பிக்பாஸ் 3 : நாள் 31 (24.07.19)

பிக்பாஸ் 3நாள் 31 (24.07.19)


தேவராட்டம் படத்துல இருந்து “மதுரை பளபளக்குது” பாட்டோட பரபரன்னு ஆரம்பிச்சது நாள். என்னைக்கும் இல்லாத ஏகாதேசியா சித்தப்பூ எறங்கி எட்டு போட்டுட்டு இருந்தாரு. சல்பேட்டாவும், முகினும் கும்த்தாவா குத்துப் போட்டுட்டு இருந்தாங்க. (சல்பேட்டா போடுற டவுசர் எல்லாம் டாப் டக்கர்....10 வயசுல வாங்குன டவுசரயெல்லாம் பிள்ள பத்திரமா இன்னும் கிழியாம வச்சிருக்கு போல).

லாஸ் குனிஞ்சு தரையில புள்ளி வைக்க, அங்கன உக்காந்து கவின் லாஸ் கிட்ட கோலம் போட்டுட்டு இருந்தான். இவன் 40 வது நாள் கழிச்சு மறுபடியும் கக்கூஸ் காவியத்த செகண்ட் பார்ட் எடுக்காம விடமாட்டான். (இவன் காதலுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?) எப்ப மவுச பிடிச்சாலும் சும்மா நாலு தடவை சிஸ்டத்த ரெஃப்ரெஷ் பண்ற மாதிரி, அந்த பக்கமா உக்காந்து கோலம் போட முயற்சி பண்ண மீராவ எப்பவும் போல “என்ன உன் புத்தி மாதிரி கோலமும் கோனலா இருக்கு?”ன்னு கவின் கலாய்க்க தவறல.

தின நடவடிக்கை : சாண்டி “மாடு மேய்க்கிறது எப்பிடி?”ன்னு கத்துக் குடுக்கனுமாம். மூலைக்கு மூலை கேமரா வச்சிருக்கீங்களே பிக்பாஸ்! உங்க மூளையில எதாச்சும் வச்சிருக்கீங்களா ? இதெல்லாம் ஒரு டாஸ்கா இந்த பதருகளுக்கு ? சாண்டி மீராவ எருமைன்னு சொன்னதுக்காக மட்டுமே இந்த விளையாட்டு ஒர்த்து. ( மீரா எருமையா இருந்தா “வாட்ஸாப் வா எருமை”ன்னு கூப்பிடக் கூட மனசு வராது, தவிர எருமையும் சங்கடப்படும்)

கோலத்துக்கு கீழ மீரா எழுதி இருந்த “வருக வருக”வ அழிச்சிட்டு “வாந்தி வாந்தி”ன்னு சாண்டி மாத்தி எழுத, இது மீராவுக்கு தெரிஞ்சு கோவப்பட்டு சப்போர்ட்டுக்கு எவனும் வராததால சண்டையில்லாம சப்புன்னு போயிடுச்சு.

கிராமத்து டாஸ்க் ஆரம்பிச்சது. இந்த வருக – வாந்தி மேட்டர மீரா பஞ்சாயத்துக்கு கொண்டு வர, நாட்டாமை சேரனோ “தாய்க்குலங்கள் எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேளு”ன்னு சொன்னதுக்கு “கோலத்த எல்லாம் அலங்கோலமா ஆக்கல ,அதனால மீராகிட்ட மட்டும் எக்ஸ்கியூஸ் கேட்டுக்குறேன்”னு சொல்லி மன்னிப்பு கேட்டார் சாண்டி.

நாட்டாமை :

சேரனுக்கு யாரு நாட்டாமை கேரக்டர் குடுத்தான்னு தெரியல. நல்லா சுருளி ராஜனுக்கு சுப்பிரமணிய பாரதியார் வேஷம் போட்டாப்ல இருக்கு. ஒரு கால் கிலோ கம்பீரமாவது வேணாம்? (வனிதா இருந்திருந்தா வேட்டிய உருவியிருக்கும்)

இவ்வளவு நாள் “ஒரே ஒரு வீட்டுக்குள்ள ஒரே ஒரு அப்பா பொண்ணு”ன்னு லாஸ் கூட தவமாய் தவமிருந்து ராஜ்கிரன் மாதிரி பாசப்பொங்கல் பொங்கி சாப்டுட்டு இருந்த சேரன், இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சாருன்னு தெரியல....! வாயில இருந்து வந்ததெல்லாம் வாஸ்து சரியில்லாத வார்த்தைகளாவும், வெரல் பட்டதெல்லாம் வெவகாரமாவும் மாறுச்சு.

