பிக்பாஸ் 3 : நாள் 25 தொடர்ச்சி & 26ம் நாள் (19.07.19)

பிக்பாஸ் 3நாள் 25 தொடர்ச்சி & 26ம் நாள் (19.07.19)


அதே நாள்....அதே ஆட்கள்......அதே பஞ்சாயத்து !

மீராவோட லூசு மேட்டர் லூஸ்ல விடாம போயிட்டு இருந்தது. “என்னங்க சொடக்கு போட்டா தப்பா ? சூர்யாலாம் சொடக்கு மேல சொடக்கு போடுதுன்னு பாட்டே பாடி வச்சிருக்காரு?”ன்ற ரேஞ்சுக்கு கேக்க, ஷெரினோ “அடுத்த தடவை சொல்லிட்டு இருக்க மாட்டேன் சொடக்கு போட்ட வெரல வெடுக்குன்னு ஒடச்சுருவேன்”னு மொறைக்க....”ஓகே கூல் சாரி”ன்னு மீரா டூ ஸ்டெப் பேக் எடுத்தாங்க. “இதான இது வீடியோல இருக்கு இதான இதுவும் வீடியோல இருக்கே”ன்னு “இதெல்லாம் ஏற்கனவே ஏட்டுல எழுதி வச்சிருக்காம்ல”ன்னு காக்கை சித்தர் மோட்ல ஏன் சொல்லிட்டே இருக்காங்கன்னு புரியல.

பின்ன ஒரு வழியா வயிறு முட்ட வாங்கி கட்டிக்கிட்டு கன்ணை மூடிப் படுத்தாச்சு. ஆண்கள் யாரும் இந்த சண்டை நடக்குறப்போ எட்டிப் பாக்கல.

பின்ன சாக்ஷி மீராவ நெனச்சு சிரிச்சிட்டு இருக்கும்போதே சட்டுன்னு கதறி அழுது வேதாளம் பட அஜீத் மாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் குடுத்தாங்க. ஆளாளுக்கு பதறிட்டாய்ங்க. அப்பறம் சமாதானம் சொல்லி சாந்தப்படுத்துனாய்ங்க.

கன்ணீர்க் கடலில் அனைவரும் நனையத் தயாரா.....?

ஏன்னா இதுக்கப்பறம் முழுக்க முழுக்க கர்ச்சீப்பை நனைக்கும் கண்ணீர்க் காவியமா இருக்கும்.

லாஸ்லியா சாக்ஷிட்ட வந்து இதுவரை இருந்த சிக்கல பத்தி பேசித் தீர்த்துட்டு “கவின் விஷயத்துல இனிமே நான் இல்ல நீயே இருந்துக்கோ”ன்னு லாஸ் சொல்ல “இல்ல இல்ல நீ இருந்துக்கோ நான் போறேன்”னு சாக்ஷி சொல்ல “ரெண்டு பேரும் இருங்க அவன அனுப்பிட்டோம்னா எல்லாம் சரியாப் போகும்”னு நம்ம மைண்ட் வாய்ஸ் கதறுச்சு.

இதுக்கிடையில ஷெரின், சேரன், தர்ஷன், லாஸ் உக்காந்திருக்க சைஸா சப்பாத்தி மேட்டர எடுத்து லாஸ் ஷெரின் கிட்ட “விளையாட்டுக்கு பண்ணேன் சாரி”ன்னு சொன்னாங்க. ஷெரினும் “அதெல்லாம் சரி, ஆனா இனிமே அப்பிடி மரியாதைக் குறைவா நடந்துக்காத”ன்னு பக்குவமா சொல்லிட்டு போயிட்டாங்க. லாஸ் சப்பாத்தி கேக்கும் போது உடனே குடுக்காம போக்கு காட்டி குடுத்திருப்பாங்க போல ஷெரின். அந்த கோவத்துலதான் அப்பிடி செஞ்சேன்னு லாஸ் சொல்லும்போதுதான் இந்தப் பஞ்சாயத்தே நமக்கு தெரிய வந்துச்சு. (சப்பாத்தி மேட்டர்ல ஒரு சதுரங்க வேட்டையே நடந்திருக்கு)

