பிக்பாஸ் 3 : நாள் 28 (21.07.19)

பிக்பாஸ் 3நாள் 28 (21.07.19)


உள்ள டைனிங் டேபிள்ல உக்காந்து சாப்டுட்டு இருக்குறப்போ “அத எடுத்துக்கோங்கண்ணா”ன்னு தர்ஷன பாத்து மது சொல்ல, கவின் “இவன் எப்ப உங்களுக்கு அண்ணனானான்?”னு கேட்டார். “6 மாசந்தான் வித்யாசம் அண்ணான்னு கூப்பிடலாம். ஏன் அவன விட பல வருடம் வயசு கூடுன ஷெரின லவ்வே பண்ணலாமாம் ஆனா நான் அண்ணான்னு கூப்பிடக்கூடாதா?”னு கேக்க, கவினோ “அட என்னம்மா நீ ராமாராஜனும், காமராஜரும் ஓண்ணுன்ற?” ரேஞ்சுக்கு பாத்தார். தர்ஷனோ “யம்மா உன் திருவாய கொஞ்சம் மூடு”ன்னு சொல்ல. “என்ன பேசவா..... பேசவா?”ன்னு மது சொன்னது என்ன ரகசியமோ?!?!

வந்தார் ஆண்டவர். “பிக்பாஸ் நிகழ்ச்சிய தொகுக்க வந்ததால நான் முட்டாள் அதாவது அறிவாளி (intellectual) இல்லனு சொல்றாங்க. நான் முட்டாள்தான் அதனாலதான் மக்கள்கிட்ட பாடம் கத்துக்கிட வந்தேன்”னு என்னன்னமோ ஏதேதோ சொல்லி “உங்களுக்கு பிடிக்கலேன்னா அப்பிடிதான்டா கோட்டு போட்டு (இன்னைக்கு கோட்டுதான் காஸ்ட்யூம்), மீசைய முறுக்கி, அகம் டீவி வழியா பேசுவேன்.....ஸ்டைலா, கெத்தா”ன்னு முழங்கி இன்னைக்கு இன்ட்ரோவ ஒரு வழியா முடிச்சிக்கிட்டார்.

அகம் – அகம். “காலர் ஆஃப் த வீக்” இந்த தடவை 2 பேர். முதல் நபர் மீராவுக்கு. “நீங்க வேலையே செய்யாம நல்லா ஓபி அடிக்கிறீங்க. செஞ்சாலும் மேலு வளையாம மேம்போக்கா ஷோ காமிச்சிட்டு போயிடுறீங்களே ஏன்?”ன்னு கேக்க. (ரைட்டு உள்ள இருந்துதான் எவனோ கேக்க சொல்லி நம்மள தப்பா போர்ட்ரெயிட் பண்ண பாக்குறாங்கன்னு நெனச்சிருக்கும் மீரா) பொங்கியெழுந்த மீரா “அதெல்லாம் ரூல்ஸ் படி ஒரு ஆளு எவ்வளவு வேலை செய்யனுமோ அத செய்யுறேன். கொஞ்சம் விட்டா இவனுங்க மொத்தத்தையும் என் தலையில கட்டிருவானுங்க. ரெண்டாவது, நான் என்ன செஞ்சாலும் கை தட்டி உற்சாகப்படுத்தாம என்னய பாடாபடுத்துறதுலயே குறியா இருக்கானுங்க”ன்னு முடிச்சார்.

அடுத்த கேள்வி ரேஷ்மாவுக்கு “ஏம்மா எப்ப பாத்தாலும் கவுண்டமணி கூட இருக்குற செந்தில் மாதிரி கும்பலா சுத்திட்டு இருக்கியே வடிவேலு மாதிரி எப்ப சோலோ பெர்பார்மன்ஸ் குடுப்ப?”ன்னு கேக்க, ரேஷ்மா “பண்ணத் தெரியாம இல்ல பண்ணக்கூடாதுன்னு இருக்கேன். நிறைய வருஷம் வாழ்க்கையில சிங்கமா சிங்கிளா இருந்துட்டேன். அதான் இப்ப சும்மா பன்னிங்க கூட கூட்டமா இருக்கலாம்னு ஒரு எண்ணம்”னு முடிச்சாங்க. இதுக்காகவே இந்த வாரம் கொஞ்சம் ரேஷ்மாவோட ஸ்டண்ட பாக்கலாம்னு நெனைக்கிறேன். கேப்டனா வேற பொறுப்பேர்க்குறாங்க.