டென்ஷனா பேசுனா டெரரா இருக்கும்னு நெனச்சு நெறையா நாய்ஸ் குடுக்க ஆரம்பிச்சார்.

சம்பந்தமில்லாம நம்ம லூஸு லாஸ் நாட்டாமை சொம்ப திருடி ஓளிச்சு வைக்க, அத சேரன் பாத்து பிடிச்சுட்டு போயி வெயில்ல சேரப் போட்டு லாஸ சேலையால கட்டி வச்சார். கக்கூஸ் கவின் அத பாத்துட்டு “வெயிலில் நீ கெடக்கையில் எனக்கு வேர்வை வரும்”னு நேரா போயி நாட்டாமைகிட்ட “ஏங்க ஃபன் டாஸ்க்குன்னு சொல்லிட்டு மாட்டுனவங்கள டார்ச்சர் பண்றீங்க? கேட்டா இதான் நகைச்சுவைன்றீங்க ! வாயத்தொறங்க நீங்க வாம்பையரான்னு பாக்கனும்”னு முனுமுனுத்துட்டே போயிட்டான்.

இதுல லாஸ்கிட்ட வேற “இனிமே உனக்கும் எனக்கும் இடையில ஒண்ணுமில்ல...ஒண்டிப்புலி நான்; எனக்கு யாரும் தேவையில்ல”ன்னு நட்டமா நின்னார் நாட்டாமை.

இது சம்பந்தமா என்னன்னு எதார்த்தமா விசாரிச்ச ரேஷ்மாகிட்ட “சும்மா இருந்தா அமைதியா சுத்துவேன், இப்ப நான் நாட்டாமை அப்பிடித்தான் கத்துவேன்”னு கத்துனார். ரேஷ்மாவோ “இதுக்கப்பறம் எங்கிட்ட கத்துனாலோ வாயில கத்திய விட்டு சுத்துவேன்”னு போயிருச்சு.

“சாப்பிடுறதுக்கு என்ன டாஸ்க் பண்ணனும்?”னு ரேஷ்மா மதுகிட்ட கேட்டதுக்கு “இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு, இங்க இருக்குற ஆளுகள்ளயே நீதான் ஃபூலுன்னு சேரன் கிட்ட சொல்லிட்டு வா”ன்னு மது சொல்ல, ரேஷ்மா ரொம்ப மகிழ்ச்சியா “வேணும்னா இன்னும் கூட அசிங்கமா கேட்டுட்டு வரேன்” மூடுல....சேரன் மூஞ்சிக்கு நேரா போயி நாட்டமை நட்ட கழட்டிட்டு உள்ள போயிடுச்சு. உள்ள சாப்பிட்டுட்டு இருந்த ரேஷ்மா கிட்ட வந்த சேரன் “ஏம்மா என்னய இப்பிடி கேக்கலாமா?”ன்னு கேக்க, ரேஷ்மாவோ “உங்கள ஃபூலுன்னு சொன்னாதான் புவ்வான்னு சொன்னாங்க அதான் சொன்னேன்”னு சொல்லிட்டு, “நீங்களுந்தான் தேவையில்லாம என்னய கத்துறீங்க”ன்னு சொன்னாங்க. சேரனோ “உங்க ஊரு நாட்டாமைய நீ இப்பிடி கேக்கலாமா?”ன்னு மறுபடியும் மாடுலேஷன் மாத்தி கேக்க, “இத விட அசிங்கமா கேட்டிருப்பேன் ஆனா இது போதும்னு சொன்னதால விட்டேனு”ட்டாங்க. சட்டுன்னு சேரன் “நாட்டாமையா நடந்துகிட்டது உனக்கு நல்லதாப் படலைன்னா நான் கேட்டுக்கிறேன் சாரி”ன்னு கையெடுத்து கும்பிட்டுட்டு போயிட்டார்.

நேரா கேமராகிட்ட போன சேரன் “உங்கள நம்பி நாட்டாமை வேஷம் போட்டதுக்கு காலையில கழுவி ஊத்த ஆரம்பிச்சானுங்க இன்னும் டயர்டாகாம டூட்டி பாக்குறானுங்க. புள்ளிங்கோ எல்லாம் ரொம்ப பயங்கரம்”னு சலிச்சுக்கிட்டார். சேரன் பாவம் இந்த நாட்டாமை கெட்டப்புலயாவது இவனுங்க கிட்ட கிலோ மீட்டர் கணக்குல மரியாதைய வாங்கிடலாம்னு பாத்தாரு...மில்லி மீட்டர் மரியாதை கூட ஈயல பசங்க. நாளைக்கும் நம்மதான் நாட்டாமைன்ற பீதியிலயே இருந்தார்.

