பிக்பாஸ் 3 : நாள் 9 (தொடர்ச்சி) & 10ம் நாள் - (03.07.19)
பிக்பாஸ் 3
நாள் 9 (தொடர்ச்சி) & 10ம் நாள் - (03.07.19)
வனிதா ஒரு பாவச்செயல்!
வனிதா ஒரு பெருங்குற்றம்!
வனிதா ஒரு மனிதத்தன்மையற்ற செயல்!
இன்னைக்கு எபிசோடோட மொத்த விஷயமுமே ஒண்ணுதான். அது முகின் கிட்ட “அபி & டீம் கூட பேசாத அது உனக்கு நல்லதுக்கில்லன்”னு மீரா சொன்னத தான் கேட்டதா சாக்ஷி வந்து வனி & அபிகிட்ட சொன்னதுதால ஏற்பட்ட ரகளைதான்.
இந்த சண்டையால தெரிய வந்தது....வனிதாவுக்கு பிரச்சனைகள் மேல இருக்குற ஆர்வம்தான் (போர்வைக்கு பதிலா பிரச்சனைய போர்த்திட்டு தூங்குற ஆளு போல). தான் எந்த வகையிலயும் சம்பந்தப்படாத ஒரு நிழ்வ, அதுல சம்பந்தபட்டவங்கள உசுப்பேத்தி, அத பூதாகரமாக்கி எப்பவுமே அந்த இடத்த கலவர பூமியா வச்சிருக்குற வனிதா மாதிரி ஒரு கேரக்டர துபாய்ல கூட பாக்க முடியாது.
ஷெரின், அபி & சாக்ஷி மூணுக்கும் குருவிக்கு இருக்குற அறிவு கூட இல்லாம வனிதா சொல்றத கேட்டு பொங்குதுங்க. எல்லாரையும் பொதுவா கூப்பிட்டு “நாங்க 2 பேரும் பிரண்ட்ஸ். எங்கள பத்தி யாரும், எவளும் கவலைப்பட வேணாம்”னு அபி & முகின் சொன்னாங்க. சாக்ஷி வந்து “எங்க டீம், மது & மீராகிட்ட யாரும் அன்னந்தன்ணி புழங்க வேணாம்னு சொன்னோமா?”ன்னு வாக்கெடுப்பு நடத்த. “அதெல்லாம் இல்லே”ன்னு எல்லாருமே சொன்னாங்க. இத லூசு மாதிரி மது கிட்டயே வேற கேட்டாங்க சாக்ஷி. பின்ன யாரும் எதிர்பாக்காத சமயத்துல பிரச்சனை மதுகிட்ட இடம் மாறுச்சு. மது டபுள் கேம் ஆடுறதா வனி, ரேஷ்மா, அபி, சாக்ஷி, ஷெரின்னு மாறி மாறி மதுவ கார்னர் பண்ணி கத்த, மதுவும் விட்டுக்குடுக்காம சமாளிச்சாங்க. ஷெரின் மதுவ யூஸ்லெஸ்னு சொன்னது அநாகரீகம்.
வனிதா ஒரு கட்டத்துல “நம்ம ரேஞ்சுக்கெல்லாம் இவ கிட்ட பேசுறது தப்பு”ன்னு சொன்னதும் அத மத்த 4 பேரும் ஆதரிச்சாங்க. (“துபாய்ல நாம இருந்த இருப்புக்கு”ன்னு வனிதா சொன்னதும் ,அவர கைது பண்ண போலீஸ் காத்திருக்குற செய்தி நம்ம கவனத்துக்கு வந்து போகுது). நேத்து வரை மதுவுக்கு பாதகமா இருந்த அவங்க சூழல் இந்த வார்த்தையில இருந்து அவங்களுக்கு சாதகமா மாறிடுச்சு.
வனிதா தனக்கு கிடைச்ச, கிடைக்காத எல்லா கேப்புலயும் கம்பு சுத்துறாங்க. அது யாரு பிரச்சனையா இருந்தாலும் சரி. இது வனிதா கூட இருக்குறவங்களுக்கே இன்னும் 2 எபிசோட் கழிச்சு பிரச்சனையா வரலாம். வரும்!
“குறி தவறி கூட்டத்துல இருக்குறவன் மேல சுட்ட மாதிரி” செவனேன்னு சாப்டுட்டு இருந்த லாஸ்லியாவ நோண்ட, லாஸ்லியா, பஞ்சாயத்துல நாக்காலிய தூக்கி அடிச்சிட்டு பாத்ரூம் போயிடுச்சு. இத பாத்த வனி “ஏய் அவள விடுங்க அவளெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல”ன்னு தெனாவட்டா சொன்னாங்க.
பின்னாடியே கவினும், தர்ஷனும் சமாதானத்துக்கு போக, அப்றம் சேரனும், வைத்யாவும் வந்தாங்க. கலங்குன கண்ணோட லாஸ்லியாவ பாத்ததும்....ரட்சகன் நாகார்ஜுன் மாதிரி சேரனுக்கு கையில நாக்கு பூச்சி தெரிய....”யாரு இருக்கும்போது யார சீண்டுறீங்க ப்ளடி பாஸ்கர்ஸ்”னு கொதிச்சுப் போயிட்டார்.