அப்பறம் “உள்ள இருக்குற ஒருத்தரப் பத்தி இன்னொருத்தர் பின்னாடி அடிச்ச கமெண்ட் அத நான் இப்ப சொல்றேன் யாரு சொல்லி இருப்பாங்கன்னு கெஸ் பண்ணுங்க”ன்னு கோள் மூட்டி கேம ஸ்டார்ட் பண்ணார் ஆண்டவர் (என்ன ஆண்டவரே இந்த சோலிய பாத்து விட்டீங்க?”) அனைவருக்கும் அள்ளு கழண்டுருச்சு. ஒரு வேளை கண்டுபிடிக்கலேன்னாலும் ஆண்டவர் சொல்லிருவாரோ?ன்னு ஒரு பயம். இந்த பதட்டத்துல ஷெரின், மதுலாம் தானா கையத்தூக்கி அவங்க சொன்னத ஒத்துக்கிட்டாங்க. “ரேஷ்மா நியூட்ரல்னு காமிச்சுக்கிறா”ன்னு வந்த கமெண்ட கவின் சொல்லி இருப்பான்னு ரேஷ்மா கெஸ் பண்ண, கவினோ “அய்யோ மச்சான் நான் இல்ல, நீ நியூட்ரல்ன்றதே எனக்கு இன்னைக்குதான் தெரியும்”னு அடிச்சது பட்டாசு டைமிங்.

இடையில சாண்டியும் கவினும் வைத்யாவுக்கு பாட்டு ரெடி பண்ணி இருக்குறத உடச்சு விட்டார் ஆண்டவர். இப்போ எவிக்ஷன் டைம் “சரி மீரா நீங்க ஏன் எப்பவும் பிரச்சனை பண்ணியாவே (issue creator) இருக்கீங்க?”ன்னு ஆண்டவர் கேக்க, “இங்க யாருக்குமே தொலை நோக்கு பார்வை இல்லாத தொல்லை புடிச்ச ஆளுகளாவே இருக்கானுங்க. இவனுங்களா ஒண்ணு நெனச்சுகிட்டு என் பக்கம் லைட்ட திருப்புறானுங்க. ஆக மொத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு கீதை சொன்னாங்க (கிருஷ்ணன் சொன்னாதான் ஒத்துப்பீங்களா மீரா சொன்னாலும் கேட்டுக்கலாம் தப்பில்ல ).

யாரு சேஃப்னு சொல்ல பபூன் ஒருத்தர் உள்ள வந்து ஜிகுஜிக்கான் விளையாட்டு காமிச்சு மீரா சேஃப்னு சொன்னார்.

பிரேக்ல வைத்தி சாண்டி, கவின் கிட்ட “ஏண்டா அப்போ நாந்தான் போவேன்னு பாட்டெல்லாம் போட்டு வச்சுட்டீங்க. அவ்ளோ சந்தோசமாடா உங்களுக்கு? அது சரி நீங்கதான் எப்பவும் சரவணன் கூடவே இருக்கீங்களே அப்பறம் எப்பிடி என் மேல பாசம் இருக்கும்? (டேய் டாடி, நீ தனியா இருந்தாதான உன் கிட்ட வர முடியும். நீதான் எப்பாவுமே கங்கைக்கரை தோட்டத்துல கன்ணிப்பெண்கள் கூட்டத்துலயே இருக்கியேன்னு மைண்ட்ல கேட்டுருப்பானுங்க) என்னமோ போங்கடா”ன்னு பொங்க. சமாதானப்படுத்தியும் சமாதானமாகல.

சரவணன் தான் சேஃப்னு சொன்னதுக்கு அவ்வளவா சந்தோசப்படல. அப்பிடி இப்பிடின்னு நகட்டி ஒரு வழியா மோகன் வைத்யாவ எவிக்டட்னு டிக்ளேர் பண்ணார் ஆண்டவர்.

வெளிய வரதுக்குள்ள நைனா போட்ட பெர்மார்மென்ஸ் “இங்க என்ன அவார்டா குடுக்குறாங்க? இப்பிடி நடிக்கிறியே?”ன்னு ஆண்டவரே நெனைக்குற அளாவுக்கு இருந்துச்சு. வெளிய வந்து மோகன் குறும்படம் பாத்து, ஹவுஸ்மேட்டுகளுக்கு அறிவுறை சொல்லி, இன்ன பிற சம்பிரதாயங்கள முடிச்சு ஆண்டவர்கிட்ட ஆசீர்வாதங்கள வாங்கி அப்பீட்டானார்.

மறுபடியும் உள்ள “எப்பிடிடா கரெக்டா அவருக்கு பாட்டு போட்டு வச்சீங்க?”ன்னு சேரன் கேக்க, “இவனுங்க எனக்கும் போட்டு வச்சிருக்கானுங்க”ன்னு சரவணன் சொல்ல....”அப்போ அடுத்த வாரத்துக்கு எனக்கும் ஒண்ணும் போட்டு வைங்கடா”ன்னு சேரன் நேயர் விருப்பமா கேட்டுக்கிட்டார். சாண்டியும் ,கவினும் உடனே ப்ராஜெக்ட்ட ஸ்டார்ட் பண்ணதோட நாள் ஸ்டாப் ஆகிடுச்சு.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)