நாட்டாமி :

சக நாட்டாமையான மது தனது காலைய கலகலப்பாதான் ஆரம்பிச்சுது. நம்ம மீராவுக்கும், மதுவுக்கும் நேத்துல இருந்தே நேர்க்கோடு இல்ல. (அது மீரா கூட யாருக்குமே இல்லன்றது தேவ வசனம்)

“நம்ம ஊருக்கு சப்போர்ட் பண்ணாத ஆளா இருக்கு தலைவி”ன்னு இன்னைக்கு கூட தன் டீம் ஆளுங்ககிட்ட சொன்னாங்க மீரா. கக்கூஸ்குள்ள விடாத கடுப்புல உள்ள வந்த மீரா “கக்கூஸ் போகக் கூட கருணை காட்ட மாட்றானுங்க அவனுங்க வந்தா சாப்பாடு போடாத”ன்னு சொல்ல, மதுவோ “அதெல்லாம் தப்பு”ன்னு மறுக்கவும், மைனர் சரவணன் மீராகிட்ட “நீதான் கிச்சனுக்கு இன்சார்ஜ், எவன் வந்தாலும் டாஸ்க் பண்ணப்பறந்தான் சாப்பாடு டிஸ்சார்ஜ்”ன்னு சொன்னாரு. இத ஒத்துக்காத மது “நாந்தான் தலைவி அவ எப்பிடி டாஸ்க் குடுக்கலாம்? யாருமே மதிக்காத உனக்கே இவ்வளவுன்னா ஊரே மதிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்”னு......இப்பிடியே நூல் பிடிச்சு “இந்த வீட்டுலயும், வெளியவும் ரெண்டு பேருல யாருக்கு மாரியாதை ஜாஸ்தின்னு” மதுவுக்கும், மீராவுக்கும் ஒரு சண்டை போச்சு! (உங்களால மரியாதைக்கு மரியாதை இல்லாம போச்சே!) அப்பறம் வீம்புக்கு சப்ப டாஸ்க்க குடுத்து சாப்பாட ரிலீஸ் பண்ணி மீராவ காண்டேத்துனாங்க மது.

“கக்கூஸ் போக டாஸ்க் என்ன?”ன்னு மது கேக்க சாக்ஷியோ “லிப்ஸ்டிக்கால மீசை வரஞ்சுக்கோ”ன்னு சொல்ல, வரஞ்சுட்டு “மாரியம்மா பாட்டுக்கு ஹெவியா ஆடு”ன்னு சாண்டி சொன்னாப்ல. ரெண்டு தடவ ஆடியும் ஒத்துக்காம இழுத்ததும் மது டென்ஷனாகி “எனக்கு ஆல்ரெடி அலர்ஜி அதனால எரியுது சீக்கிரம் விடு”ன்னு சொல்லியும் சாண்டி கண்டுக்காம இருந்ததும் பட்டுன்னு மது பர்ஸ்ட்டாகி பச்சை பச்சையா சாண்டிய கேக்க சாண்டி சைலண்டானான். விஷயம் என்னன்னா சாண்டி மதுவ ஆரம்பத்துல இருந்தே குள்ளம்னு கலாய்ச்சது மன உளைச்சல் நம்பர் 1, லிப்ஸ்டிக் எரியுதுன்னு சொன்னப்பறமும் அத காதுல வாங்காதது மன உளைச்சல் நம்பர் 2, எதிர்த்துப் பேசுனது மன உளைச்சல் நம்பர் 3, எதுக்குன்னே தெரியாம மன உளைச்சல் நம்பர் 4.

உள்ள பெண்கள் புடை சூழ நடுவ்ல உக்காந்து “ஒரு அளவுக்குதான் பொறுமையாக இருக்க முடியும். பிறகு செய்ய வேண்டியதை செய்வோம்”னு சின்னம்மா சாயல்ல சொன்னாங்க மது. (சின்னம்மா தெரியும்ல? சமாதில ட்ரிபிள் சத்தியம் ஞாபகம் இருக்கா?) லாஸ் மதுவுக்கு கட்டிப்பிடி வைத்தியம் குடுத்து கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு சாண்டி, கவினோட உள்ள வந்து “சாஷ்டாங்கமா சாரி” கேட்டார். “மதுவோ அடுத்தவங்கள கலாய்க்கிற நீ உன்னய கலாய்ச்சா பர்சனலா எடுத்துக்குற அத மாத்திக்கோ”ன்னு சொல்லிட்டு மன்னிப்பும் குடுத்தாங்க.