பின்ன “அபி & டீம் லாஸ்லியாகிட்ட மன்னிப்பு கேட்டாங்க அதுக்கு லாஸ்லியா “இங்க பாருங்க எனக்கு இங்க எல்லாரையுமே பிடிக்கும் ஆனா உங்க டீம் எப்பப் பாத்தாலும் கத்துறீங்க, கத்தாம பொறுமையா பிரச்சனைய ஹேண்டில் பண்ணாலே போதும்”னு ரொம்ப முதிர்ச்சியா அறிவுறை குடுத்தாங்க.
வைத்யாவோ அபி டீம்கிட்ட வந்து “பஞ்சாயத்த முடிங்க”ன்னு தலைவர்ன்ற கம்பீரத்தோட காலுல விழாத குறையா கெஞ்சுனாரு. பாத்திமா தனக்கு இங்க நடக்குற எதுவுமே புரியலேன்னு பப்பாளி ஜாம் மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டு உக்காந்துட்டாங்க.
பின்ன, “பிரச்சனை வெர்ஷன் -2” மீரா பெட்ரூம்ல இருந்துகிட்டே இந்தப் பிரச்சனைய கவனிச்சுட்டு வந்து “எவனோ விசிலடிச்சா மாதிரி இருந்துச்சே?”ன்னு கேக்க. முகின், “ஒண்ணுமில்ல ஆனா சாரி”ன்னு சொன்னார்.
மது மறுபடியும் பிக்பாஸ்கிட்ட புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க (இத கொஞ்சம் தவிர்க்கலாம்). சித்தப்பூவோ, கேமராகிட்ட வந்து “என் பஞ்சாயத்த விட இவனுங்க பஞ்சாயத்து பெருசா இருக்கு, மெண்டலாகிடுவேன்... சீக்கிரம் என்னய அனுப்புங்க”ன்னு சொன்னார். ரேஷ்மா, சண்டையப்ப ஷெரின் நடந்துகிட்டத இமிடேட் பன்ணி காமிச்சாங்க.
10ம் நாள் விடிஞ்சது.... “வாப்பா வாப்பா வந்து டான்ஸாடப்பா”னு பைரவா பாட்ட போட்டு எல்லரையும் ஆடக் கூப்பிட்டார் பிக்பாஸ். ஆட்டக்காரி லாஸ்லியா ஆரம்பிக்க...ஷெரின், மது, அபி ய தவிர எல்லாரும் வந்து ஆடுனாங்க.
அப்பறம் தின நடவடிக்கை டாஸ்க்ல “காதலில் சொதப்புவது எப்படி?”ன்ற தலைப்புல கவின் டிப்ஸ் தரனும் எல்லாருக்கும். சேரன் “ஒரே இடத்துல 4 பொண்ணுங்க கூட காதல மெயிண்டெயின் பண்றது எப்பிடின்?”னு விளக்க சொன்னார். கவினுக்கு கைவந்த கலைன்ற மாதிரி ஜாலி டிப்ஸ் குடுத்தார். வைத்யாவோ “பொண்ணுங்க டார்ச்சர் தாங்கல கழட்டி விடுவது எப்படி?”ன்ற டிப்ஸ கேட்டு வாங்கிகிட்டார். நடந்து வர பஞ்சாயத்துகள்ல கவினோட இந்த டாஸ்க்கும், கவின் & சாண்டியோட கக்கூஸ் கச்சேரியும்தான் ஆறுதல்.
“என்னடா விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆகுதே இன்னும் வனிதா ஆரம்பிக்கலையே?”ன்னு நெனச்சுட்டு இருக்கும் போதே “பிரசண்ட் சார்”னு வந்தாங்க வனி. “கிச்சன் டர்ட்டியா இருக்கு, ஆனா சேரனோ சேருக்கெல்லாம் கால் தொடச்சு விட்டுட்டு இருக்காரு. வாங்க போயி கேக்கலாம்”னு வைத்யாவ கூட்டிட்டு.....இல்ல இழுத்துட்டு போயி சேரன் கிட்ட சொல்ல. அவரோ சரின்னு சொல்லி குப்பை போகாததுக்கு டெமோ காமிக்க. வனிதாவோ, “அய்யே இவரு வேஸ்டு, சண்டை போடவே தெரியல”ன்னு தன் கான்செண்டரேஷன வேற பக்கமா மாத்திக்கிட்டு போயிட்டாங்க.
சேரன் வைத்யாவ கூப்பிட்டு “கண்ண தொறங்க, இந்த வாரம் நீங்கதான் ரவுடி உங்க கைலதான் நாங்க முத்தம் குடுக்கனும் ஆனா வனிதாதான் தலைவர் மாதிரி பிகேவ் பண்றாங்க...இனிமே நீங்க சொன்னா மட்டுந்தான் கேப்போம்”னு மிகச்சரியா கன்வே பண்ணி அனுப்புனாரு.
இதோட முடிஞ்சது....”இது ஆரம்பம்....இனிமேதான் பூகம்பம்”னு தூரமா யாரோ சொல்றது கேக்குது....உங்களுக்கும் கேக்குதா?
Comments
Post a Comment