பிக்பாஸ் 3 : நாள் 36 (29.07.19)

பிக்பாஸ் 3நாள் 36 (29.07.19)


“நாடோடி போக வேண்டும் ஓடோடி”ன்னு புரட்சித்தலைவரோட எனெர்ஜெடிக் பாட்டோட பட்டாசா ஆரம்பிச்சது நாள்.

சேரனுக்கு ஆட்டம் ஜாஸ்தியாவே இருந்துச்சு மீரா போன நிம்மதியில ரொம்ப நாள் கழிச்சு கபி கபி போலருக்கு.

கக்கூஸ் பெஞ்சுல சேரன் “மாயக்கண்ணாடி சேரனா” மாறி முகினுக்கு முடி ட்ரிம்மிக்கிட்டு இருந்தார்.

இந்த வாரம் ஒளிவு மறைவில்லாத ஓப்பன் நாமினேஷன்....

ரொம்ப சிம்பிள் : லாஸத் தவிர பெண்கள் எல்லாரும் பாரபட்சமில்லாம கவினுக்கு குத்துனாங்க. ஆண்கள் எல்லாரும் சேர்ந்து ரேஷ்மா, சாக்ஷி, மது & அபின்னு பொண்ணுங்களுக்கு குத்துனாங்க.

இந்த வார நாமினேஷன் : கவின், ரேஷ்மா, சாக்ஷி, மது & அபி

நாமினேஷன்னாலே பிள்ளையார் சுழி அபி ,அதுக்கு கீழ போடுற கோடு சல்பேட்டா. மதுவுக்கு சாண்டி மேல வள்ளுன்னு விழுந்தது வினையாகிடுச்சு. கவினுக்கு அவன் சல்பேட்டாவ சாவடிச்சுருவேன்னு கத்துனது காரணமாகிடுச்சு. ரேஷ்மாவுக்கு தன்னோட நியூட்ரல்தான் தகராறு.

சாக்ஷியப் பொறுத்தவரை கவின ஒரு கோவத்துல நாமினேட் பண்ணிடுச்சு. ஆனா ஒரு வேளை அவன் இந்த வாரம் வெளிய போகலேன்னா சோத்துல விஷம் வச்சுருவான்னு பயம். அந்த பயம் காரணமா கண்டாமேனிக்கு கத்திக்கிட்டு சுத்திட்டு இருந்துச்சு.

கவின் கிட்ட யாரு பேசுனாலும் “அவன் எனக்கு பண்ணதெல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா?.....என் மேல இருந்த பாசமெல்லாம் பறந்து போச்சா?”ன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க. “என்னய எப்போ பாத்தாலும் குத்தோ குத்துன்னு குத்துறான் முதுகுல, அத கேக்க யாருக்கும் வக்கில்ல”ன்னு வள வளன்னு பேச ரேஷ்மாவோ “இந்தா..... கவின் கூட எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஏதோ கூடவே சுத்துறியே ஏத்தி விட்டா கத்துறியேன்னு உனக்கு சப்போர்ட் பண்ணி அவன நாமினேட் பண்ணா அதுக்கும் வந்து அரை மணி நேரம் கரச்சல குடுக்குற....ஒரு டீய குடிக்க விடுறியா?”ன்னு பத்தி விட்டுட்டாங்க.
அப்பறம் சேரன் கிட்ட கடைய போட்டுச்சு “என்னா சேரன் சார் உங்க பொண்ணும் எங்கிட்ட பேச மாட்டேங்குறா நான் என்ன பண்ணேன் அவள?”ன்னு கேக்க, சேரனோ “நானே இப்பதான் அப்யூஸ் கேசுல இருந்து அப்பீட்டாகி வந்திருக்கேன். இதுல இந்த கருமம் வேறயா? லாஸ் என் பொண்ணுதான் ஆனா அத வச்சுக்கிட்டு இத போயி கேட்டா ‘போடா டாடி பொடனியிலயே சாத்துவேன்’னு சொல்லிரும். தேவையா எனக்கு ? ஏதோ கஷ்டத்துல கையக் குடுத்தோமா, கட்டிப்பிடிச்சோமான்னு ஓடிட்டு இருக்கு அது பொறுக்கலையா உனக்கு? போ போயி அந்த பக்கமா அனத்து”ன்னுட்டார்.