இடையில “இதுல தன் பங்கும் இருக்கு அதனால சாரி”ன்னு சொல்ல வந்த சாக்ஷிய பேச விடாம சேரன் ஸ்டிக்கர போட, டென்ஷனான சல்பேட்டா “ஏண்டா ஒரு சாரி கேக்க விடுறீங்களாடா? கய கயன்னு எப்பப் பாத்தாலும் கரஞ்சுகிட்ட்டே இருக்கீங்க”ன்னு சேரன குறி வச்சு பொதுவா சவுண்டப் போட சேரனோ “அது நம்மளத்தான் சொல்லுது”ன்னு சரியா கேட்ச் பன்ணி “நீ ஒரு ஆள்தான் பாக்கி இன்னைக்கு இப்போ அந்த குறையும் தீர்ந்துது”ன்னு உதட்டோரம் ஒரு “ஆட்டோக்கார மாணிக்கம் புன்னகை”ய ஒட்டிக்கிட்டு ஒண்ணும் பேசாம கிளம்பிட்டார்.

மைனர் :

இன்னைக்கு ஹீரோ மைனர் சித்தப்பூ சரவணந்தான். காலையில ஆட்டம் அதிகமா இருந்ததே “இன்னைக்கு இவர் ஆட்டந்தான்”னு சொல்ல வந்த குறியீடு போல. “ஆம்பளைங்க போட்ட கோலம் அதான் ஈ மொய்க்குது”ன்னு கலையிலயே இவர் போட்ட கவுண்டர் கவனிக்கத்தக்கதா இருந்துச்சு. அபிய “ஒரு முத்தம் குடுத்துட்டு சாப்புட போ”ன்னு சொன்ன மதுகிட்ட “ அப்ப எனக்கும் பசிக்குது”ன்னு முத்தம் குடுக்க பக்கத்துல போனது அல்டிமேட் டைமிங். மீராவ “வாய அடக்கி பேசு”ன்னு சொன்ன இடம், “பேச்ச வளக்காம அமைதியா இரு”ன்னு மது மேட்டரப்ப சாண்டிக்கு குடுத்த அட்வைஸ், கேமராகிட்ட போயி பையன் கிட்ட பேசுன செண்டிமெண்ட்னு எல்லாமே செம்ம. சாண்டி & சரவணன் செம்ம காம்போ. இன்னும் 2 வாரத்துக்கு சித்தப்பூ வீடு திரும்ப முடியாதுன்னு சந்திராயன் 2 சாட்டிலைட்ல இருந்து செய்தி வந்திருக்கு.

சேரன் தன் கோவத்த நடிப்புன்னு சொல்லிட்டு நடிக்கத்தெரியாம மாட்டிக்கிட்டார். மதுவோ உண்மையா கோவத்த வெளிப்படுத்தியும் அது நடிப்புன்னு பேர் வாங்கிட்டாங்க.

எல்லாம் முடிஞ்சப்பறம் வெளிய பெஞ்சுல சரவணன், சாண்டி, கவின், மீரா உக்காந்திருக்க, கவின் “மதுவுக்கு யாரயாவது கெட்ட ஆளா காட்டி தன்ன காப்பாத்திக்கிறதுதான் ப்ளான். அதுல இன்னைக்கு நீ சிக்கிட்ட”ன்னு சாண்டி கிட்ட சொன்னத சித்தப்பூவும் ஆதரிச்சார். “நான் சொல்றத சரியா கேளுங்க”ன்னு ஆராம்பிச்ச மீரா “நமெல்லாம் மனிதர்கள். மானுட குலத்தின் மைய நீரோட்ட மாய அலைகளின் நுன்ணிய திரையின் போக்கில் கிடைக்கும் அபாரமான திண்மையான பரிபாலனங்களை...........”ன்னு ஆரம்பிச்சு சொல்லச் சொல்ல, மெல்ல மெல்ல சரவணனோட முகம் 300 கோனலா போயி கண்ணு முழியெல்லாம் பிதுங்க....லைட்டெல்லாம் தன்னால அணஞ்சது. இதோட முடிஞ்சது.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)