பிக்பாஸ் 3 : நாள் 33 (26.07.19)
பிக்பாஸ் 3நாள் 33 (26.07.19)
“வண்டியில நெல்லு வரும்” பாட்டு வந்து எழுப்புச்சு எல்லாரையும். வழக்கம் போல லாஸ் லவ்லியா ஆட, மீரா தன் நீட்டக் கால வச்சு ஒட்டடை அடிக்க, சாண்டியோட ஷெரின் ஆடன்னு நாள் அமோகமா ஆரம்பிச்சது!
லாஸ் மறுபடியும் கவின் கிட்ட “ஜெயிலுக்குப் போனும்.... நாமினேட் பண்ணு”ன்னு சப்பாணி மாதிரி ரிப்பீட் அடிக்க, கவினோ “அது மட்டும் முடியாது”ன்னு அப்பீட் அடிச்சான்.
மீரா வழக்கம் போல கட்டில்ல கட்டைய சாத்த, வெளிய இருந்த மது, தர்ஷன், ஷெரின் 3 பேரும் ரேஷ்மாகிட்ட “இந்த “மீ டூ” மீரா வேலை செய்யுறதே இல்ல எப்பப் பாத்தாலும் ஏகாந்தமா தூங்குது. வேலை செய்யலாம் வான்னு சொன்னா ‘நோ’ங்குது”ன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணாங்க. இத காதுல கேட்ட மீரா “இவிங்க வேற கரெக்டா கண்டுபிடிச்சு மிஸ்கிட்ட போட்டு விடுற மாதிரி அப்பப்ப போட்டு விடுறாய்ங்க”னு கடுப்பாச்சு. ரேஷ்மா உள்ள வந்து “ஏம்மா பிள்ளையா லட்சணமா வீட்டக் கூட்டி வெளக்கேத்தலாம்ல? வேணும்னா வேலை செஞ்சு முடிச்சிட்டு..... கண்ண மூடாம தூங்கிக்கோ”ன்னு ஒரு எளிய வழிய சொல்லிட்டு போனாங்க. “இது ஒரு லூஸு”ன்னு சொல்லிட்டு மீரா மறுபடியும் போத்திக்கிச்சு.
“கிறுக்கு பிடிச்ச கிராமத்து டாஸ்க்ல கில்லியா விளையாண்ட 2 பேரு யாருன்னு?” கேட்டதுக்கு எல்லாரும் பேசி வச்சா மாதிரி பொசுக்குன்னு மீரா & தர்ஷன்னு சொன்னானுங்க. சேரன் உட்பட! இது மீராவுக்கே அதிர்ச்சி! “இவனுங்க வாயில இருந்தா இப்பிடி ஒரு நல்ல வார்த்தை வந்துச்சு? அவ்வளவு நல்லவனுங்க இல்லையே..... தண்ணி கின்ணி அடிச்சிருக்கானுங்களா?”ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போதே, “இந்த வாரம் முழுக்க யாரு நல்லா பண்ணா?”ன்னு கேட்டதுக்கு முகின் அப்பிடின்னானுங்க. (அவந்தான! ரொம்ப நல்லா பண்ணாண்டா!....என்னடா இது பித்தலாட்டம்? )
அப்ப இந்த மூணுந்தான் அடுத்த தலைவருக்கான கேண்டிடேட்டுகள்னு சொல்லிட்டாப்ல பிக்கி.
அடுத்து “ஒழுங்காப் பண்ணாத அந்த ஒழுங்கீனங்கள் யாரு?”ன்னு கேட்டாப்ல. லாஸும், அபியும் நாங்க டாஸ்க்க அப்பப்ப மீறுனோம். கேரக்டருல இருந்து மாறுனோம். அதனால எங்களக் கைது பண்ணுங்க”ன்னு கைய நீட்டிகிட்டு தானா முன்வந்து சொன்னாங்க. எல்லாரும் இத ஒரு மாதிரி ஒத்துக்கிட்டு “ரைட்டு பஞ்சாயத்து முடிஞ்சது”ன்னு நெனச்சுட்டு இருக்கும்போதே கக்கூஸ் கவின் “என்னது என் மயிலு ஜெயிலுக்குப் போறதா? நெவெர்!”னு கட்டையப் போட்டான்.