ஒரு கட்டத்துல சாக்ஷி “என்னய காயப்படுத்திட்டு நிம்மதியா கக்கூஸ் போறான், என்னய காயப்படுத்திட்டு கலர் கலரா சொக்கா போடுறான், என்னய காயப்படுத்திட்டு லாஸ் கூட கடலை போடுறான், என்னய காயப்படுத்திட்டு அடுத்து என்னய காயப்படுத்துறதுக்கு ப்ளான் போடுறான்”னு பொலம்புனதக் கேட்டு “யப்பா டேய்! இவ காயத்துக்கெல்லாம் மருந்து போட இந்த கலியுகம் பத்தாது. ஒரு நல்ல ஆம்பள நர்ஸா பாத்து இவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்கடா காலமெல்லாம் காயத்துக்கு மருந்து போடட்டும்”னு கத்ததான் தோணுச்சு

அடுத்து மது......! ஆண்டவர் அவ்வளவு சொல்லியும் அதயே பண்ணிட்டு இருக்குற கவின ஆம்பளை கெடாமாடுங்க யாரும் நாமினேஷன் பண்ணாதது ஏன்? பெண்களுக்கு ஒரு அநீதின்னா ஆண்கள் ஆதரவு தராதது ஏன்? ஒன்னுக்கு ரெண்டு பொண்ணுங்களின் ஃபீலிங்ஸோட கப்லிங்க்ஸ் ஆடுன கவின கண்டம் பண்ணாதது ஏன்? இப்பிடி ஒரு சமூக விரோதியான கவின விட்டுட்டு அப்ரசண்டிகளா என்னய நாமினேஷன்ல கொண்டு வந்தது ஏன்? அப்பிடின்னு இன்டைரக்டா இன்டிமேட் பண்ணிட்டு இருந்தாங்க. கலாச்சார கலவரத்த உருவாக்குன அதே டெக்னிக்ல பாலின பிரச்சனைய பக்குவமா உள்ள சொருகுனாங்க மது. சரவணன் “ஆம்பளைக்கு ஆம்பளை அப்பிடித்தான்.....ஓடிரு”ன்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டாப்ல.

அபி, “தக்காளிகளா, ஒரு வாரமாச்சும் நிம்மதியா சோறு திங்க விடுறீங்களாடா? நாமினேஷன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள 300 பேரு என் பேர சொல்லிடுறீங்க! எப்பவும் கூட இருக்குற செட் ப்ராப்பர்ட்டி சேரன் கூட இந்த தடவை இல்ல. நல்லா இருங்கடா”ன்னு விசும்பிட்டு இருந்துச்சு (ஒன்னு அந்த பொண்ண அழ வைக்காதீங்க இல்ல அத க்ளோஸ் அப்லயாச்சும் காட்டாம இருங்க.....நாங்கள்லாம் நைட்டு தூங்குறதா இல்லையா?)

இங்குட்டு ரேஷ்மா - முகின்

ரேஷ் : ஏண்டா உன்னய என் பையனா நெனச்சதுக்கு செஞ்ச கமாறாடா இது? நல்லவன் மாதிரி இருந்துட்டு நாமினேஷன்ல பேர குத்திட்டியே? நான் தப்பே பண்ணியிருந்தாலும் நாமினேட் பண்ணலாமா நீ? அலாரம் வச்சு ஆப்பாயில் போட்டுக் குடுத்துருக்கேன், ஈரல் சாப்பிட்டா உன் நகத்துக்கு நல்லதுன்னு ஒளிச்சு வச்சு குடுத்துருக்கேன் ஆனா நாமினேட் பண்ணிட்டியே நீ? நான் வெளிய போறதுக்கு ரெடிதான் ஆனா நீ நாமினேட் பண்ணியா நான் போகனும்? கவின விடு கட்டையில போறவன் அவன் என்னய நாமினேட் பண்ணா கவலையில்ல ஆனா நீ பண்ணலாமா? (என்ன இவன் கண்ணுல இன்னும் தண்ணி வரல?) .ஊரே என்னய தப்பு சொன்னாலும் (யப்பா வந்திருச்சு!)

முகின் : போதும்......போதும் !
மன்னிப்பு....மன்னிப்பு.....மன்னிப்பு! சந்தேகமே சாத்தானின் திறவுகோள் ! சந்தேகமே சாத்தானின் பிள்ள! சந்தேகமே சாத்தானின் பல்லக்கு ! தப்பு பண்ணிட்டேன் ! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னய மன்னிச்சு மறுபடியும் உன் மகனா ஏத்துக்கோ.....ரேஷன் கார்டுல என் பேர சேத்துக்கோ!

