பிக்பாஸ் 3 (நாள் 2)

பிக்பாஸ் 3நாள் 2

நேத்தே சொல்லி இருக்கனும்...கண்டெஸ்டண்ட் தூங்குனா கதறுமே ஒரு நாய் அது இந்த சீசன்ல எலிமினேட் ஆகிடுச்சு. இந்த சீசன்ல தூங்குறவங்கள “சுட்டு பிடிக்க உத்தரவு” (துப்பாக்கி சுடும் சத்தம்) போட்டிருக்கார் பிக்பாஸ் !
2ம் நாளைக்கு வருவோம்....மங்களகரமா காலையில “ரௌடி பேபி” பாட்டோட ஆராம்பிச்சது...ஆளாளுக்கு எந்திரிச்சு வந்து அளந்து ஆடி அன்றைய நாள தொடங்குனாங்க. எல்லாரும் டைனிங் டேபிள்ள உக்காந்து பேசிட்டிருந்தத பாத்திரம் கழுவிட்டிருந்த சாண்டி பாத்துட்டு, பிக்பாஸ்கிட்ட “இந்த சந்தோஷம் எத்தன நாளைக்கோன்னு” எச்சரிக்கை குடுத்தார்.
அப்பப்போ அபிராமி கவின கலாய்க்க, கவின் “கடவுள் பாதி மிருகம் பாதி” மோட்ல பேசிட்டு இருந்தார். அபிராமி “இவனுக்கும் காதலுக்கும் கலிபோர்னியா தூரம்னு” தலையில அடிச்சுகிச்சு. டைனிங்க் டேபிள்ள குறை தீர்ப்பு கூட்டம் ஆரம்பிச்சுது. டிஷ்யூ ஒரு இஷ்யூவா இருக்குன்னு வனிதா ஆரம்பிக்க...சாக்ஷிக்கு பொங்கல் பிடிக்காதுன்னு பொங்க...வனிதா ”பீல்டிங்கா பௌலிங்கா?” டோன்ல “பொங்கல் பிடிக்காதா இல்ல ஒத்துக்காதா ?”ன்னு குழப்ப...கடைசியில ஒரு முடிவுக்கும் வராம அவங்களாவே சமாதானமாகிட்டாங்க.
இடையில சாண்டி எல்லாருக்கும் பாட்டு சொல்லி குடுக்கும் டாஸ்க் வர...சாண்டி தலைமையில எல்லாரும் கத்திக்கிட்டாங்க. (கனைப்பு பொறுக்க முடியாம பிக்பாஸே டாஸ்க்க முடிச்சிருப்பாப்ல). நேத்து பிளேடு கேட்ட அதே அபிராமி இன்னைக்கு கவின் மூலமா பிக்பாஸ்கிட்ட “ப்ளக்கர்” கேட்டாங்கன்றது அவசியத் தகவல்.
இந்த சீசனோட முதல் கண்ணீர் மோகன் வைத்யாவோடது...கஷ்டத்த சொல்லி அழ கூட ஆளில்ல அதனாலதான் ஒரு நல்ல குடும்பம் வேண்டி இங்க வந்ததா சொன்னார். (அதுக்கு இங்கயா வருவாங்யன்ற? மாதிரி சேரன் பாத்தார்) செண்டிமெண்ட்ல சேரனுக்கே ட்ஃப் குடுத்தார் வைத்யா.
ஒரு வழியா கக்கூஸ்ல வச்சு (சாண்டியின் சஜ்ஜஷன்) கவின் கிட்ட தன் கிரஷ்தனத்த சொன்னார் அபிராமி. ஆனா தனக்கோ “5 பொண்ணுங்களும் நிச்சயம்...ஆனா ஷெரின் தான் லட்சியம்னு “கவின் பந்த ஸ்பின் போட்டு டர்ன் பண்ண...அபிராமி காண்டாகி கைய தட்டிவிட்டு போயிட்டாங்க. அப்றம் வெளிய வந்து கவின் அபிகிட்ட இன்னும் ஒரு மாசம் பாத்துட்டு அப்றம் முடிவு பண்ணுவோம்னு டைம் வாங்கி வச்சுகிட்டார். பொறுத்தார் “லொஸ்லியா “ஆள்வார்னு கணக்கோ என்னமோ?!
இது குறித்த கட்டில் மேஜை மாநாட்டுல கூட இதே ஒரு மாச கணக்கு ஏத்துக் கொள்ளப்பட்டது. இடையில சென்னை பாஷை பேசுறேன்னு வைத்யா வேற நம்மள வச்சு செஞ்சார்...ஆனா இன்னைக்கு பிரச்சனை பேண்ட் சர்ட் போட்டு வரும்னு அப்போ யாருக்கும் தெரியல....அடுத்த 5 நிமிஷத்துல தெரிஞ்சது. பிரச்சனை பேரு மீரா...புது வரவு! (பேண்ட் சர்ட்ல வந்தாங்க)
உள்ள வந்த மீராவுக்கும், சாக்ஷி & அபி க்கும் ஏற்கனவே வாய்க்காத் தகராறுன்னு மெல்ல தெரிய வந்தது...எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டத்துல சேர்ந்துக்கோன்னு பிக்பாஸ் கொளுத்தி போட...அபி & சாக்ஷி அப்பட்டமா அவங்க வெறுப்ப காட்டிட்டாங்க. (அபி “என்னய வேணாம்னு சொன்னா கவினுக்குதான் லாஸு” நமக்கு ஆயிரம் மடியும் மச்சின்னு ரேஞ்சுக்கு சம்பந்தமில்லாம அறிக்கை வேற...ஒரு பீப் சவுண்டு கூட கேட்டுச்சு) பின்ன அவங்க ரெண்டு பேரும் பிக்பாஸ்கிட்ட தாங்களோட நாகரீகமற்ற செயலுக்காக மன்னிப்பு மாப் போட்டாங்க. இனி அப்டி நடந்துக்கக் கூடாதுன்னு சைடு கேப்புல சபதம் கூட எடுத்துக்கிட்டாங்க.
புது வரவு மீராவுக்கு படுக்க இடமில்ல அதாவது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்ல பெட் பற்றாக்குறை. சேரன் கிட்ட உதவி கேட்டு அவரு பெட்ட வாங்கிட்டாங்க...! அதனால இன்னைக்கு அவங்களுக்கு தூங்குறதுல பிரச்சனையில்ல! யாரும் கவலைப்பட தேவையில்ல!
ஆக....ஒரு 5 நாளைக்காவது லவ் சீன்ஸ் பாக்கலாம்னு நெனச்ச நேரத்துல 2வது நாளே ஆக்ஷன் பிளாக்கா மாத்திட்டாரு நம்ம பிக்பாஸ். மொத்தத்துல நாள் ரெண்டு...டைமர் செட் பண்ண குண்டு!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)