“அதான என்னடா இன்னும் ஒண்ணும் ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்”னு நெனச்சபடி ரேஷ்மா “சொல்லுப்பா உன் செய்யுள”ன்னு சொன்னதும் “பிக்பாஸ் கேட்டது யாரு சுவாரஸ்யமா பன்ணலேன்னு ஆனா லாஸ் என்ன பண்ணாலும் அது சுவாரஸ்யமாத்தான இருக்கு”ன்னு சொன்னதும் எல்லாரும் அவன் மூஞ்சிய “என்னாது?”ன்னு பாக்க “அதாவது டாஸ்க்ல சொன்னேன்”னு சமாளிச்சான். “சரி வேற யாரத்தாண்டா நீ சொல்லுவ?”ன்னு கேட்டதுக்கு கொஞ்சம் கூட யோசிக்காம “வேற யாரு? அது நம்ம சல்பேட்டா சாக்ஷியும் ஷெரினும்தான். ஏன்னா அவங்களுக்கு லேங்குவேஜ் பிரச்சனையால லேண்டிங்க் சரியா வரல, ஈடுபாட்டோட விளையாட முடியல”ன்னு சாக்ஷி பக்கத்துல உக்காந்துக்கிட்டே சொன்னான்.
அப்ப சல்பேட்டா மூஞ்சிய பாக்கனுமே! பாவமான வாய்ஸ்ல “இந்த சனியனால நான் இன்னும் என்னல்லாம் பாடு படப் போறேனோ? ஏண்டா உன்ன நம்பி உன் பக்கத்துல உக்காந்தது தப்பாடா ? என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதான் இவனுங்க சண்டை போடாம ஒரு முடிவுக்கு வந்தானுங்க. எல்லாம் நல்லா போற நேரத்துல இந்த நாய் லாஸ்கிட்ட சரசம் பண்றதுக்காக சம்பந்தமில்லாம என்னய போட்டுக்குடுக்குறான். கூடவே இருந்துகிட்டு இன்னும் என்னென்ன கொடச்சல குடுக்கப்போறானோ தெரியல....வெரட்டுனாலும் போமாட்றான்.....வந்தாலும் சும்மா இருக்க மாட்றான்னு”னு மைண்ட்ல சொல்லிட்டு ஆணியடிச்சாப்ல உக்காந்திருந்துச்சு.
“அதான் அவங்களே கேரக்டர்ல இருந்து வெளிய வந்ததா சொல்றாங்களே அப்பறம் ஏண்டா நீ படுத்துற”ன்னு கேக்க, “அதெல்லாம் இல்ல, நான் பாத்துக்கிட்டேதான் இருந்தேன் லாஸ, அது கேரக்டர் உள்ளதான் இருந்துச்சுன்னு சொன்னான் (அப்ப நீ அந்தப் பிள்ளைய மட்டுந்தான் பாத்துக்கிட்டிருந்த...ம்ம்ம்ம்). உண்மைய சொல்லனும்னா சேரனும், மதுவுந்தான் கேரக்டர்ல இருந்து வெளிய வந்தாங்க”ன்னு அடுத்த அனுகுண்ட போட்டான். சரவணன் சைலண்டா “இன்னும் இவன் யாரு யாரத்தான் சொல்றான்னு பாப்போம். கடைசியில பிக்பாஸையே கம்பி எண்ண வப்பான் போலருக்கு கருமாந்திரம் பிடிச்சவன்”ன்னு மைண்ட்ல பேசிட்டு இருந்தாப்ல.
சுழி சும்மா இருக்க விடுமா மீராவ? “என்னப் பொறுத்த வரைக்கும் சாக்ஷியும், ஷெரினும்தான் சுவார்ஸ்யமா விளையாடல”ன்னு சொன்னதும், ஷெரினும், சாக்ஷியும் மீராவ ஏற, மீராவோ “நான் என்னோட ஒப்பீனியனதான் ஓப்பன் பண்ணேன்னு சொன்னாங்க. லாஸும், அபியும் “இல்ல இல்ல நாங்கதான் அக்யூஸ்டு”ன்னு அகேயின் ஆணித்தரமா சொல்லவும் வேற வழி இல்லாம அவங்களயே கைதிகளா அறிவிச்சாரு பிக்பாஸ்.