ரேஷ் : சரி விடு.....இனிமே அப்பிடி நாமினேஷன்ல உன் வாயால மம்மி பேர் வரக் கூடாது....உன் எய்ம் முழுக்க மத்தவங்க பேர்லதான் இருக்கனும்.....போ போயி உச்சா போயிட்டு, மூஞ்சி கழுவிட்டு கிச்சன்ல போயி மம்மி பேர சொல்லி மம் மம் வாங்கி குடி ! போ....

முகின் : சரி.....(எழுந்து நடந்த படி ......) என் தாயென்னும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே....

தன் கஷ்டத்த சொல்லி கட்டிப்பிடி வாங்கிக்கலாம்னு முகின தேடி வந்தாங்க அபி. கக்கூஸ்ல உக்காந்து கன்ணக் கசக்கிட்டு இருந்த முகின பாத்ததும் “கொடுமை கொடுமைன்னு கக்கூஸுக்கு வந்தா அங்க இந்த எருமை கண்ணக் கசக்கிட்டு இருக்கானேன்”னு பதறி, “உன் கண்ணீரால கக்கூஸெல்லாம் ஓடுது பார் ஆறு........ கலங்காத ராசா, மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு....”ன்னு ஆறுதல் சொல்லிட்டு இருந்தாங்க.

வாழ்ந்து கெட்ட ஜமீன் நம்ம கவின். ஒரு காலத்துல ஆம்பள பாஞ்சாலி மாதிரி 5 பொண்ணுங்களோட ஆனந்தமா சுத்திட்டு இருந்தவன். இன்னைக்கு வயக்காட்டு பெருச்சாளியாட்டம் தடி மாடுங்களோட சுத்திட்டு இருக்கான். சரவணனும் “அடேய் கொஞ்ச நாள் ஐம்புலனையும் அடக்கிட்டு அமைதியா இரு....உனக்கு நல்ல பேருன்னுல்லாம் ஒன்னும் இல்ல ஆனாலும் இருக்குற கெட்ட பேர இன்னும் கெடுத்துக்காத”ன்னு ப்ராக்டிகலா பிராக்கெட் போட்டார். அவனுக்கு நாமினேஷன்ல வந்ததெல்லாம் மேட்டர் இல்ல. சல்பேட்டா அவன நாமினேட் பன்ணதுதான் சால்ட் போட்ட காப்பிய குடிச்சாப்ல சுர்ருன்னு ஏறிடிச்சு. சல்பேட்டா மேல ரொம்ப உக்கிரமா இருக்கான்னு நாம நெனைக்க வேணாம். நாளைக்கே 2 லூசும் பழைய கோட்டையெல்லாம் அழிச்சுட்டு புதுசா கோடு போட ஆரம்பிச்சுடுங்க.

சாயங்காலம் வரைக்கும் இந்த அனத்தல் அங்க அங்க தொடர்ந்துட்டே இருந்துச்சு. சட்டுன்னு சாண்டி MGR மாதிரி கெட்டப்ப போட்டு வந்து அந்த இடத்தையே வேற மாதிரி மாத்துனாப்ல. சாண்டி இல்லேன்னா இந்த சனியனுங்க நெலம என்னாகும்னு நெனைக்கவே முடியல. எல்லாம் சட்டைய கிழிச்சுட்டு தான் சுத்தும். சாண்டி ஃபைனல் கண்டெஸ்டண்டுன்னு இப்பவே ஒதுக்கி வச்சுடலாம். நம்மளும் சைடுல சாண்டிக்கு ஒரு நன்றிகள சொல்லிக்குவோம்.



மதுவுக்கு பொறந்த நாளு ! அப்பறம் என்ன! ஒப்பாரி ஸ்டார்டிங்.....! ஷோ எண்டிங்! (ஸ்ஸ்ஸ்ஸப்பா......முடியல..........!)

Comments

  1. எதுக்கு நடு நடுவில அம்புட்டு இடம் உடுறீங்க.?
    உங்கள நம்பி நான் ராத்திரி பாக்குறதை குறைச்சுக்கிட்டேன். நல்லா ஒரு இதுவா எழுதுறீங்க.
    உங்களை நம்பி நான் .......

    ReplyDelete
  2. Notify me .. அதுக்காக ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)