சட்டுனு ஏதோ ஞாபகம் வந்தாப்ல லாஸ் தர்ஷன் கிட்ட “அந்தம்மா என்னமோ எக்ஸ்பீரியன்ஸுனுட்டு போகுதே என்னாவாம்?”னு கேக்க தர்ஷனோ “ஆத்தி இவிங்க நம்மள அடுத்த கவினா மாத்தப் பிளான் பண்றாய்ங்க”ன்ற பயத்துல “சரியா கேக்கல”ன்னுட்டான். இத லாஸ் ஷெரின் கிட்டயே நேரா கேட்டுச்சு. ஷெரினும் “ஆமா அடுத்தவங்க அனுபவத்துக்கு மரியாதை குடுன்னு சொன்னேன்”னு சொல்ல “சப்பாத்திக்கும் எக்ஸ்பீரியன்ஸுக்கும் சம்பந்தமே இல்ல......எங்கிட்ட நீங்க எப்பிடி இருக்கீங்களோ அப்டிதான் நானும் இருப்பேன், நான் கன்ணாடி மாதிரிலே”ன்னு சொல்லிட்டு போயிருச்சு.

நடுராத்திரியில கை நம நமன்னு அரிச்சுருச்சு நம்ம கவினுக்கு, அப்பிடியே ஜெயில் பக்கம் ஒதுங்குனான். சாக்ஷிய எழுப்பி “பொறத்தால வா”ன்னு கூப்ட்டு போயி..... திரும்ப ஒரு தன்னிலை விளக்கம் குடுத்தான். அப்பறம் ரெண்டும் மாறி மாறி அழுதுக்குச்சு.....இதுல பெரிய சோகம் யாருக்குனா அங்க இருந்த மீராவுக்குதான்! முழிச்சுப் பாத்து “அடேய் பகல்லதான் பக்கர பக்கரன்னு சிரிச்சு என்னயப் பாடா படுத்துறீங்கன்னு பாத்தா ராத்திரியிலயும் வந்து இப்பிடிக் கதறி அழுது கடுப்ப கெளப்புறீங்களே! எங்கிட்ட சரசம் பண்றதுக்குன்னே உங்க வீட்ல உங்கள பெத்து விட்டாய்ங்களாடா? இப்ப இதக் கேட்டா மொத்தமா வந்து என்னய லூஸுன்னுவீங்க! என்னமோ போங்கடா”ன்னு போர்வைய பொத்திட்டு படுத்துருச்சு.

26ம் நாள்

தாரை தப்பட்டை தீம் சாங்க ஒலிக்க பெரும்பாலானோர் ஆடுனாங்க. ரெண்டு நாளா சல்பேட்டா சாக்ஷி ஆடுனதப் பாக்குறப்பயெல்லாம் “இத எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே?”ன்னு ஒரு யோசனை. இப்பதான் ஞாபகம் வந்துச்சு அது வேற ஒண்ணுமில்ல “கம்பி மேல் நடக்கும் கழை கூத்தாடிகளோட நடன முறைதான் அது. மார்வெலஸ். இந்த கேப்புல 2 நாளா காஞ்சு போயிருந்த வைத்தி ;லாஸையும், கம்பி வழியா சாக்ஷியையும் கட்டிப்பிடிச்சு ஆக்சிஜன ஏத்திக்கிட்டாப்ல.

சேரன் கவின கூப்ட்டு “உள்ளேயும் வெளியேயும் உன்னைய மதிக்கனும்னா எல்லாரையும் கூப்ட்டு வச்சு மன்னிப்புக் கேளு”ன்னு சொல்ல....அப்பவே சாண்டி இத எதிர்த்தாப்ல. “அடிச்சவன் கிட்ட சாரி கேட்டா சரி...தெருவுல போறவங்கிட்டயெல்லாம் எதுக்கு கேக்கனும் இது மாயக் கண்ணாடித்தனமா இருக்கு”ன்னு சொன்னாப்ல.

இங்குட்டு லாஸ் நேத்து பேசுன முறைக்கு ஷெரின் ஒரே ஒப்பாரி....

