேர எடுத்துட்டு அதுல உன் பேரப் போட்டு இந்த அட்வைச நீயும் ஃபாலோ பண்ணு”ன்னு சொல்லி அட்லீக்கே ட்ஃப் குடுத்தாங்க.

“ஏன் லாஸு ஒரு மாதிரியா இருக்க?”ன்னு அபி கேட்டதுக்கு “அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கில்ல”ன்னு சொன்னாங்க. “உங்கப்பா சேரன் கிட்ட கதைக்கலாமே?”ன்னு சொன்னதுக்கு “ ம்ம்கும்....அந்தாளு என்னயல்ல அழ வைப்பான்”ற மோடுல “இதெல்லாம் கதைச்சா சரி ஆகாது! நானே வெளிய வந்தாதான் உண்டு”ன்னு என்னமோ பெரிய தங்க மலை ரகசியம் மாதிரி பேசுச்சு. கடைசில கமல் சார் “என்ன?”ன்னு கேட்டா “சுப்புரமணின்னு ஒரு நாய் வளத்தேன் அது மாடு முட்டி செத்துப் போச்சு அதான் கவலை”ன்னு சொல்லி கண்ணீர் விட்டு கைதட்டு வாங்கும்.

ஆனா இந்த முகின் அபிகிட்ட ஃபிரண்டாதான் பழகுறானாம். அவனுக்கு வெளிய ஆள் இருக்காம். ஆனா அபி முகின லவ் பண்றாங்களாம். இத சாண்டிகிட்ட முகினே சொன்னான். (இன்னும் எத்தனை பேருடா இதே டயலாக்க சொல்லுவீங்க?)

பின்ன சாண்டி "மீரா வெளியவும் இதே மாதிரிதான் மாத்தி மாத்திப் பேசும் பக்கத்துல போனா ஏசும்"னு சொல்லிட்டு இருந்தார்.

பின்ன அங்க அங்க எல்லாரும் லான்ல மல்லாக்க படுத்துக்கிட்டு வானத்தப் பாத்து பொலம்பிட்டு இருந்தானுங்க. அதோட ஓவர்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)