வெளிய வந்த கவின் பய, சரவணன் & சாண்டிகிட்ட “இது போங்கு! அதுங்க ரெண்டும் ப்ளான் பண்ணி வேணும்னே ஜெயிலுக்கு போகுதுக. ரேஷ்மா நேத்து நைட்டு எங்கிட்ட சேரனதான் நான் சொல்லுவேன்னு சொல்லிட்டு உள்ள இட்லி குண்டான் மாதிரி கம்முன்னு இருக்கு”ன்னு சொன்னப்ப, சரவணன் எந்திருச்சு “ஏண்டா அன்னைக்கு என்னய உள்ள போடப்போறேன்னு சொன்னப்ப சல்பேட்டா தலையில பேன் பாத்துக்கிட்டு உக்காந்திருந்த பயதான நீ? இன்னைக்கு என்னமோ கவுத்திப் போட்ட கரப்பான் பூச்சி மாதிரி துள்ளுற?”ன்னு சர்காசம் பண்ணாப்ல.
சல்பேட்டா மீராகிட்ட “நல்லா பண்ணலேன்னு நீ எப்பிடி என்னையும் ஷெரினையும் சொன்ன?ன்னு அப்டியே மெல்ல பேச்சுக்குடுக்க, மீரா “நல்லாப் பண்ணலேன்னு சொல்லல, சுவாரஸ்யமா பண்ணலேன்னுதான் சொன்னேன்னு சொல்லுச்சு. “அதையும் நீ எப்பிடி சொல்லலாம்? நல்லா பண்ண கேட்டகிரில உன்ன நாமினேட் பண்ணதே நாந்தான்”னு ஷெரின் சொல்ல “ஆரம்பிச்சுட்டாய்ங்க, அங்க இங்கன்னு சுத்தி கடைசியில எப்பவும் போல நம்மளத்தான் நடுத்தெருவுக்கு இழுக்குறாய்ங்க”ன்னு புரிஞ்ச்சுகிட்ட மீரா “ஓகே ஃபைன்”னுஅமைதியானாங்க.
ஷெரினும் சல்பேட்டாவும் உண்மையாவே இந்த மொழி மற்றும் கலாச்சார விஷயத்துல ரொம்ப அப்செட்டானாங்க. ஷெரின் கவின் கிட்ட “டேய் உண்மையாவே எங்களுக்கு மொழி பிரச்சனைதான். ஆனாலும் அத காரணமா வச்சு ஒழுங்கா விளையாடலேன்னா உங்களுக்கு பாயின்ட் போகும்னு அர்த்தம் கேட்டு கேட்டு பண்ணோம். நல்ல தமிழே வராது இதுல கட்டையில போற பிக்பாஸ் எங்கள கிராமத்து தமிழ்ல வேற பேச சொல்றான்”னு கதறி அழுததப் பாத்து “ஏண்டா பிக்பாஸ் இரக்கமில்லையா உனக்கு?”ன்னு நமக்கே கேக்கனும்போல இருந்துச்சு.
கவின் கிட்ட மூளை இருக்கோ இல்லையோ அவங்கிட்ட நெறைய சாரி இருக்கு! சொன்னதையும் சொல்லிப்புட்டு ஷெரின் கிட்ட “அய்யோ ஷெரின் நான் சொல்ல வந்ததே வேற....சாரி மச்சாஆஆ”ன்னு ஆரம்பிச்சான்.
கக்கூஸ்ல இருந்து வெளிய வந்த சல்பேட்டாவ கக்கூஸ் பெஞ்சுல வச்சு மறிச்சான். “நான் சொல்றத முழுசா கேளு”ன்னு சொன்னத கேக்காம போன சாக்ஷிய பாத்து கண்டாமேனிக்கு கத்தி “சல்பேட்டா உன்னய சாவடிச்சுருவேன்”னு சொன்னதுக்கு பயந்து போயி அழுதுகிட்டே வெளிய போச்சு சாக்ஷி. வெளிய வந்து வழக்கம் போல கவின் சாக்ஷி கையப் பிடிச்சு சாரி கேட்டான்.