கவின் அப்பறம் சாக்ஷி, ஷெரின் தவிர்த்து எல்லார்கிட்டயும் விளக்கம் குடுத்துட்டு சாரி கேட்டுட்டு, அவன் எங்க ஆரம்பிச்சானோ அந்த இடத்துக்கே முடிக்கிறதுக்காக போனான் (அதாங்க கக்கூஸ்). உள்ள பூட்டிக்கிட்டு அவன் அழுத அழுகை.... ரெட் அலர்ட் நேரத்து மழை மாதிரி கொட்டுச்சு.....அது நம்ம நெஞ்சக் கூட தொட்டுச்சு. உள்ள வந்து பாத்த சாண்டி, ரேஷ்மா உண்மையாவே பதற, சாண்டி வெளிய போக, கவின் ரேஷ்மாகிட்ட “யாரும் வேணாம் சாண்டிய மட்டும் வர சொல்லு”ன்னு சொல்லி சாண்டிய உள்ள கூப்பிட்டுக்கிட்டான். (தட் நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா மொமெண்ட்)

வெளிய வந்த சாண்டி, “சேரன் யோசனைதான் கவின் அழுகக் காரணம்”னு எல்லார்கிட்டயும் சொல்றத பாத்து சேரன் ரேஷ்மாவ கூப்ட்டு “நான் நல்லதுக்குதான் சொன்னேன்”னு விளக்குனார். ஷெரினோ சாக்ஷிய “இப்போ நீ போயி கவின பாக்காத அப்பறம் மறுபடியும் மரம் ஏறிடுவான் பொறுத்துப் போகலாம்”னு தடுத்துட்டாங்க.

பின்ன வெளிய வந்த கவின் லாஸ கூப்பிட்டு பேச, லாஸ் இன்னைக்கு பேசுன வசனங்கள், பாடி லேங்குவேஜ் எல்லாமே அப்பிடியே அச்சு அசலா விக்ரமன் பட ஹீரோயினி பாணி. ரொம்ப ரொம்ப செயற்கைத்தனமா தெரிஞ்சது. “உணர்வுகளோட விளையாண்டு உண்மையான அன்ப கொச்சைப்படுத்திட்ட, உன் சுயநலத்துக்காக 2 பொண்ணுங்களோட கனவுகள காவு வாங்கிட்ட”ன்னு ஒரு பக்க டயலாக்க ஓரே மூச்சுல பேசப் பேச கவின் மறுபடியும் கரைய ஆரம்பிச்சான். நீ நடிச்ச....நடிக்கிற....நடிப்ப ! நீ நடிகன் டா..... நீ நடிகன் டா” னு சொன்னதும் கவின் “ஆமா நான் நடிக்கிறேன் எங்கிட்ட இருந்து தப்பிச்சிக்கோ”ன்னு சொல்லிட்டு சட்டுன்னு “ஐ ஆம் டன்”னுட்டான். கூடவே லாஸும் “மீ டூ”ன்னு சொல்லிட்டு அப்பா சேரன் கிட்ட போயி ஒட்டிக்கிச்சு. சேரன் “ அவன் உன்னய ஒண்ணும் சங்கடப்படுத்தலையே?”ன்னு அக்கறையா கேட்டது எப்பிடி இருந்துச்சுன்னா “ஆமான்னா சொல்லு அடுத்து ஒரு மொக்கை ஐடியா குடுத்து இன்னொரு தடவ கக்கூஸ்ல போயி அழ வச்சிரலாம்”ன்ற மாதிரி இருந்துச்சு.

கவின் கேமராகிட்ட போயி “ரைட்டுங்க கதவைத் தொறந்தீங்கன்னா கவின் போயிருவான்”னு சொல்ல, சாக்ஷியும் ஷெரினும் அவன சமாதானப்படுத்த பாத்தாங்க. ஆனா கவின், “இல்ல இதுக்கு மேல கெடுத்துக்க எங்கிட்ட ஒண்ணுமில்ல இருக்குற மிச்ச மீதியோட வெளிய போயிடுறேன்”னு சொன்னான். ஆனா ஷெரினோ “போ.....எல்லாரும் ஒரு நாள் போக வேண்டியதுதான். நான் நிறுத்த முடியுமா? ஆனா போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் சரி செஞ்சுட்டுப் போ அம்புட்டுதேன்...சொல்லிப்புட்டேன்”னு தேவர் மகன் சிவாஜி சார் மாதிரி மோட்டிவேஷனல் டயலாக் விட....கவின் கண்ணத்துல கைய வச்சு யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.


ஆண்டவா, இதுக்கு மேல பொறுக்க முடியாது ஆண்டவா.....! சீக்கிரம் வாங்க !

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)