ஒண்ணு நாமெல்லாம் சேர்ந்து அவனுக்கு ஓட்டுப் போடாம வெளிய கொண்டு வரணும். இல்லேன்னா இந்த 3 புள்ளைகளும் அவன வெளக்கமாத்தால சாத்து சாத்துன்னு சாத்தி சகதியில பொரட்டி எடுக்கனும் வெரி டேஞ்சரஸ் பெல்லோ கவின். லாஸுக்காகத்தான் அவன் இந்த பஞ்சாயத்தயே ஆரம்பிச்சான்னு பச்சையா தெரியுது. இதுக்கு இவன் சல்பேட்டாவ சொல்லாம சேரனயே ஷேக் பண்ணி இருக்கலாம்.
உள்ள அடுத்த அட்ராசிட்டி மது & சேரன் மூலமா ஆரம்பிச்சது.”யார கேட்டு மீராவ செலெக்ட் பண்ண்ணீங்க”ன்னு ? ரேஷ்மாகிட்ட கேக்க, “அட அப்ரசண்டிகளா நீங்கதானடா சொன்னீங்க”ன்னு ரேஷ்மா பாக்க, மீரா “ஆகா தகராற ஆரம்பிச்சுட்டானுங்க எப்பிடியும் சேதாரம் நமக்குதான்னு புரிஞ்சு “யப்பா டேய் நீங்கதான்டா வாரம் வாரம் என்னய ரூமுக்குள்ள போயி நாமினேட் பன்ணிட்டு வறீங்க. இன்னைக்கு நல்ல பெர்பார்மர்னும் நீங்கதான் சொன்னீங்க. நான் என்னோட ஒப்பீனியன சொன்னதுக்கு ஏண்டா ஒரண்டை இழுக்குறீங்க?ன்னு கேட்டுச்சு நியாயம்தான?
தர்ஷன், சேரன்& மீரா ரேஷ்மாகிட்ட “நீ போயி பிக்பாஸ் கிட்ட டங் ஸ்லிப்புல மீரா பேரு வந்திருச்சு அத மாத்தனும்னு சொல்லிட்டு வா”ன்னு சொல்ல இத லாஸும், அபியும் பயங்கரமா எதிர்த்தாங்க. “கேட்டு முடிக்கிறதுக்குள்ள மீரா பேர எல்லாரும் சொல்லிட்டு இப்ப வந்து மாத்தி பேசுறதெல்லாம், டாடி டேய் உனக்கு அழகா?’ன்னு சேரனப் பாத்து கேக்க, சேரனோ குஞ்சு மிதிச்ச கோழியானார். அபியும், “அப்பவே எந்திருச்சு சொல்றதுக்கு கேடா?”ன்னு கேட்டுச்சு.
ரேஷ்மா “இந்தா போறேன் பிக்பாஸுகிட்ட”ன்னு சொல்லிட்டு ஷார்ட் கட்டுல சாண்டி குரூப்புகிட்ட வந்து “மீராவ ஏன் செலெக்ட் பண்ணன்னு சண்டை போடுறானுங்க கருமம் பிடிச்சவனுங்க. வந்து கேப்டன காப்பாத்துங்கடா”ன்னு கதறுச்சு. கவின் அப்பவும் ரேஷ்மாகிட்ட “அத விடு, நீ சேரன சொல்லப் போறேன்னு சொல்லிட்டு ஏன் சொல்லல?ன்னு கேக்க, “அடேய் அவசரத்துல பொறந்தவனே, இப்ப வேற ஃபைட்டுடா.....உன் பஞ்சாயத்த அப்பறம் வச்சுக்கலாம்”னு உள்ள கூட்டிட்டு போக அங்க மது ஃபுல் பர்மார்மென்ஸ்ல இருந்துச்சு. ரேஷ்மா கிட்ட........
மது : நீ நல்லா பண்ணியா மீரா நல்லா பண்ணாளா?
ரேஷ் : நான்தான்
மது : நான் நல்லா பண்ணேனா இல்ல மீராவா?
ரேஷ் : நீதான்
மது : சேரன் நல்லா பண்ணாரா இல்ல மீராவா?
ரேஷ் : சேரன் தான்
மது : மீரா நல்லா பண்ணாளா இல்ல மீராவா?
ரேஷ் : ஞே.............
பாத்தியா......நீயே ஒத்துக்கிட்ட போ போயி ஆள மாத்து”ன்னு ரப்ச்சர் பண்ணுச்சு. “அப்டியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு மாத்த முடியாது பிக்பாஸ் கண்ணக் குத்திருவாரு”ன்னு மீரா சொல்ல, “அதெல்லாம் மாத்தலாம் சரவணன அப்பிடிதான ஜெயிலுக்கு போகாம நிப்பாட்டுனோம்”னு முன்னுதாரணக் கேஸ ஞாபகப்படுத்துனான் தர்ஷன். தர்ஷனுக்கு ரெண்டு கோவம் ஓன்ணு மீரா ஒர்க் எதுவும் பண்ணாம எப்பவும் ஓபி அடிக்கிறது. ரெண்டாவது ஷெரின நல்லாப் பன்ணலேன்னு மீரா சொன்னது. அதனால இன்னைக்கு மீராவுக்கு எதிரா சிறப்பா சிலம்பு சுத்துனான். சேரனும் அப்பப்ப சில்றத்தனம் பண்றாப்ல. கூட்டமா மீரா பேர சொல்லும்போது பேசாம இருந்துட்டு, மது இத ஆரம்பிச்சதும் அது கூட சேர்ந்துகிட்டு சுத்துறாப்ல.
மீராகிட்ட மறுபடியும் சாக்ஷி & ஷெரின் “கலாச்சாரத்த கைல எடுக்காத”ன்னு சொல்ல, மீரா “அடப் பாதகத்தி, அதச் சொன்னது கல்ப்ரிட் கவின், நான் சொன்னது நடிப்ப! ஆக்ச்சுவலா நடிப்புக்கு மொழி கிடையாது, பிரான்ஸ்ல கொசுக்கள் கிடையாது, அரேபியாவில் நதிகள் கிடையாது”ன்னு ஏதேதோ சம்பிந்தமில்லாம பேசிட்டு “வேணும்னா அந்த அவார்ட.....மதுவுக்கே குடுத்துருங்கடா.....லிஸ்டுல இருந்து என் பேர எடுத்துருங்கடா.....வெளிய என் பேர கெடுத்துருங்கடா”ன்னு பொங்கிட்டு பெட்டப் பாத்து போச்சு.
என்னமோ வெயிலுக்கு சுவிட்சர்லாந்துக்கு போறாப்ல ஜெயிலுக்கு ஆடிக்கிட்டே அபியும், லாஸும் போனாங்க. அபி கம்பி வழியா கோல்ட் காஃபி வாங்கி குடிக்க, பிக்பாஸோ ஜெயில் சாப்படு தனியா வரும் அதத் தின்னுங்கன்னு சொல்லிட்டார்.
டாஸ்க்க ஒழுங்கா விளையாண்டதால லக்ஸுரி பட்ஜெட் பாயிண்டு 2600 கிடைச்சது. ஆனா மைக்க மாட்டாதது, மறைச்சுகிட்டே பேசுறது, பகல்ல தூங்குறதுன்னு முடிச்சவிக்கித்தனம் பண்ணதால 500 பாயின்டு கட்டு. சரி இருக்குற பாயிண்டுக்கு பர்சேஸ் பண்ணலாம்னு போர்டுல எழுத ஆரம்பிச்சானுங்க......கணக்கு தெரியாத கபோதிகள் 100 பயிண்டுக்கு எக்ஸ்ட்ரா பொருள எழுத.....ரூல்ஸ் படி மொத்த பாயிண்டும் ரூல்ட் அவுட் ஆகிடுச்சு. இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட்....ஊ ஊ!
“கன்ணில் ஒரு வழி இருந்தால் கனவுகள் வருவதில்லைன்னு ஜெயில்ல இருந்து ஒரு குயில் பாட யாருன்னு பாத்தா அது நம்ம அபி......அது நம்ம முகினுக்கு சிக்னல் போல......எல்லாரும் தூங்குனப்பறம் முகின் ஜெயில் பக்கமா போக வாய்ப்பிருக்கு.
ஆண்டவர் வருவார்.......இவிங்கட்ட இருந்து அவர காப்பாத்த என்ன வழின்னு பாப்போம்.
Comments
Post a Comment